Advertisement

19

              பெங்களூர் க்கு வந்த பின்பு அவர்களுக்கு நாட்களை பிடித்து  தள்ளுவது கடினமாக இருந்தது  போலவே தோன்றியது.,

           ஒவ்வொரு நாளும் விடியலில் அவரவர் வேலையை செய்து கொண்டாலும்.,  ஏனோ மனம் முழுவதும் அவள் நினைப்போடு இருந்தது.,

      திலகவதியும்தன் மனதில் இப்படி ஒரு நினைப்பு இருப்பதை வெளியே காட்டிக் கொண்டாள் சரவணன் நிச்சயமாக திட்டுவான்என்ற எண்ணத்தோடு அதை அவனிடமிருந்து மறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

     ஏனெனில் காலையில் எழுந்தவுடன் அவள் திலகவதி கையை பிடித்துக் கொண்டே.,  அவர் எங்கெல்லாம் போகிறாரோ அங்கெல்லாம் பின்னாடியே செல்வாள்.,

     குளித்து விட்டு பூஜைக்கு பூ பறிக்க வேண்டும் என்று சொன்ன காரணத்திற்காக தினமும் காலையில் குளிர் என்று சொன்னாலும் கேட்காமல் வெண்ணீர் வைத்து குளித்து விட்டு.,  அவர் பின் சுற்றிக் கொண்டிருப்பாள்.

          “நான் தான் வயசானவ சீக்கிரமா குளிச்சுட்டு சாமி கும்பிடுறேன்“.,  உனக்கு என்ன என்று கேட்டால்.,

      “இருக்கட்டுமே எனக்கும் ஒருநாள் வயசு ஆகுமே“., என்று சொல்லிக் கொண்டு இருப்பாள்.

                இப்பொழுது அவள் இல்லாமல் தனியாக பூ பறிப்பதும் அவருக்கு என்னவோ போலிருந்தது.,  இத்தனைக்கும் பூ  பறிக்க மட்டும் தான் உதவி செய்வாள்., பூஜையில் எல்லாம்  கலந்து கொள்ள மாட்டாள்.,

          இவர் சாமி கும்பிட்டு முடித்தவுடன் அவர் வைத்துவிடும் திருநீரை மட்டும் வாங்கிக் கொள்வாள்., இவற்றை எல்லாம் நினைத்தபடி திலகவதி இருந்தாலும்.,  அவற்றை அவனிடம் காட்டிக் கொள்வது கிடையாது.

           அது போலவே அவனுக்கும் நினைவுகள் இருந்தாலும் அம்மாவின் மனம் வருத்தப்படும் என்ற காரணத்திற்காக அவளைப் பற்றிய எண்ணமே இல்லாதவன் போல நடந்துகொள்ள தொடங்கியிருந்தான்.,

         ஆனால் அவன் மனம் முழுவதும் அவளுடைய நினைவுகள் தான் அவனுக்கு அதிகம் இருந்தது.,

     அவன் காலையில் எக்ஸைஸ் முடித்து வந்து அமர்ந்து பேப்பர் படிக்க தொடங்கும் போதிலிருந்து அவனோடு வாயாட தொடங்குபவள்., ஏதாவது அவனிடம் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பாள்., அவளை பேப்பர் வாசிக்க பழகியிருந்தான்.,

          அதனால் ஒரு பேப்பரை கையில் வைத்துக்கொண்டு., இது எதுக்கு அது எதுக்குன்னு ஒவ்வொரு பக்கத்திலும்  நாலு கேள்வியாவது கேட்டு அவனை பாடாய்ப்படுத்துவது அவளது வழக்கம்., இப்பொழுதெல்லாம் அவளது தொந்தரவு இல்லாமல் பேப்பர் படிப்பது கூட சுவாரசியம் இல்லாதது போலவே அவனுக்கு தோன்றியது.,

