தேன் சிந்துதே வானம்
தேன் சிந்துதே வானம்
அத்தியாயம் 16
ஆருஷி காலையில் எழுந்தால்... மகனை கிளப்பி அவள் கிளம்பத்தான் நேரம் சரியாக இருக்கும். துர்கா காலை உணவு தயாராக வைத்திருப்பார். அதை மகனுக்கும் கொடுத்து அவளும் உண்டு பள்ளிக்கு சென்று மகனை விட்டுவிட்டு பிறகு அவளது கல்லூரிக்கு செல்வாள்.
மதியம் மகனை அழைத்துக் கொண்டு வந்து உண்ண வைத்து, அவளும் உண்டு...
திருமணமான புதிதில் ஆதவன் ஆருஷிக்கு வண்டி ஓட்ட சொல்லிக் கொடுத்தான். இத்தனைக்கும் அவர்கள் வீட்டில் இலக்கியா நன்றாக வண்டி ஓட்டுவாள்.
ஹனிமூன் தான் ஒருவாரம் சென்றார்களே... அப்போது சும்மா இருக்கும் நேரம், ஊர் சுற்றி பார்க்க செல்ல இருந்த இரண்டு சக்கர வாகனத்தை ஆதவன் மனைவிக்கு ஓட்ட சொல்லிக் கொடுத்தான்.
மனைவியை முன்னால் உட்கார வைத்து, அவன்...
தேன் சிந்துதே வானம்
அத்தியாயம் 15
வர்ஷா கணவனுடன் கைபேசியில் பேசி விட்டு வர... அவள் அம்மா என்னவாம் என்று கேட்க...
“அவங்க அண்ணனும் கிளம்பிட்டாரு போல.... அவங்க அண்ணி இங்க தான் இருக்காங்களாம். அதுதான் சொல்லிட்டு இருந்தாரு.” என்றவள்,
“பார்ப்போம் அவங்க அண்ணி எவ்வளவு நாள் இங்க தாக்கு பிடிக்கிறாங்கன்னு. இதுல அவங்க அண்ணி நான் கிளம்பும் போது,...
“நான் நினைச்சேன் ஆருஷி, இவ எல்லாம் ஒரு ஆளுன்னு நீ இவளை நினைச்சு வீட்டை விட்டு போனியான்னு.... ஆனா வர்ஷா சரியான விஷம் தான். அவ பண்றதை எல்லாம் பார்த்து எனக்கே எங்க ரெண்டு அப்பு அப்பிடுவோம்னு பயமா தான் இருக்கு.”
“அப்படி எல்லாம் எதுவும் பண்ணிடாதீங்க.” என்றவள்,
“அவ மட்டும் காரணம் இல்ல... நான்தான் சொன்னேனே......
தேன் சிந்துதே வானம்
அத்தியாயம் 14
பீர் குடித்தபடி சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு அறைக்கு வந்து விட்டனர். ஆண்கள் எல்லாம் ஒரு அறையிலும், பெண்கள் எல்லாம் ஒரு அறையிலும் படுத்து உறங்கினர்.
காலையிலும் மஞ்சுளாவும் வர்ஷாவும் ஆளுக்கு ஒருபுறம் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு தான் இருந்தனர்.
வர்ஷா மகனை வேறு யாரிடமும் கொடுக்கவில்லை. ஆனால் அவளும்...
அதுவரையில் அம்மாவை தேடாத தர்ஷன் அம்மாவை கேட்டு அழ... பிரமிளாவும், மஞ்சுளாவும் அவனைத் தூக்கிக் கொண்டு சென்று வேடிக்கை காட்டினர்.
இருட்டிய பிறகு தான் விஜயனும் வர்ஷாவும் வந்தனர்.
தர்ஷனை சமாளிக்க முடியாமல் தவித்ததில் கடுப்பாக இருந்த மஞ்சுளா...“யம்மா நீ என்ன ஹனிமூனுக்கா வந்த... நாங்க உன் பையனை பார்த்துகிட்டாலும், உன் பையன் என்ன பண்றான்னு கூடவா...
தேன் சிந்துதே வானம்
அத்தியாயம் 13
ஒரு வாரம் இருந்திருப்பாளா மாமியார் வீட்டில். அதற்குள் அங்கே என்னவோ இவள் மட்டுமே வெட்டி முறித்தது போல.... அவள் அம்மா வீட்டுக்கு வந்ததும் வர்ஷா படுத்துக் கொண்டாள்.
