Advertisement

“தேங்க்ஸ் மதி”, என்று அவன் கிசுகிசுப்பாக சொல்ல அவள் வெட்கத்தில் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

“நேரம் ஆச்சு வீட்டுக்கு போகலாமா?”, என்று கேட்டான் சரவணன். 

“குளிக்கணும், என்னவோ போல இருக்கு”

“வீட்ல போய் குளிச்சிக்கலாம். சேலையை எடுத்து கட்டு”, என்று சொல்ல எழுந்து கொண்டாள். அப்போதும் அவள் அவனை தயக்கமாக எறிட அவனோ சட்டமாக அமர்ந்து கொண்டு அவளைச் சீண்டினான். 

அதற்கு மேல் வேறு வழி இல்லாமல் அவன் முன்னிலையிலே ஏற்கனவே அணிந்திருந்த சேலையை எடுத்து கட்டிக் கொண்டு அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் கண்களில் இருந்த வேட்கையில் அவசரமாக வெளியே சென்று நின்று கொண்டாள்.

“ஹா ஹா, உசாரு டி நீ. உன்னை வீட்ல போய்க் கவனிச்சிக்கிறேன்”, என்று சொல்லி கொண்டே உடை மாற்றியவன் அந்த அறையின் விளக்கை அணைத்து அந்த அறையைப் பூட்டி வீட்டுக்கு அவளுடன் நடந்தான்.

இப்போது கொஞ்சம் இருட்டி இருந்தாலும் வெளிச்சம் இன்னும் மிச்சம் இருந்தது. ஈரத் தலையுடன் வீட்டுக்கு வந்த இருவரையும் வசந்தா கடிந்து கொள்ள மகனின் முகத்தில் இருந்த பூரிப்பைப் பார்த்த வெற்றிவேல் “பேசாம இரு டி, என்னைக்காவது தானே பிள்ளையை அவன் வயலுக்கு கூட்டிட்டு போறான். பேசிட்டு இருந்துருப்பாங்க. நேரம் ஆகிருக்கும். நீ உள்ள போய் தலையை உலத்துமா. சரவணா நீயும் போ பா”, என்று சொன்னார். அது தான் சாக்கென்று இருவரும் உள்ளே சென்று விட்டார்கள். 

அவர்கள் சென்றதும் “என்னங்க நீங்க, இருட்டுக்குள்ள பூச்சி ஏதாவது கிடக்குங்க”, என்று சொன்னாள் வசந்தா. 

“அடியே, உன் பயம் எனக்கு புரியுது டி. அதுக்குன்னு சின்னப் பிள்ளைங்க சந்தோசத்துல தலையிடுவியா?”

“அவங்க சந்தோசத்துல நான் எங்க தலையிட்டேன்”

“அறிவு கெட்டவன்னு சொன்னா மட்டும் கோபம் வருது. ஆனா நான் எதுக்கு சொல்றேன்னு தெரியலையா?”

“சரிங்க அறிவாளி. என்னைக்கு உங்களைக் கல்யாணம் பண்ணினேனோ அன்னைல இருந்தே என்னோட அறிவை உங்களுக்கு கடன் கொடுத்துட்டேன். அதனால நீங்களே என்ன விவரம்னு சொல்லிருங்க”

“சீக்கிரம் பேரன் பேத்தி வேணும்னா கம்முன்னு இரு. பிள்ளைகளை அவங்க போக்குல விடு”, என்று அவர் சொல்ல “நிஜமாவா சொல்றீங்க?”, என்று சந்தோஷமாக கேட்டாள் வசந்தா.

“ஆமா, ரொம்ப நாள் கழிச்சு சரவணன் முகம் தெளிவா இருக்கு. வெண்மதி முகமும் தான். பிள்ளைங்க வாழ ஆரம்பிச்சிட்டாங்க டி. அவங்களை அப்படியே விடு”

“சரிங்க, எனக்கு மட்டும் வேற என்ன வேணுமாம்?”, என்றாள் வசந்தா.

அறைக்குள் சென்ற வெண்மதி குளிப்பதற்காக மாற்றுடையை எடுக்க அவள் பின்னே வந்து இறுக்கி கட்டிக் கொண்டான் சரவணன். அவன் இதழ்களும் கரங்களும் அவள் மேனியில் இடம் மாற ஆரம்பிக்க “என்னங்க விடுங்க, குளிச்சிட்டு வரேன்”, என்றாள். 

