Advertisement

அழகா இருக்கடா தங்கம்“., என்று கன்னம் வழித்து  திருஷ்டி கழித்தவர்., “போவோம் வாஎன்று அவளை அழைத்து அவளை முன்னே விட்டு பின்னே நடந்து வந்தார்.,

        வெளியே வரவும் அவளை முதல் முதலாகப் புடவையில்  பார்க்கும் சரவணன் தான் சற்று சுற்றுச்சூழலை மறந்து நின்றது போல் நின்றவன்.,  பின்பு தன் தலையை உலுக்கிக் கொண்டுகிளம்பலாமாஎன்று சொன்னான்.

          பிளைட்டில் ஏறி அமரும் போதெல்லாம் சாதாரணமாக இருந்தவள்., கிளம்பும் போது அவன் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அவன் தோளோடு சாய்ந்து கொண்டாள்.,

     ஏற்கனவே அவளை ஜன்னல் அருகில் அமர விடக்கூடாதே என்று தான் நினைத்திருந்தான்.,

       உயரமான இடத்தை பார்த்து பயந்து விட்டாலோ.,  வேறு ஏதும் பிரச்சினை ஆகி விட்டால் கஷ்டம் என்பதால் தான் இருவருக்கும் நடுவில் வைத்திருந்தான்.,

      அவள் ஜன்னல் புறம் திரும்பி விடக்கூடாது என்ற எண்ணத்தோடு தான் திலகவதி பயப்படுவது போல கண்ணை மூடிக் கொண்டவர்., ஜன்னல் பகுதி கண்ணாடியை மூடி விட்டார்.

      அவள் சரியாக சரவணன் தோளில் சாய்ந்து உட்புறமாக தலை சாய்த்தாள்.

     சற்று நேரத்தில் நார்மலாகி விட்டாள்.,  “பயந்துட்டியாஎன்று கேட்டான்.,

      “இல்ல தட தட தட ன்னு சத்தம் வந்துச்சா.,  அப்ப மேலே ஏறும் போது ஒரு மாதிரி பண்ணுச்சு“.,  என்று சொன்னாள்., “அது  போகப்போக பழகிரும்“., என்று சொன்னான்.

        “இதுக்கு முன்னாடி நான் வரும் போதே இப்படித் தான் பண்ணுவேனா“., என்று கேட்டாள்.

     “ஆமா உனக்கு போக போக பழகிரும் ன்னு ஏற்கனவே சொல்லியிருந்தேன்.,  முன்னாடிக்கு  இப்ப பரவால்ல“., என்னும் படியாக அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.,

         அவளும் அதை நம்பிக் கொண்டிருந்தாள்.

          சென்னை சென்று இறங்கியவர்கள் அவர்களுக்காகக் காத்திருந்த காரில் ஏறி கல்லூரிக்கு சென்றனர்.,

      சரியாக கல்லூரியில் பேர்வல் பார்ட்டி தொடங்கும் போதே அவர்களும் போய் சேர்ந்தனர்.,

         இவ்வளோ கல்லூரி வளாகத்தை பார்த்தவுடன் யோசனையாக சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தாள்.,

        அதற்காக அவள் நடந்து வரும் பாதையை ஏற்கனவே நண்பர்கள் சொல்லி இருந்தனர்.,

           அதே பாதையில் அழைத்துக் கொண்டு சென்றான்., சரவணன் காரில் இருந்து இறங்கியதிலிருந்து சரவணனின் கையை கெட்டியாகப் பிடித்தபடி இருந்தாள்.,

      திலகவதி தான்.,  “நீ கூட்டிட்டு போடா., நான் பேசிட்டு வரேன்“., என்று சொல்லி அவனோடு அனுப்பி விட்டு மீராவின் அம்மாவை பார்த்து பேசுவதற்காக சென்று விட்டார்.,

         இவள் வருவாள் என்று தெரிந்ததால்.,  மீராவின் குடும்பத்தினரும் அங்கு காத்திருந்தனர்., ஆனால்அவள் இவர்களை பார்த்தால்., ஏன் இவங்க இங்கு வந்திருக்காங்கன்னு யோசிக்க கூடாது‘., என்ற பயத்தோடு சற்று தள்ளியே நின்று இருந்தனர்., அதனால் தான்  அவனை அழைத்துக் கொண்டு செல்ல சொன்னார்கள்.

