கல்வடியும் பூக்கள்
வெளியே சென்றிருந்த ராகவேந்திரன் இல்லம் வந்து சேர, பேச்சு சத்தம் பலமாய் கேட்டது. அதிலும் திவாகரின் குரலை கேட்டதும் யார் வந்திருக்கிறார்கள் என்பது யூகித்து கொண்டவர். சத்தமில்லாமல் உள்ளே வந்தார்.
'ஆஹா ஓஹோ' என்று புகழ்ந்தபடி உணவை ரசித்து ருசித்துக்கொண்டிருந்தான் திவாகர். காரணத்தை அறிந்து கொண்டதும் கிடைத்த சந்தர்ப்பத்தில் அபிராமியை சமாதானம் செய்திருந்தான்.
"இன்னும் கொஞ்சம் சாம்பார்...
பொள்ளாச்சி வந்து இறங்கியதும் ஜீவாவிற்கு அழைப்பு விடுத்தான் திவாகர். காலைநேர வெயிலே பிற்பகலில் சுட்டெரிக்கும் சூரியனை போல பிடரியில் அடித்து ஓடி ஒழிய வைத்தாலும் வெயிலோடு சேர்ந்து தென்றல் காற்றும் இயைந்து சற்று குளுமை தர சிலிர்த்து அடங்கியது அவன் உடல்.
"ஜீவா போனை எடுக்கலை நீங்க இங்கயே இருங்க ஆட்டோ பிடிச்சிட்டு வறேன்" என்று...
திருமணத்திற்கு இன்னும் இரண்டே நாள் தான் இருந்தது ஆடம்பரம் எதையும் அரகேற்றம் செய்யாமல் சுற்றம் மட்டும் அழைத்து நிச்சயம் திருமணம் இரண்டையும் முடித்து கொள்ளலாம் என்று கராறாய் ஜீவானந்தம் கூறியிருந்த காரணத்தினால் சிவநேசன் குடும்பத்தினரும் வேறு வழியில்லாமல் அதையே ஆமோதித்திருந்தனர்.
மாங்கல்யம் எடுக்கும் நாளிலிலேயே திருமணத்திற்கான புடவை நகையை வாங்கி கொள்ளலாம் என்று அபிராமி கூறியிருக்க,...
மனமும் உடலும் தளர்ந்திட, கட்டிலில் தொப்பென அமர்ந்தவளுக்கு வெளியே காட்ட முடியாத கோபம் அழுகை இயலாமை. இத்தனை நேரம் தம் கட்டி பேசியதற்கு சற்றும் பலனில்லாமல் போனதே என்று எண்ணும் போது அவளுள் தோன்றிய வலிக்கு வரையறை இல்லை. சொல்லி ஆறுதல் அடைய தாயின் மடியை தேடியது அவள் மனம். கோபத்தை சுமந்து கொண்டு...
காலையில் கௌரியிடம் வாங்கிய மண்டகபடியில் இன்னும் கோபம் அடங்கவில்லை அவளுக்கு. கௌரியை கூட மன்னித்து விடலாம் ஆனால் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கணவனை தான் மன்னிக்க மனம் வரவில்லை காயத்ரிக்கு. திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் கழிந்து விட்டது எத்தனையோ மாற்றங்கள் எதிர்பார்ப்புகள் நிராசைகள் என அனைத்தையும் கடந்து அதை ஏற்று கொண்டவளுக்கு...
வெளிச்சம் பட்டு கரையும் பனியை போல அவள் பேசுவதை ரசனையோடு பார்த்தவன் இதழ் விரியா சிரிப்புடன் "கோவில்ல வச்சு சொல்றேன் நிச்சயம் நாம ரெண்டுபேரும் சந்தோஷமா வாழ்வோம் திவ்யா.இப்போ உன்னோட மனசுல என்ன இருந்தாலும் சரி கூடிய சீக்கிரமே அந்த நினைப்பு உன்னை விட்டு போகும்" என்று அறுதியிட்டு உரைத்தான் ஆடவன்.
பதில் மட்டுமல்ல அவனின்...
நால்வரும் காரில் ஏறி கொள்ள அலைபேசியில் வந்த ஆறு இலக்க எண்ணை கூறியதும் வாகனம் கிளம்பியது.
