அத்தியாயம் பத்தொன்பது:
அவள் கொடுத்ததை அமைதியாகக் குடித்தவன், “குடி” என்று அவளையும் பணித்து, அவள் குடித்த பின் “என்ன பண்ணலாம்” என்றான்.
“தெரியலை” என்றாள் பரிதாபமாக நர்மதா.
“எங்கப்பாவும் என் பேச்சை கேட்கமாட்டார். நீ கேட்பியா இல்லையா இல்லை, பொண்ணுங்க ஏன் செய்யணும்னு ரூல்ஸ் பேசுவியா, எதுவும் தெரியலை, டென்ஷன்ல இப்ப எனக்கு தலை வலிக்குது” என்றான் தலையை பிடித்துக் கொண்டு.
நர்மதா அவனையே பார்த்து நிற்க…
“அப்பா சொன்னா அதை அப்படியே செய்யணும்னு நினைப்பார். என்னால அப்படி முடியாது. அவர் சொல்றதை செய்ய நான் அவர் கூட இருக்கணும்னு இல்லையே, அதை வேலைக்கு இருக்கறவங்களே செய்வாங்க, அதனால் தான் நான் வெளில வேலைக்குப் போனேன்” என்று அவன் அங்கே அப்பாவோடு தொழிலில் இல்லாததற்கு விளக்கமும் கொடுத்தான்.
கூடவே தலையையும் பிடித்தான்.
எல்லாவற்றையும் தூக்கி தூர வைத்து “உங்களுக்கு அடிக்கடி தலை வலி வருமா, டூ டேஸ் பேக் கூட இருந்ததே” என்றாள் கவலையாக.
“ஜஸ்ட், டென்ஷன் ஹெட் ஏக் நத்திங் டூ வொர்ரி, பெயின் கிள்ளர் போட்டா சரியாகிடும்” என்று அதை எடுக்கப் போக,
“நிறைய மாத்திரை போடக் கூடாது. நாட் குட் ஃபார் ஹெல்த், நான் பிடிச்சு விடட்டுமா, குறையுதான்னு பார்ப்போம். முடியலைன்னா மாத்திரை போடுங்க”
“உன் மடில தலை வெச்சிக்குவேன். ஓகே வா” என்று கண்டிஷன் போட,
“ஓகே” என்று சொல்லாமல் வாகாக படுக்கையில் அமர்ந்து கொள்ள, அவளின் மடியில் தலை வைத்து கண்மூடிக் கொண்டான். மெதுவாக இதமாக நர்மதா பிடித்து விடவும், சற்று வலி குறைவது போல தோன்றியது.
அமைதியான நிமிடங்கள் இருவருமே பேசவில்லை. அப்படியே வலி குறையும் வரை படுத்திருந்தான். உறக்கம் வரவில்லை. பேச வேண்டிய விஷயங்கள் இருக்கிறதே என்ற எண்ணம் மனதினில் உளல உறக்கம் அணுகவில்லை. வலி போய்விட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும், குறைந்திருந்தது.
அதுவரையிலும் ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் பொறுமையாக.
மெதுவாக கண் திறந்து அவளைப் பார்த்தான். அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அர்ஜுன் கண் திறந்ததும், “இப்ப வலி எப்படி இருக்கு”
“ஃபீலிங் மச் பெட்டர்” என்றவன் அவளின் விரல்களைப் பற்றி அதில் முத்தமிட, ஒரு மெல்லிய சிலிர்ப்பு நர்மதாவினுள். அதை விடுத்து அவனிடம் பேச்சுக் கொடுத்தாள்.
