Advertisement

அத்தியாயம் இரண்டு:

“உங்களுக்கு தெரிஞ்ச இடம்   இருக்குதுங்களா.. இருந்தா பார்ப்பமுங்க, இல்லைன்னா இப்படியே கூட்டிட்டு போயிடரணுங்க… எனக்குப் பொண்ணை தனியா விட பயம்… அது கல்யாணம் பண்ணிக்கிட்டு புருஷனோட எங்க வேணா போகட்டும் வெளிநாட்டுக்கு போகட்டும் எங்கயும் போகட்டும் ஆனா அதுவரை என்னால் விட முடியாதுங்க தம்பி”, என்றார்.

“மாமா இதையே சொல்லாதீங்க.. நல்ல வேலை..”, என்று கூட வந்தவர் சொல்லி…

அர்ஜுனிடம், “அவருக்கு கொஞ்சம் பயமுங்க தம்பி! பொண்ணைத் தனியா விட… இப்போவே ரொம்ப ரகளை செஞ்சு தான் நர்மதா இங்க கூட்டிட்டு வந்திருக்கு… அதுவும் ஒத்துக்கவேயில்லை… உங்க அக்கா சத்யா   எனக்கு தான் சொந்தம் தம்பி… நீங்க இங்க வேலைல இருக்கீங்க சொன்னோம்… உங்க அப்பாக்கு ஊருக்குள்ள நல்ல பேரு… நீங்க எங்களுக்கு ரொம்ப தெரிஞ்சவங்கன்னு… அப்படியே பார்த்துக்குவீங்கன்னு சமாதனம் சொல்லி கூட்டிட்டு வந்தோம்”, என்றார்.

“இந்தப் பெண் யாரென்றே தெரியாது.. நான் ஏன் பார்த்துக் கொள்ள வேண்டும். இவனுங்க என்ன மாக்கானுங்களா, பொண்ணைத் தனியா விட மாட்டானுங்கலாம். ஆனா என்னை நம்பி எப்படி விடராணுங்க, சுத்த பைய்த்தியக்காரணுங்க போல இருக்கே… இல்லை…. அர்ஜுன் நீ அவ்வளவு நல்லவனாடா, உலகம் ரொம்ப தப்பா நினைக்குதோ”, என்று மைன்ட் வாய்சில் பேசிக்கொண்டு இருந்தான்.   

தன்னுடைய நடப்ப்புகள் எல்லோருக்கும் தெரிவதில் நர்மாதவின் முகத்தில் அவ்வளவு சங்கடம். ஆனால் அர்ஜுன் அவளைத் திரும்பி பார்த்தால் தானே. ஓரளவு நடப்பை புரிந்து  கொண்டான்.

ஆனாலும் இதில் அவன் என்ன செய்ய முடியும்… நல்ல வேலை… அதனைக் கொண்டு பேசினான்.

“சார்! நீங்க எந்த காலத்துல இருக்கீங்க… நல்ல வேலை… நிலைச்சு நின்னா நல்ல சம்பளம்.. பொண்ணுங்களுக்குக் கல்யாணம் அவசியம்… கல்யாண வாழ்க்கை ரொம்ப முக்கியம். ஆனா கல்யாணம் மட்டுமே வாழ்க்கை கிடையாது…”,

“இருக்கலாம் தம்பி! ஆனா நம்ம வளர்ப்பு அப்படி ஆகிப்போச்சு..”, என்றவர்,

நர்மதாவிடம் திரும்பி, “முதல்ல இடம் பார்ப்போம் நம்பிக்கையா இருந்தா இங்க வேலைல சேரு.. இல்லைன்னா வேண்டாம்”, என்று சொல்ல..

அந்தப் பெண்ணிற்கு கண்கள் கலங்க ஆரம்பித்தது.. நிறைய போராடி தான் இப்போது வேலையில் சேர வந்திருக்கிறாள்… அப்பா இப்படி சொல்லவும் கலங்கி விட்டாள்.

அவளின் அம்மா, “இடம் பார்த்துக்கலாங்க… இப்போ அவ சேரட்டும்… நாம ஒரு ரெண்டு நாள் எங்கயாவது ஹோட்டல்லா தங்கி இடம் பார்த்துக் கொடுத்துட்டு போகலாம்”.

“ப்ச்! அதெல்லாம் சரிவராது! இங்க நமக்கு யாரையும் தெரியாது! எப்படி பொண்ணை நம்பி எங்க விடுவ?”, என்றார் பட்டென்று..