        “ஏன் அத்தை வரல“., என்று கேட்டாள்.

        “அவங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது இருப்பாங்க.,  பார்த்து பேசிட்டு வரேன் ன்னு சொன்னாங்க.,  வா நாம போகலாம்“.,  என்று சொல்லி அவள் வகுப்பிற்கு அழைத்து சென்றான்.

           அங்கு அவளுக்காக  அவளுடைய வகுப்பில் உள்ள அனைவரும் காத்திருந்தனர்.,  வகுப்பிற்கு சென்றவள்.,  யோசனையாக வாசலைப்  பார்த்துக் கொண்டிருந்தாள்.,

       பி. பைனல் இயர்.,  கம்ப்யூட்டர் சயின்ஸ் என்று வாசித்தால்.,

         வாசித்தவள் சரவணனை பார்த்துஎதுக்கு இங்க வந்து இருக்கோம்என்று சொன்னாள்.,

           “இல்ல இங்க வந்து சும்மா எல்லாரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துட்டு போகலாம்.,  அதற்காக தான் வந்திருக்கோம்“., என்று சொன்னான்.

          “யார் கிளாஸ் இதுஎன்று கேட்டாள்.

       அவனும்இதுவா நான் முன்னாடி இங்க தான் ஒர்க் பண்ணேன் அதுக்காக வந்திருக்கோம்.,  இவங்க எல்லாம் என்னோட ஸ்டூடண்ட்ஸ்.,  அவங்கள பார்ப்பதற்காக தான் உன்னை கூட்டிட்டு வந்தேன்“., என்று சொன்னான்.

        “நீங்க எதுக்கு ஒர்க் பண்றீங்க., நீங்க மாமா பிசினஸ் தானே பார்த்துவட்டு இருக்குறீங்க“., என்று சொன்னாள்.

     “சும்மா படிச்சு முடிச்சு டைம் பாஸ்க்கு வொர்க் பண்ணினேன்., இப்ப பண்ணலை“., என்று சொன்னான்.

    அதற்கேற்றார் போல் அருகிலிருந்த பிரபஸர்களும் ஆமா என்று சொன்னார்கள்.,

          அவளும் ஏதோ யோசித்தவள் பின்பு யோசனையோடே வகுப்பறைக்குள் வந்தாள்., “நான் இதுக்கு முன்னாடி இங்க வந்திருக்கேனா“., என்று அவனிடமே கேள்வி கேட்டாள்.

         அவனும்ஆமா என் கூட வந்து இருக்க“., என்று சொன்னான்.

         “உங்க கூட அடிக்கடி வந்து இருக்கேனாஎன்று அவளும் கேட்டுக் கொண்டாள்.

வகுப்பில் உள்ள மாணவமாணவிகளும் சரி.,  பேராசிரியர்களும் சரி அழகாக சமாளிக்கிறார் என்று நினைத்துக் கொண்டனர்.

      ஆனால் அவ்வளவு அழகாக இருந்த மீராவிற்கு நினைவுகள் இல்லை என்பது தான் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.,

        அவள் அறியாவண்ணம் நண்பர்களும் தோழிகளும் கலங்கிய கண்ணைத் துடைத்துக் கொண்டனர்.,

       உள்ளே வந்தவன்நீ இங்க உட்காருஎன்று சொல்லி அவள் எப்போதும் அமரும் இடத்தில் அமர்த்தி விட்டு வேண்டுமென்றே  பேராசிரியர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தான்.

     அவள் தான்இல்ல நானும் உங்க கூட வாரேன்“., என்று சொன்னாள்.

