Wednesday, November 11, 2026

    Anithavin Appa 21 2

    0

    Anithavin Appa 21 1

    0

    Anithavin Appa 20 3

    0

    Anithavin Appa 20 2

    0

    Anithavin Appa 20 1

    0

    Anithavin Appa

    Anithavin Appa 19 2

    0
    அங்கே அனியோடு முன்னே சென்ற மீனா “அங்க அத்தை வீட்ல என்ன டி பண்ணி வச்ச? உங்க அப்பா கோபமா இருந்தாரு...” எனக் கேட்டதும், அனி அங்கே நடந்ததைச் சொல்லி விட்டாள். இந்த மாதிரி பேச்சுக்கள் மீனாவுக்குப் புதிது இல்லை.... எவ்வளவோ பேர் அனியின் அப்பாவை பற்றித் தெரிந்து கொள்ள... எப்படி எப்படியோ அவளிடமும் கேட்டு...

    Anithavin Appa 19 1

    0
    பகுதி – 19 வியாழக்கிழமை காலை ஐந்து மணிக்கே ஹரியின் குடும்பம் காரில் சென்னையை நோக்கி கிளம்பி விட்டனர். மீனா தான் ஹரி பக்கத்தில் உட்கார்ந்து இருந்தாள். அனி பின்னாடி நின்று கொண்டு இருவரிடம் பேசிக்கொண்டு வந்தாள். காலை உணவை வழியில் ஒரு ஹோட்டலில் முடித்துக்கொண்டனர். அதன் பிறகு அனி பின்னால் படுத்து உறங்கி விட.... காரில்...

    Anithavin Appa 18 2

    0
    “மீனா, உனக்குக் கொஞ்சம் நகை வாங்க ஹரி பணம் கொடுத்திருக்கான். நீயே வந்து செலக்ட் பண்றியா....” “இல்லை அத்தை நீங்களே வாங்கிடுங்க.” என்றவளுக்கு வைஷ்ணவியின் பெருந்தன்மையை நினைத்துக் கண்கள் கலங்கி விட்டது. அவள் கண் கலங்கியதை பார்த்து வைஷ்ணவி பயந்து விட்டார். “என்ன ஆச்சு மீனா ஏன் அழற?” “நீங்க எப்படி அத்தை இப்படி இருக்கீங்க? உங்களைப் பார்த்தா...

    Anithavin Appa 18 1

    0
    பகுதி – 18 மறுநாள் காலை ஹரி அவன் அறையில் இருந்து வந்த போது.... வைஷ்ணவி ஹரிணியுடன் செல்லில் பேசிக்கொண்டு இருந்தார். அவரிடம் இருந்து செல்லை பறித்து அவன் பேசினான். “ஹே வாலு... எப்படி இருக்க?” “எனக்கு என்ன நான் நல்லா தான் இருக்கேன்.” “இல்லையே... பதில் வேற மாதிரி வருமே.... சரி இப்ப அத்விக்கு லீவ் தான, நீ...

    Anithavin Appa 17 2

    0
    காற்றுப் பலமாக அடித்ததால் மின்சாரமும் போய்விட்டது. இவர்கள் வீட்டில் இன்வேர்டர் இருந்ததால்.... விளக்குகள் எரிந்தது. ஆனால் தெருவில் வெளிச்சமே இல்லாமல்.... இருட்டாக இருந்து. இதில் எப்படி மீனா நடந்து வர முடியும். அதற்கு மேல் ஹரி காத்திருக்க முடியாமல் மீனாவை தேடி பைக்கில் கிளம்பி விட்டான். மீனா பொருட்கள் வாங்கும் வரை ஒரு பிரச்சனையும் இல்லை.... அவள்...

    Anithavin Appa 17 1

    0
    பகுதி – 17 மறுநாள் காலை எழுந்த மீனாவுக்குத் தலை மட்டும் அல்ல மனமும் பாரமாக இருந்தது. இருந்தாலும் இன்றும் ஹரியை தொல்லை செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் எழுந்து வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். ஹரியும் இரவு வெகு நேரம் கழித்து உறங்கியதால்... காலை எழுந்துகொள்ளவில்லை.... அவனின் பக்கத்தில் படுத்து இருந்த அனியை சத்தம் வராமல் எழுப்பிப்...

