Advertisement

உனக்கு இது ஒரு சாக்கு“., என்று சொல்லிக் கொண்டவருக்கு மகனின் மனம் லேசாக புரிய தான் செய்தது.,  ஆனாலும் என்ன செய்ய முடியும் சரி விசாரிப்போம் என்று நினைத்துக் கொண்டார்..

         அதுபோலவே சரியாக இரவு உணவு உண்டு கொண்டிருக்கும் போது அழைப்பு வர., எடுத்து காதில் வைத்தவன்சொல்லுங்க மேனேஜர் சார்“.,  என்று கேட்டான்.

          அவன் அம்மா நிமிர்ந்து பார்க்க.,  சாப்பாட கவனிங்க என்னும் விதமாக கண்ணை காட்டியவன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க., அவளோ கையில் ஒரு புத்தகத்துடன் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தாள்.

          ‘அது சரி இப்போது எல்லாம்  புக் மட்டும் தான் அவளுக்கு உலகம்‘.,  என்று நினைத்துக் நினைத்துக் கொண்டவன் பாதி சாப்பாட்டில் எழுந்த படி பேச தொடங்கினான்.

       அப்போது திலகவதி தான்.,”சரவணா சாப்பிட்டுட்டு பேசுடா“.,  என்று சொன்னார்.

           “வந்து சாப்பிடுகிறேன்“., என்று சொல்லிவிட்டு கையை கழுவி விட்டு பேசப் போனான்.,

        அப்போது மேனேஜர்., “சார் அன்னைக்கே நம்ம விசாரிச்சு இருக்கணும்., தப்பு பண்ணிட்டோம்“., என்று சொன்னவர்.,

       “அவங்க வீட்ல உள்ளவங்க ஒரு வாரம் கிட்டத்தட்ட அங்க தான் தேடி இருக்காங்க.,  அப்புறமா அந்த பொண்ணு இறந்துருச்சி அப்படிங்கற முடிவுல தான் ஊருக்கு போய் இருக்காங்க.,   சென்னையிலுள்ள பொண்ணு“., என்று சொல்லி அனைத்து டீடெயில்ஸ் ம் கொடுத்தார்.

          “போலீஸ்க்கு ஏதும் சந்தேகம் வந்துச்சா., நீங்க விஷயம் விசாரித்ததில்“., என்று கேட்டான்.

                “இல்ல சார் நான் அவங்ககிட்ட விசாரிக்கலை., அந்த பகுதியில் இங்கே ஏதாவது நடந்ததா என்று கேட்டுட்டு இருந்தேன்., அப்போ ஊட்டியில இந்த ஹோட்டலில் தங்கி இருந்தாங்க காலேஜ் ஸ்டூடென்ஸ்., அந்த மேனேஜர் தான் கூட இருந்து ஹெல்ப் பண்ணினதா சொன்னாங்க., அந்த மேனேஜர் இங்க நம்ம எஸ்டேட்ல வேலை பார்க்கிற  ஒருத்தங்க குடும்பத்துக்கு தெரிஞ்சவங்க.,  அதை வச்சு சும்மா டீடைல்ஸ் விசாரிக்கிற மாதிரி கேட்டேன்.,

       “என்னாச்சு இப்படி ஒரு விஷயம் நானும் கேள்விப்பட்டேன்., வந்து கேட்கணும்னு நினைச்சேன்., அப்படின்னு சொல்லி  விசாரிச்சேன்., அப்ப அவரு டீடெயில் சொன்னாரு., காலேஜ் நேம் சொல்லி இருக்காரு ., சார் இதுதான் சிறந்த காலேஜ் நேம்., அந்த பொண்ணு பேரு நான் கேட்க மறந்துவிட்டேன்“.,
என்று சொன்னான்.

