Advertisement

“இங்க வந்த முதல் நாளே அவளை புக்கை எடுத்து படின்னு சொன்னா இன்னும் பரிட்சைக்கு படிக்கிற பிள்ளை மாதிரி அவ பீல் பண்ணக்கூடாது இல்ல.,  அதனால தான் சொல்லல”.,  என்று சொன்னார்.,

        அவளும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தவள்.,  “நான் இங்க வந்தது முதல் நாள் தானா” என்று கேட்டாள்.

           அவரோ., ‘ஐயோ வாய் விட்டு விட்டோமே’.,  என்று நினைத்தவரோ., “அப்படி இல்லடா இப்ப கீழ விழுந்து எந்திரிச்சு வந்து இருக்க இல்ல., அதான் சொன்னேன்”., என்று சமாளித்தார்.

       அம்மாவை பார்த்து சிரித்தவன்.,  ‘தேவையா இதெல்லாம்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு எதுவும் சொல்லாமல் “அம்மு நான் சொன்னா கேட்ப இல்ல”.,  என்று கேட்டான்.,

         “கேட்பேன்”., என்று சொன்னாள்.

         “அப்ப நாளையிலிருந்து நான் சொன்ன மாதிரி தான் பண்ணனும்., இந்த டைம் ஹேம்ஸ் இந்த டைம் ரீடிங் ன்னு பிரிச்சிரனும்., உனக்கு செல்லில் விளையாட.,  காலையில் ஒரு மணி நேரமும்., மாலையில் ஒரு மணி நேரமும்.,   மத்த நேரத்துல உனக்கு போரடிக்குது அப்படின்னா டிவி பார்க்கலாம்., அதுக்கு பெர்மிஷன் உண்டு., அப்புறம் நீ புக் தான் படிக்கணும்., நிறைய வாசிக்கணும் அப்ப தான் உன்னால சீக்கிரம் முன்னாடி மாதிரி இருக்க முடியும்”., என்று சொன்னான்.,

        “நான் முன்னாடி எப்படி இருந்தேன்., உங்களுக்கு தெரியும் இல்ல சொல்லுங்களேன்”.,  என்று கேட்டாள்.

        இப்போது திணறுவது அவன் முறையாக  போயிற்று., ஆனாலும் அவளிடம் எதுவும் சொல்லாமல்., “அம்மு நீ முன்னாடி துருதுருன்னு  இருந்த., இது மாதிரி  யோசிச்சி யோசிச்சி டவுட்டு கேட்க மாட்ட., நல்லா பேசுவ”., என்று சொன்னான்.

       “அப்படியா”., என்றவள்., ஏன் இப்ப நான் நல்லா பேசலையா”., என்றாள்.

      “முன்னாடி இந்த மாதிரி யோசித்து பயந்து பேச மாட்டியே”.,  என்று சொன்னான்., அவளை சமாளிக்க என்று.,

       “அப்படியா” என்று அமைதியாக கேட்டுக் கொண்டவள்., “அப்போ எப்போ அப்படி பேசுவேன்”., என்று அவளும் கேட்டாள்.

         “நாளைக்கு நான் ஆபீஸ் போய் விடுவேன்., நீ என்ன பண்ற மத்தியானம் அம்மா கூட வர்ற”.,என்றான்.,

       “அம்மா இல்ல அத்தை”., என்றாள்.,

        “எனக்கு அம்மா.,  உனக்கு அத்தை அவங்க கூட வந்துருவீயா”.,  என்று கேட்டான்.

          “எங்கே போறோம்”., என்றாள்.,

          “நீ அங்க நம்ம எஸ்டேட்ல வச்சு கீழே விழுந்து அடிபட்டு இருக்கு இல்ல”., என்றான்.

              “அதுக்கு தான் மருந்து தந்து இருக்காங்களே., இப்பதான் போட்டு இருக்கேனே வலிக்கு எல்லாம்  மாத்திரை போட்டு இருக்கேன் இல்ல., அதனால இப்ப வலி இல்லை இல்லையே”., என்றாள்.

           “வலி இல்லமா., ஆனால் டாக்டர் இன்னொரு தடவை ஃபுல்லா பாக்கணும் இல்ல., தலையில் அடிபட்டுச்சி தானே”.,  என்று சரவணன் கேட்டான்.,

      “ஆமா தலைவலி”., என்றாள்.,

       “தலை வலிக்குது இல்ல., அப்ப டாக்டரை நாளைக்கு பார்த்து விட்டு வரலாம்”., என்று சொன்னாள்.

