காதல் நெஞ்சில் பூகம்பம்
“அப்பா அவளைப் பாக்க பாவமா இருக்கு பா”, என்றான் சரவணன்.
“இதுல நாம தலையிட முடியாது சரவணா. சில விசயங்கல்ல இருந்து ஒதுங்கி போறது தான் நமக்கு நல்லது”, என்றார் வெற்றிவேல்.
வைஷ்ணவியின் கதறல் அதிகமாக கேட்க ஒரு கான்ஸ்டபிள் தான் வந்து மூர்த்தியை தடுத்து நிறுத்தினார்.
“விடுங்க சார், இதுக்கு மேல அடிச்சா அந்த பொண்ணு செத்துரும்....
தார தப்பட்டை முழங்க, மாலை மற்றும் பூக்களின் வாசமும், ஊது பத்தியின் நறுமணமும் அந்த இடத்தை நிறைத்திருக்க பெண்கள் அனைவரும் குழுமி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள்.
மற்ற அனைவரின் முகமும் கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. வீட்டின் நடுக் கூடத்தில் கண்ணாடிப் பேழைக்குள் படுத்திருந்தாள் வைஷ்ணவி.
அவளுக்கு வயது இருபத்தி ஐந்து தான். சாகும் வயதா இது? அவளைப்...
“தேங்க்ஸ் மதி”, என்று அவன் கிசுகிசுப்பாக சொல்ல அவள் வெட்கத்தில் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
“நேரம் ஆச்சு வீட்டுக்கு போகலாமா?”, என்று கேட்டான் சரவணன்.
“குளிக்கணும், என்னவோ போல இருக்கு”
“வீட்ல போய் குளிச்சிக்கலாம். சேலையை எடுத்து கட்டு”, என்று சொல்ல எழுந்து கொண்டாள். அப்போதும் அவள் அவனை தயக்கமாக எறிட அவனோ சட்டமாக அமர்ந்து கொண்டு...
அத்தியாயம் 4
காதலில் விதி என்பது
உணர்வுகளைச் சுழற்றி அடிக்கும்
விளையாட்டாக திகழ்கிறது!!!
தனக்கு திருமணம் நடந்து விட்டது, தன்னை ஒருவன் மனைவியாக எண்ணிக் கொண்டு அவன் வாழ்க்கையை அடகு வைத்திருக்கிறான் என்றெல்லாம் அவள் மனதில் எழவே இல்லை. அவளை அன்போடும் பண்போடும் வளர்த்த பெற்றவர்களும் அவளுக்கு நினைவில் வரவில்லை. குட்டிமா, கண்ணு, செல்லம், வைஷு குட்டி என்ற அவர்களின்...
அத்தியாயம் 3
உந்தன் பிரிவைக் கூட விதி
என்னும் முகமூடியில்
மறைக்க முயல்கிறேன்!!!
“நீங்க பேசுறது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? உங்களுக்கு மட்டும் தான் ஆசை இருக்குமா? நான் என்ன உணர்வுகள் இல்லாத ஜடமா? இல்லை எனக்கும் என் புருசன்னு நினைப்பு இல்லாம போகுமா? சாயங்காலம் ஆறு மணிக்கு ஸ்கூல்ல இருந்து வந்து உங்க கிட்ட இருந்து...
கோவிலில் இருந்து பதினொரு மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வந்து விட்டார்கள். மதிய சாப்பாடு முடிந்ததும் களைப்பில் உறங்கிப் போனார்கள். மாலை நான்கு மணிக்கு “நான் வயலுக்கு போயிட்டு வரேன் மதி”, என்றான் சரவணன்.
“நானும் வறேனே பிளீஸ்”, என்று சொன்ன அவள் உதடுகளை பிடித்து இழுத்தவன் “நைட் எப்ப வரும்னு இருக்கு டி. இன்னைக்கு என்ன...
அத்தியாயம் 19
ஏமாற்றம் என்ற வலி
தருவதும் காதலே, வலிக்கு
மருந்திடுவதும் காதலே!!!
சரவணன் அங்கே வந்த போது தன்னையே மறந்து குளித்துக் கொண்டிருந்தாள் வெண்மதி. அவளைக் கண்டதும் இந்த உலகமே சரவணனுக்கு மறந்து போனது. மனைவியின் அந்த அழகில் கவரப் பட்டான் சரவணன்.
