Saturday, June 1, 2024

    VK 15 2

    VK 15 1

    VK 14 2

    VK

    VK 6 1

    *6*  முடிந்தது. சென்ற வார வெள்ளிக்கிழமையில் நடந்து முடிந்து இந்த வார வெள்ளிக்கிழமையும் ஆமை வேகத்தில் நகர்ந்து, சனி பிறந்துவிட்டது. ஆனால் பதட்டம் தணிந்த பாடில்லை. தெளிவு கிடைக்கவும் இல்லை. இடியாப்ப சிக்கலில் இருந்து விடுபடுவதாய் நினைத்து மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொண்டது போலத் தான் இருந்தது. மாத்திரை போட்டு தூங்கிவிட்டால் எப்போது எழுவாள் என்று அவளுக்கே...

    VK 5 2

    “அவங்க ஒய்வு எடுக்கட்டும். நான் அப்புறம் வரேன். ராகவ் வந்ததும் எனக்கு போன் செய்யச் சொல்லுங்க.” என்று கார்த்திக் பொதுவாய் தெரிவித்து அங்கிருந்து விடைபெற்று நகர, விழிகள் மீராவிடமே நிலை பெற்றிருந்தது. மனமே இல்லாமல் கிளம்பியவன் ஷூ மாட்டும் போது சுஜா வேகமாக அவனிடம் வந்தாள். “உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்.” என்று தயங்கி அவன் முகம் பார்க்க, அவளின்...

    VK 4 3

    “குறிப்பிட்டு இல்லாம பொதுவா எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியத்தை அந்தந்த வயதினருக்கு ஏற்றார் போல கொடுக்கணும் மேம். அது அவங்களோட பாதுகாப்பு சம்மந்தமாக இருந்தால் இன்னும் சிறப்பு. இக்கட்டு வரும் நேரத்தில் சமுதாயத்திற்கு பயந்து ஒடுங்கி தன் மேல் நடக்கும் வன்முறையை ஏற்றுக்கொள்ளாமல் அதை எப்படி சாமர்த்தியமாய் முறியடித்து நிமிர்ந்து வரவேண்டும்,...

    VK 4 2

    அழைப்புமணி ஒலிக்க, அம்புஜம் சென்று கதவை திறப்பாரா இல்லை தான் போக வேண்டுமா என்பது போல் சுஜா இரண்டு நொடிகள் காத்திருந்தவள், அம்புஜம் அடுப்பறையை விட்டு நகருவதாய் இல்லை என்று தெரிந்ததும் அவளே போய் கதவை திறக்க, ஒரு பெரிய அட்டைப்பெட்டியுடன் நின்றிருந்தவன் கதவு திறக்கப்படவும் அனுமதியின்றி உள்ளே நுழைந்து பெட்டியை நடு ஹாலில்...

    VK 4 1

    *4* “வேலைபளு அதிகமா இருக்கும் போது வந்து தொந்தரவு செய்துட்டனா சார்?” என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தான் ராகவ்.  அவனை இன்முகத்தோடு வரவேற்ற கார்த்திக் கையில் இருந்த கோப்புகளை ஒதுங்க வைத்துவிட்டு, இருக்கையை சுட்டிக்காட்டி, “முதல்ல உட்காருங்க. எங்க துறையில் எப்போ எந்த வேலை வரும்னு சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரம் பிரச்னைகள் வந்த...

    VK 3 3

    “அந்த ஆள் லேசுப்பட்டவன் மாதிரி தெரியல. இதை இப்படியே விடமாட்டானு நினைக்கிறன். ஏதாவது செய்யணும். இந்த விஷயத்துக்காகவே நான் கார்த்திக் சாரை போய் பார்க்கலாம்னு இருக்கேன். அவரும் நல்லமனிதரா தெரியுறார். இந்த வாய்ப்பை கெட்டியா பிடிச்சிகனும். நாளைக்கே நான் அவரை போய் பார்க்குறேன். இந்த மாதிரி நேரத்தில் நமக்கும் பெரிய பதவியில் இருக்குறவங்க ஆதரவு...

    VK 3 2

    “டேக் கேர்.” என்று கார்த்திக்கின் வாய்மொழி ராகவிடம் உரையாட, விழி மீராவின் மீது இருந்தது. அவள் நிமிர்வாளா என்று பார்க்க மீரா அசைவதாய் இல்லை. அதிருப்தி பெருமூச்சுடன் ராகவிடம் தலையாட்டிவிட்டு அங்கிருந்து விடைபெற்றான் கார்த்திக். அந்த அறையை விட்டு வெளியேறியதும் அவன் அலைபேசி ரீங்காரமிட, எடுத்துப்பார்த்தால் அவன் தந்தை தான் அழைத்திருந்தார். “சொல்லுங்க அப்பா...” “எங்க இருக்க கார்த்தி? நான்...