        “ஊசி வேண்டாம்”., என்றாள். கையை பார்த்துக்கொண்டே.,  ட்ரிப் போட்ட இடத்தில் அவளுக்கு வலி சரியாவதற்கு கூட இரண்டு மூன்று நாள் பிடித்தது.,

        அதையே யோசித்துக்கொண்டு ஊசி வேண்டாம் என்று சொன்னதை கேட்டவன்.,  “ஊசி போட மாட்டாங்க.,  ஆனா கண்டிப்பா டாக்டரை பார்க்கணும்”.,  என்று சொன்னான்.,

     “சரி”., என்று சம்மதித்து கொண்டாள்.

       மறுநாள் காலை அவன் கிளம்பி செல்லும் போதே.,  அம்மாவிடம் “சரியான டைமுக்கு வந்துடுங்க”.,  என்று சொல்லி விட்டு சென்றான்.,

         திலகவதி அம்மாவோ அவளை கிளப்பி அழைத்துக் கொண்டு சென்றார்.,

        அவளை பார்ப்பதற்கு ‘ஐயோ இந்த பொண்ணு சீக்கிரம் சரியாயிடனும் கடவுளே’., என்று வேண்டிக் கொள்ள தொடங்கியிருந்தார்.,

           அது போலவே குடும்ப டாக்டர் தெரிந்தவர் என்பதால் அவர்களை அழைத்துக் கொண்டு ஏற்கனவே பேசி வைத்திருந்த டாக்டரிடம் கூட்டிக் கொண்டு சென்றார்.,

      முதலில் உள்ளே சென்றவர்கள்., அங்கு அமர்ந்திருந்த வயதான மனிதரை பார்த்து விட்டு வணக்கம் சொல்லி விட்டு அமர்ந்தனர்.,

          டாக்டர் தான் அவளை பார்த்துக் கொண்டே “உன் பெயர் என்னமா”.,  என்று கேட்டார்.

         “என் பேரு அம்மு”., என்று சிறிது நேர யோசனைக்குப் பின் சொன்னார்.

             டாக்டர் அவர்களை பார்க்க.,  அவர்களும் “நாங்க தான் டாக்டர் அப்படி கூப்பிட்டிருக்கோம்”., என்று சொன்னார்கள்.

         “ஓகே அம்மு.,  நீ நல்ல பிள்ளை தானே”.,  என்று கேட்டார்.,

       “ஆமா” என்று சொன்னாள்.,

       “அப்ப ஒன்னு செய்யலாம்., உனக்கு எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு”.,  என்று கேட்டார்.

அவளோ யோசித்து கொண்டே., “அது ஆக்சிடென்ட்”., என்று சொன்னவள்.,

           சற்று அமைதிக்கு பின்பு., “அத்தை எனக்கு எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு”., என்று கேட்டாள்.

      “அவங்க கிட்ட கேக்க கூடாது மா.,  நீ தான் சொல்லணும்”., என்று சொன்னார்.

     “தெரியலையே”., என்றாள் பாவமாக.,

       “இப்போ அதுக்கு ஒரு சின்ன டெஸ்ட் பண்ணுவோமா., எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு ன்னு பார்ப்போமா”., என்று கேட்டார்.

            டாக்டர் கேட்கும் போதே தலையை சாய்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.,

      பின்பு சரி என  தலையாட்டினாள்., அவள் கண்ணை உருட்டி டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த சரவணனுக்கோ அவளையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போல தோன்றியது.,

           ஏனோ வளர்ந்த குழந்தை போல கண்ணுக்கு தெரிந்தாள்., ஆனாலும் மனமோ ‘இவள் சீக்கிரம் சரியாக வேண்டும்’., என்ற எண்ணம் மட்டும் அம்மா மகன் இருவருக்கும் ஒன்று போல தோன்றியது.,

        அந்த வயதான மனிதர் அவளை பார்த்து சொன்னார்.,  “அங்கே புக் ரேக் இருக்கு., அந்த  இடத்திற்கு போய் அங்கே இருக்குற புக்ல உனக்கு என்ன புடிக்கும் ன்னு பார்த்து எடுத்துட்டு வா.,  நல்ல வாசிப்பியாமே”.,  என்று கேட்டார்.

       “ஆமாம்” என்று சொன்னவள் புக்கை எடுப்பதற்காக அந்த பக்கம் செல்ல தொடங்கியிருந்தாள்.

                  டாக்டர் “அம்மு”., என்றழைக்க திரும்பியவள்., “என்ன டாக்டர்”., என்றாள்.

       அங்கே இருக்க புக் டைட்டில் எல்லாம் வாசிக்கணும்., நல்ல வாசித்து பார்த்து.,  உனக்கு நல்ல தெரிஞ்ச புக் என்ன அப்படின்னு யோசிச்சு எடுத்துட்டு வரணும்”., என்று சொன்னார்.