        “ஒன்னும் இல்லடா., இந்த கிளாஸ் கொஞ்ச நேரம் உட்கார்ந்திரு.,  நான் பேசிட்டு வந்துடறேன்“.,  என்று சொன்னவன்.,

           அறைக்குறை மனதோடு சரி என்று சொன்னாள்பவியிடம் சொல்லிஅவளை கொஞ்சம் பாத்துக்கோங்க.,  நான் இப்ப வந்துடறேன்“.,  என்று சொல்லி ஒப்படைப்பது போல ஒப்படைக்க..,

         பவி தான் மீராவின் கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டாள்., சற்று நேரம் எதுவும் சொல்லாமல் இருந்த மீரா.,  மெதுவாக அவள் கையை தடவிப் பார்த்தாள்.,

        தடவிப் பார்த்துக்கொண்டே  இருக்கும் போதே போட்டோ எடுத்து விடலாம் என்று பிரபஸர்கள் அவசர படுத்தினர்.,

       “கொஞ்ச நேரம் மீரா க்ளாஸ் இருக்கட்டும்“.,  ஒரு மாணவன் சென்று சொன்னான்., 

          முடியாது என்பது கையை காட்டினார்.,  ஏனென்றால் மீராவை அதிக நேரம் வைத்திருக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் ப்ரபஸர்ஸ் பிரின்ஸிபல் என அனைவரும் வந்து விட.,  எல்லோரும் போட்டோ எடுக்கலாம் என்று சொல்லி அவளையும் அழைத்துக் கொண்டு சென்றனர்.

          அப்போது பவி அவளை கைபற்றி அழைத்து சென்றாள்.,  அவள் கையை பார்த்துக் கொண்டே அவள் பின்னே சென்றவள்.,  சரவணனை அழைத்தாள்.,

          சரவணன் தான்நீ போ நான் வரேன்என்று சொன்னான்.,

      “நான் எதுக்கு அவங்க கூட போட்டோ எடுக்கணும்.,  நீங்க வாங்கஎன்று சொன்னாள்.,

        “இல்லடா நான் இப்ப இங்க ஒர்க் பண்ணல இல்ல.,  நான் போட்டோ எடுக்க முடியாது“., என்றான்.

        ” அப்புறம் நான் மட்டும் எதுக்கு எடுக்கணும்“., என்று சொன்னாள்.,

          “நீயும் அழகாக அதே கலரில் டிரெஸ் பண்ணி இருக்க.,  அதனால அவங்க கேட்டாங்க.,  ஒரே ஒரு போட்டோ., ஒன்னு மட்டும் தான்.,  நீ ரொம்ப அழகா வேற இருக்கியா அதுக்கு தான்“.,  என்று சொன்னாள்.

       “அப்படி எல்லாம் இல்ல., நான் ஒன்னும் இல்ல.,  அதெல்லாம் இல்லை“.,  என்று சொல்லிக் கொண்டே இருந்தவள்.

        பவி கையை அழுத்தமாக பிடிக்க.,  அவள் அறியாமல் அவள் உடன் சென்றாள்., சென்று போட்டோ எடுத்து முடித்தவுடன்., வேகமாக சரவணனிடம் ஓடி வந்தவள்.,

       “அவங்க என் கையை இப்படி பிடிச்சு இருந்தாங்கஎன்று சொன்னாள்.

           “ஆமாடா.,  நான் தானே உன்னை பிடித்து கையில் கொடுத்து பத்திரமா பாத்துக்கோங்க ன்னு சொன்னேன்“., என்று சொன்னான்.

      “இல்ல அந்த கையை., அந்த கையை“.,  என்று சொன்னவள் அவளுக்கு ஏதோ குழப்பம் வருகிறது என்பதை புரிந்தவன்.,  அவளை தன்னோடு சேர்த்து பிடித்துக் கொண்டான்.,

     சற்று நேரம் அமைதியாக நின்றவள்.,  சரவணனின் கைப்பற்றி அங்கு அருகில் இருந்த சேரில் அப்படியே அமர்ந்து விட்டாள்., அவன் தோளில் சாய்ந்துக்கொண்டே அமைதியாக இருந்தாள்.,

        “என்னடா என்ன ஆச்சு“., என்று கேட்டான்.,

     “இல்ல என் கையை அமுக்கி., இப்படி பிடிச்சாங்கஎன்று சொல்லி சரவணன் கையோடு தன் கையை கோர்த்து பிடித்து காட்டியவள்.,

      “அவங்க இப்படி பிடிச்ச உடனே அவங்க கையை நான் இதுக்கு முன்னாடி எப்பவோ இதே மாதிரி பிடிச்ச மாதிரி.,  ஒரு பீல்“.,  என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.,

