Advertisement

அவ ரொம்ப இன்ட்ரஸ்ட் ஆன வேலையில இருக்கிறா.,  நீ சொல்லு“.,  என்று சொன்னார்.

         “இல்லம்மா எல்லாரும் அவளை பார்க்கணும் ன்னு., அவளுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க“.,  என்று சொன்னான்.

        “இருடா அம்மு ட்ட  கொண்டு போறேன்என்று போனை எடுத்துக் கொண்டு செல்ல.,  அவர்களது வீடு நன்றாக மற்றவர்களின் பார்வைக்கு தெரிந்தது.,

        அவர்களது எஸ்டேட்டில் இருந்து அவளை எடுத்தார்கள் என்று சொன்னதும்., அவனுடைய நடை உடை பேச்சு பழக்கவழக்கம் அனைத்துமே அவனது நிலையை எடுத்துக் காட்டியது.,

       இப்போது உள்ளே செல்ல அவளது பின்புற தோற்றம் மட்டும் தான் முதலில் தெரிந்தது.,  முடியை சிறியதாக போனிடெயில் போட்டு இருந்தாள்., ப்ராக்  போல நீளமான உடை அணிந்திருந்தாள்.,

     செல்லை எடுத்துக் கொண்டு சென்றவர்.,  “அம்மு“., என்று அழைக்கவும்.

         “என்ன  அத்தைஎன்றாள்., அவள் அத்தை என்று அழைப்பது அவள் குரல் எல்லாம் மாணவமாணவிகள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.,

          அவளது முகத்தை காட்ட சிரித்தபடிஎன்னத்தைஎன்றாள்.

        “இந்தா சரவணன் பேசுறான் பாரு“.,  என்று சொல்லி போனை கொடுத்தார்.

          அவளும் அவனிடம்எங்க போனீங்க.,  காலைல நான் எழும்புறதுக்கு முன்னாடி போய்ட்டீங்க“.,  என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

          “முக்கியமான பிசினஸ் மீட்டீங் டா மா.,  அதனால கிளம்பி வந்துட்டேன்“.,  என்று சொன்னான்.,

         “பொய்., நீங்க ஆபிஸ் போகவே இல்லை., நான் போன் பண்ணும் போது உங்க பி. தான் எடுத்தாங்க., சார் வெளியே போயிருக்காங்க ன்னு., சொன்னாங்களே“., என்றாள்.,

        “நீ ஏன் ஆபிஸ் கூப்பிட்ட., எனக்கு கூப்பிட வேண்டியது தானே“., என்றான்.,

         “உங்க போன் ஸ்வீட்ச் ஆப் ன்னு வந்துச்சே“., என்றாள்.

           “ஒஒ., நான் வேற ஊருக்கு வந்துருக்கேன்., அதுதான் ப்ளைட்ல வரும் போது ஆப் பண்ணிட்டேன்“., என்றான்.,

      அவள் முகம் மாறுவது எல்லோரும் பார்த்து கொண்டு தான் இருந்தனர்.,

           “எப்ப வருவீங்க., ஏன் என்னை விட்டுட்டு போனீங்க“., என்றாள்.

         “சாரிடா., நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா உன்னை கூட்டிட்டு வர்றேன்., ஏன்டா போன் பண்ணின“., என்றான்., 

        “இல்ல நீங்க சொன்னீங்க தானே.,  நான் ஒழுங்கா வரைஞ்சா எனக்கு நான் கேட்குறத வாங்கி தர்றேன் ன்னு சொன்னீங்க தானே“., என்றாள்.

        “என்ன வேணும் அம்மு க்கு“., என்றான்.

          “சாக்லேட் வேணும்., அதுவும் பெருசா வேணும்என்று இவளும் அவனிடம் கேட்டு விட்டு அவள் வரைந்த ஒவியத்தை காட்டினாள்.,

         பார்த்து இருப்பவர்களுக்குத்தான்எதுவுமே ஞாபகம் இல்லாமல் இப்படி இருக்கிறாளே“., என்று தோன்றினாலும்ஏதோ இந்த அளவிற்கு நன்றாக இருக்கிறாளேஎன்ற எண்ணம் தான் தோன்றியது.,