அத்தனை பேரும் விழித்து நின்றனர்.

“அய்யயோ……… எப்படித்தான் பிள்ளைகள் இவரிடம் வளர்ந்தார்களோ”, என்று அர்ஜுனுக்கு பரிதாபமாக இருந்தது.

“சரிங்க தம்பி! என்னன்னு யோசிக்கறோம்?”, என்று அவர் கிளம்ப ஆயத்தமாக..

“ஏங்க, இப்போ தான் என்னை தெரியும்னு வந்தீங்க.. இப்போ யாரையும் தெரியாதுன்னு வேலையை விட்டு கூட்டிட்டுப் போனா எப்படி…”,

“இடம் தானே பாதுகாப்பா… பார்த்துக்கலாம்… முதல்ல உங்க பொண்ணு போய் சேரட்டும் விடுங்க… இடம் தோதுபடலைன்னா அப்புறம் கூட்டிட்டு போங்க”, என்றான் அர்ஜுன்.

அதற்கு சற்று நிதானித்தவர், “அதுவும் சரிதான்… நீங்க விசாரிச்சு சொல்லுங்க தம்பி! நாங்க போய்ப் பார்த்துட்டு வர்றோம்”, என்று சொல்ல..

“மதியம் சொல்றேங்௧! அதுவரை நீங்க எங்கயாவது வெளில போயிட்டு வாங்க”, என்று சொன்னவன்… நர்மதாவிடம் திரும்பி.. “போ! முதல் போய் ஜாயின் பண்ணு”, என்றான்.

இதுதான் சாக்கென்று எல்லோரிடமும் தலையசைத்து அவள் வேகமாக படியேறினாள். இவனும் சொல்லிக்கொண்டு கிளம்ப…

“தம்பி! என்னடா இப்படி பேசறேன்! பொண்ணுன்னு ரொம்ப கட்டுப்பாடு பண்றனோன்னு தப்பா நினைக்க வேண்டாம்…. என்னன்னா விளையாட்டுப் பொண்ணு தம்பி… எப்பவும் ஏதாவது பிரச்னையை இழுத்து விட்டுக்குவா எப்பவும் வம்பை இழுத்து விட்டுக்குவா … அதுவும் ஸ்நேகிதப் பசங்களுக்காக! நிறைய அனுபவமாகிருச்சு தம்பி! இவ்வளவு கெடுபிடி பண்ணலைன்னா பதுவிசா இருக்காது!”, என்றார்.

“நம் எண்ண ஓட்டத்தைக் கணித்திருக்கிறார்”, என்று புரிந்தான்.  

“நான் இப்படி கட் அண்ட் ரைட்டா பேசினா அந்த பயத்துல கொஞ்சம் அமைதியா இருக்குங்க..”,

அவர்களிடம் விடை பெற்றுக் கிளம்பினான்.

உள்ளே நுழைந்தான். லிப்ட் அருகில் போய் நிற்கவும்.. வேகமாக இவனின் வரவிற்காக காத்திருந்த நர்மதா வந்து, “தேங்க்ஸ்”, எனவும்..

“இன்னும் இங்க தான் இருக்கியா? முதல் நாளே லேட்டா போவியா? உன் ஃபிரிண்ட்ஸ் யாரும் இங்க சேரலையா!”, என்று கேட்க…

“தோ! அங்க நிக்கறாங்க!”, என்று காட்டினாள். அப்பாவிற்கு அவ்வளவு யாரையும் பிடித்தமில்லை என்பதால், என்னைப் பார்த்தாலும் எல்லோரிடமும் யாரும் வரவேண்டாம்  என்று சொல்லியிருந்ததால், அவர்கள் இவளுக்காக காத்திருந்தனர். இன்னம் மூன்று பெண்கள் இரு ஆண்கள்.

“எல்லோரும் கிளாஸ் மேட்ஸ்”,

“இவங்கல்லாம் எங்க ஸ்டே பண்றாங்க..”,

“வீடெடுத்து!”,

“நீயும் அங்க தங்க வேண்டியதுதானே..”,

“நாலு பொண்ணுங்க மட்டும் தங்கறதான்னு விடமாடேங்கறார்”,. அவனுக்கு என்ன தெரியும் தன் பெண்ணால் மற்றவர்களுக்கு பிரச்சனை வரக் கூடாது, புது இடம் என்றால் சற்று அமைதியாக இருக்க முற்படுவாள் என்று அவளின் அப்பா யோசிக்கிறார் என்று..