அவள் அம்மா வீட்டில் ஒரு வேலையும் பார்க்க மாட்டாள். வீட்டு வேலைக்கு எல்லாம் ஆள் இருக்கிறது தேவையும் இல்லைதான். ஆனால் குடிப்பது உண்பது...
“ஹாய் இலக்கியா எத்தனை மணிக்கு வீட்டுக்கு போனீங்க?”
“காலையில ஆறுமணிக்கு எல்லாம் வந்திட்டோம் மாமா.”
“ஓ அப்படியா...” என எதோ அதைக் கேட்கத்தான் அழைத்தது போலப் பேசியவன், “நேத்து ஆருஷிக்கு உங்க அப்பா நகை எல்லாம் கொண்டு வந்து கொடுத்தாரே.... இடம் வித்துடாரா என்ன?”
அந்தப் பக்கம் இலக்கியா பதில் சொல்ல தயங்க.... அதுவே ஆதவனுக்குச் சந்தேகத்தைக் கொடுக்க....
“நான்...
தேன் சிந்துதே வானம்
அத்தியாயம் 12
ஆருஷி மிகவும் உற்சாகமாக இருந்தாள். அவளே சென்று துர்காவிடம் எதாவது வேலை இருக்கிறதா என்று கேட்க.... மற்ற சம்பந்தி வீட்டினருக்கும் பிரியாணி, பழங்கள், இனிப்புகள் எல்லாம் கொடுத்து அனுப்ப வேண்டும் என்றார். ஆருஷி அவளே எல்லாம் தனித்தனியாக எடுத்து வைத்து அவர்கள் கிளம்பும் போது... அவளே பொறுப்பாக எல்லாம் எடுத்துக்...
முதலில் பெரியவர்கள் எல்லாம் எழுந்து ஒவ்வொருவராகக் குளித்து விட்டு வர... அடுத்து பிள்ளைகளை எழுப்பிக் கிளம்பச் செய்தனர்.
யஸ்வந்த் எழும்பியதும் ஆருஷி மகனை குளிக்க வைத்து அழைத்து வர... புது உடை உடுத்தி அவனுக்கு ஈஸ்வரும் துர்காவும் தீருநீறு வைத்து ஆசிர்வாதம் செய்தவர்கள், கையில் பத்தாயிரம் பணம் கொடுக்க... அத்தைமார்கள் இருவரும் அவனுக்கு என்று வாங்கி...
தேன் சிந்துதே வானம்
அத்தியாயம் 11
யஸ்வந்தும் தர்ஷனும் குட்டி பூச்சாண்டிகள் போல வெள்ளையாக உட்கார்ந்திருக்க... ஆருஷிக்கும் வர்ஷாவுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.
அம்மாவைப் பார்த்ததும் காலையில் வாங்கிய அடி தர்ஷனுக்கு நினைவு வர... அடிப்பதற்கு முன்பே அவன் உஷாராகிக் கத்தி அழ துவங்கி விட்டான். (இப்போ பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பெற்றோரை சமாளிப்பது எப்படின்னு வயித்துக்குள்ள...
இவனிடம் தான் அடி வாங்கினோம் என யஸ்வந்தும் நினைக்கவில்லை... இவனால் தான் அடி வாங்கினோம் என தர்ஷனும் நினைக்கவில்லை. அவர்கள் இருவரும் சேர்ந்து சந்தோஷமாகத் தான் விளையாடினர். அதுதான் குழந்தை மணம். குழந்தைகள் தேவையில்லாதது எல்லாம் நினைவு வைத்துக் கொள்வது இல்லை. பெரியவர்கள் தான் தேவை இல்லாத பகைமையை வளர்த்துக் கொள்வது.
ஈஸ்வர் வீட்டில் இல்லை....
தேன் சிந்துதே வானம்
அத்தியாயம் 10
“உனக்குத் தான் எந்தச் சூழ்நிலையும் சமாளிச்சு வர தெரியணும். இன்னைக்கு உனக்காக நான் பேசப் போய் விஜயன் என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பான். இல்லை மத்தவங்க தான் என்ன நினைச்சிருப்பாங்க.”
ஆருஷிக்கு அப்போது ஆதவன் சொன்னது பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால் மறுநாள் பட்டே புரிந்து கொண்டாள்.
மறுநாள் காலை பூரி என்பதால்... துர்கா...
“ஏன் டி தர்ஷன் யஸ்வந்தை அடிச்சதுக்கு நீ ஒன்னுமே சொல்லலை... உன் பையனை அடிச்சதும் மட்டும் தூக்கிட்டு வந்திட்ட....”