      அவளைப் பார்த்து வாயை மூடி அவள் அம்மா அழுவதை பார்த்தவனுக்கு மனது வருத்தமாக இருந்தது.,  அவர்கள் குடும்பமே கண்ணீரில் நனைந்திருக்க முதன்முதலாக சரவணனுக்கு அவன் அறியாமல் குற்ற உணர்ச்சி தோன்றியது., தப்பு பண்ணி விட்டோமோ., அப்பவே வந்து  இருக்கணுமோ என்றெல்லாம் நினைத்து கொண்டிருக்க.,

      “அம்மு தான் ஷ்ரவன் என்ன ஆச்சு., ஏன்  கேட்கலையா., ஹலோ நான் உஙக  கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்“., என்று சொன்னாள்.,

          “சரியா கேட்கலை., என்னடாஎன்று அவன் கேட்பதை பார்த்தால் அவன் அவளை எந்த அளவிற்கு அன்பாக பார்த்துக் கொள்கிறான் என்பது அங்கு உள்ள அனைவருக்குமே புரிந்தது.,

        அப்போது தான் அவள்சாக்லேட் சொன்னேன் மறந்துட்டீங்கஎன்று சொன்னாள்.,

        “நான் வரும் போது சாக்லேட் வாங்கிட்டு வர்றேன்“., என்றான்.

          “ம்ஹூம்., எனக்கு இப்பவே வேணும்“., என்றாள்.

         “அவ்வளவு தானே.,  இப்ப நான் சொல்றேன்., சாக்லெட் வந்துரும்“., என்று சொன்னவன்அம்மா கிட்ட போனை கொடு“., என்று சொன்னதும்அத்தைஎன்று இவள் அழைத்து போனை கொடுத்தாள்.,

       அவர் பேசும் போது அவர் கையை பிடித்து கொண்டு அவர் தோளில் தலை சாய்த்து இவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டிருத்தாள்.,  அவரோஎன்னடாஎன்றார்.,

          “அம்மாஎன்று சொல்லி ஒருவர்  பெயரை சொல்லிஅவங்களை போய் அவளுக்கு எப்பவும் வாங்குற சாக்லேட் வாங்கிட்டு வந்து கைல கொடுக்க சொல்லுங்க“., என்றான்.

              ” இதோ இப்ப வாங்கிட்டு வர சொல்றேன் டா“., என்று சொன்னவர்.,  “பேசாம சாக்லேட் கம்பெனிய குத்தகைக்கு எடுடா., நானும் அம்முவும் பார்த்துக்குவோம்“., என்று கேலியாக சொல்வது தெரிந்தது.,

         அம்மா என்று அவனும் அத்தை என்று அவளும் ஓரே நேரத்தில் சொன்னார்கள்.,

             “இரண்டு பேரும் கத்தாதீங்க., நான் சாப்பிட மாட்டேன்., பார்டர் நிக்குற சுகர்க்கே இந்த பாடு., பார்டர் தாண்டுச்சி என்பாடு திண்டாட்டம் தான்என்றவர்

       அவளிடம் போனை கொடுத்து விட்டு அவரின் செல்வது தெரிந்தது.,

         அவள் போனை வாங்கி கொண்டுஅப்போ நீங்க எப்ப வருவீங்க“.,  என்றாள்.,

           “முடிஞ்சது டா., இப்ப கிளம்பிருவேன்.,  சாப்டியா“., என்றவன் சாக்லேட் அம்மாக்கு கொடுக்காதே.., என்றான்.,

            “இல்லை கொடுக்க மாட்டேன்.,  நான் சாப்பிட்டேன் நீங்க“.,  என்றாள்.

           “இனி தான் டா“., என்று சொன்னான்.,

      “டைம்க்கு சாப்பிடுங்க.,  அப்புறம் அத்தை திட்டு வாங்க“.,  என்று சொல்லி அவனிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது அவனிடம் அன்பாக இருப்பது தெளிவாக தெரிந்தது.,  பின்பு அவன் அம்மாவிடமும் இரண்டு வார்த்தை பேசிவிட்டு போனை வைத்து விட்டான்.,

         மாணவ மாணவிகளிடம்கன்ஃபார்ம் பண்ணிட்டீங்களா.,  மீரா தானா“., என்று கேட்டான்.

        “ஆமா“., என்றனர்.

