Advertisement

ஆனாலும்எவற்றையும்., எதையும் தன் மனதில் ஏற்றுக் கொள்ளக் கூடாது., தன்னை நிதானித்து கொள்ளவேண்டும் இப்பொழுது நாம் படிப்பை முடிப்பது முக்கியம் என மனதுக்குள் தினமும் உரு போட்டுக் கொண்டு தான் இருக்கிறாள்.

   ஆனாலும் மாத்திரையின் தாக்கமும் நினைவுகள் வந்த அதிர்வின் வலியும் இன்னும் அவளை விட்டுப் போகவில்லை., அதை எப்படி மற்றவர்களுக்கு சொல்வது என்ற எண்ணத்தோடு அமைதி காத்துக் கொண்டிருந்தாள்.

               அதேநேரம் அக்கம்பக்கத்தார் வரும்போதெல்லாம் அண்ணி அவர்கள் பேசுவதை அருகமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பதும்., பின்பு அவர்கள் வெளியே செல்லும் போது அவர்களோடு சென்று பேசுவதும்., இப்பொழுதெல்லாம் சாதாரணமாக நடக்கிறது.,  ஆனால் அது தெரிந்தும் அம்மா ஏன் ஒன்றும் சொல்லவில்லை.,

           அவ்வப்போது கிச்சனில் சென்று அம்மாவிடமும் தனியே பேச்சு நடக்கிறதுஎன்பதை எல்லாம் புரிந்து கொண்டவள்.,

            ‘எது நடந்தாலும் தன்னால் தன் நிலையை., நிலைநிறுத்திக் கொள்ள முடியும்‘., என்ற எண்ணத்தோடு அமைதிகாத்தவளுக்கு தன்னுடைய செல்போன் கையில் இருப்பதை பார்த்துக் கொண்டாள்.

           

தான் இன்னும் ஒரு முறை கூட திலகவதிக்கு  அழைத்து பேசவில்லைஎன்று தோன்றியது., 

        பின்புஇப்போது பேச வேண்டாம் இன்னும் இரண்டு நாட்கள் கழித்து பேச வேண்டும்என்று நினைத்துக் கொண்டவள்.,

        தன் செல்போனையே பார்த்துக் கொண்டிருந்தாள்., ஏனெனில் ஆக்சிடென்ட் சமயத்தில் அவள் பேக்கில் இருந்தது.,  பிறகு அவள் உடமையோடு சேர்ந்து அவள் பெற்றோரிடம் வந்திருந்தது.,

      இப்போது திரும்பி வந்தவுடன் அது அவள் கைக்கு மீண்டும் வந்திருந்தது., அன்று சரவணன் கொடுத்துச் சென்ற விசிட்டிங் கார்டை அவள் தன் போனின் கவருக்குள் பத்திரப்படுத்தி இருந்தாள்.,

       அதை நினைவோடு தன் போன் கவரின் பின்னால் இருக்கிறதா என்பதை மெதுவாக எடுத்துப் பார்த்தவள்.,  இருக்கிறது என்றவுடன் அது போலவே வைத்து மூடி விட்டாள். திலகவதி எண் தெரியாது என்றாலும் அதில் வீட்டின் எண்., அலுவலக எண் அவனுடைய அலைபேசி எண் என்று எண்கள் இருக்க அதை பார்த்துக்கொண்டவள்.,

       வீட்டில்தான் எண் இருக்கிறதே அதற்கு அழைத்து பேசினால் நிச்சயமாக அத்தையிடம் பேச முடியும் என்று நினைத்துக்கொண்டாள்., ஆனால் இப்பொழுது பேச வேண்டாம் என்று அமைதியாக இருந்தாள்.,

       ஏனோ இப்போது பேசுவோம்., அப்போது பேசுவோமா என மனம் அடித்துக் கொண்டாலும்.,  சற்று நாளுக்கு தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவே இந்த காலக்கெடு என்பதை அவளுக்கு அவளே உறுதியாகச் சொல்லிக் கொண்டாள்.

          பின்பு கல்லூரியில் எக்ஸாமுக்கு வந்தால் போதும் என்று அவளுடைய பிரபஸர்கள் வந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர்.,

      “நீ நல்லா படிக்கிற பொண்ணு தான் நாங்க உன்னோட ஆக்சிடென்ட் .,  உன்னோட ட்ரீட்மெண்ட் ஹிஸ்டரி எல்லாம் கொடுத்து யூனிவர்சிட்டில பெர்மிஷன் வாங்குறோம்.,

        நீ எக்ஸாமுக்கு மட்டும் வர்ற மாதிரி பார்த்துக் கொள்ளலாம்“., என்று சொன்னார்கள்.

         “சரிஎன்று தலையை அசைத்தவாறு அவர்கள் கொடுத்த நோட்ஸ் எல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு கிளம்ப தயாராக இருந்தாள்.