    Anithavin Appa 16 3

    0
    “நான் ரொம்பச் சந்தோஷமா இருந்தேன். பிருந்தாவும் சந்தோஷமா இருந்தா... ஆனா நான் அவளை அவ்வளவா பிடிக்காம கல்யாணம் பண்ணிகிட்டேன்னு அவளுக்கு ஒரு நினைப்பு, அது அவ மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு... அதனால அடிக்கடி என்னை உங்களுக்குப் பிடிக்கும் தானேன்னு கேட்டுப்பா....” “உனக்கு என்ன டா குறை.... அழகா லட்சணமா இருக்க....” இப்படியெல்லாம் நான் சொன்னாலும்.... முழுசா...

    Anithavin Appa 16 2

    0
    “ஹே மீனா.... கூல். நான் சும்மா உன்னை வம்பிழுத்தேன்.” எனத் தோசையை எடுத்துக்கொண்டு திரும்பியவன், வெளியே வரை சென்று விட்டு மீண்டும் உள்ளே வந்து “அப்புறம் அந்த ஆகஷோட பேர் கூட இனி உன் வாயில் இருந்து வரக் கூடாது.” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டுச் சென்றான். மீனா சிறிது நேரம் அப்படியே திகைத்து போய் நின்று...

    Anithavin Appa 16 1

    0
    பகுதி – 16 ஹரியை திட்டும் மட்டும் திட்டிவிட்டு “நானும் அப்பாவும் கிளம்பி வரோம்.” எனச் சொல்லி வைஷ்ணவி போன்னை வைத்தார். டாக்டர் வந்து ஊசி போட்டு மருந்து மாத்திரை கொடுத்தவர் “சளி காய்ச்சல் தான், ரெண்டு நாள் காய்ச்சல் குறையலைன்னா வேற டெஸ்ட் எடுப்போம். இப்போதைக்கு நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க.” எனச் சொல்லிவிட்டு செல்ல.......

    Anithavin Appa 15 2

    0
    ஹரி புன்னகையுடன் வந்து சாப்பிட அமர்ந்தான். “நீயே சாப்பிடு...” எனத் தட்டை மகளிடம் கொடுத்துவிட்டு மீனா எழுந்து கொண்டாள். அடுத்து வந்த வாரம் முழுவதும் இப்படித்தான் சென்றது. ஹரி கிழக்கில் இருந்தால்.... மீனா மேற்கில் இருப்பாள். அந்த வார இறுதியில் நடந்த சதுரங்க போட்டிக்கு ஹரியும் அனியும் கிளம்ப… மீனா அவர்களுடன் வர மறுக்க.... ஹரி கோபமாக...

    Anithavin Appa 15 1

    0
    பகுதி – 15 அப்படி அவசரமா எங்க போறாங்க? என நினைத்தபடி உள்ளே வந்து கதவை அடைத்த மீனா, அறைக்குள் சென்று உடை மாற்றி விட்டு வந்து ஹால் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருந்தாள். அப்போதே நேரம் பத்து மணி... எப்போதும் வழக்கமாக உறங்கும் நேரம் என்பதால்... அவளுக்குத் தூக்கமாக வந்தது. ஹரி வரும் பொழுது...

    Anithavin Appa 14 2

    0
    “அங்க பாருங்க வயசானவங்க கூட எவ்வளவு ஆர்வமா வராங்க. இதெல்லாம் ஒரு ஸ்வீட் மெமொரீஸ் தான். மிஸ் பண்ணாதீங்க... வாங்க.” தீப்தி மீனாவை பிடித்து இழுக்க.... “ரொம்பப் பண்ணாம வாடா.... நாங்களும் தான் ஆடறோம்.” எனத் தேவ் ஹரியை அழைக்க.... “போங்க... போங்க...” என அனி அவர்களைத் தள்ளி விட... வேறு வழியில்லாமல் இருவரும் சென்றனர். நடுவில் பெரிய...

    Anithavin Appa 14 1

    0
    பகுதி – 14 ஹரி சென்ற பிறகு கூட மீனா யோசனையுடனே இருந்தாள். அந்தப் புகைப்படம் அவளுக்குத் தெள்ளத் தெளிவாக உண்மையைப் புரிய வைத்து விட்டது. அனிக்காக அவள் ஒன்றும் ஹரியை கவனிக்க வில்லை.... அவளுக்கே அவனைப் பிடித்திருக்கிறது. அதோடு அவனைக் கணவன் என்று தன் மனம் ஏற்றுக் கொண்டதும் விளங்கியது. அவளுக்கு அதில் ஒன்றும் வருத்தம்...