“இப்போ போய் முதல்ல ஜாயின் பண்ணு யோசிக்கலாம்… எனக்கு டைம் ஆச்சு!”, என்று அர்ஜுன் விரைந்து விட்டான்.

அவன் சென்றதும் அருகில் வந்த நண்பர்கள்.. “யார் இந்த ஹேண்ட்சம்?”, என்று கேட்க..

“ம்ம்ம்ம்!!!!!, அவர் ஹேண்ட்சம் இல்லை பி எம்”, என்றாள் ரைமிங்காக.

“அதென்ன பி எம்?”,

“ப்ரைம் மினிஸ்டர்.. அதாவது நமக்கு அவரை தெரியும்.. ஆனா அவருக்கு நம்மை தெரியாது!”, என்றாள்.

அவள் சொன்ன பாவனையில் சிரித்த நண்பர்கள், “இப்போதானே அவர் தான் பேசினார், அதனால தான் அப்பா விட்டார்ன்னு சொன்ன.. இப்போ கிண்டல் பண்ற?”, என்று தோழி ஆஷா கேட்க..

“அதுக்கு தான் தேங்க்ஸ் சொல்லிட்டனே! சரியாப் போச்சு!.. நர்மதா தேங்க்ஸ் சொல்றதுன்னா சும்மாவா!”, என்று ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்க..

“ம்ம்ம்ம்! நீ அடங்கவே மாட்ட!”, என்று நண்பர்கள் குழாம் சொல்ல..

“பின்ன அவர் பெரிய ஆஃபிசராம்…. நம்ம கிட்ட கெத்து காட்டறார். மாப்பிள்ளை அவருதான்! ஆனா அவர் போட்டிருகுற டிரஸ் என்னதுன்னு நான் சொல்லைப்பா, இந்த பில்டிங் சொல்லுது!”, என்று சொல்ல…

நர்மதாவின் அப்பா கவலைப்பட்ட விளையாட்டுத்தனம் அப்போதே ஆரம்பித்தது.

பொங்கிய சிரிப்பை அத்தனை பேரும் அடக்கினர்.

“அட! இது அவருக்கு மட்டுமில்லைப்பா! நாளைக்கு நமக்கும் தான்!”, என்று நர்மதா சொல்ல…   

“ஏய், நர்மி! வந்த முதல் நாளே வேலையைக் காட்டாதடி.. ஒழுங்கா வேலை நிலைக்கணும்.. எங்கப்பாம்மா  என்னைய நம்பி தான் வீடு கட்ட பிளான் போட்டிருக்காங்க..”,

அவளின் காதில் ரகசியமாக, “உனக்கு ஃபேமிலி ப்ளானிங் பண்ற வயசுல, உன்னை வெச்சு எதுக்கு எதுக்கு பில்டிங் பிளான் போடறாங்க!”, எனவும்,

“ஆ”, என்று வாயை பிளந்தாள் ஆஷா.. “அம்மாடி அம்மா, என்ன பேச்சு பேசற நீ”, என்பது மாதிரி ஆஷா ஒரு பார்வை மட்டும் பார்த்தாள். மற்ற நண்பர்கள் இருப்பதால் பேசவில்லை. எல்லோரும் நண்பர்கள் தான், ஆனால் நர்மதாவும் ஆஷாவும் தான் மிகவும் நெருக்கம்.   

ஆனால் எதிரில் இருபவர்களுக்கு நர்மதா பேசுவது கணிக்கவே முடியாது. இப்படி தான் ஏடா கூடமாக பேசிவைத்து நர்மதா ஒன்றுமே சொல்லாதது போல முகத்தை வைத்துக் கொள்வாள். ஆனால் சுற்றி இருப்பவர் சிரித்து மாட்டிக் கொள்வர்.  

ஆஷாவின் திகைத்த பார்வையை பார்த்தவள், “சரி, சரி, மனசுல ஆசையை வளர்த்துக்காத… உங்கப்பாவோட பில்டிங் பிளான்க்கே ஓகே சொல்லு! வா, வா, டைம் ஆச்சு! எங்கப்பா மனசு மாறி என்னை சேராதன்னு சொல்லிடப் போறார்! அதுக்குள்ள சேர்ந்துடரேன்…”, என்று சொல்ல.

“ஏய் அடங்குடி”, என்றாள் ஆஷா..

திரும்பவும் அவளுக்கு மட்டும் கேட்குமாறு, “ஏன் முறைக்கிற? கல்யாணம் ஆகாம என் கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டேன்னா!”, என்று கர்ம சிரத்தையாக சொல்ல..