     பின் தன் அலைபேசியில் இருந்து தன் அண்ணனுக்கு அழைத்தான்.,

       அவன் வந்து அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.,  போகும் போதுமீரா ஏதாவது சாப்பிடுறீயாஎன்று கேட்டான்.,

      “இல்ல நாம் வீட்டுக்குபோயிடலாம்என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.,

            அவளுக்கு அங்கு இருப்பது போதும் என்று தோன்றிய உடனே.,  நோட்ஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பலாம் என்று சொன்னவுடன் அவனும் பிரபஸரிடம் அவளுக்காக கேட்டுவிட்டே கிளம்பினான்.

      “உங்க தங்கச்சி பொறுத்தவரை படிக்கிறதுல எந்த பிரச்சினையும் கிடையாது.,  அதனால எக்ஸாம்  நல்லா எழுதிருவா.,  தைரியமா எக்ஸாம் டைம் மட்டும் கூட்டிட்டு வாங்க.,   அதுமட்டுமில்லாம எங்களுக்கு அவளோட டிரீட்மென்ட் ஹிஸ்டரி.,   டீடைல்ஸ் எல்லாம் கொடுங்க.,  நாங்க  யூனிவர்சிட்டில அதைக் காட்டி.,  அவளுக்காக அட்டனன்ஸ் இல்லாமல் எக்ஸாம் எழுத பெர்மிஷன் வாங்குறோம்“., என்று சொன்னார்கள்.

         “டிரீட்மென்ட் டை காட்டி மெடிக்கல் லீவ் ஆக மாற்றிக்கொள்ளலாம்என்று பிரபஸர்கள் மீராவின் அண்ணனிடம் சொல்லி அனுப்பினர்.

        அதையே செய்வதாக அவனும் சொல்லிவிட்டு கிளம்பினான்.,

      வீட்டிற்கு வந்தவளுக்கு அம்மாவிடம் அண்ணி அமைதியாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது அதிசயமாக இருந்தது.,

      அம்மாவிடம் சாதாரணமாக அண்ணன் மனைவியை பேசுவது கிடையாது.,  என்பதை வந்த அன்றே தெரிந்து கொண்டாள்.

         இப்போது ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள்., தனிக்குடித்தனம் போய் இருந்து கொள் என்று சொன்னதற்கு அண்ணன் தான் முடியாது என்று சொல்லி விட்டதாக அக்கா சொல்லிக்கொண்டிருந்தாள்.

         அதுவும் இவள் கேள்வியான பார்வையிலேயே அக்கா அவ்வளவு விஷயத்தையும் சொல்லி இருந்தாள்.,

       அதிசயமாக இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டு அமைதியாக.,  அவளுக்கு என்று இருந்த அறையில் சென்று படுத்துக்கொண்டாள்.,

         அவளுடன் அவள் அம்மாவும் அக்காவும் இப்போது படுத்துக் கொள்கிறார்கள்., அக்காவின் வீடு சற்று அருகில் தான் என்பதால் அக்காவின் கணவர் பகலில் அக்காவை கொண்டு வந்து இங்கே விட்டு விட்டு சென்று விடுவார்.,  சில நேரங்களில் தான் அக்கா வீட்டிற்கு செல்வாள் அல்லது பிள்ளைகளை கொண்டு வந்து இங்கே விட்டுவிட்டு சென்று விட சொல்லுவாள்.,

       அதுவும் இவள் வந்த பிறகு தான் என்பது அம்மா பேசிக் கொண்டதிலிருந்து அறிந்து கொண்டாள்.

    இருந்த இரட்டை படுக்கை அறையில் ஒரு படுக்கை அறையை அண்ணன் உபயோகித்துக் கொள்ள.,  மற்றொன்று அம்மா அப்பாவும் அக்கா வரும் போது அவளும் என எல்லாரும் உபயோகித்துக் கொண்டு இருந்தார்கள்., இப்போது அந்த அறையில் தான் மீரா  இருந்தாள்.

    இருவரையும் பார்த்தபடி அமைதியாக உள்ளே சென்றாள்.,

     அப்பொழுது தான் அண்ணி மீராவின் அம்மாவிடம் மீண்டும் மீண்டும் ஏதோ சொன்னாள்.,

           அம்மாவும்யோசிக்கலாம் அவசரப்படவேண்டாம்., எதுவா இருந்தாலும் மீரா அப்பா வரட்டும்., அதுக்கு அப்புறம் பேசிக்கலாம்“., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

       மீராவின் அக்கா தான்தேவையில்லாத விஷயத்தில் தலையிடாத.,  அப்பா இது எல்லாம் ஒத்துக்கவே மாட்டாரு.,  நான் முதல்ல ஒத்துக்க மாட்டேன்., தம்பியும் ஒத்துக்க மாட்டான்“.,  என்று சொன்னார்.

       மீராவின் அண்ணன் மனைவி கத்தத் தொடங்கினாள்., “ஏன் இதுல என்ன தப்பு இருக்கு.,  இந்த காலத்தில்  இது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது.,  உங்க தங்கச்சியோட நிலைமை தெரிந்து தானே பேசுறீங்க“., என்று சொல்லி மீராவின் அக்காவிடம் சண்டைக்கு சென்றாள்.