“எதுக்கு இப்படி மாமாவோட ஆர்க்யு பண்றீங்க, இங்க இருக்கறதுன்னா இருந்துக்கறேன். நீங்க வர்ற வரை”
“அப்போ உன் வேலை”
“கண்டிப்பா மிஸ் பண்ணுவேன், ஆனா போய் தான் ஆகணும்கற மாதிரி எந்த பெரிய வேல்யுவும் இல்லை. ஏதாவது வேலை இருந்தா போதும். இதுதான் வேணும்னு எதுவும் கிடையாது. சும்மா சமைக்க மட்டும் செஞ்சிட்டு என்னோட வாழ்க்கை போறதுல எனக்கு விருப்பம் கிடையாது. ஏதாவது செய்யணும் அது மஸ்ட். அதுல எந்த காம்ப்ரமைசும் என்னால பண்ண முடியாது” என்றாள் தெளிவாக.
“அப்பாவோட இருக்குறது கஷ்டம் எல்லா விஷயத்துளையும் தலையிடுவார், யோசிச்சிக்கோ”
“அது ஒன்னும் பிரச்சனையில்லை. இவ்வளவு நாளா எங்க அப்பா சொன்னதை கேட்டேன். இனி உங்க அப்பா சொல்றதை கேட்கறேன்”
“நீ உங்கப்பா சொன்னதை கேட்பியா” என்றான் நம்பாத பாவனையில் தன்னிடம் இவ்வளவு வாயடிக்கிறாளே என்று.
“அதுல என்ன சந்தேகம். எங்கப்பா சொன்னாருன்னு தான் உங்களை கல்யாணம் கூடப் பண்ணினேன்” என்று சொல்லிவிட
சடாரென்று மடியில் இருந்து எழுந்து கொண்டான், அந்தப் பேச்சை ரசிக்கவில்லை என்பது போல, அவனின் முகமும் சுணக்கத்தைக் காட்டியது.
“இப்ப எதுக்கு எழுந்தீங்க படுங்க” என்று அதட்டினாள் நர்மதா.
அர்ஜுன் அமைதியாக இருக்கவும், “என்ன இது, இதுக்கு எதுக்கு முகத்தை தூக்கி வெச்சிருகீங்க. அது தானே நிஜம். ஆனா இப்ப எங்கப்பா சொன்னாலும் உங்களை விட்டு போயிடுவேனா கிடையாது தானே, இதுதான் ரியாலிட்டி”
“படுங்க” என்று மீண்டும் அதட்ட, அவளின் பாவனையில் புன்னகை வந்த போதும்,
“ஒன்னும் வேண்டாம்” என்று முறுக்கியபடி எழுந்து போனான்.
“போடா” என்று அவளும் முறுக்கியபடி படுத்துக் கொண்டாள்.
குளியலறைக் கதவு மூடும் சப்தம் கேட்க, “எதுக்கு இவருக்கு இவ்வளவு கோபம் வருது, இதுக்கு மேல எல்லாம் நர்மதா அட்ஜஸ்ட் பண்ண மாட்டா” என்று ஒரு பெரிய ஆராய்ச்சியை மனதிற்குள் நடத்திக் கொண்டே கண்களை மூடிக் கொண்டாள்.
சற்று நேரத்தில் கதவு திறக்கும் ஒலி கேட்க, கண்களை திறவாமலேயே “குட் நைட்” என்று சொல்லி உறங்க முற்பட, ஒரு சத்தமும் இல்லை.
“என்னடா பதிலே காணோம். என்ன பண்றாங்க. திரும்ப டென்ஷன் ஆகிட்டாரா? குறைஞ்ச தலைவலி அதிகம் ஆகிடுச்சா?” என்று கண்களை திறந்து பார்க்க,
நர்மதா படுத்திருப்பதை பார்த்தபடி நின்றிருந்தான் முறைத்தபடி.
“இப்ப என்ன?” என்றவளைப் பார்த்து.
“உனக்கு இப்ப தூங்கியே ஆகணுமா. உனக்கு எப்படியோ தெரியாது, உன்னைப் பார்த்த நாள்ல இருந்து என்னோட நினைவுகள்ள அதிகமா இருக்குறது நீதான்” என்றான் கடுப்பாக.
“அதுக்கு”
“நாளைக்கு காலையில நான் கிளம்பணும்”
“அதுக்கு”
“ஹேய், உனக்கு நிஜமாவே புரியலையா”
“நீங்க தானே என் மடில இருந்து எழுந்தீங்க” என்று முறுக்கினாள்.