        இவற்றையெல்லாம் அவனும் நினைத்துக் கொண்டே இருந்தான்., அலுவலகம் கிளம்பி சென்ற பின் வேலை அவனுக்கு அதிகம் என்பதால் வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாலும்., இடையிடையே ஃபோனில் வரும் அவளது மெசேஜ்களையும் டிராயிங் கிளாஸ் முடிந்தவுடன் அவள் அனுப்பும் படங்களையும் எதிர்பார்த்து காத்து இருப்பான்.,

           அது போலவே இப்பொழுதும் அவளிடமிருந்து மெசேஜ் வருமா என்பது போல பார்த்துக் கொண்டிருந்தான். ஏனெனில் அவனுடைய அம்மா போனில் இருந்து தான் மெசேஜ் அனுப்பினாலும்.,  அவள் வரையும் படங்கள் அவனுக்கு சற்று ஆறுதலாய் இருப்பதாக தோன்றியது., ஆனால் இப்பொழுதோ எதுவுமில்லாமல் ஏதோ மெஷின் போல வாழ்க்கை ஓடிக் கொண்டிருப்பது போல உணரத் தொடங்கினான்.

இந்த நாலு மாத காலங்கள் தான் ஆகிறது., அவள் அவர்கள் வீட்டிற்கு வந்து என்பதை அம்மா மகன் இருவராலும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை., ஏனோ அவள் தங்களோடு இருந்தது போலவே உணர்ந்தார்கள்.,

        இருவரும் அப்படி நினைத்துக் கொண்டு அவர்களது நாட்களை ஏதோ போனால் போகிறது என ஓடிக் கொண்டிருக்க., அவளை விட்டு வந்து இரண்டு நாட்கள் தான் ஆகியிருக்கிறது என்பதை இருவராலும் நம்ப முடியவில்லை.,  அவள் இல்லாத இரண்டு நாட்கள் கூட அவர்களுக்கு நீண்ட நாட்களாக தோன்றியது.

    அங்கு சென்னையிலோ முதல் நாள் முழுவதும் தூங்கியே நேரத்தை கழித்து விட்டாள். இரண்டாம் நாள் வீட்டினர் அக்கம் பக்கத்தினர் என வந்து பேசி சென்றாலும் எல்லோரிடமும் மிகக்குறைவான பேச்சோடு  நிறுத்திக் கொண்டாள்.,

     அனைவருக்கும் ஏன் இப்படி இருக்கா என்று தோன்றினாலும் ஏதோ இதிலிருந்து மீண்டு வந்ததே அவளுக்கு பெரியது தான் என்று நினைத்துக் கொண்டனர்., அவள் மனமும் பெங்களூரில் அவர்களோடு இருந்த நாட்களை.,  அவள் பழைய நினைவுகளை மறந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் வீட்டில் ஒருத்தியாக வலம் வந்தது அவளுக்கு பசுமையாக தோன்றியது.,

      டாக்டரிடம் சொன்னது போல தன் அம்மா அப்பாவோடு இருந்தது ஏதோ பழைய ஜென்மம் போலவும்., அவர்களுடைய இருந்தது தான் இப்போதைய ஜென்மம் போலவும் அவளுக்கு ஒரு எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருந்தது.,

     இதைப் பற்றி டாக்டரிடம் கேட்கும் போது டாக்டர்உனக்கு இரண்டு நினைவுகளுமே  இருப்பதால் அப்படி தோன்றுகிறது., மற்றபடி ஒன்றுமில்லை“., என்று சொல்லியிருந்தார்., அதையே நினைத்துக் கொண்டவள் சரியாகிவிடும் என்று தன்னை தேற்றிக் கொண்டிருந்தாள்.

          வீட்டிலும் யாரிடமும் அதிகமாக பேசவில்லை.,  தூக்க மாத்திரை டாக்டர் கொடுத்திருப்பது மீராவின் அம்மாவிற்கும் தெரியும்., அதனால் இரவு அவள் உணவு முடித்தவுடன் அவளுக்கான மாத்திரை கொடுத்து அவளை தூங்கச் சொல்லி விட அவளும் தூங்கிவிடுவாள்.