      மீராவின் அக்காவும்தேவையில்லாம பேசாதே., உன்கிட்ட நான் அப்பவே இருந்து சொல்லிட்டு இருக்கேன்., வார்த்தையை விடாதே., நீ தேவையில்லாம பேசுற“., என்று சொன்னார்.

        “ஆமாம்மா.,  உண்மைய சொன்னா எல்லாருக்கும் உரைக்க தானே செய்யும்.,  இப்ப என்ன சொல்லிவிட்டேன்.,  என்ன தப்பா சொல்லிட்டேன்.,  வெளியே  அப்படித்தானே பேசிக்கிறாங்க.,  உங்க தங்கச்சி நாலு மாசம் நினைவு இல்லாமல் இருந்ததாசொல்றீங்க.,

           அவன் நினைவு இல்லாமல் இருந்தாலும்., உங்க வீட்ல இருந்து இருந்தா அது வேற.,  இன்னொரு வீட்ல தானே இருந்து இருக்கா..,  அப்ப அவள மத்தவங்க ஒருத்தங்க கல்யாணம் பண்ணிக்க வருவதே பெரிய விஷயம்.,

        அது மட்டுமில்லாம அவளுக்கு நினைவு இருக்கும் இப்படி தான் இருக்கா.,  அப்ப அவ நல்லா இருந்ததா நீங்க தான் போய் பார்த்துட்டு வந்தோம் ன்னு சொல்றீங்க., நினைவில்லாதவங்க எப்படி இருப்பாங்கனு தெரியாதா.,

       அவளுக்கு ஒரு வேளை பைத்தியம் பிடிச்சு இருந்தத.,  நீங்க மறைக்குறீங்க ன்னு சொல்றாங்க.,  அப்படியெல்லாம் இல்லவே இல்லைன்னு நீங்க சாதித்தாலும் அதுதானே உண்மை.,  வெளியே என்ன சொல்றாங்க தெரியுமா.,

      நினைவில்லாமல் இருந்துச்சா.,  அந்த புள்ள பைத்தியக்காரி ஆகிட்டாளாம்., நாலு மாசம் ட்ரீட்மென்ட் எடுத்து சரியான பிறகு கூட்டிட்டு வந்திருக்காங்க.,   தலையில் அடிபட்டு இருக்குன்னு சொல்றாங்க.,  மறுபடியும் பைத்தியம் பிடிக்காது ன்னு என்ன நிச்சயம்., என்னமோ உண்மை சொன்னா எல்லாரும் ஆளாளுக்கு பேசுறீங்க“.,  என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.,

      மீராவின் அப்பா மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்தவர் வீட்டில் நடந்த கலவரத்தை பார்த்து மீராவின் அம்மாவை தான் சத்தம் போட்டார்.

        “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க ஆளாளுக்கு கத்துறது வெளியே கேட்குது“., என்று சத்தம் போட்டார்.

        மீராவின் அம்மா அழுதுகொண்டே அவள் இவ்வளவு நேரம் சொன்னதை எல்லாம் சொல்ல.,  ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போய்விட்டார்.,

             வெளியே அப்படியா பேசிக்கொள்கிறார்கள் என்று தவித்தவருக்கு மனம் தாங்கவே இல்லை.,

         ஆக்சிடெண்டில் நினைவு மறந்து போவது எல்லாம் பைத்தியம் என்று சொல்பவர்களை என்னவென்று சொல்வது என்று நினைத்து கொண்டார்.

      மீராவின் அக்காவோவெளியே அப்படி சொல்கிறார்களோ இல்லையோ., இந்த வீட்டு மருமகளாக வந்தவளே சொல்லிக்கொடுப்பா.,  உனக்கு பொறாமை., அவ நல்லபடியா வந்துட்டா ன்னு இஷ்டத்துக்கு பேசுற“.,  என்றார்.

       மீராவின் அக்கா பேச்சை கேட்ட அண்ணி., “என்னது இல்லாததை சொல்லிட்டாங்க.,  உங்க தங்கச்சி அப்படியாப்பட்ட நிலைமையில் தானே இருந்து வந்து இருக்கா.,  சொன்னா அதை ஏத்துக்க மாட்டீங்களே“., என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

     அமைதியாக வெளியே வந்த மீராநான் பேசலாமாஎன்றாள். அவளின் நிதானம் மற்றவர்களுக்கு சற்று பயத்தையே தந்தது.

    நினைத்ததை எல்லாம் பேசுவது பேச்சாகாது.,  வார்த்தைகளுக்கு வலிமை அதிகம்.,  எப்போதும் யோசித்து பேச கற்றுக்கொள்ள வேண்டும்.

பிரிவின் வேதனையில் மட்டுமே நாம் அன்பின் ஆழத்தைக் காணமுடியும்.

Advertisement