Thendral Ennai Theendum Pothu
அத்தியாயம் பதினெட்டு:
பாஸ்போர்ட் ஆபிஸ் வந்து தான் எழுந்தாள் நர்மதா, இப்போது சற்று தெளிந்திருந்தாள், அது அவளின் சிரிப்பிலேயே தெரிந்தது.
தூக்கம் கண்களில் இருந்தாலும் ஒரு மலர்ந்த சிரிப்பு, அர்ஜுனை கொள்ளை கொள்ளும் சிரிப்பு. அதைக் கண்களால் சிறை செய்தான்.
கௌரி காரிலேயே அமர்ந்திருக்க, இவர்கள் ஒன்பது மணிக்கு உள்ளே சென்றனர். ஒன்பது பதினைந்திற்கு வெளியே வந்து விட்டனர்.
“இப்படி...
அத்தியாயம் பதினேழு:
அர்ஜுனிற்கும் படுத்தும் உறக்கமில்லை, அளவுக்கதிகமாக உண்டது அயர்வை கொடுத்தது. ஆனால் உறக்கமில்லை. ஒரு வலி வேறு வயிற்றில் ஆரம்பித்தது.
நர்மதாவிற்கு இப்போது சத்யாவின் மாமியார் பேசினது பின்னிற்கு போய்விட்டது,
என்னவோ அர்ஜுனை வருத்துவது போல தோன்றியது. அவனை திரும்பி பார்த்து படுத்தாள். நேற்று அவன் செய்ததை இன்று அவள் செய்தால், அதாகப்பட்டது அவனை சைட் அடித்தாள்.
நேற்று...
அத்தியாயம் பதினாறு:
அவனுக்கு குட் நைட் சொல்லிப் படுத்தும் விட்டாள், அதற்குள் போனில் மெயில் அலெர்ட் வர, எடுத்துப் பார்த்தவன், “உயிரை எடுக்கறாணுங்கடா, ராத்திரி பகல்னு எந்த ரெஸ்ட்ரிக்ஸன்சும் கிடையாது. எப்போன்னாலும் அனுப்பிடறாணுங்க”, என்று சலித்துக் கொண்டே, ஏதோ பதில் அனுப்பி முடித்து பார்க்க, நர்மதா ஆழ்ந்த உறக்கத்தில்,
“என்னடா இது, புது இடம், புத்தம் புது...
அத்தியாயம் பதினைந்து:
“டேய் அர்ஜுன், இவ உன் மானத்தை வாங்கிடுவா, உன் இமேஜ் எல்லாம் போயிடும்”, என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டவன்,
“என்னோடது லவ் மேரேஜ்ன்னு யார் சொன்னா, இருங்க அப்பாகிட்ட கேட்கலாம். ஏன்னா அவர் தான் கல்யாணம் பேசினார் நானில்லை”, என்று சொல்லி, “அப்பா”, என்று சத்தமாக அழைத்தும் விட,
“அண்ணா, என்ன பண்ற நீ”,...
அத்தியாயம் பதினான்கு:
அர்ஜுன் மெதுவாக பிடியைத் தளர்த்தவும், வாயடிக்காமல் அவனிடம் இருந்து விலகினாள் நர்மதா. இரத்த நாளங்களில் புது உணர்வு தான், ஆனால் அதைக் காட்டி விட்டாள் அது நர்மதா அல்லவே.
விலகியவள், இடுப்பை அவளையரியாமல் தடவி விட்டுக் கொள்ள,
“நான் தடவி விடட்டுமா”, என்று அர்ஜுன் வரவும்,
“அய்யே”, என்று முகத்தை சுளித்து பளிப்பு காட்டியவள், “ஒன்னும் தேவையில்லை”,...
அத்தியாயம் பதிமூன்று:
அன்று மதியமே கெளரியை வீட்டிற்கு அழைத்து சென்றனர். அதன் பிறகு திருமணப் பரபரப்பு தொற்றிக் கொள்ள வீடு முழுவதும் உறவுகள், நர்மதாவின் வீட்டிலும் உறவுகள் வரத் துவங்க...
அதன் பிறகு எதுவும் யோசிக்க நர்மதாவிற்கு நேரமில்லை என்பது தான் உண்மை, மெஹந்தி வைத்துவிட ஆட்கள் வந்து விட்டனர்.
அதிலும் கௌரி அழைத்தவர், “அந்தப் புடவை மாத்திடலாமா”,...