       “அம்மு இவ்வளவு தானே.,  கேட்டு இருக்கலாமே“., என்று சொல்லும்போதே மாணவர்களும் சற்று தள்ளி நின்று என்ன பேசுகிறார்கள் என்று கவனித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

          சரவணன் தான்இதுக்கு முன்னாடி நீ என்கூட காலேஜ்க்கு வருவ இல்ல., அப்ப அந்த பொண்ணு கூட தான் கதை பேசுவ., அந்த பொண்ணு கைய பிடிச்சிட்டு கதை பேசிட்டே  இருப்ப.,  அதனால உனக்கு அப்படித் தோணுது“.,  என்று சொன்னான்.,

            அப்படியா என்று தெளிவு பெற்றாள்.,  அப்போது தான் அங்கு அனைவரும் பங்க்ஷன் அது இது என்று நடத்திக் கொண்டிருந்தனர்.,  சில உணவு வகைகளும் பரிமாறப்பட்டது.,

       வாங்க சாப்பிட்டு போலாம் என்று சொல்லி அழைத்தனர்.,

         அவள் தான்இல்ல நம்ம வீட்டுக்கு போகலாம்., எனக்கு புடிக்கலஎன்னவோ மாதிரி இருக்கு“., என்று சொன்னாள்.,

        “ஏம்மா இந்த இடம் பிடிக்கலையா“.,  என்று பிரபஸர்களில் ஒருத்தர் கேட்டார்.

       “இல்ல எனக்கு இதுக்கு முன்னாடி இங்க வந்திருக்கேன்.,  இந்த இடம் இந்த இடம் எனக்கு ரொம்ப பழக்கப்பட்ட இடம் மாறி இருக்கு“., என்று சொன்னாள்.

ப்ரபஸர் அதையே திரும்ப சொன்னார்., “நீங்க சரவணன் சார் கூட அடிக்கடி வருவீங்க.,  அதனால தோன்றியிருக்கும்“., என்று சொன்னார்.

        ‘அப்படி இருக்குமோஎன்று யோசித்தவள்., பின்புஇல்லை எனக்கு என்னமோ பண்ணுது“., என்று சொல்லும் போதே சரவணன் தான்.,

       “கூட்டிட்டு போறேன் மேடம்என்று சொல்லியபடி அவளை அழைத்துக் கொண்டு கிளம்ப தொடங்கினான்.

    அப்போது தான்இல்ல அட்லீஸ்ட் ஸ்வீட் ஆவது சாப்பிட்டுட்டு போங்கஎன்று சொல்லி.,

       அங்கு இருந்த ஸ்வீட்டை எடுத்துக் கொடுத்தனர்.,

         அவர்கள் கொடுப்பதை வாங்கி உண்டு விட்டு அங்கிருந்து கிளம்ப போகும் போது.,  “ஒரே ஒரு பாட்டு பாடிட்டு போங்களேன்“.,என்று அவளுடைய நண்பன் வேண்டும் என்று கேட்டான்.

          அவள் அவனை வித்தியாசமாக திரும்பி பார்த்தபடிநான் உங்க கிட்டயும் இதுக்கு முன்னாடி பேசி இருக்கேனா“., என்று கேட்டாள்.

            “ஆமா சார் கூட வரும் போது பேசி இருக்கீங்க“., என்று அவனும் சமாளித்தான்., அவன் தான் அவளிடம் எப்போதும் வம்பு வளர்த்து கொண்டே இருப்பவன்., பவிக்கு பிறகு அவனுடன் தான் நல்ல பழக்கம்., 

      ” நீங்க தான் நல்ல பாடுவீங்களே“., என்று சொன்னான்.

      “ஆமா அது உங்களுக்கு தெரியுமா“.,  என்று கேட்டாள்.

       “சார் சொல்லி இருக்காங்க“., என்று  சரவணனை சொல்லியே சமாளித்தனர்.,

     “ஒரு நாலு லைன் மட்டும் பாடுங்களேன்“., என்று சொன்னான்.,

        யோசித்துக்கொண்டே சரவணனை பார்க்க., “கேட்குறாங்களே பாடுமா.,  அன்னைக்கும் பாடமாட்டேன் ன்னு சொன்ன“., என்று சொன்னான்.

