எனையிசைக்கும் இன்னிசையே
அத்தியாயம் 20
பின் புறமாகத் தலை சாய்த்து, விழி மூடியபடி இருக்கையில் தளர்வாய் படுத்திருந்தான் அருள்வேலவன். அமைதி தொலைத்த மனம், எதற்கோ ஏங்கியது. நேற்றைய இரவு இசையைக் காணவில்லை என்றதும் வந்த தவிப்பு, இன்னும் அவனை விட்டு விலகவில்லை.
நேற்றைய இரவு தாமதமாக வீடு திரும்பிய அருள், உள் நுழைந்ததுமே பார்வையால் அவளைத் தான் தேடினான். இத்தனைக்கும்...
தானே அவன் வேண்டாமென்று வார்த்தைகளில் உதைத்துத் தள்ளிவிட்டு, இப்போது அவன் உறவு வேண்டுமென்று வேண்டி நின்றால் அவனால் எவ்வாறு ஏற்க முடியும்? தவறு தன் மீது தானே? அவள் நெஞ்சம் குறுகுறுத்தது.
“அண்ணா..” மெல்லக் குரலில் அழைத்தாள்.
நிமிர்ந்து பார்க்கவில்லை, அருளுக்கு உள்ளுக்குள் சுருக்கென்று வலித்தது. ஆனாலும் அவன் கேட்கிறான் என நினைத்த ராஜி, “என்னை மன்னிச்சிடுண்ணா,...
அப்போதும் அவனைத் தடுக்காது, “அண்ணா என்னை எவ்வளவு வேணா அடிச்சிக்கோ.. ஆனால் எதுக்கு அடிக்கிறேன்னு சொல்லிட்டு அடி, வேலையில எதுவும் தப்பு பண்ணிட்டேனா?” என்றவன், காரணம் கேட்கும் போதே மேலும் நொறுக்கியிருந்தான் அருள்.
அப்போதும் அருளுக்கு ஆத்திரம் அடங்க மறுத்தது. “ஏன்டா, என் தம்பியா இருந்திட்டு எப்படிடா இப்படி ஒரு காரியத்தைச் செஞ்ச..? படிக்கிற பிள்ளை...
அத்தியாயம் 19
வார இறுதி. சனிக்கிழமையன்று கணேஷ் அவன் மாமியார் வீட்டிற்குக் கிளம்ப, அவன் பெற்றோரும் சம்பந்தி அம்மாளின் நலம் விசாரித்து வர, உடன் கிளம்பியிருந்தனர். விக்கி வேலைக்குச் சென்றிருக்க, ராஜி சித்தி வீட்டிலிருக்க, ஜெகன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான்.
ராஜியும் பாரியும் ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க, தேவகியும் இசையும் சமையல் வேலையிலிருந்தனர்....
அத்தியாயம் 18
மீண்டும் வீட்டிற்கு வந்த அருளைக் கண்டு தேவகி பதற, அவனோ அவர் புலம்பலைக் கவனியாது, “பெரியப்பா, நான் பார்த்த மாப்பிள்ளையோட இவள் கல்யாணம் நடக்கலைனாலும் பரவாயில்லை. அந்த பிரகாஷோட வேண்டாம், இப்படி ஒரு தரம் கெட்டவன் வேண்டாம்.. பொண்ணுங்களை மதிக்கத் தெரியாதவன், தன்னை நம்பி இருக்கிற பொண்ணை காப்பாத்தத் தெரியாத திருட்டுப் பையன்...
அத்தியாயம் 17
பரபரப்பான காலை நேரம். அந்த பொறியியல் கல்லூரியின் முன் வந்து நின்றது அருளின் இருசக்கரவாகனம். அதன் பின்னிருக்கையிலிருந்து இறங்கிய ராஜி, “அண்ணா இன்னைக்கு ஈவனிங் பிக்கப் பண்ண நீ வர வேண்டாம், நானே ஆட்டோ பிடிச்சி வீட்டுக்கு வந்திடுறேன்” என்றாள் கையசைத்தபடி.
சட்டைப் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்தபடியே “ஏன்..?” என்றவன் வினவ, “இன்னைக்குத் தானே...
அத்தியாயம் 16
அன்று விடுமுறை நாள். மாலை நேரம் சீதா அவள் பிறந்தகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். அவள் அன்னைக்கு உடல் நலம் சரியில்லை எனச் சற்று முன் தான் அழைப்பு வந்திருந்தது.
ஒரு வாரம் உடனிருந்து கவனித்துக் கொள்ள நினைத்தவள், குழந்தைக்கும் அவளுக்குமான உடைகளை எடுத்து வைத்துக் கொண்டு பரபரப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
ராஜியோடு மருத்துவமனைக்குச்...