இங்கிருந்து போ டா என்று அவனது மூளை சொன்னாலும் அவள் எனக்கு சொந்தமானவள், அவளைப் பார்க்க...
மகள் முகத்தில் இருந்த உற்சாகம் உடனே வற்றி விட அதை எப்படி அந்த தாயால் காண முடியும்? “சும்மா சொன்னேன் டா? உன்னை மாப்பிளை கூட அனுப்ப தான் பலகாரம் எல்லாம் செஞ்சிட்டு இருக்கேன். இங்க பாரு”, என்று சொல்ல அவள் முகம் மலர்ந்தது.
“மாப்பிள்ளை கூட போறது சரி தான். ஆனா சீக்கிரம் எங்களை...
சிறிது தூரம் சென்றதும் “நைட் நல்லா தூங்குனியா மதி?”, என்று கேட்டான் சரவணன்.
“நீங்க பேசுற வரைக்கும் தூக்கம் வரலை. அப்புறம் நல்லா தூங்கினேன்”, என்று உண்மையை அவள் அப்படியே சொல்ல “எனக்கும் தான். ஆனால் காலைல நீ இல்லாம ரூம் நல்லாவே இல்லை”, என்றான்.
பள்ளி முன்பு வண்டியை நிறுத்தியவன் அவளைப் பார்த்தான். அவன் பின்னால்...
பஸ் எடுக்க இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்பதால் “நீங்க வேணா கிளம்புங்க. நான் போய்க்கிறேன்”, என்றாள்.
“சரி பாத்துப் போ”, என்று சொல்லி விட்டுச் சென்றான் நிர்மல். ஆனால் போகும் முன் அவளுடைய மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டு தான் சென்றான்.
சரியாக பஸ்ஸை எடுக்கப் போகும் போது தன்னுடைய கிளாஸ் முடிந்து சரவணனும்...
ஆனால் அதைக் கேட்டு சங்கடப் படுத்தக் கூடாது என்பதால் அதை அப்படியே விட்டுவிட்டு வேறு பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே வந்த வசந்தா “டேய் உன்னை உடனே வரச் சொன்னேன்ல? சரி சரி வா வயலுக்கு போயிட்டு வா”, என்று சொல்ல அவளிடம் கண்களால் விடை பெற்று விட்டுச் சென்றான் சரவணன்.
நேரம் ஆவதை உணர்ந்த...
அத்தியாயம் 5
ஆர்ப்பரித்து ஓடும் அருவியில் நின்று
கொண்டு தாகத்தில் தவிப்பது
காதலில் மட்டுமே சாத்தியம்!!!
“என் செல்லம்ல? இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ டா”, என்று கெஞ்சினாள் விசாலம்.
“சரி சரி எப்படியாவது வாங்கி வைக்கச் சொல்லு”, என்று சொன்ன வெண்மதி அரை மனதுடன் அந்த பிச்சிப் பூவை தலையில் சூடிக் கொண்டாள்.
அவன் பஸ் ஸ்டாண்டில் பஸ்க்காக நிற்கும்...
அத்தியாயம் 18
மீண்டு செல்ல வழி
இல்லாமல் சிறை பட்டு
விட்டேன் உந்தன் காதலால்!!!
எப்போதும் சரவணன் கிளம்பி வெளியே சென்ற பின்னர் தான் வெண்மதி உடை மாற்றுவாள் என்பதால் இன்றும் தன்னுடைய ஹேன்ட்பேகை வைத்து விட்டு சமையல் அறைக்குள் சென்று இருவருக்கும் காபியை டம்ப்ளரில் ஊற்றினாள். பின் இருவருக்கும் ஒரு தட்டில் வடையை எடுத்து வைத்தாள். அப்போது அவளை...
அவளுடைய நீண்ட பின்னலையும் அவள் தலையில் சூடி இருந்த மல்லிகையையும் பார்த்தவாறே சென்ற அந்த பயணம் அவனுக்கு அவ்வளவு இனிமையாக இருந்தது.