“நான் வேலைக்கே வரலை? என்னை ஆளை விடு!”, என்று தோழி சொல்ல…

“அய்யோ! டோன்ட் பீ சீரியஸ் யா! கமான்யா கமான்!  பாரு, பாரு, லிப்ட் வந்துடுச்சு!”, என்று தோழியைத் திசை திருப்பினாள்..

அவர்கள் லிப்ட் முன் தான் நின்றிருந்தனர். அது கீழே வரவும்,  அனைவரும் விளையாட்டுத்தனத்தை கைவிட்டு பணியில் சேருவதைக் குறித்து விரைந்தனர்.    

இது அத்தனையும் அர்ஜுன் கேட்டுக்  கொண்டிருந்தான்… ஆஷாவின் காதில் பேசியது மட்டும் கேட்கவில்லை, முகத்தில் விரிந்த புன்னகை! “என்ன இந்தப் பொண்ணு இவ்வளவு பேசறா.. நான் பி. எம் மா, ஹா ஹா.. அப்புறம் மாப்பிள்ளை இவர் தான். ஆனா இவர் போட்டிருக்குற டிரஸ் என்னதுன்னு பில்டிங் சொல்லுதா! ஹா! ஹா!”, என்று வாய் விட்டு சிரித்தான்.

நர்மதா பேசிய பேச்சுசிற்குக் கோபம் தான் வந்திருக்க வேண்டும், ஆனால் சிரிப்பு தான் வந்தது… அழாகன பெண், ஆனா நான் ஒன்னும் சைட் அடிக்கலை என்று இறுமாப்பு கொண்டவன்.. அவளின் பேச்சை ரசித்தான்.

லிப்ட் செல்லும் போது தான் கவனித்தான், அவளின் ஆர்டர் தன் கையில் இருந்ததை. அப்படியே முதல் தளத்தில் வெளியே வந்து படி மூலமாக விரைந்து கீழே இறங்கினான்.

“யார் அந்த ஹேன்ட்சம்?”, என்று அவளின் தோழி கேட்ட போதே வந்துவிட்டான். அதன் பிறகு அவள் சொன்ன பதில்கள் சிரிப்பு வராமல் இருக்க பெரும் பாடாகிப் போனது.

“கொஞ்சம் கூட பயமேயில்லாம எப்படி என்னை கிண்டல் பண்றா..?”, ஆனால் அந்த கிண்டல் அடுத்தவர்களை ரசிக்க வைக்கும் கிண்டல், கோபம் கொள்ள முடியவில்லை. 

தன்னை எப்படி தேடுகிறாள் என்று பார்ப்போம், அங்கேயே நின்றான்.  

சில நிமிடங்களில் அரக்கப் பறக்க விரைந்து வந்தாள்.. அப்படியே வெளியே ஓடப் போனாள், வீட்டினர் கிளம்பிவிட்டால்…… அர்ஜுனிடம் இருக்கிறதா அப்பாவிடம் இருக்கிறதா தெரியவில்லை.. முகம் முழுவது பதட்டத்துடன் வெளியே பார்க்க..

அவர்கள் வந்த ஆம்னி கிளம்பியிருக்க.. அவசரமாக அப்பாவிற்கு அழைக்க முற்பட்டாள்.

இது அத்தனையும் பார்த்துக் கொண்டுதானிருந்தான் அர்ஜுன்.. அவள் தொலைபேசி எடுக்கவும், “என்ன இன்னும் போகலையா?”, என்று முன் நின்றான்.

அவசரமாக அவனின் கைகளில் ஆர்டர் இருக்கிறதா என்று பார்க்க.. அவன் இரு கைகளையும் பேன்ட் பேக்கெட்டில் விட்டிருந்தான்…

இருந்த பதட்டத்தில், “என் ஆர்டர் இருக்கிறதா?”, என்று கேட்க வார்த்தை வரவில்லை. “கையை காட்டுங்க”, என்றாள்.

“எதுக்கு?”,

“என் ஆர்டர் இருக்கான்னு பார்க்கணும், இல்லை அப்பாக்கு போன் பண்ணனும்”, என்றாள் தவிப்பாக.

“ஏன்? கைல தான் வெச்சிருப்பேனா! வேற எங்கயும் இருக்காதா?”, என்றான். அப்போதும் அர்ஜுனின் குறிப்பு புரியவில்லை.  அங்கே எதிரில் நர்மதாவின் பார்வை வட்டத்தில் அவனின் ஷர்ட் ஜோபில் நீட்டிக் கொண்டு இருந்தது. ஆனால் அவளுக்கிருந்த பதட்டத்தில் தெரியவில்லை.   