         “இவ்வளவு கேட்ட நீங்க பெயரை விசாரிச்சு இருக்க வேண்டாமா“., என்று சொன்னான்.,

       “அவங்களுக்கும் சரியா தெரியல சார்.,  ஒரு பொண்ணு  மட்டும் தான் சொன்னாங்க., ஒரே டிபார்ட்மெண்ட்ல உள்ளவங்க மட்டும் தான் வந்து இருப்பாங்க போல., அதில் ஒரு பொண்ணு மிசிங் அப்படின்னு மட்டும் தான் சொன்னாங்க.,  நிறைய பேருக்கு செம அடி அப்படிங்கற மாதிரி சொன்னாங்க.,

       மேனேஜர் தான் கூட இருந்து ஹெல்ப் பண்ணி இருக்கான் போல., அதை சொல்லி அதை பேசிட்டு அப்படியே நான் வந்துட்டேன்.., ரொம்ப தோண்டித் துருவி விசாரணை செய்தா யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது., என்று வந்துட்டேன் காலேஜ் இது தான்., காலேஜ்ல போய் விசாரிச்சா தெரிஞ்சிடும்“., என்று சொன்னான்.,

       ” சரி நான் பாத்துக்குறேன்“.,  என்று சொன்னவன் அமைதியாக மீண்டும் அமர்ந்தான்.

          அம்மா தான்என்னடா“., என்று கேட்டார்.

        “ஒன்னும்  இல்ல“.,  என்று சொன்னவன் அவளை கண்ணை காட்ட அதன் பிறகு அவரும் பேசுவதை நிறுத்திவிட்டார்.

       சரவணன் தான்அம்மு சாப்பிடும் போது படிக்கக்கூடாது சொல்லியிருக்கேன்ல., மூடி வை முதல்ல சாப்பிடு.,  எவ்வளவு நேரம் அந்த ஒரு இட்லியை கையில் வைத்துக் கிட்டே இருக்குற“., என்று சொன்னான்.

      அவனை நிமிர்ந்து பார்த்தவள்ஸாரிஎன்று சொல்லிவிட்டு புத்தகத்தை தள்ளி வைத்துவிட்டு சாப்பிட தொடங்கினாள்.,

      அப்போது அவளிடம் வேண்டுமென்றே பேச்சுக் கொடுத்தான் சரவணன்., “உனக்கு எந்த சப்ஜெக்ட் பிடிக்கும்., எந்த மாதிரி நடிச்சா நல்லா இருக்கும்னு நினைக்கிற“.,  என்று கேட்டான்.

           அவளோ., “கம்ப்யூட்டர் பேஸ் நல்லா இருக்கும்னு தோணுது“., என்றாள்

        “சரி கம்ப்யூட்டர் பத்தி உனக்கு என்ன தெரியும்“., என்று கேட்டான்.,

      அவளுக்கு படித்த பாடங்கள் உள்ளேயே இருந்ததாலோ., என்னவோ அவளது நினைவுகளை தட்டி எழுப்பிக் கொண்டிருந்தது., அவள் படிப்பைப் பற்றி பேசிக் கொண்டிருந்தவன்.,

          அவன் அம்மாவை அவ்வப்போது திரும்பிப் பார்த்தபடி அவளிடம் மீண்டும் மீண்டும் படிப்பை பற்றி கேட்டுக் கொண்டிருந்தான்.,

      அப்போது அவளிடம்சரி இப்போ வேற ஏதாவது ஒன்று சேர்த்து விடட்டுமா.,  ஏதாவது ஸ்பெஷலா கிளாஸ் போறியா.,  சும்மா இருப்பது போரடிக்கும் இல்லை“.,  என்று கேட்டான்.

     அவனிடம்போர் அடிக்கல நான் புக் படிக்கிறேனே., ஆனால் ஜஸ்ட் வேற என்னவெல்லம்  படிச்ச பெஸ்டா இருக்கும்“.,  என்று கேட்டாள்.,

       “உனக்கு என்ன புடிக்கும்என்று கேட்டான்.

     அவள் யோசனையோடுதெரியலையே“., என்றாள்.

           அவளுக்கும் ஓரளவிற்குஅவளது விபத்திற்குப் பிறகு அவளுக்கு நிறைய விஷயங்கள் மறந்து இருக்கிறது என்பதை மட்டும் தான் சொல்லியிருந்தார்கள்., முழுவதுமாக அவள் மறந்து விட்டாள்‘. என்று சொல்லவில்லை.