        “சரி”., என்று சொல்லிவிட்டு அந்த புத்தக ரேக்கை நோக்கி நகர்ந்தாள்.,

             அங்கிருந்த புக் ஒவ்வொன்றாக பார்க்கத் தொடங்கினாள்., வாசித்துப் பார்க்கும் போது எதுவுமே கேள்விப்பட்ட பேர் போல தோன்றாததால்.,  அவற்றை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்தாள்.,

        அவற்றில் மருத்துவம் சம்பந்தமான புத்தகம்., மற்றும் ஒவ்வொரு படிப்பு சம்பந்தமான புத்தகங்களும் அதில் இருந்தது.,

           அவளுக்கு கம்ப்யூட்டர் சம்பந்தமான புத்தகத்தைப் பார்த்தவுடன் இதை எங்கேயோ பார்த்திருக்கிறோம் என்ற எண்ணத்தில்., அந்தப் புத்தகத்தை எடுக்கவா.,  வேண்டாமா., என்ற யோசனையோடு கை வைப்பதும் திருப்பி எடுப்பதுமாக இருந்தாள்.,

        அவளை சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த டாக்டர் அவர்களிடம் திரும்பி.,  “அந்த பொண்ணுக்கு இப்போ ஒரே ஒரு சின்ன டெஸ்ட் மட்டும் தான் பண்ண போறோம்., அதாவது  அவளுடைய ஞாபகங்களை திருப்பிக் கொண்டு வருவதற்கு முயற்சிக்க ஒரு சின்ன டெஸ்ட் தான்.,  அந்த டெஸ்டில் அவளுக்கு அவளால பழைய நினைவுகளுக்குள் போக முடியுது.,  அதிர்ச்சியை உள்வாங்க முடியுது அப்படின்னா மட்டும் தான்.,  மேற்கொண்டு ஒவ்வொரு ஸ்டெப்பா அவளை பின்னாடி உள்ள நினைவுகளுக்கு கொண்டு போவேன்.,

         இப்ப ஆக்சிடென்ட் ஆகி உங்க கைல கிடைச்ச அந்த நாளுக்கு தான் கொண்டு போக போறேன்., அவளால கரெக்டா பதில் சொல்ல முடிஞ்சிடுச்சு னா., அவளுடைய நினைவுகளை ஆள் மனசுல போய் திருப்பிக் கொண்டுவர முடியும்”., என்று சொன்னவர்.,

      சிலருக்கு அதிர்ச்சியில இவளுக்கு நினைவுகள் போன மாதிரி நடக்குறது உண்டு.,  அதிர்ச்சியில் போற நினைவுகள் திடீர்னு அதிர்ச்சியில் கூட திருப்பி நினைவுகள் வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு.,

     ஆனா இந்த அதிர்ச்சியில் நிறைய பேருக்கு பேச்சு போயிருக்கு., பார்வை போய் இருக்கு., அந்த மாதிரி எல்லாம் இருக்கு சிலருக்கு தாங்க முடியாத அதிர்ச்சி ஆனதுக்கு அப்புறம் அவங்களால வாய் திறந்து பேச முடியாது.,  சிலருக்கு அவங்க பார்க்க கூடாத ஒரு காட்சியை இல்ல.,  அவங்களால் தாங்க முடியாத ஒரு விஷயத்தையோ பாத்துட்டாங்க னா.,  அவங்களுக்கு கண்ணு தெரியாம போகிற வாய்ப்பு இருக்கு..,

      அந்த மாதிரி ஏதோ ஒரு அதிர்வு தான் இந்த பொண்ணுக்கு பழைய ஞாபகங்களை மறக்கடித்து இருக்கு..,  ட்ரை பண்ணுவோம்., ஒரே ஒரு டெஸ்ட் தான் பாக்க போறோம்., அவளை டெஸ்ட்க்கு  கொண்டு போகும் போது நீங்க பக்கத்திலேயே இருங்க., சப்போஸ் டெஸ்ட்ல அவளால் அந்த அதிர்ச்சியை தாங்கிக்க முடியும் னா., மேற்கொண்டு அந்த டெஸ்ட் கண்டினியூ பண்ணலாம்..,

       இல்லன்னா., டெஸ்ட் அ ஸ்டாப் பண்ணிட்டு., கொஞ்சம் கொஞ்சமா மாத்திரையை போட்டு ஓரளவுக்கு அவங்க ஹெல்த் அ ஸ்டடி பண்ணிட்டு அதுக்கப்புறம் தான் அவளோட நினைவு திருப்பிக் கொண்டு வர முடியும்.,  முடிந்த அளவுக்கு நாம முயற்சி பண்ணுவோம்”.,  என்று டாக்டர் சொன்னார்.,

        “சரி” என்று சரவணன் சொன்னான்.,  அப்போது திலகவதி தான் “அவளுக்கு ஒன்னும் ஆகாது இல்ல., பயப்படாமல் டெஸ்ட் பண்ணலாம் இல்ல”.,  என்று கேட்டார்.