     “ஆனா முடி“.,  என்று அவள் அக்கா கேட்க சம்பவங்களை எல்லாம் சொன்னான்.,

             அவன் வீட்டினர் அனைவரும் அவனுக்கு நன்றி சொன்னார்கள்.,

      அதே நேரம்நாங்க அவள பாக்க வரட்டுமா“., என்று வீட்டில் உள்ளவர்கள் கேட்டனர்.

         சற்று நேரம் யோசித்தவன்., “வாங்க ஆனால் உங்களை  எங்களோட ரிலேஷன் அப்படித்தான் சொல்லி அறிமுகம்  பண்ணி வைக்க முடியும்., அவளை பொறுத்த வரைக்கும் இப்ப யாரையும் நெருங்க விட மாட்டா., பொதுவா ரொம்ப யார்கிட்டயும் பழகுவது கிடையாது., அவளுக்கு உங்களைப் பார்த்து ஏதாவது ஞாபகம் வருதான்னு பார்க்கலாம்“.,  என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே.,

        மாணவ மாணவிகள் எல்லாம்எங்க காலேஜ் ஃபேர்வெல் கூட்டிட்டு வருவீங்களா.,  இல்லாட்டி நாங்க அங்க வந்து பாக்க வரட்டுமா“.,  என்று கேட்டனர்.

      அப்போது தான் அவன்நான் அவளை இங்க கூட்டிட்டு வரேன்“., என்று சொல்லிக்கொண்டிருந்தான்.,

        மீராவின் அம்மாதம்பி நாங்க  ஒரு தடவை பார்த்துக்கிறோம்“., என்று சொன்னார்.,

        “தாராளமா வாங்க“., என்று சொன்னவன்., அதேநேரம் அவர்களிடம் அவளுடைய உடலின் நிலையையும் எடுத்து சொன்னவன்., “அவளுக்கு ஞாபகம் வர வரைக்கும் அவ  எங்க வீட்டிலேயே இருக்கட்டும்., இப்ப நான் உங்ககிட்ட அவளை விடுறது  பிரச்சினை இல்ல.,  ஆனா உங்க கிட்ட விடும் போது அவளுக்கு சரியான ஞாபகம் வராமல் மறுபடியும் பயந்துகிட்டு ஏதும் பிரச்சனை ஆகிற கூடாது., மறுபடியும் மாத்திரை  அளவு கூட்ட வேண்டியது வரும்., இப்பதான் கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா மாத்திரையின் அளவை குறைத்துட்டு  வர்றோம்“., என்று சொன்னான்.

            “ஒன்னும் இல்ல.,நாங்க ஒரு தடவ வந்து பார்த்துக்கிறோம்.., எங்களுக்கு அவ இருக்கான்னு தெரிஞ்சதே எங்களுக்கு போதும்“.,  என்று சொல்லி அவனை கையெடுத்துக் கும்பிட., அவன் தான் அவர்களை சமாதானம் செய்யும் படி இருந்தது.,

       அந்த சூழ்நிலையில் அவன் அண்ணி மட்டும் வரவில்லை., ஏனெனில் ஏற்கனவே பஞ்சாயத்து செய்து இருந்ததால்.,  அவளை இப்போது அவள் சார்ந்த விஷயங்களுக்கு வீட்டில் உள்ளவர்கள் சொல்வதும் இல்லை., அழைத்து வருவதும் இல்லை..    

            பின்பு மாணவமாணவிகளிடம் பேசிவிட்டு.,  வீட்டில் அவன் அம்மாவின் எண்ணை பொதுவாக அனைவருக்குமே கொடுத்தான்.,

         “நான் பொதுவா வீட்டில் இருக்க மாட்டேன்., எனக்கு ஆபீஸ் டைம் ஆயிடும்.,  பகல்ல யாரும் பேசினா இது அம்மாவோட நம்பர்., அம்மாட்ட சொன்னீங்கன்னா அம்மா வீடியோவில் காட்டுவாங்க பாத்துக்கோங்க., ஆனா நீங்க வீடியோ தெரியாதபடி பார்த்துக்கோங்க“., என்று சொன்னான்.