கரூரில் இருந்து மூன்று மணி நேர பயணத்தில் கோவிலை வந்தடைய, கோவில் வாசலிலேயே அவர்களின் வரவுக்காக காத்திருந்தார் சிவநேசன். காரில் இருந்து இறங்கிய ஜெயசித்ராவை கண்டு வேகமாக அருகில் வந்தவர்,
"சீக்கிரம் வாங்க நமக்காக தான் காத்திட்டு இருக்காங்க" என்று...
பொழுது புலரும் முன்பு நேசமணியை அழைத்து கொண்டு சிவநேசன் ஜாதகம் பார்க்க சென்றிருக்க அங்கே ஜோதிடர் கூறிய செய்தியை ஜீவாவின் வீட்டில் தெரிவித்ததும் கோவிலில் வைத்து மற்றதை பேசி கொள்ளலாம் என்று ராகவேந்திரன் கூறிட,
மாப்பிள்ளை வீட்டில் கூறியதை அம்பிகாவிடம் சொல்லி அனைவரும் கிளம்பி இருக்குமாறு சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார் சிவநேசன்.
செய்தி வந்ததும் திவ்யா கவி...
அந்தி சாயும் வேளை மேற்கே வானம் அந்தகாரம் பூச தொடங்கியிருந்தது. உதிக்கும் ஆதவன் அழகென்றால் மறையும் சூரியன் அழகினும் அழகு. மாடியில் நின்று மாலை நேர மாருதத்தின் இதத்தை உள்வாங்கியபடி இயற்கையின் அழகை ரசித்து கொண்டிருந்தான் ஜீவானந்தம். அன்றைய நாளின் நிகழ்வுகளை அசைபோட்ட உள்ளம் திடீரென திவாகரின் நினைவை எழுப்ப, எண்களை தடவி காதில்...
பெண் வீட்டில் அடக்கி வைத்த கோபத்தை எல்லாம், இல்லம் வந்ததும் கணவரிடம் காட்டி கொண்டிருந்தார் அபிராமி. திமிராக சவால் விட்டு சென்ற கௌரியை நினைக்க நினைக்க மனம் பற்றி கொண்டு வந்தது அவருக்கு. அமர்வதும் பின் எழுவதுமாய் தன் கோபத்தை வெளிப்படுத்த,
"எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற நீ டென்ஷன் ஆகிற அளவுக்கு இங்க ஒன்னும்...
"ஏம்மா ஜெயா வந்தவங்களுக்கு எதுவும் குடிக்க சாப்ட கொடுத்தியா?" என்று நேசமணி கேட்க,
"இதோ" என்று அம்பிகா நகர்ந்து செல்ல,
"அதெல்லாம் இருக்கட்டும் முதல திவ்யாவை வர சொல்லுங்க அதுக்கு தானே வந்துருக்கோம்" என்று உபசரிப்பை ஒத்தி வைத்தார் அபிராமி.
அம்பிகா பார்வையை கணவனின் புறம் திருப்ப, இரு என்று பார்வை காட்டியவர் "ஜெயா போய் திவிய கூட்டிட்டு...
"எல்லாம் சரி தான் இதையே மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க கிட்ட சொல்ல முடியுமா? சொன்னா நம்மள பத்தி என்ன நினைப்பாங்க. எந்த இடத்துல எப்டி இருக்கணும்னு ஒரு வரைமுறை இருக்கு திவ்யா. மிஞ்சி போனா ரெண்டு மணி நேரம் தானே? அவங்க பாத்துட்டு போற வரைக்கும் அத்தை கொடுத்த புடவைய கட்டி நகைய போட்டுக்கோ...
அதிகாலை உறக்கம் கலைந்து எழுந்தவளின் நினைவில் பெண் பார்க்கும் படலமே ஊஞ்சலாடியது. ஒரு பக்கம் சோர்வு அவளை அவதிபடுத்த, அதை வீழ்த்தும் விதமாய் கவியின் தெம்பூட்டிய பேச்சு சற்று தெளிவையும் நம்பிக்கையையும் அளித்தது. படுக்கையை விட்டு எழுந்தவள் செய்ய வேண்டிய கடமைகளை செய்துவிட்டு முகம் துடைத்தவாறே வெளியே வர,
"இந்தா கண்ணு காஃபி" என்று புன்னகையை...