        ஆனால் பாதி தூக்கத்திலிருந்து எழுந்து கொள்பவளுக்கு மீண்டும் தூக்கம் வருவது மிக கடினமாக இருந்தது., இப்படியே அவளுக்கும் இரண்டு மூன்று நாட்கள் கழிந்தன.,

           நான்காவது நாள் மெதுவாகஎனக்கு வீட்டுக்குள்ளேயே இருக்க என்னவோ மாதிரி இருக்கு“., என்று முதல் முதலாக வாயைத் திறந்தாள்.

      அவளாக கேட்கவும்காலேஜ்க்கு போறியா“., என்று அப்பாவும் அம்மாவும் கேட்டனர்.

              சரி என்று சம்மதமாக தலையசைத்தாள்., கல்லூரிக்கு போன் செய்து கேட்டனர்.

          அவள் நன்றாக குணமான பிறகு வந்தால் போதும்., ஆனால் அவளுக்கு வருவதற்கு பிடித்திருந்தால் வரட்டும் என்று சொல்லியிருந்தனர்., எனவே அவளுடைய அண்ணன் அவளை அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு சென்றிருந்தான்.

             அன்று ஒரு நாள் மட்டும அவனுடைய வேலைக்கு விடுப்பு எடுத்து விட்டு அவளோடு சென்றிருந்தான்., ஒருவேளை அவளுக்கு பாதியில் வரவேண்டும் என்று தோன்றினால் அழைத்துக் கொண்டு வந்து விடவேண்டும் என்று நினைத்து இருந்தான்.,

        மீரா.,  நான் இங்கே வெளியே  வெயிட் பண்றேன்., உனக்கு வீட்டுக்கு  போகனும் போல இருந்தா., உன்னுடைய செல்லில் இருந்து எனக்கு கூப்பிடு“., என்று சொல்லியிருந்தான்.

       அவளும்சரிஎன்று சொல்லி அவனிடம் சொல்லி விட்டு அவளுடைய வகுப்புக்கு சென்று இருந்தாள்.

       அங்கு தோழிகளோடு அமர்ந்து இருந்தாலும் அவளுக்கு பேச எதுவும் தோன்றவில்லை.,  மற்றவர்கள் சொல்வதை மட்டும் சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தாள்.

        அப்போது தான் ஃபேர்வெல் க்கு வகுப்பில் எடுத்த போட்டோ வர அவற்றைப் பார்த்து கொண்டு இருந்தாள்.,

      அதைப் பார்த்தவளுக்கு அத்தனை மகிழ்வாக இருந்தது.,  தான் நினைவு இல்லாமல் இருந்தோம் என்று சொன்னால் நம்ப முடியாது என்னும் அளவிற்கு தான் அவளை அலங்கரித்து கூட்டி வந்திருந்தார் திலகவதி.,

        எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செய்வது என்பது பெரும் வரம்.,  அது யாருக்கும் கிடைப்பதில்லை.,  அது கற்றுக்கொண்டு செய்யக்கூடியது இல்லை.,  மனதிலிருந்து உண்மையான அன்போடு வெளிவரக்கூடிய ஒன்று., அந்த முழுமையான அன்பு தனக்கு திலகவதி இடமிருந்து கிடைத்ததை நினைத்து சந்தோஷத்தோடு போட்டோவை பார்த்துக் கொண்டிருந்தாள்., 

     தோழிகளும் நண்பர்களும் தான்.,  “ஆனா சும்மா சொல்லக் கூடாது தெரியுமா., அவங்க வீட்டில உன்ன அப்படி பார்த்துக்கிட்டாங்க“., என்று சொல்ல சாதாரணமாக தலையாட்டினாள்.,  “ஆமாஎன்று மட்டும் சொன்னாள்.