“மடில படுக்கறது மட்டும் எனக்கு போதாதுடி”
“உங்களுக்கு இப்ப தலைவலி” என்றாள் அக்கறையாக..
“அதுக்கு காரணமே நீதான், வில் மிஸ் யு அம்மு, எனக்கு போகவே மனசில்லை”
“இதற்கு என்ன சொல்லுவாள், என்ன சொல்லுவது” என்றும் தெரியவில்லை.
ஏதாவது சொல்லுவாள் என்று அர்ஜுன் எதிர்பார்க்க, நர்மதா எதுவும் பேசாசதால் சற்று ஏமாற்றமாக உணர்ந்தவன், “நீ என்னை மிஸ் பண்ண மாட்ட. அப்பா சொன்னாங்கன்னு தானே கல்யாணம் பண்ணிகிட்ட” என்று சொல்லி அமைதியாக படுத்துக் கொண்டான்.
“என்ன எதிர்பார்க்கிறான் இவன்? ஐ லவ் யு… நீ இல்லாம என்னால இருக்க முடியாது… போகாத… என்ற டைலாக்ஸ்சையா, நிறைய தமிழ் சினிமா பார்த்து கெட்டுப் போயிருக்கான். இவனை என்ன பண்ண?” என்று யோசித்த படி அர்ஜுனை பார்த்திருந்தாள். கண்மூடி இருந்தான்.
“நீங்க எனக்கு சான்சே கொடுக்கலை. நான் என்ன பண்ணட்டும்?”
“என்ன சான்ஸ் கொடுக்கலை” என்றான் புரியாமல்.
“பார்த்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில, ஒரு பிரச்சனை வேற உருவாக்கி, உடனே கல்யாணம் நிச்சயம் பண்ணிக்கிடீங்க. இதுல நம்ம சண்டை வேற போட்டுகிட்டோம்”
“அப்புறம் சொல்லாம கொள்ளாம யு எஸ் போயிட்டீங்க, என்கிட்டே பேசவேயில்லை. உங்க ஆளுங்க செம பந்தா. நாங்க உங்களுக்கு பணவசதில சமமில்லை. இந்த கல்யாணம் நல்லபடியா நடக்குமான்னு எங்களுக்கு ஓரே யோசனை. நீங்க கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி வர்றீங்க. அப்புறம் கல்யாணம் வேண்டாம் சொல்றீங்க, அப்புறம் கல்யாணம் நடந்துச்சு, இதுல எனக்கு என்ன ஃபீல் வரும். லவ் பண்ண எங்க டைம். மிஸ் பண்ண எங்க டைம்” என்றாள் சீரியசாக.
ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் பதில் பேசவில்லை, திரும்ப கண்மூடிக் கொண்டான். மீண்டும் ஒரு பேச்சை வளர்க்க அர்ஜுனிற்கு விருப்பமில்லை.
“i really dont understand what do you expect out of me”
அந்த வார்த்தைகளை உள் வாங்கிக் கொண்ட அர்ஜுனின் மனது பதில் சொன்னது “நான் உன்னை விரும்பறதை விட பல மடங்கு அதிகமா நீ என்னை விரும்பணும்” என்று. ஆனால் அதை வெளியில் சொல்லவில்லை.
நர்மதா சொல்வது போல காதலிக்க, அதை உணர என்று எதற்கும் நேரம் கொடுக்கவேயில்லை யோசித்தபடியே படுத்திருந்தான்.
“நான் உங்களை பிடிக்கலைன்னு சொல்லவேயில்லை” என்று நர்மதா மீண்டும் பேச,
அவளைத் திரும்பிப் பார்த்தவன் உதட்டின் மேல் கைவைத்து, “பேசாதே” என்பது போல சைகை காட்டியவன், “தூங்கு” என்றான். நர்மதா பேச்சை நிறுத்திக் கொள்ள, சில அமைதியான நிமிடங்கள் மீண்டும்,
தான் சம்மதம் என்று சொல்லாமல் பக்கத்தில் வரவே மாட்டான் என்று புரிந்தவள், சற்றும் தயங்காமல் அவளாகவே சென்று அவனின் நெஞ்சினில் தலைவைத்து அவனை அணைத்துப் படுக்க, அதை உணர்ந்த நொடி அவளை இறுக அணைத்துக் கொண்டான். மிகவும் இறுக்கமான அணைப்பு.