“நைட் சாப்பாடுக்கு ரொம்ப நேரம் இருக்கு. அதனால மெல்ல குளிக்கலாம், அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான வேலை இருக்கு”, என்று சொன்னவன் அவளது ஈரக் கூந்தலை விலக்கி ஜாக்கெட் மறைக்காத அவள் வெற்று முதுகில் முத்தமிட்டான். 

அதற்கே அவள் உடல் சிலிர்க்க அவன் புறமாக திரும்பி அவனை அணைத்துக் கொண்டாள். குளிக்க வேண்டும் என்று சொன்னவள் அதை மறந்தே விட்டாள். இரவு ஒன்பது மணிக்கு சரவணனை போனில் அழைத்த வசந்தா “தம்பி, இட்லி அவிச்சு ஹாட் பாக்ஸ்ல வச்சிருக்கேன். தக்காளிச் சட்னி இருக்கு. உங்களுக்கு எப்ப பசிக்குதோ அப்ப சாப்பிடுங்க. எனக்கு இன்னைக்கு தூக்கம் வருது. நான் தூங்கப் போறேன்”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டாள்.

ஒருவருக்குள் மற்றவர் அடைக்கலமாகி இருக்க இரவு உணவையே மறந்தார்கள். விடியும் வரைக்குமே அவன் அவளை விலகவே விட வில்லை. விடியலில் தான் இருவரும் உறங்கினார்கள். முதலில் கண் விழித்த சரவணன் அவள் உதடுகளில் முத்தமிட “பல்லு கூட விளக்கலை”, என்றாள் வெண்மதி. 

“அதுக்கு அவசியமே இல்லை”, என்று சொன்னவன் மீண்டும் தன்னுடைய வேலையை ஆரம்பித்தான். 

இருவரும் குளித்து முடித்து கீழே வரும் போது காலை ஒன்பது மணி ஆகி இருந்தது. வசந்தா ஏதாவது கேட்பாளோ என்று வெண்மதிக்கு சங்கடமாக இருக்க அப்படி எதுவும் அங்கே நடக்க வில்லை. 

அன்றைய காலை உணவுக்கு வசந்தா இட்லி உப்மாவை அவர்களுக்கு பரிமாற “என்ன மா, இட்லி உப்மா செஞ்சிருக்க? அதுவும் காலையிலே?”, என்று கேட்டான் சரவணன்.

“நேத்து மிச்சமான இட்லியை வேற என்ன செய்றது?”, என்று சிரிப்புடன் வசந்தா கேட்க வெண்மதி வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டாள். சரவணன் அடுத்து எதுவும் பேசாமல் கப்சிப்பென்று அமர்ந்து உண்டான். அவனுக்குமே அன்னையை நிமிர்ந்து பார்க்க வெட்கமாக தான் இருந்தது. 

மகன் மற்றும் மருமகள் முகத்தில் இருந்த சந்தோஷமும் அவர்கள் கண்களால் பேசிக் கொள்வதும் அவர்களின் ரகசிய பாசையும் வசந்தாவுக்கு சந்தோசத்தையே கொடுத்தது. தங்களின் மகன் வாழ ஆரம்பித்து விட்டான் என்று எண்ணி சந்தோஷப் பட்டாள். 

சிறிது நேரத்தில் அங்கே வந்த பூர்ணிமா வெண்மதியின் கழுத்தில் இருந்த காயத்தைக் காட்டி “இது எப்ப டி வந்துச்சு? இதுக்கு யார் காரணம்?”, என்று சிறு சிரிப்புடன் அவளை கிண்டல் அடித்துக் கொண்டிருந்தாள்.

“ஏய் சும்மா இரு டி”, என்று சிணுங்கினாள் வெண்மதி.

“சும்மா விடுறதா? அது எப்படி சும்மா விட முடியும்? இது எப்ப எங்க நடந்துச்சுன்னு சொல்லு?”, என்று கேட்டாள் பூர்ணிமா.

“அது… அது வந்து..”, என்று அவள் திணற “சரி அதை விடு. நைட் ரெண்டு பேரும் சாப்பிடக் கூட இல்லையாம்? அந்த அளவுக்கு ரெண்டு பேரும் பிசியோ?”, என்று கேட்டாள் பூர்ணிமா.