      ” நான் அம்மா கிட்ட சொல்றேன்., நீங்க யாரும் அவளுக்கு தெரியாத படி அம்மா பார்த்துப்பாங்க“., என்றவன்.,  “நேரில் வந்து உங்களை பார்த்து அவளுக்கு அடையாளம் தெரிஞ்சா ஹேப்பி தான்., ஆனால் சட்டு ன்னு எதுவும் அவளுக்கு  போர்ஸ் பண்ணி கொண்டு வர்ற மாதிரி இருக்கக்கூடாது“., என்று அவளது மனநிலையை எடுத்துச் சொன்னான்.

     அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர்.,  பின்பு அவள் வீட்டினருக்கு.,  அவனுடைய வீட்டு விலாசத்தை கொடுத்து விட்டு சாதாரண பேச்சோடு.,

        அவனும்சரி நான் கிளம்புறேன் ஈவ்னிங் பிளைட் கிளம்பினால் எப்பவும் போல வீட்டுக்கு முடியும்“., என்று சொன்னான்.

         “எப்படி இருக்கா., ரொம்ப தொந்தரவு பண்றாளா“., என்று அவளது அண்ணன் கேட்டான்.

         “தொந்தரவு இல்ல.,  பஸ்ட் ஸ்டார்டிங்   ரொம்ப பயந்து போய் இருந்தா., வேற ஒன்னும் கிடையாது.,  இப்ப நார்மலா தான் இருக்கிறா.,  ஆனா அவளுக்குப் பிடிக்காத விஷயங்கள் பார்த்தா டென்ஷனாகிடுவா.,  மத்தபடி நார்மலா இருக்கிறா.,  இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வர்றா., நிறைய வாசிக்கிறா“., என்று சொன்னான்.

       அவள் அம்மாவும்  “இங்கே இருக்கும் போதும் வாசிப்பா“., என்று அனைவருமே சொல்லிக்கொண்டிருந்தனர்.

       பின்பு அனைவரிடமும் விடைபெற்று அவன் கிளம்பும் போது பவியும் அவளது நண்பனும் வந்து அவனுக்கு தேங்க்ஸ் சொன்னார்கள்.,  அப்போது தான் நினைவு வந்தவளாகஒரு நிமிஷம் சார்என்று கிளம்பியவனை நிறுத்தினர்.

         “என்னஎன்று கேட்டான்.

     “அவளுக்கு பாடுவது ரொம்ப பிடிக்கும்., நல்ல பாடுவா“., என்று சொன்ன மாணவர்கள் அவர்களிடம் இருந்த அவளுடைய பாடல்களை எல்லாம் அவனுடைய செல்லுக்கு மாற்றிவிட்டனர்.,

          அவளை  பாட வைக்க மட்டும் மறுபடி ட்ரை பண்ணி பாருங்க., ஏன்னா  நீங்க சொன்ன மாதிரி அவளுக்கு ஞாபகம் இல்ல.,  அதனால கூட அதெல்லாம் மறந்து போயிருக்கலாம்..,

          இப்ப நீங்க ட்ராயிங் சேர்த்துவிட்டு இருக்கீங்க.,  முன்னாடியும் ட்ரா பண்ணுவா., ஆனா இப்ப ரொம்ப நல்ல பண்றா., சோ அவள பாட வைக்க முடியுமான்னு பாருங்க..,  குரல் ரொம்ப நல்லா இருக்கும்., எங்க  காலேஜ்ல எல்லாருக்குமே அவகுரல் அவ்வளவு பிடிக்கும்“., என்று சொன்னார்கள்.

           அவள் கடைசியாக பஸ்ஸில் வரும்போது பாடிய பாடல்களை எல்லாம் நண்பர்கள் ரெக்கார்ட் செய்து வைத்திருந்ததால்., அவற்றையும் அவனுடைய செல்லுக்கு மாற்றினர்.

    சரி என்று சொன்னபடி அங்கிருந்து கிளம்பினான்.,  கண்டிப்பா முயற்சிக்கிறேன் என்று சொன்னபடி கிளம்பியவன்.,  அப்பாடலை ஹெட்போனில் மெதுவாக ஒலிக்கவிட்டு கேட்க தொடங்கியிருந்தான்.

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைக்கத் தொடங்கி விட்டால் எல்லாம் நலமாகவே நடக்கும்

நம் ஒவ்வொருவருடைய மனதிருப்தி தான் நம்மை உயர்த்துவதும் தாழ்த்துவதுமாக இருக்கிறது“.

Advertisement