“அநியாயத்துக்கு இவ்வளவு தயங்கினா நான் என்ன செய்ய” என்றாள்.
“அது, ஏற்கனவே அப்பா சொன்னாங்கன்னு தான் கல்யாணம் பண்ணினேன் அது இதுன்னு உளர்ற, இதுல பொண்ணுங்களுக்கு அது இதுன்னு ரைட்ஸ் பேசற, அதுதான் நான் எதுவும் உன்னை ஃபோர்ஸ் பண்ணிடக் கூடாதுன்னு அம்மு” என்று விளக்கம் கொடுக்க,
“உங்கம்மா உங்களை நல்லா வளர்த்திருக்காங்க” என்று கிண்டலாக மீண்டும் சர்டிபிகேட் கொடுத்தவள், கூடவே நிறையப் பொண்ணுங்க கல்யாணம் இப்படி தான் நடக்கும் என்று மனதிற்குள் நினைத்து அதை சொல்ல வந்தவள், இந்த முறை புத்திசாலித்தனமாக அதை வெளியில் சொல்லி பேச்சை வளர்க்க முற்படவில்லை.
திருமணம் நிச்சயமான நொடி முதல் அர்ஜுனின் ஆதிக்கமே அவளின் எண்ணங்களில்.
இதுவரை ஒரு கொஞ்சல் மொழி கூட இல்லை, எல்லாம் வாக்குவாதங்கள் மட்டுமே. அதிலும் திருமணமாகி மூன்று நாட்கள் தான் ஆகியிருந்தது. ஆனாலும் அவனோடு வெகு நாட்கள் இருந்தது போல தான் தோற்றம்.
அந்த இறுகிய அணைப்பு உன்னை விட மாட்டேன் என்றதா? நீ எனக்கு வேண்டும் என்றதா? மனதின் வேட்கைகளை நிறைவேற்ற துடித்ததா? என்ற ஒரு ஆராய்ச்சியில் மனம் ஈடுபட்டது.
“நீ என்னை பைத்தியமாக்கறடி, ஐ லவ் யு அம்மு, லவ் யு” என்று இன்னும் இன்னும் அணைப்பை இறுக்கியபடி அவனின் இதழ்கள் வார்த்தைகளை உச்சரிக்க,
அந்த வார்த்தைகளை அனுபவித்தபடி, அதை நிறுத்த விரும்பாமல் சொன்னவனின் இதழ் ஓரத்தில் இதழ் ஒற்றி எடுத்தாள்.
சில நொடிகள் அந்த செய்கையை அனுபவித்தவன், அவளின் அழகு முகத்தை ரசித்தான். அந்த முக வடிவை கைகளால் அளக்க, உடலில் ஒரு புது உணர்வு, ரத்த நாளங்கள் வேகமாக அதன் ஓட்டத்தை செய்ய, உடலின் ஒவ்வொரு அணுவும் ஒரு புது உணர்வில் திளைக்க, ஏதோ வேண்டும் என்று துடிக்க, அந்த உணர்வுகளின் தாக்கத்தில், நர்மதாவின் கண்கள் தானாக ஒரு மயக்கத்தில் மூடிக் கொண்டது.
நர்மதாவின் முகத்தின் செம்மை, உடலின் மொழி, அர்ஜுனின் வேட்கையையும் மீறி ஒரு பரவசத்தை அவனுக்கும் கொடுக்க, அவளின் இதழ்களை காதலோடும் ஆசையோடும், ஆவலோடும் சிறை செய்தவன், கணவனாக எல்லைகளை மீற ஆரம்பித்தான்.