" உங்களுக்கு புத்தி எதுவும் கெட்டு போச்சா இல்லை என்ன பேசுறோம்னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா?, அந்த குடும்பத்து ஆளுங்களோட நிழல் கூட என் பையன் மேல பட கூடாது படவும் விடமாட்டேன். நாம பொண்ணு பாத்திருக்கிற விஷயம் தெரிஞ்சாலும் அவங்களால என்ன செய்ய முடியும்?.
என்னைக்கு நம்ம ரெண்டுபேரையும் அப்பா அம்மாவா ஏத்துகிட்டேனோ அன்னைக்கே...
பார்வையில் இருந்த பரிகாசம் திவாகரை ஏதோ செய்ய, சட்டையில் பற்றியிருந்த கையை தளர்த்திட்டவன் கோபம் குறையாமல் எதிரில் அமர்ந்திருந்தவனை முறைத்து பார்த்தான்.
கசங்கிய சட்டையை சீர்படுத்தியவாறே "ஒப்புக்கு சொன்னதுக்கே உனக்கு இவ்ளோ கோபம் வருதே நேர்ல பாத்த எனக்கு எப்டி இருக்கும் அதுவும் என்ன மாதிரி எப்டியெல்லாம் அந்த பொண்ணுகிட்ட பேசினான் தெரியுமா அதை நீயும்...
சென்னையில் சிறந்த கல்வியை வழங்கும் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில், இடம் பெற்றிருக்கும் பிரபலமான கல்லூரிகளில் அதுவும் ஒன்று.
அன்றைய காலை வேலையே கலவரத்துடன் தான் தொடங்கியது. வேதியியல் துறையிலில் எழுந்த கூச்சல் சத்தம் கல்லூரி முதல்வர் அறை வரை கேட்டு, என்னவோ ஏதோ என்று கிளம்பி வர, துறை தலைவரின் சட்டையை கொத்தாக பற்றி கன்னத்தில்...
மங்களகரமான மஞ்சளுக்கு பிரசித்தி பெற்ற ஈரோட்டில் மாதம் ஒருமுறை நடைபெறும் விவசாய கருத்தரங்க நிகழ்வை கேட்டு கொண்டிருந்தனர் சிவநேசனும் நேசமணியும்.
விளைச்சலுக்கு ஏற்ற விலையை அரசாங்கம் தர வேண்டும். உரிய மானியம் தர வழிவகை செய்ய வேண்டும் ஏதேனும் நோய் தாக்கினால் அதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் சங்க தலைவர் எழுச்சியுடன்...
சித்திரை வெயிலின் தாக்கம் மனிதர்களை மட்டுமல்லாது செடி கொடிகளையும் வாடி வதங்க செய்ய, வியர்வை வழிய கல்லூரியை வலம் வந்த வளர்மதி வகுப்பறைக்குள் நுழைய முற்பட்ட மாணவியை அழைத்தாள்.
"திவ்யா மேமை எங்கயாவது பாத்தியா?" என்று கேட்க,
"ஆமா மேம் ஆடிட்டோரியம் பக்கத்துல தனியா உக்காந்துட்டு இருந்தாங்க"என்றதும்,
"தனியாவா?" என்று யோசனை செய்தவாறே வார்த்தைகளை இழுத்தவள், "சரி நீ...
"அத்தையும் அம்மாவும் உன்கிட்ட சொல்லிருப்பாங்களே ம்மா தெரியாத மாதிரி கேட்கிற. நல்ல இடம் குணமான பையன் சென்னையில காலேஜ்ல வேலை பாக்கிறான் வர்ற வெள்ளிக்கிழமை வறேன்னு சொல்றாங்க நீ என்னமா சொல்ற?" என்று கேட்டு, மகளின் முகத்தை ஆவலோடு பார்த்தார் சிவநேசன்.
பேச்சை முடித்து கொள்ளும் விதமாக உண்டு முடித்தவள் கை கழுவி எழுந்திட,
"உன்கிட்ட தான்...
சித்ரா பௌர்ணமி, அழகாய் வானத்தில் நிலவு இடம் பெற்றிருந்தது. ஊரடங்கிய நிசப்தத்தில் பண்பலையின் இசை, காற்றில் மெல்ல கலந்து இரவின் அமைதியை மெருகூட்ட,
"வானும் மண்ணும் நம்மை வாழ சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லையே என்றென்றும் வானில்.."
மிதந்து வந்த இசையை முணுமுணுத்தவாறே அருகே இருந்த தாமரை குளத்தில் நிலவின் பிம்பத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தாள் திவ்யபாரதி.
குளத்தில்...