அத்தியாயம் பன்னிரண்டு:
அப்பா வந்து சொன்னவுடன் நர்மதாவிற்கு அவ்வளவு கோபம், “என்ன திமிர் இவனுக்கு”, என்பது போல, “இவர்கள் திருமணத்தை நிறுத்துவார்களா? எப்படி என்று நான் பார்க்கிறேன்?”, என்ற எண்ணம் தான்.
“யாரும் எதுவும் நிறுத்த முடியாது பா! யார் நிறுத்தறான்னு நான் பார்க்கிறேன்!”, என்று அப்பாவிடம் கோபமாக சொன்னாள்.
“இல்லை, நர்மதா அவங்க நிறுத்தறேன்னு சொல்லலை, ஜாதகத்தை...
அத்தியாயம் பதினொன்று:
நர்மதாவிடம் பேசிய பிறகு அவளைக் காண வேண்டும் ஆர்வம் மிகவும் அதிகமாக இருந்தது. அத்தனை நாட்கள் ஒரு வைராக்கியம், ஆசை அளவில்லாமல் இருந்தும் பேசவில்லை. மிகுந்த அழுத்தம் மிகுந்தவன், எப்போதும் ஒரு சொல் பொறுக்காதவன் அர்ஜுன். கோபம் வருவதும் அதிகம். எல்லாவற்றிலும் ஒரு பெர்ஃபக்ஷன் எதிர் பார்ப்பான்.
ஊரில் இருந்து அப்போது தான்...
அத்தியாயம் பத்து:
அர்ஜுனின் மனதினில் ஒரு கோபத் தீ , அவளின் கூப்பிய கைகளைப் பார்த்தவன், “கீழ இறக்கு முதல்ல கையை”, என்றான்.
அந்தக் குரல் எந்த எதிர்வாதமும் செய்யாமல் நர்மதாவை கையை இறக்க வைத்தது.
“என்ன தான் நினைத்துக் கொண்டிருகிறாள் இவள் என்னை பற்றி”, என்று மனதில் ஒரு ஆற்றாமை தோன்றி அது கோபமாக உருவெடுத்தது.
“உனக்கு என்னைப்...
அத்தியாயம் ஒன்பது:
வீட்டிற்கு வந்த அர்ஜுன் தந்தையின் முன் வந்து நின்றான், “என்ன செய்திருகிறீர்கள்”, என்ற கேள்வியைக் கண்களில் தாங்கி...
முகத்திலும் அவ்வளவு கோபம்... இப்படித் தந்தையின் முன் எப்பொழுதும் பாவனையைக் காட்டியதில்லை. முதன் முறை நிற்கிறான், ஷண்முகசுந்தரம் இதனை எதிர்பார்க்கவில்லை.
“என்ன தம்பி இப்படிப் பார்க்கறீங்க”, என்று கேட்க..
“நான் இதை உங்க கிட்ட இருந்து எதிர்பார்க்கலைப்பா.. நம்ம...
அத்தியாயம் எட்டு:
கணவரிடம் சொல்வோமா வேண்டாமா என்று மனதிற்குள் பெரிய பட்டி மன்றம் நடத்திய கௌரி பிறகு வேண்டாம் தான் ஏதாவது சொதப்பி விட்டாள் அர்ஜுன் ஏமாந்து விடுவான் என்று சொல்லவில்லை.
காலையில் அர்ஜுன் ஆஃபிஸ் கிளம்பவும், “நேத்து அம்மா தூங்கவேயில்லைன்னு சொன்னா, இப்போ மறுபடியும் கிளம்பற நீ!”, என்று ஷண்முக சுந்தரம் சத்தமிட...
“அப்பா! ஒரு வேலை...
அத்தியாயம் ஏழு:
அர்ஜுன் காரில் அமர்ந்ததும், கௌரியும் நர்மதாவும் பின் சீட்டில் அமர்ந்தனர். புது ஆட்கள் என்றாலும் எப்போதும் ஏதாவது பேசிக்கொண்டிருக்கும் நர்மதா அன்று மிகவும் அமைதியாகத்தான் இருந்தாள்.
கௌரிக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை, சிறிது நேரம் கழித்து அவராக, “வேலை எப்படி இருக்கு, பிடிச்சிருக்கா”, என்று பேச ஆரம்பித்து, அவளின் வேலை, ஹாஸ்டல் என்று...