            “ஒன்னும் இல்லம்மா., ஒருவேளை அதிர்ச்சியில் இருந்து அவள ரெக்கவர் பண்ண முடிஞ்சா., பழைய ஞாபகத்திற்கு அவங்களுக்கு திரும்பி கொஞ்சம் கொஞ்சமா போவதற்கு வாய்ப்பு இருக்கு இல்ல.., அவளால அதை ஏத்துக்க முடியல அப்படின்னா., ரெண்டு நாளைக்கு ரொம்ப படபடப்போடும்.,  ஒரு பயத்தோடும் இருக்க வாய்ப்பு இருக்கும்., அது மட்டும் தான்., மத்தபடி ஒன்னும் இல்லை”., என்று சொன்னார்.

           “சரி”., என்று இருவரும் சம்மதித்தனர்., அதே நேரம் புத்தகத்தை எடுத்துக்கொண்டு அவர்களிடத்தில் வந்து சேர்ந்தாள் அம்மு.

        அவள் எடுத்து வந்ததோ கம்ப்யூட்டர் சம்பந்தமான புத்தகம்.,

      “ஏன்மா இதை எடுத்துட்டு வந்த” என்று டாக்டர் கேட்டார்.,

       “இந்த புத்தகத்தை  இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்து இருக்கேன்., ஆனா எங்க பார்த்தேன் எனக்கு தெரியல., இந்த புக் நேம் நான் ரொம்ப கேட்ட மாதிரி இருக்கு.  அது தான் இந்த புக் எடுத்தேன்”., என்று சொன்னவள்..,

       “எனக்கே சரியா தெரியல., ஆனா இந்த புக் நேம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.,  நான் இதை பாத்திருக்கேன்., எங்கேயோ  பாத்திருக்கேன்”., என்று திரும்பத் திரும்பச் சொன்னாள்.

          ” அம்மு ஓகே மா., சரி சரி”., என்று சொன்ன டாக்டர்., சரவணனிடம் புத்தகத்தை திருப்பி காட்டினார்.,

       பார்த்தவனும் இது கம்ப்யூட்டர் சம்பந்தமான புத்தகம் அது மட்டுமில்லாமல்.,  எஞ்சினியரிங் ஸ்டூடண்ட்ஸ் குறிப்புகளை எடுப்பதற்காக லைப்ரரியில் உபயோகிக்கும் புத்தகம் என்பதை தெரிந்து கொண்டவன் டாக்டரை பார்க்க..,  டாக்டர் தலையாட்டினார்..,

        “சரி இந்த புக்கை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு வாங்க பார்ப்போம்”., என்று சொல்லி டாக்டர் அனுப்பினார்.

           அவளும் அந்த புத்தகத்தை கொண்டு போய் அதே இடத்தில் வைத்து விட்டு திரும்பு முன் டாக்டர் “உங்களுக்கு புரியுதா சரவணன்”., என்று கேட்டார்.

       “ஒரளவு கெஸ் பண்ண முடியுது டாக்டர்”., என்று சொன்னான்.,

         “என்ன”., என்று திலகவதி கேட்டார்.

         “அம்மா அந்த பொண்ணு என்ஜினியரிங் படிச்சிட்டு இருந்த பொண்ணா.., இல்லை இஞ்சினியரிங் முடிச்ச பொண்ணா ன்னு தெரியல.., அந்த புக் என்ஜினியரிங் சப்ஜெக்ட்ல உள்ள புக்”., என்று சொன்னான்.

        “ஓ அப்படியா”., என்று கேட்டுக் கொண்டார்.

      அவளை சோதனை அறைக்கு கூட்டி கொண்டு சென்றனர்., கூடவே கடவுளிடம் வேண்டுதலோடு சரவணனும் திலகவதியும் சென்றனர்.,

       ” *எல்லா வேண்டுதல்களும் எல்லா நேரங்களிலும் நிறைவடைவது இல்லை”.,

    “சில கவலைகளை தூர வைத்து பார்க்க பழகிக் கொண்டால் போதும்.. வாழ்க்கை அழகாக நடை போடும்.” *

Advertisement