அத்தியாயம் 15
உடலெல்லாம் நெட்டி முறிக்கும் படியான அசதி. அலுத்து உறங்கிக் கொண்டிருந்தவள் விழிக்கவே வெகு தாமதமாகி இருந்தது. இசைவாணி விழிக்கையில் வழக்கம் போலே இடையில் கட்டிய துண்டோடு சரியாகக் குளியலறையிலிருந்து வெளியே வந்தான் அருள்வேலவன்.
சட்டென வேக வேகமாக உடையைச் சீர் படுத்திக்கொண்டு அவன் முன் வந்து நின்றவள் சோபையாகச் சிரித்தாள். கலைந்த தலையும் கசங்கிய...
அத்தியாயம் 14
இசையின் குரலுக்கு இசைந்த அருள்வேலவன் தம்பியை தன்னோடு தொழில் சேர்ந்து கொண்டான். ஆனாலும் சொன்னது போலேவே ஆரம்பநிலையிலிருந்து தொழிலைக் கற்றுக்கொள்ள இறக்குமதி பிரிவில் தான் விக்கியை சேர்த்திருந்தான். இறக்குமதி செய்யப்படும் துணிவகைகளை தரம் பரிசோதிப்பது, குடோனில் இறக்குவது, அந்த அந்த செக்ஷனுக்கு அனுப்புவ வேண்டியதை பார்த்துப் பிரித்து வைப்பது, அனுப்புவது, வேண்டிய ஆடர்களை...
அத்தியாயம் 13
அன்றைய நாளுக்குப் பிறகு அவளவான பேச்சு வார்த்தைகள் கூட இருவருக்குமிடையில் இல்லை. அவனோடு தான் பேசுவதில்லையே தவிர, இரு வீட்டிலும் இயல்பாக அனைவரோடும் பழகினாள் இசை. ராஜி வேறு பிறந்தகத்தில் இருக்க, புதிதாக பிரகாஷ் அடிக்கடி அவளைப் பார்க்க வந்து சென்று கொண்டிருந்தான். அவன் வரும் நேரங்களில் சில சமயம் அவனோடு சென்று...
அத்தியாயம் 12
முதல் முறையாக அருள் சற்றே இதழ் பிரிய சிரிப்பதை என்னவோ காண அதிசயத்தைக் கண்டது போல் அவள் பார்த்து நிற்க, சட்டென அவள் கரம் பற்றி இழுத்தவன் கிருஷ்மி விட்டுச் சென்ற வெறுமையான இடத்தில் அவளை அமர்த்திக் கொண்டான்.
அவளின் படபடக்கும் இதயத்தின் ஓசை அவளுக்குள்ளே எதிரொலித்தது. இந்நிலையில் அவனிடமிருந்து விலகவோ எழவோ சிறிதும்...
அத்தியாயம் 11
நாட்கள் நகர, அருள் - இசையின் உறவு மட்டும் சீராகவில்லை. ‘தன்னைக் கணவனாக நினைக்காது நெருங்குவதில்லை’ என அருள் விலகி இருக்க, ‘திருமணத்தின் போதே பிடித்தமில்லாது இருந்தவனுக்குத் தற்போது தன்னையும் பிடிக்கவில்லை போலும்! என்றே நினைத்திருந்தாள் இசைவாணி.
செல்ல முத்தமோ, சின்னச் சீண்டலோ, அணைப்போ இல்லாது அவன் நேசம் அவளால் உணரமுடியாது போனது. அவள்...
அத்தியாயம் 10
“இசை..! கண்ணத்திற.. இங்கப்பாரும்மா..” எனப் பதறியவன் அவளை உலுக்க, அவளால் விழிக்கவே இயலவில்லை.
‘மாலையில் பார்க்கும் போது கூட நலமோடு தானே இருந்தாள், திடீரென எவ்வாறு காய்ச்சல்?’ சிறு பயமும் பதட்டமும் ஒரு நொடி திணறிப் போனான். மின் விளக்கை ஒளிரவிட்டவன், அவளை தூக்கி மடியில் கிடத்தியபடி, முகம் பார்க்க, அதிர்ந்தான்.
கழுத்தில் தெரியும் வெண்திட்டு...
அத்தியாயம் 09
இதமான காலைப் பொழுது. பளிச்சென்ற பளிங்குச் சிற்பம் போல புதுப் பூவாய் தலையில் சுற்றிய வெள்ளைத் துண்டோடு, காதோரம் நீர்த் துளிகள் சொட்ட, மெல்லிய சில்வர் க்ரீன் நிற டிசைனர் புடவையில் நின்றிருந்தாள் இசைவாணி. கண்கள் மட்டும் இமையாது கட்டிலில் துயிலும் கணவன் மீது!