அத்தியாயம் ஆறு:
நர்மதாவிடம் பேசிவிட்டு வந்த அர்ஜுனும் மனதிற்குள், “நீ என்ன பெரிய இவனாடா, இப்படி அந்தப் பொண்ணுக்கு உன்னைப் பிடிக்கணும்னு லூசுத்தனமா பண்ணிட்டு இருக்க! அவ உன்னை கவனிக்கவேயில்லை! இப்படி நீ அவளைப் பத்தி நினைக்காதா! ஸ்டே அவே அர்ஜுன்!”, என்று மனதிற்குள் உரு போட்டுக் கொண்டான்.
நாம் ஒன்றைப் பற்றி நினைக்க வேண்டாம் என்று...
அத்தியாயம் ஐந்து:
“என்ன நடக்குது அர்ஜுன்?”,
“நான் என்ன சொல்லணும்னு எதிர் பார்க்கறீங்க மா...”, என்றான்.
“அப்பா ஒத்துக்க மாட்டார்டா”, என்றார் கவலையாக.
சிரித்தான்.... “என்னடா சிரிக்கற! அப்பாவை மீறி கல்யாணம் செஞ்சுக்குவியா”, என்று கோபமாக கேட்கவும், இன்னும் சிரித்தான்
“அம்மா! அம்மா! அப்பா ஒத்துக்கறது எல்லாம் அப்புறம்! முதல்ல பொண்ணு ஒத்துக்கணும்மா!”, என்றான்.
“அப்போ நாங்க ஒத்துக்கலைன்னாலும் கல்யாணம் செஞ்சுக்குவியா”,
“அம்மா!”, என்று...
அத்தியாயம் நான்கு:
அர்ஜுன் மெதுவாக காரை விட்டு இறங்கி நடந்த போது மனம் என்றுமில்லா உற்சாகதில் இருந்தது. “இது என்ன உணர்வு”, என்று கண்டறிய முற்பட்டான்.
ஏனென்றால் இந்த இருபத்தி எட்டு வயது வரை அவன் உணர்ந்திராத உணர்வு. பெண்களை பார்க்க மாட்டான் என்று கிடையாது.... பார்ப்பான், ரசிப்பான், அந்தந்த வயதுக்குரிய செய்கை... ஆனால் காலேஜ் முடிந்து...
அத்தியாயம் மூன்று:
எப்போதும் உற்சாகமான இளைஞன் தான் அர்ஜுன்... அன்று உற்சாகத்தின் அளவு இன்னும் அதிகமாக இருந்தது. நர்மதாவை பற்றிய யோசனைகளோடு ஐந்து மாடிகள் அவன் நினைவே இல்லாமல் படி ஏறிவிட்டான் .. லிப்டின் கதவு திறக்க, அதில் இருந்த வந்த இவனின் டீம் மெம்பர் ஒருவன், “வை அர்ஜுன்..... ஸ்டெப்ஸ்?”, என்று கேட்கவும் தான்,...
அத்தியாயம் இரண்டு:
“உங்களுக்கு தெரிஞ்ச இடம் இருக்குதுங்களா.. இருந்தா பார்ப்பமுங்க, இல்லைன்னா இப்படியே கூட்டிட்டு போயிடரணுங்க... எனக்குப் பொண்ணை தனியா விட பயம்... அது கல்யாணம் பண்ணிக்கிட்டு புருஷனோட எங்க வேணா போகட்டும் வெளிநாட்டுக்கு போகட்டும் எங்கயும் போகட்டும் ஆனா அதுவரை என்னால் விட முடியாதுங்க தம்பி”, என்றார்.
“மாமா இதையே சொல்லாதீங்க.. நல்ல வேலை..”, என்று...
அத்தியாயம் ஒன்று:
சென்னையின் மையப் பகுதியில் அமைந்திருந்த அந்த மென்பொருள் நிறுவனம் காலை வேலையின் பரபரப்புக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. ஆளுக்கொருவராக அங்கும் இங்கும் உள் நுழைந்து கொண்டிருந்தனர்.
அர்ஜுன், பெயருக்கேற்ற வசீகரத்துடனும் கம்பீரத்துடனும் படியேறிக் கொண்டிருந்தான்... அவனுடன் படியேறிக் கொண்டிருந்த பல பெண்களில் சில பெண்களின் பார்வை அவனைத் தொடர்ந்தது... இப்படி ஒரு ஆண்மகன் தங்களுக்கு மணமகனாய்...