       என்ன பாட்டு என்று யோசித்தவள் அவளறியாமலேயே., எப்போதும் கல்லூரியில் அடிக்கடி முணுமுணுக்கும் பாடலை பாடத் தொடங்கும் முன்ஃப்யூ லைன்ஸ் பாடினா போதும் இல்லைஎன்று சரவணனிடம் கேட்டுவிட்டு பாடத் தொடங்கினாள்.

கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கண்ணி கண்கள் விழித்தாள் கன்னம் தீண்டியது கண்ணன் அல்ல வெறும் காற்று என்று திகைத்தாள் கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள் காட்டில் தொலைத்து விட்ட கண்ணின் நீர் துளியை எங்கு கண்டுப்பிடிப்பாள்
கிளியின் சிறகு வாங்கிக்கொண்டு கிழக்கு நோக்கி சிறகடித்தாள்
குயிலின் குரலை வாங்கிக்கொண்டு கூவி கூவி அவள் அழைத்தாள்
அவள் குறை உயிர் கரையும் முன்
உடல் மண்ணில் சரியும் முன்
கண்ணா கண்ணா நீ வா
கண்ணீரில் உயிர் துடிக்க
கண்ணா வா உயிர் கொடுக்க..

      நீண்ட நாள் கழித்து அவள் குரலைக் கேட்ட அவள் வகுப்பு தோழர்களுக்கும் சரி.,  பேராசிரியர்களுக்கும் சரி.,  இந்த அளவு மீண்டு வந்ததே பெரிய விஷயம் என்று சொல்லி அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.,

      பின்பு அவளுக்கும் ரொம்ப நல்லா பாடின என்று  சொன்னவர்கள்.,

திலகவதி இடமும்  சரவணனிடமும்ரொம்ப நன்றி சார்., இந்த அளவுக்கு அவ இருக்கிறதே உங்களால தான் ன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.,  கூட்டிட்டு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்“.,  என்று சொன்னார்கள்.,

       அவனும்அவ இங்க வந்ததுக்கு அப்புறம் ஏதாவது ஞாபகம் வருமா ன்னு பார்த்தேன்.,  ஆனால் டாக்டர்  சொல்லி அனுப்பினார்.,  நாங்க கிளம்புறோம்.,

        இனிமேல் நீங்க உங்க பங்க்ஷன் என்ஜாய் பண்ணுங்க., போட்டோ இருந்த அனுப்புங்க“.,  என்று சொல்லிவிட்டு அவளையும் அம்மாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.,

      அவளை கூட்டத்தோடு தள்ளி நின்று பார்த்துவிட்டு சென்றனர் அவள் வீட்டினர்., ஏன் வந்திருக்கிறார்கள் என்ற சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக தள்ளி நின்றார்கள்.

        பெங்களூர் வந்தபிறகும் அவனிடம்அங்க அடிக்கடி போவோமா என்னஎன்று கல்லூரியைப் பற்றிய கேட்டுக்கொண்டிருந்தாள்.

       பின்பு ஏதேதோ சொல்லி சமாளித்து வைத்தனர். ஆனால் அந்த பாடல் அவள் இதுவரை ப்ராக்டிஸ் பண்ணாத பாடல் என்பது அம்மாவும் மகனும் மட்டும் அறிந்தது., அதை  டாக்டரிடம் சொல்ல.,

           டாக்டர் ஏதோ ஒரு விஷயம் மனதளவில் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை போல.,  அவள் மயக்கத்தில் போகும் முன்னே ஏதேனும் அவள் கண்ட காட்சிகளின் நினைவாக கூட இருக்க வாய்ப்பிருக்கிறது“., என்று பேசிக் கொண்டிருந்தனர்.

       தவிர அவளின் நிலை என்ன என்பது அப்போது தெரியவில்லை., ‘விரைவில் நினைவு திரும்புமாஎன்று டாக்டருக்கும் யோசனையோடு இருந்தார்.

நம் மேல் உண்மையான அன்பு கொண்ட நட்புகள் கிடைப்பதிலும் வரம் அப்படி கிடைத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

நண்பர்களை பெற்றிருக்கும் யாரும் பயனில்லாத மனிதனில்லை.

   

Advertisement