“ஐயோ பிளீஸ் பூர்ணி, என்னை விட்டுடேன். எனக்கு வெக்கமா இருக்கு”, என்று சொல்லி தன்னுடைய கையால் முகத்தை மூடிக் கொண்டாள். 

“கண்டிப்பா விட மாட்டேன். நீ சொல்லியே ஆகணும். அப்ப தானே கிலுகிலுப்பா இருக்கும்?”

“இதெல்லாமா சொல்ல முடியும்? உன்னைக் கேட்டா நீ சொல்லுவியா?”

“ஓ சொல்லுவேனே?”

“கேக்க மாட்டேன்னு தைரியத்துல சொல்றியா? நீ கேட்டா நானும் கேப்பேன் டி”

“நான் சொல்றேன்னு தானே சொல்றேன்?”

“நீயும் சொல்ல வேண்டாம், நானும் சொல்ல வேண்டாம். ஆளை விடு பூர்ணி”

“அது எப்படி விடுறது? ஆமா நேத்து வயலுக்கு போனவ ரொம்ப நேரமா வீட்டுக்கு வரலை. ஏன்?”

“அது…. பம்ப் செட்ல குளிச்சிட்டு இருந்தேன். அதான் நேரம் ஆகிருச்சு. அங்க குளிக்க நல்லா இருந்துச்சு டி”, என்று பேச்சை மாற்ற ஆனால் பூர்ணிமாவோ “நீ மட்டும் குளிச்சியா? இல்லை ரெண்டு பேருமா?”, என்று கேட்டு அவளைத் திணறடித்தாள். பூர்ணிமாவின் கேள்விக் கணைகளில் இருந்து தப்பிப்பதற்குள் வெகுவாக திணறிப் போனாள் வெண்மதி.

அதே நேரம் சரவணனும் செந்திலிடம் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருந்தான். “டேய் மச்சான், நீயா டா இப்படி சிரிக்கிறது. எனக்கு ஆச்சர்யமா இருக்கு டா”, என்று செந்தில் கேலி செய்ய அழகாக வெட்கப் பட்டான் சரவணன். 

“ஐயோ என் மச்சான் வெக்கப் படுறது கூட அழகா இருக்கே? நேத்து மாதிரி இன்னைக்கு நைட்டும் பட்டினியா தான் கிடக்கப் போறீங்களா? இல்லை தெம்பா சாப்பிட்டு அப்புறமா….?”, என்று அவன் கேட்க வர அவன் வாயைப் பொத்தினான் சரவணன். ஆனாலும் செந்தில் அவனை அவ்வளவு எளிதாக விட வில்லை. அவனது கிண்டல் கேலியில் வெட்கப் பட்டுக் கொண்டிருந்தான் சரவணன். பெரியவர்களுக்கும் பிள்ளைகளின் சந்தோஷம் மனதை நிறைத்தது. 

அன்று மூர்த்தி அங்கே வந்திருந்தார். சிறிது நேரம் அமர்ந்து அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கண்ணில் சரவணனின் சந்தோஷம் பட்டது. மனதுக்குள் அவருக்கு அப்படி ஒரு நிம்மதி.

சரவணனை அப்படிக் கண்டு அவர் மனதிலும் சந்தோஷம் வந்திருந்தது. அவனைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த மூர்த்தி முதல் முறையாக வைஷ்ணவியின் புகைப்படத்தை கையில் எடுத்துக் கொண்டு கதறி அழுதார். தங்கையின் மகனுக்காக தன்னுடைய துக்கத்தை இத்தனை நாள் ஒத்தி வைத்தவருக்கு இன்று மகளை இழந்தது பூதாகரமாக தெரிந்தது. கணவனை சமாதானப் படுத்த கூட முடியாமல் மங்கையும் சேர்ந்து அழுதாள். இத்தகைய பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு அது தான் கதியோ என்னவோ?

இப்படியே நாட்கள் அனைவருக்கும் கடக்க பூர்ணிமாவுக்கு ஒன்பதாம் மாதம் ஆகி இருந்தது. அதனால் வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்திருந்தார்கள். 

செந்திலின் வீட்டில் வைத்து வளைகாப்பு நடத்தி பூர்ணிமா வீட்டுக்கு அழைத்து வருவது என்று ஏற்பாடு செய்யப் பட்டது. எல்லா வேலைகளையும் வெண்மதி மற்றும் சரவணன் தான் பார்த்து பார்த்துச் செய்தார்கள். 

காதல் வெடிக்கும்….. 

Advertisement