“உங்க ஹஸ்பண்ட் என்ன செய்றாங்க பூர்ணிமா?”, என்று வெண்மதி கேட்க அதற்கு பதில் சொன்ன பூர்ணிமா அவளை வா வென்று பேசி அவளையும் அப்படியே அழைக்கச் சொன்னாள். அதற்கு பிறகு பூர்ணிமா வெண்மதி...
அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவள் படுத்து விட அவன் மீண்டும் எழுந்து விளக்கை அணைத்து விட்டு படுத்துக் கொண்டான். அவனுக்கு தன்னைப் பிடித்திருக்கிறது என்றால் எதற்காக இந்த விலகல் என்று குழம்பிப் போனவளுக்கு அவனிடம் போர்வை கேட்க வேண்டும் என்றும் நினைவில் இல்லை. தன்னுடைய பேகில் இருந்து போர்வையை எடுக்க வேண்டும் என்றும்...
“இவ்வளவு பிளான் போட்டு கடத்தினவன் அவ்வளவு சீக்கிரம் நம்ம கிட்ட சிக்க மாட்டான் அண்ணா. நீங்க இங்க இருந்தாலும் வேஸ்ட் தான். இனி மதியை கவனமா பாத்துக்கோங்க. இப்ப எங்க கூட வாங்க”, என்று சொன்னான் சரவணன்.
அதற்கு மேல் மருது மறுக்காமல் அவர்களுடன் செல்ல இருவரையும் ஏற்றிக் கொண்டு ஆட்டோ டிரைவர் ஆட்டோவை எடுத்தார்....
அவன் சத்தத்தில் பதறி அடித்து எழுந்தவள் “ஐயோ இவ்வளவு நேரமா என்னை தூங்க விடுவீங்க? இன்னைக்கு பஸ்ஸை விட போறேன். நீங்க தான் என்னைக் கொண்டு போய் விடணும். சரி வாங்க அம்மா வீட்டுக்கு போய் குளிச்சு கிளம்பனும். டிரஸ் எல்லாம் இங்கயே கொண்டு வந்துரலாம்னு சொன்னா யாரும் கேக்க மாட்டுக்கீங்க?”, என்று புலம்பிய...
அறைக்குள் சென்ற வெண்மதியோ விம்மி விம்மி அழுதாள். அவர்கள் சொன்னது சரி தானே என்று தான் தோன்றியது. முதலில் நிர்மல் இறந்தது, அதற்கு பிறகு சரவணனுக்கு ஆக்ஸிடெண்ட் நடந்தது, அனைத்துக்கும் அவள் தான் காரணம் என்று முடிவு கட்டிக் கொண்டாள்.
ஆறுதல் சொல்ல யாருமில்லாத தனிமை ஒரு அழுத்ததைக் கொடுக்க அதை கண்ணீரால் கரைக்க முயன்றாள்....
அத்தியாயம் 17
பார்த்தவுடன் பற்றிக் கொள்வதும்
காதல் தான், பார்க்க முடியாமல்
தவிப்பதும் காதல் தான்!!!
மகள் மற்றும் மருமகன் முகத்தில் இருந்த குழப்பத்தைக் கண்ட குற்றாலம் “நாங்களே இன்னைக்கு வெண்மதியை இங்க கூட்டிட்டு வரணும்னு தான் நினைச்சோம் மாப்பிள்ளை. அதுக்குள்ள நீங்களே கூட்டிட்டு வந்துட்டீங்க? அவ மட்டும் இங்க இருக்கட்டும். நீங்க மட்டும் போய்ட்டு வாங்க”, என்று மீண்டும்...
அத்தியாயம் 10
உந்தன் வாசனை கூட
எந்தன் உயிரை உருக்குவதை
நீ அறிவாயோ?!!!
அவள் இன்று ஸ்பெஷலாக எந்த அலங்காரமும் செய்ய வில்லை தான். ஆனால் தான் ஓரளவுக்காவது பார்க்கும் படி இருக்கிறோமா என்று எண்ணி அடிக்கடி கண்ணாடியைப் பார்த்துக் கொண்டாள்.
“வெண்மதி போகலாமா? போய்ட்டு வந்து தான் மாவு அரைக்கணும். வா”, என்று விசாலம் அழைத்த பிறகு தான் கீழே...