அஞ்சு மணியாகப் போகுது என்று நர்மதா சொல்லும்வரை, அவளை விட மனதேயில்லை.
“லவ் யு அம்மு” என்று நெற்றியில் முத்தமிட்டு அவளை விலகி எழுந்தவன், மின்னல் வேகத்தில் குளித்து தயாராகி நின்றான்.
அதுவரையிலும் அவனின் செய்கைகளை அவனை விழியகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இப்படிப் பார்க்காத அப்புறம் எனக்கு போக மனசே இருக்காது” என்று மீண்டும் அவளை முத்தமிட துடித்த மனதை அடக்கினான். நெருங்கினால் விலக முடியாது என்று அறிந்தவனாக.
“ஆபிஸ் போகணும். அப்புறம் தான் பேக் பண்ணனும். இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும்” என்று போக மனதேயில்லாமல் அவனுக்கு அவனே சமாதனம் செய்து கொண்டு கிளம்பினான்.
ரூம் விட்டு வெளியே வந்த போது கௌரி காஃபியுடன், சென்னை போனால் சாப்பிட உணவுடன் என்று ஒரு பெரிய பேகிங் உடன் தயாராக நின்றார்.
தனியாக செய்திருக்கிறாரே தான் யோசிக்காமல் விட்டோமே என்று நர்மதா, “சாரி அத்தை, நான் யோசிக்கலை இல்லைன்னா உங்களுக்கு ஹெல்ப் பண்ண வந்திருப்பேன்”
“அம்மாவே என் வயிறு சரியில்லைன்னு தான் செஞ்சிருக்காங்க, நீ ஹெல்ப் பண்ணியிருந்தா அவ்வளவு தான்” என்று அர்ஜுன் காலை வார,
“ஓஹ் உங்களுக்கு உண்மை தெரியுமா?” என்று கௌண்டர் கொடுத்தாள்.
கிளம்பும் போதும் இவ கிட்ட பல்ப் வாங்காதடா என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டான்.
ஷண்முக சுந்தரம் ஏதாவது சொல்வானா என்று பார்க்க அர்ஜுன் ஒன்னும் சொல்வதாக காணோம். “என்னடா முடிவு பண்ணியிருக்கீங்க” என்றார் பொறுக்க முடியாமல்.
“எனக்கு டைம் ஆச்சு. நீங்களாச்சு உங்க மருமகளாச்சு பேசிக்கோங்க” என்று சொல்லி காரில் ஏறி அமர்ந்தான்.
கார் கிளம்பும் வரை எதுவும் தெரியவில்லை, கிளம்பியவுடன் நர்மதாவிற்கு மனதை ஏதோ செய்தது.
கார் கேட்டை கூடத் தாண்டவில்லை. எப்போ திரும்ப வருவான் என்று மனம் நினைத்தது.
என்ன முடிவு என்பது போல பேச நினைத்த ஷண்முக சுந்தரம் நர்மதாவின் முகத்தைப் பார்த்தவர், ஒன்றும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டார்.
“போ நர்மதா, இப்ப தான் அஞ்சு மணியாகுது. போய் இன்னம் கொஞ்ச நேரம் தூங்கு” என்றார் கௌரி.
“ம், சரியத்தை” என்று சொன்ன போதும் இடத்தை விட்டு அசையாமல் நிற்க,
“சீக்கிரம் வந்துடுவான் வா” என்று கைபிடித்து தான் அழைத்து சென்றார்.
ரூமின் உள் சென்றவள், படுத்த போதும் உறக்கம் வரவில்லை. கண்களை மூடிய போதும் அர்ஜுன் முகம் தான். இதுதான் காதலா இதுதான் அர்ஜுன் சொன்ன மிஸ் செய்வதா. மீண்டும் ஒரு ஆராய்ச்சி.
“எப்படியிருந்த நீ இப்படியாகிட்ட நர்மதா” என்று அவளுக்கு அவளே கிண்டல் செய்து, முகம் கொள்ளாப் புன்னகையுடன் உறங்க ஆரம்பித்தாள்.