“உங்ககிட்ட இருக்கா?”, என்றாள் பரபரப்பாக.

அதற்கு மேல் அவளைத் தவிக்க விட மனதில்லாமல்..  “எஸ்! விட்டுட்டுப் போயிட்ட!”, என்று அவனின் ஷர்ட் பேக்கெட்டில் நீட்டிக் கொண்டிருந்தை எடுத்துக் கொடுத்தான்.

“இங்க தான் இருந்ததா!”, என்று அசடு வழிந்தாள்.

“ம்ம்ம்ம்!”, என்று சிரிக்க…

“என்னடா இது அதிசயம் ஆஃபிசர் சிரிக்கிறான். இவ்வளவு நேரமா எங்களை அவ்வளவு திட்டிட்டு இப்போ சிரிக்கறான்! என்ன ஆச்சு?”,  என்று நர்மதா ஆராய்ச்சிப் பார்வை பார்க்க…

“பேச்செல்லாம் நல்லா பேசற! ஆனா இந்த சின்ன விஷயத்துக்கு ஏன் இவ்வளவு டென்ஷன்… எப்படியும் உன் மெயில்ல ஆர்டர் இருக்கும்! ஒரு பிரிண்ட் எடுத்தா வேலை முடிஞ்சது. எதுக்கும் பதட்டம் ஆகக்கூடாது! அதுவும் நம்ம ஃபீல்ட்க்கு ரொம்ப முக்கியம்! ஸ்டே கூல்!”, என்றான்.

 “ஆமாம்! எனக்கு இது ஏன் தோன்றாமல் போய் விட்டது”, என்ற ஆராய்ச்சியில் இறங்கினாள் நர்மதா. அதனால், “பேச்செல்லாம் நல்லா பேசற!”, என்ற அர்ஜுனின் வாக்கியத்தைக் கவனிக்க மறந்தாள்.

அந்த யோசனையில் இருக்க, “குடும்பத்தோட வந்து இறங்கி அனேகமா இந்த கன்சர்ன்லயே நீங்க மட்டும் தான் காமெடி பண்ணுனீங்க! இப்போ நீ அதை விட பண்ற… முன்னாடி இருக்குற ஒரு லெட்டர் கூட கண்ணுக்கு தெரியலை! ஓடு சீக்கிரம்!”, என்று அவன் சொல்ல…

“என்ன நாங்க காமெடி பண்ணினோமா? நீ என்ன குடும்பம் இல்லாம, காட்டுல இருக்குற செடில முளைச்சு வந்தியா, இல்லை மரத்துல முளைச்சு தொங்குனியா”, என்று வாய் வரை வந்த கேள்வியை, நேராமவதால் ஒதுக்கி தள்ளி, “இரு, இவனை அப்புறம் பார்த்துக்கலாம்”, என்று மனதில் நினைத்துக் கொண்டு…

       அவனிடம் வார்த்தையாடத் துடித்த நாவை அடக்கி ஓட யத்தனிக்க.

“இரு! இரு!”, என்று அவளை நிறுத்தியவன், ஒரு வார்த்தைக்கு சொன்னா ஓடுவியா.. போ! வேகமா, ஆனா ஓடாதா… சும்மாவே எல்லோரும் திரும்பிப் பார்க்குற மாதிரி இருக்க இன்னும் நீ ஓடினா அவ்வளவு தான்”, என்றான்..

அவன் என்ன சொல்கிறான் என்று கவனத்தில் பதிந்தாலும், கருத்து அதிகம் மனதை தொடவில்லை, அவளின் அவசரம் அவளுக்கு…  

“போக விடாம பேசிட்டு, போ! போன்னா”, என்று சொல்லிக் கொண்டே நர்மதா போக..

“என்ன இது நம்மளை காமெடி பீஸ் ஆக்கிடுவா போல.. பீ ஸ்ட்ராங் அர்ஜுன்”, என்று அவனுக்கு அவனே திட்டிக் கொண்டு அவனின் பிரிவு நோக்கி சென்றான், அதுவும் படியில்! ஆமாம்! லிஃப்டில் போகவேண்டும் என்று கூட தோன்றாமல் நர்மதாவை அசை போட்டபடி அவனின் கவனமே இல்லாமல் ஐந்து மாடி ஏறிச்சென்றான்.

 

Advertisement