    Anithavin Appa 13 3

    0
    ஹரிணியும் விக்ரமும் வந்தால்.... விடுதியில் காலியாக இருக்கும் எதாவது ஒரு அறையில் தான் தங்குவார்கள். இதற்கு முன் ஹரியும் பிருந்தாவும் வந்த போது கூட அப்படித் தங்கியது உண்டு. அதனால் தான் வைஷ்ணவி கேட்டார். அனி ஏற்கனவே அறையில் இருந்த கட்டிலில் உறங்கி இருந்தாள். வைஷ்ணவியும் மீனாவும் அவளை நடுவில் விட்டு ஆளுக்கொரு பக்கம் படுத்துக்கொண்டனர். நடு...

    Anithavin Appa 13 2

    0
    மீனா திரும்பி பார்க்க அவன் அப்போதும் உறங்கி கொண்டு இருந்தான். பக்கத்தில் இருந்தவர் மீனாவிடம் என்னவென்று கேட்க.... “கால் மேல படுது.” என்றதும், அவர் பக்கத்தில் உறங்கி கொண்டு இருந்தவனை எழுப்பி “கால் அவங்க மேல படுதாங்க ஒழுங்கா உட்காருங்க.” என்றதும், அந்த ஆள் கண்டுகொள்ளாமல் மீண்டும் உறங்க ஆரம்பித்தான். அதற்குள் ஹரி எழுந்து வந்து...

    Anithavin Appa 13 1

    0
    பகுதி – 13 மீனாவுக்கு நாட்கள் வெகு அழகாகச் சென்றது. எல்லாவற்றையும் ரசித்து அனுபவித்தாள். இதற்கு முன் வாழ்க்கையே போராட்டமாகத் தான் அவளுக்கு இருந்திருக்கிறது. அனியை நல்லபடியாக ஆளாக்கி விட வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஓடிக்கொண்டே இருந்தாள். இதில் பெரிதாக எதையும் அனுபவிக்கோ , நின்று ரசிக்கவோ அவளுக்கு நேரம் இருந்தது இல்லை. இப்போது...

    Anithavin Appa 12 2

    0
    மாலை நான்கு மணிக்கே பெயிண்ட் அடிக்கும் வேலை முடிந்து விட்டது. ஐந்து மணி போல் காரில் கடைக்குக் கிளம்பினார்கள். மீனாவும் வைஷ்ணவியும் வருவதற்குள் ஹரியும் அணியும் சென்று காரில் ஏறி விட்டனர். மகளை முன்புறம் தன் பக்கத்து இருக்கையில் உட்கார வைத்து ஹரி சீட் பெல்ட் போட்டு விட்டிருந்தான். வைஷ்ணவி எங்கே மீனாவை அவன் பக்கத்தில்...

    Anithavin Appa 12 1

    0
    பகுதி – 12 மறுநாள் காலை வைஷ்ணவி அவர் அறையில் இருந்து வெளியே வந்து போது வீடு அமைதியாக இருந்தது. இன்னும் யாரும் எழுந்துகொள்ள வில்லைப் போல் என நினைத்தவர், சமையல் அறைக்குச் சென்று சத்தம் வராமல் மெதுவாக வேலைப் பார்த்துக்கொண்டு இருந்தார். எதோ சத்தம் கேட்க கண்விழித்த ஹரி, தன் அருகில் படுத்திருந்த அனியை காணாது...

    Anithavin Appa 11 3

    0
    “தெரியலை.... அதை ஹரிகிட்ட தான் கேட்கணும். நீயே அவன் வந்ததும் கேளு...” என்றதும், மீனாவின் முகம் போன போக்கை பார்த்து வைஷ்ணவிக்கு மேலும் சிரிப்பு வந்தது. அவர் சிரித்தபடி சமையல் அறைக்குச் செல்ல.... மீனாவும் அவருடன் சென்றாள். அன்று இரவே வெங்கட் ஊட்டிக்குக் கிளம்புவதாக இருந்தது. அதனால் அவருக்கு வைஷ்ணவி உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்த...

    Anithavin Appa 11 2

    0
    ஹரியின் மடியில் இருந்த அனிக்கு மீனா உணவை அள்ளி கொடுக்க.... அனியும் சாப்பிட்டாள். “சீக்கிரம் சாப்பிடு அப்பாவுக்குப் பசிக்கும்.” என்றதும், திரும்பி ஹரியை ஒரு பார்வை பார்த்தவள், அதன்பிறகு உணவையும் வேகமாக உண்டு முடித்தாள். மீனா மகளைத் தூக்கி சென்று வாய் கழுவி குடிக்க நீர் கொடுத்து. உள்ளே அறையில் சென்று படுக்க வைத்து விட்டு வந்த...
    error: Content is protected !!