    அப்போது தான் அவன் வகுப்பில் உள்ள தோழன்என்ட்ட ஒரு போட்டோ இருக்கு தெரியுமா.,  நான் நீ எப்படி திரும்பி வருவ.,  என்ன ஏதுன்னு எதுவும் தெரியாது.,  ஆனா உன் ஞாபகமா எங்க எல்லாருக்கும் இருக்கணும்னு சொல்லி நான் ஒரு போட்டோ எடுத்து வச்சு இருந்தேன்., அதை அப்புறமா தான் ஷேர் பண்ணேன்“., என்று சொன்னான்.

                 நண்பர்கள் அவர்களுடைய செல்லிலிருந்து அவளுக்கு அனுப்பினர். அப்போது தான் அந்த புகைப்படத்தை பார்த்தாள்., அவளுக்கு நினைவு இருக்கிறது.,  போட்டோ எடுத்து முடித்தவுடன் மனம் டென்ஷனாக இருந்தது.,  சரவணன் கையை பிடித்து அவன் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்த போட்டோ அத்தனை அழகாக இருந்தது., ‘அவன் கண்களில் தான் எத்தனை அன்பு‘., என்று தோன்றியது.

     ‘எப்படி இவர்களை எல்லாம் விட்டுவிட்டு தான் இங்கே இருக்கிறோம்என்று தோன்றினாலும்., ஃபோட்டோ வை அப்படியே சற்று நேரம் பார்த்திருந்தாள்.

         பின்பு அவள் தோழி இன்னொரு போட்டோவையும் அவளுக்கு அனுப்ப.,  அதை பார்த்து அவளுக்கு இன்னும் அவர்களின் நினைவு அதிகமாகியது., அது சரவணனுக்கும் திலகவதிக்கும் நடுவில் அமர்ந்து சரவணனின் தோளில் சாய்ந்து இருக்க.,  திலகவதி அவள் தலையை தடவிக் கொடுத்துக் கொண்டு இருப்பது போன்ற புகைப்படம்.,  அத்தனை ரம்யமாக இருந்தது.,  பார்க்க பார்க்க அதையே பார்த்து இருந்தவளுக்கு கண்கலங்க மற்றவர்களிடம் காட்டாத அளவு கண்ணை சிமிட்டி சரிப்படுத்திக் கொண்டாள்.

       தோழிகளிடம்  பேச்சை மாற்ற பரீட்சை விஷயமாக கேட்டுக் கொண்டிருந்தவள்.,  சற்று நேரத்தில் அப்படியே டெஸ்கில் தலை சாய்த்து படுத்து விட்டாள்.,

        அவளை தொந்தரவு செய்கிறோமோ என்று நினைத்தவர்கள்.,  “நீ ரெஸ்ட் எடு.,  உனக்கான நோட்ஸ் எல்லாம் நாங்க தரோம்.,  எக்ஸாம் க்கு யூஸ் ஆகும்., ஈஸியா எழுதலாம்“., என்று சொல்லி ஆளாளுக்கு அவளுக்கு எக்ஸாம் நோட்ஸ்ஸ் எடுத்து தயார் செய்து கொண்டிருந்தனர்.

      அதை வெளியே கொடுத்து ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி எந்தெந்த நோட்ஸ் எல்லாம் அவளுக்கு எடுத்துக் கொடுக்க வேண்டும் என்பதை பற்றி அவர்களுக்குள் ஆராய்ந்து கொண்டிருக்கும் போது.,

      கண்ணை மூடி டெஸ்கில் தலைசாய்த்து இருந்தவளுக்கு., வீட்டின் சூழ்நிலைகள் கண்முன் வந்து சென்றது.

     ‘அம்மா அப்பா அக்கா அண்ணன் என அனைவரும் நல்லபடியாக பார்த்துக் கொண்டாலும்‘., அண்ணியின் முகத்தில் அவ்வப்போது ஒரு யோசனையோடு தன்னையே நோட்டம் விடுவது தெரிந்தது.,

         ‘எதற்கு என்று தோன்றினாலும்., இவர்கள் ஏதாவது கோல்மால் செய்வார்கள்என்று மனம் சொல்லியது.

       

Advertisement