    VK 3 1

    *3*   “அம்மு..” பதட்டத்துடன் மூச்சிரைக்க ஓடிவந்து நின்ற ராகவ் கார்த்திக் பிடியில் இருந்த மீராவை தன் மேல் சாய்த்துக் கொண்டு அவளின் கன்னத்தை தட்டி எழுப்ப, அவளோ சுயநினைவில் இருப்பதைவிட மயக்கத்தில் இருப்பதே மேல் என்று நினைத்தால்போலும் இமைகளை பிரிக்க மறுத்தாள். தன் படபடப்பில் கார்த்திக்கை துளியும் கண்டுகொள்ளாமல் அம்மு அம்முவென்று மீராவின் கன்னங்களை மீண்டும் மீண்டும் ராகவ்...

    VK 2 3

    அவளின் உயர்ந்த குரலுக்கு போட்டியாய், “ஆமாம் வந்து தான் ஆகணும்.” என்று ஒலித்த கணீர் குரல் ராகவின் வருகையை தெரியப்படுத்தியது. “டோன்ட் ட்ரை டூ பிளேக்மைல் மீ.” என்று முன்னெச்சரிக்கையாக மீண்டும் வீம்புப்பிடித்து வாதாடினாள் மீரா. “ஐ கேன்.” என்றான் அவனும் திட்டவட்டமாய். “என்னதான் வேணும் உங்களுக்கு? என்னை ஏன் என் விருப்பப்படி இருக்கவிட மாட்டேங்குறீங்க?” என்று அவனுக்கு...

    VK 2 2

    மீராவோ அந்த வரதனை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டதை பற்றி சரமாரி கேள்வியெழுப்பி வசவுகளை வீசுவார்கள் என்று எதிர்பார்த்திருக்க ராகவ் கேட்ட கேள்வியில் சற்று நிதானித்து எந்தவித உணர்ச்சியும் காட்டாது சிலையென நிற்க, ராகவ் அவள் எதிரே வந்து அவள் முகத்தில் ஏதும் உணர்ச்சி தென்படுகிறதா என்று ஆராய்ந்தான். “வீட்டை விட்டு வெளியே போய் வெளியுலகோடு பழகணுங்கிற...

    VK 2 1

    *2* “எப்போதும் செய்ற மாதிரி தான். இந்த விஷயம் தம்பிக்கு தெரியாமல் பார்த்துக்கணும். யாரிடமும் இதைப் பற்றி மூச்சு விடக்கூடாது. அதோட இ.சி.ஆரில் இருக்கும் நம் பங்களாக்களில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் ஒரு பங்களாவை சுத்தம் செய்யச்சொல். கொஞ்ச நாள் என்னோட கட்டுப்பாட்டில் அந்த பங்காளவில் இருக்கட்டும் பிறகு அவளை எங்கு அனுப்பனுமோ...

    VK 1 1

    *1* அழலில் அமிழ்ந்தெழுந்த சொற்கள் அமிலத்தில் உழலும் உலகம் எதிரிகளான நண்பர்கள் கானல் நீரான காதல் அந்நியர்களான பெற்றோர் இதில் தொலைந்தேன் நான் மீளமுடியாமல். -மீரா. “மீரா... மீரா…” தன் பெயர் ஏவப்படும் அரவம் செவியில் விழுந்து கருத்தில் பதிய எழுதுவதை அக்கணமே நிறுத்தியவள், தன் நாட்குறிப்பை மூடி அதை தன்னெதிரே இருந்த மேசை இழுவையில் வைக்காமல் சிந்தை தப்பி ஏதோவொரு நினைவில் தன் அலமாரியை திறந்து தன்...

    VK 1 2

    “பொய். எல்லாம் பொய். இன்னைக்கு நான் எந்த மறுப்பும் சொல்லக்கூடாதுன்னு இப்படி சொல்ற. எங்க உன் மனசை தொட்டு சொல்லு, நான் அழகா? நான் அழகா? இப்படி ஒருத்தியை நீ உன் பையனுக்கு பார்த்து கட்டிவைப்பீயா?” என்று மீரா சட்டென்று பிறந்த ஆவேசத்தில் எகிற, அம்புஜம் தன் முந்தியால் வாயை மூடி வெடித்து கிளம்பும்...
    error: Content is protected !!