     ‘கொஞ்சம் உனக்கு மறந்திருச்சு‘., என்று மட்டுமே சொல்லி இருந்தனர்.   அவளும் அதை நம்பி கொண்டிருந்தாள்.

      அப்போது அவன் அருகில் உள்ள ஒரு அகடமிக் சென்டருக்கு போன் செய்து அங்கு என்னென்ன வகுப்புகள் எடுக்கப்படும் என்பதற்கான டீடெயில்ஸ் அவனுக்கு அனுப்ப சொன்னான்.,

           அவர்களும் சற்று நேரத்தில் அனுப்புவதாக சொன்னார்கள்., அங்கு அவனை நன்கு தெரிந்தவர் என்பதால் அவனுக்கு இரவிலே அதை வாட்ஸ் அப்பில் அனுப்பி இருந்தனர்.

     அதை அவளிடம் காட்டிஉனக்கு இதுல எது புடிச்சி இருக்குன்னு சொல்லு சேர்த்து விடுறேன்.,  அடுத்த வாரத்திலிருந்து கிளாஸ்க்கு போ.,  இந்த ஒரு வாரம் தான் உனக்கு ஃப்ரீ“.,என்று சொன்னான்.,

     “கண்டிப்பா போகணுமா“.,  என்று கேட்டாள்.,

        “கண்டிப்பா போகணும்.,  கண்டிப்பா கத்துக்கணும்“., என்று சொன்னான்.,

           “அதான் ஸ்போக்கன் இங்கிலீஷ் கத்துகிறேன் ன்னு சொல்லிட்டேன்ல“., என்றாள்.,

      “ஸ்போக்கன் இங்கிலீஷ் வீட்ல வந்து சொல்லிக் கொடுப்பாங்க ., அதை நீ வெளியே போய் படிக்க வேண்டாம்., அது உனக்கு டைம் ஃபேஸ் பண்ணி எப்போ  சொல்லுறோமோ அப்ப  வீட்டுக்கு வர சொல்லிக்கலாம்., இதுக்கு நீ வெளியே போய் தான் ஆகணும்..,

         அம்மா கூட வருவாங்க.,  கொண்டு விட்டு திருப்பி கூட்டிட்டு வருவாங்க.,  நீ கத்துக்கனும்., அப்படியே அம்மா கூட ஷாப்பிங் போவது., வெளியே போய்த் வாங்குறது எல்லாத்தையுமே நீ கத்துக்கனும்“., என்று சொன்னான்.

        தலையாட்டிக் கொண்டவள்., அவனை பார்த்து முறைக்க..,

        “என்னஎன்றான்., 

          “இல்ல நீங்க என்னை அதை செய் இதை செய் ன்னு., சொல்லிட்டே இருக்கீங்க“., என்றாள்.

           “எல்லாம் கத்துக்கணும்., இது எதுலையாவது  தான் உனக்கு பழைய விஷயங்களை இன்னும் தெளிவா நீ யோசிக்க ஆரம்பித்து விடுவ“.,  என்று சொன்னவுடன் சரி என்று தலையை ஆட்டி கொண்டாலும்.,

     உணவு உண்ணும் போது அவ்வப்போது அவனை யோசனையோடு பார்த்துக்கொண்டே இருந்தாள்.,

         பின்பு போனை அவள் கையில் கொடுத்து விட்டுபாரு எந்த கிளாஸ் சேர போறேன்னு சொல்லுஎன்று சொல்லி விட்டு அவன் நகர்ந்து விட்டான்.

         அவன் பின்னேயே சென்ற அம்மாஎன்னடா என்ன சொன்னார்“.,  என்று கேட்டார்.,

    விஷயங்களை சொல்லி., “காலேஜ் நேம் கிடைத்திருக்குமா., காலேஜ்ல விசாரிச்சா தெரிஞ்சிடும்., காலேஜ்ல விசாரிச்சுட்டு அதுக்கப்புறமா அவங்க பேரண்ட்ஸ் தேடிக் கண்டுபிடிப்போம்.,  ஆனாலுமே இப்போ இதுதான் அம்மா அப்பா என்று சொல்லிக் கொண்டு விட்டாலும்.,

         இவ அங்க இருக்கனும்., அது மட்டுமில்லாம காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அவளுக்கு ஞாபகம் இருந்தால் தானே இவளால காலேஜுக்கு போக முடியும்., எல்லாத்தையும் யோசிக்க வேண்டியது இருக்கு இல்ல“., என்றார்.