“என்னவோ இவனை நீதான் உங்க வீட்ல பார்த்துக்கிற மாதிரி சொல்ற... உங்க அம்மாகிட்ட விட்டுட்டு நீ ரெஸ்ட் தான் எடுப்ப.”
“வந்து அரை நாள் கூட ஆகலை. அதுக்குள்ள எவ்வளவு நாள்ன்னு கேட்கிற? உன் இஷ்ட்டத்துக்கு எல்லாம்...
தேன் சிந்துதே வானம்
அத்தியாயம் 9
வர்ஷாவின் வீட்டினருக்கு நேரில் சென்று பிறந்த நாளுக்கு சொல்லிவிட்டு, அப்படியே விஜயனின் பையனை பார்த்து விட்டு வரலாமே... என துர்கா சொல்ல.... ஆதவன் சரியாகப் பதில் சொல்லவில்லை.
“விஜயன் தான் இங்க வரானே... நான் அப்போ அவன் பையனை பார்த்துக்கிறேன். நீங்க வர்ஷா வீட்டுக்கு போன்ல சொல்லிக்கோங்க.” என்றான்.
பிரமிளா தினமுமே இரவு...
“நாம மட்டும் பேசிட்டு இருந்தா ஆருஷி எதாவது நினைக்கப் போறா... நான் போய் அவளைக் கூட்டிட்டு வரேன்.” என பிரமிளா சென்றாள்.
இரவு பதினோரு மணி ஆகி இருக்க... பிள்ளைகளைப் படுக்கப் போகச் சொல்லிவிட்டு, பிரமிளா ஆருஷியை அவர்கள் இருந்த அறைக்கு அழைத்து வந்தாள்.
யஸ்வந்த் அறைக்குள் வந்ததும் தந்தையிடம் தாவியவன், அடுத்த ஐந்து நிமிடத்தில் உறங்கிப்...
தேன் சிந்துதே வானம்
அத்தியாயம் 8
துர்கா பேரனின் பிறந்த நாளை சிறப்பாக எல்லோரையும் அழைத்துக் கொண்டாட நினைத்தார். அவர்கள் பக்க உறவினர்கள், அவன் பிறந்து இன்னும் பார்க்கவில்லையே... அதனால் எல்லோரையும் அழைத்து வீட்டிலேயே ஆள் வைத்து பிரயாணி போடலாம் எனப் பேசிக்கொண்டு இருந்தார்.
எல்லோரையும் அழைத்தால் ஆருஷியின் பெற்றோரையும் அழைக்க வேண்டும் தானே... அவர்களை மட்டும் விட்டால்...
ஈஸ்வர் சொன்னதும் மகனை கவனித்த துர்காவுக்கும் மனம் சங்கடமாக இருக்க... அவரே மகள்களுக்கு அழைத்தார். எப்போதுமே இருவருக்கும் சேர்த்து பேச வேண்டும் என்றால்... வாட்ஸ் அப்பில் வாய்ஸ் கால் தான் செய்வார். “ஏன் டி உங்க தம்பி வந்திருக்கான். உங்களுக்கு வர கூட முடியாதா?”
“ஏன் அவன் எங்களைப் பார்க்க வர வேண்டியது தான...“
“எவ்வளவு பிரச்சனைக்கு...
தேன் சிந்துதே வானம்
அத்தியாயம் 7
மாலை நண்பர்களைப் பார்க்க வெளியே சென்ற ஆதவன் இரவு தான் வீடு திரும்பினான். வெளியவே உண்டு விட்டேன் என்று சொல்லி நேராக அவன் அறைக்குச் சென்று விட்டான்.
ஆருஷி அதன் பிறகு தான் இரவு உணவு உண்டு மகனுடன் மாடிக்கு சென்றாள்.
ஆதவன் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து இருக்க... யஸ்வந்த தந்தையின் அருகே...
ஆதவனுக்குத் தெரியும், பேரனை பார்த்து விட்டால் அம்மாவால் விலகி இருக்க முடியாது என்று. அவன் காரில் இருந்த சாமான்களை எடுத்துக் கொண்டு வர... ஈஸ்வரும் அவனுக்கு உதவினார்.
ஆதவன் மாடியில் இருந்த அவர்கள் அறையில் சென்று சாமான்களை வைக்க...
“இப்பவாவது வந்தீங்களே... டிரஸ் இல்லாம எப்படிக் குளிக்கிறது?” என்று ஆருஷி கேட்க...
“நீ உன் மாமியார்கிட்ட இருந்து தப்பிக்க...