எப்போதும் மேல் சட்டையைக் கழட்டி வைத்துவிட்டு உள் பனியனோடு...
அத்தியாயம் 08
பொன்னான புது விடியல். பறவைகளின் கீச்சொலியும், வண்டினங்களின் ரீங்காரமும் இசைபாடும் நேரம். அவ்விசை மட்டுமல்லாது, ஆதவனின் சிற்றொளியும் சிறிதும் நுழைத்துவிட முடியாதபடி அத்தனை ஜன்னல்களும் திரைச்சீலைகளால் இழுத்து மூடியிருக்க, இருள் சூழ்ந்திருந்தது.
ஆனாலும் அந்த இருளிலும் பொருட்களை அடையாளம் கண்டு கொள்ளும்படியான சிறு வெளிச்சம் மட்டுமிருக்க, அந்த வெளிச்சம் போதவில்லை என்பது போல் கண்களை...
அத்தியாயம் 07
நட்சத்திரங்கள் இல்லாத கருமை வானில் வெண்ணிலவு உலாவும் நேரம். நட்சத்திரங்கள் எல்லாம் அள்ளிக் கோர்த்தது போலே சீரியல் மின் விளக்குகளால் மின்னியது அந்தத் திருமண மண்டபம்.
வாசலில் வாழையும் வரவேற்பில் தேவகியும் நின்றிருக்க, எங்கும் மங்கள இசையும் சுகந்தமான மணமும் தான். சிறுவர்கள் துள்ளி விளையாட, பெரும்பாலும் வண்ணப் பட்டும் மின்னும் பொன்னுமாய் நிறைந்திருந்தது...
அத்தியாயம் 06
“ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய”
எஸ்.பி.பியின் பக்திக் குரல் காதை நிறைக்க, வண்ணமலரின் நறுமணங்களும் ஊதுபத்தியின் சுகந்தமும் அக்கோவில் மண்டபம் எங்கும் காற்றோடு கலந்திருந்தது. வழக்கத்தை விட அன்று பக்தர்கள் நடமாட்டம் சற்று அதிகப்படியாக இருக்க,...
அத்தியாயம் 05
இரவிலே பிரகாஷ் அத்தனை கேள்விகள் கேட்க, காலையில் எழுந்ததுமே பத்மாவிற்கு அழைத்திருந்தாள் ராஜி. அவளோ முடிவு சொல்லுமாறு அடமாகக் கேட்க, ஜெகனைக் காப்பாற்றும் எண்ணம் மட்டுமே பத்மாவிற்கு இருக்க, தேவகி விருப்பத்தைச் சொல்லிவிட்டார். அதற்கு மேலும் ராஜியையும் அவர்கள் வீட்டில் கேட்கும் படி முடுக்கிவிட்டார்.
காலையில் இசைவாணி, வீட்டின் முன் இருக்கும் செடிகளுக்குத் தண்ணீர்...
அத்தியாயம் 04
இரவு ஒன்பது மணிச் செய்தியை பார்த்தபடி ஹாலில் அமர்ந்திருந்தான் அருள்வேலவன். பாரிவேந்தன் வெகு நேரம் முன்பே உணவுண்டு உறங்கியிருக்க, மனோ அலைபேசியை ஆராய்ந்தபடி டைனிங் டேபுளில் அமர்ந்திருந்தான்.
அருள் முன் வந்து பால் டம்ப்ளரை வைத்து விட்டுத் தேவகி நகராது நிற்க, நிமிர்ந்து பார்த்தவன், “என்னம்மா..?” என்றான்.
“அது வந்து இன்னைக்கு பொ..பொண்ணு..” என்றவர் வார்த்தை...
அத்தியாயம் 03
அனைவரும் வெவ்வேறான மனநிலையில் வீடு வந்து சேர, ஜெகன் தான் கொதித்துக் கொண்டிருந்தான். வாசலில் நுழைகையிலே வலது மூளையில் ஒரு செருப்பும் இடது மூளையில் ஒரு செருப்பும் பறந்தது. பத்மா, யாரை எவ்வாறு சமாளிப்பது எனக் கையை பிசையும் நிலையில் தேவகியையும் கையோடு வீட்டிற்குள் அழைத்து வந்திருந்தார்.
பெரியவர்கள் ஹாலில் அமர, கண்டுகொள்ளாமல் விறுவிறுவெனத்...