         “சரிடா., அவங்க வீட்டு பெர்மிஷன் ஓட நம்ம வீட்டில் தங்க வச்சுப்போம்., அவளுக்கு ஞாபகம் வந்ததுக்கு அப்புறம் அவங்க கிட்ட அனுப்புறோம் ன்னு சொல்லி விடுவோம்“.,  என்று சொன்னார்.,

       “சரி மா“.,  என்று கேட்டுக்கொண்டான்.,  ஆனாலும் மனதிற்குள் இவளை கல்லூரியில் சென்று விசாரித்தால்., அவள் வீட்டிற்கு அழைத்து சென்று விடுவார்களோ என்ற பயமும் அவனுக்குள் இருக்க தான் செய்தது..,  இருந்தாலும் அவர்கள் வீட்டினரை தவிக்க விடக்கூடாதுஎன்ற எண்ணத்தோடு விசாரிக்கலாம் என்று நினைத்திருந்தான்.,

       ஆனால் அவனது வேலைகள் அவனை உள்ளே இழுத்துக்கொள்ள நாள்கள் மாதங்களாக உருளத்  தொடங்கியிருந்தது.,

       இதோ இன்றோடு அவள் வந்து 2 மாதம் ஆகி இருந்தது., இப்பொழுது எல்லாம் அவள் வீட்டில் ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ்., வெளியே அகடமிக் சென்டரில் ஓவியமும் கற்றுக் கொள்கிறாள்.,

         இரண்டு மாதங்கள் நிறைவடையும் நிலையில் தான் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.,

       “சென்னைக்கு காலையில் சென்று விட்டு மாலைக்குள் வந்து விடுவேன்.,  அவள் இன்று மட்டும் வகுப்பிற்கு செல்ல வேண்டாம்., வீட்டிலேயே இருக்கட்டும்“., என்று சொன்னான்.,

        “நீ அங்க போய் சேர்வதற்கு பதினோரு மணி ஆயிடும் டா., அப்புறம் அவங்களை பார்த்து பேசி டீடைல்ஸ் கலெக்ட் பண்ணி அப்படி இப்படின்னு சொல்றதுக்கே 12 இருந்து 1 மணி ஆயிடும்., சப்போஸ் நீ பேசுறதா இருந்தா  கூட எனக்கு மத்தியானத்துக்கு மேல தான் பேசி சொல்லுவ.,

        அதுவரைக்கும் எதுக்கு அவ போரடிச்சு இருக்கும்., கிளாசுக்கு போயிட்டு வரட்டும்., இன்னிக்கு கிளாஸ் போய்விட்டு வந்து அதுக்கு அப்புறமா பார்க்கலாமே“.,  என்று சொன்னார்.

              “சரிம்மா அப்ப பாத்து கூட்டிட்டு போயிட்டு வாங்க.,  நான் காலையில ஃபர்ஸ்ட் ப்ளைட்டுக்கு கிளம்புறேன்.,  டிக்கெட் போட்டுட்டேன்“., என்று சொன்னான்.,

      “சரிடா“., என்றார்.,

     ஆனாலும் மனதிற்குள் சிறு பாரம் இருக்கத்தான் செய்தது., ‘எங்கே அவள் தங்களை விட்டுப் போய் விடுவாளோஎன்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கத்தான் செய்தது.,

          ஆனால் அவற்றைக் காட்டிக் கொள்ளாமல்.,  ‘அவளது வாழ்க்கை நல்லபடியாக இருக்கவேண்டும்‘., என்ற பிரார்த்தனை மட்டுமே அவர்களிடம் அப்போது இருந்தது.,

       வாழ்க்கையில் கதவு மூடினால்., நிச்சயம் ஜன்னல் திறக்கும்.,

       வாழ்க்கையின் அழகு என்பது.. நீ எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்பதில் இல்லை.. உன்னால் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதில் இருக்கிறது.

Advertisement