Advertisement

பார்வையில் இருந்த பரிகாசம் திவாகரை ஏதோ செய்ய, சட்டையில் பற்றியிருந்த கையை தளர்த்திட்டவன் கோபம் குறையாமல் எதிரில் அமர்ந்திருந்தவனை முறைத்து பார்த்தான்.

கசங்கிய சட்டையை சீர்படுத்தியவாறேஒப்புக்கு சொன்னதுக்கே உனக்கு  இவ்ளோ கோபம் வருதே நேர்ல பாத்த எனக்கு எப்டி இருக்கும் அதுவும் என்ன மாதிரி எப்டியெல்லாம் அந்த பொண்ணுகிட்ட பேசினான் தெரியுமா அதை நீயும் கேட்டுருந்தா இவ்ளோ ரிலாக்ஸா இருக்க மாட்ட

அந்த ஆளோட வயசு என்ன? வயசுக்கேத்த வேலையா அதுடவுட் கேட்க வந்த பொண்ணுகிட்ட தப்பா பிகேவ் பண்ணுவான் பாத்துட்டு பாக்காத மாதிரி போகணும் அப்டி தானே?”.

நா அமைதியா போக சொல்லலை பொறுமையா போக சொல்றேன்என்றான் திவாகர்.

வேறு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்துவிடுமோ என்ற பயம் அவனுக்கு அதுவும் குணசீலன் அரசியல் பின்னணி கொண்டவர் என்று அறிந்ததில் இருந்து அவரிடத்தில் அவ்வளாய் பேச்சு வைத்து கொள்ள மாட்டான் திவாகர்.

ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் திவா? அமைதியும் பொறுமையும் அந்த பொண்ணோட உயிர் போச்சுன்னு ஆறுதல் சொல்ல வருமா?” என்று ஆவேசமாக கேட்டான் ஜீவானந்தம்.

அதான் எந்த அசம்பாவிதமும் நடக்காம அந்த பொண்ணை காப்பாத்திட்டியே அப்றம் எதுக்கு இவ்ளோ கோபம். சேர்மன்கிட்ட சொல்லியாச்சு இனி அவர் பாத்துப்பார் நீ ரிலாக்ஸா இருடா பயமா இருக்கு உன்னோட கோபமே உனக்கு தேவையில்லாத சிக்கலை உண்டு பண்ணிருமோன்னுஎன்று கவலை இழையோட பேசியவன் அவன் கோபத்தை தணிக்கும் முயற்சியில் இறங்கினான்

சரி எப்ப ஊருக்கு கிளம்புற பொண்ணு பாத்துருக்காங்கன்னு சொன்ன பொண்ணு உனக்கு ஓகே தானே அங்க போயிட்டு அது சரியில்லை இது சரியில்லைன்னு கிளாஸ் எடுத்துட்டு இருக்காத சைடு கேப்ல என்சிசி மாஸ்டர்ன்னு நிரூபிக்காதஎன்று வேடிக்கையாய் பேச,

கோபம் தணிந்து மெலிதான புன்னகை குடியேறியது அவன் வதனத்தில்

அதெல்லாம் எனக்கு தெரியும் நைட்டு கிளம்புறேன் ஓகே ஆனதும் தகவல் சொல்றேன் உடனே கிளம்பி வந்துடுஎன்று மிரட்டும் தோரணையில் சொன்னான் ஜீவானந்தம்.

நா இல்லாம கல்யாணம் நடந்திடுமா என்ன? துணை மாப்பிள்ளையே நான் தானேஎன்றவன்பொண்ணோட பேர் என்னனு சொன்ன திவியபாரதியா?” என்று சந்தேகமாய் கேட்க,

திவிய இல்லை திவ்யபாரதிஎன்றான் மீசைக்கடியில் மிளிர்ந்த புன்னகையுடன்.

அடிக்கொரு முறை மீசையை முறுக்கி நீவி கொண்டவன் அவள் பெயரை மனதில் உறுபோட்டு வெட்கம் கொள்ள, அவன் செயலை புருவம் நெறிக்க பார்த்து கொண்டிருந்த திவாகருக்க சிரிப்பெழுந்தது.

டேய் உனக்கு வெட்கப்பட தெரியுமா? அய்யோ கல்வெட்டுல பொறிக்கபட வேண்டிய விஷயமாச்சே நா கல்வெட்டுக்கு எங்க போவேன்என்று கேலி செய்ய,

ம்ப்ச் போடா எந்த நேரத்துல கேலி பேசனும்னு தெரியாமஎன்று சிரிப்பை உதிர்த்து அலுத்து கொள்ள,

ரொம்ப சந்தோஷமா இருக்க போல“, வன்மத்தின் படிமம் நிறைந்த குரல் கேட்டு பின்னால் திரும்பி பார்த்தான் ஜீவானந்தம்.

ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட நிச்சயம் நீ பண்ண காரியத்துக்கு சன்மானம் ரொம்ப சீக்கிரத்திலேயே கிடைக்கும் ஜீவாந்தனம். என்னை அடிச்சு அவமானபடுத்துனதை என்னைக்கும் மறக்க மாட்டேன்என்று அடிவாங்கிய கன்னத்தை தடவியவர்,

சஸ்பெண்ட் தான் பண்ணிருகாங்க ஒரு மாசம் எப்டியெல்லாம் இருக்கணும் நினைக்கிறயோ இருந்துக்கோஎன்றவரின் முகம் குரூரம் நிறைந்த உணர்வை பிரதிபலித்தது.

நீ பண்ண அயோக்கிய தனத்துக்கு உன்னை உயிரோட விடுறேனேன்னு சந்தோஷப்பட்டுக்கோ எப்பவும் இதே போல இருக்க மாட்டேன் குணசீலன். இத்தனை நாள் வயசுக்கு மரியாதை கொடுத்தேன் இனிமே அதுவும் இல்லை இப்போ தப்பிச்சிட்ட அடுத்த முறை மிஸ் ஆக மாட்டஎன்று பல்லை கடித்தபடி ஓர் அடி முன்னால் எடுத்து வைத்து எச்சரிக்க,

அதையும் தான் பாப்போம்என்று குணசீலன் சவால் விட்டு பேச,

போங்க சார் வீணா பிரச்சனை பண்ணாதீங்கஎன்று இடை புகுந்தான் திவாகர்.

நேத்து பேஞ்ச மழையில முளைச்ச காளான் எல்லாம் சமாதானம் பேசுது உனக்கும் இருக்குஎன்று ஏளனமாய் பேசியவர் முறைத்து பார்த்தபடியே வேகமாக சென்றுவிட்டார் குணசீலன்.

தவறுகள் திருத்தப்பட வேண்டும் அல்லது திருத்தி அமைக்கப்பட வேண்டும். குற்றவுணர்ச்சி ஏதுமில்லாமல் சாதாரணமாக பேசிவிட்டு சென்ற குணசீலனை நினைக்க நினைக்க பற்றி கொண்டு வந்தது ஜீவாவிற்கு. . குணசீலனின் உருவம் மறையும் வரை ரௌத்திரத்துடன் பார்த்து கொண்டிருந்தவனின் தோள் மீது கைவைத்து கவனத்தை கலைத்தான் திவாகர்

அந்த ஆளை முறைச்சு பாத்தது போதும் கிளாசுக்கு போலாம் டைம் ஆச்சுஎன்று கடமையை நினைவுபடுத்த

நல்லவேளை ஞாபகப்படுத்தின நிறைய வேலை இருக்குஎன்று நண்பனை அழைத்து கொண்டு வேதியியல் துறை நோக்கி செல்ல, அன்றைய நாளின் கடமையும் நேரமும், பாடம் எடுப்பதிலும் ஆய்வறையில் மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பதிலுமாய் ஜீவாவை மொத்தமாய் இழுத்து கொண்டது.

நாள் முழுதும் யோசனை தான் வேறு எதிலும் நாட்டம் செல்லவில்லை திவ்யபாரதிக்கு. விடுப்பு எடுத்து கொண்டு வீட்டிலேயே இருந்து கொண்டாள் ஊன் உறக்கம் எதுவும் நினைவில் எட்டவில்லை. சாப்பிட அழைத்தற்கும் வேண்டாம் மறுத்து ஒதுங்கி கொண்டாள்.

அடுத்த நாளுக்கான ஏற்பாடுகளை பற்றி ஜெயசித்ராவும் சிவநேசனும் தீவிரமாக பேசி கொண்டிருக்க

இரவு நேர உணவை தயார் செய்து கொண்டே பேசுவதை கேட்டு கொண்டிருந்தார் அம்பிகா. மகளின் வாழ்வை பற்றி சிறு கலக்கம் மனதில் தோன்றினாலும் அதை யாரிடமும் சொல்லி கொள்ளவில்லை, சொன்னால் என்ன மாதிரியாக எடுத்து கொள்வார்களோ என்ற பயத்தில் எல்லாம் சரியாகும் சமாளித்து விடுவாள் என்று தன்னை தானே தேற்றி கொண்டு நடப்பதை மட்டும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.

மாப்பிள்ளை வீட்டு சைடுல இருந்து அஞ்சாறு பேர் தான் வருவாங்க அத்துக்கேத்த மாதிரி ஏற்பாடு பண்ணிக்கலாங்க ண்ணாஎன்று சொல்ல,

நீ சொன்னா சரியா தான் இருக்கும் அப்டியே பண்ணிறலாம் கண்ணுஎன்று சிவநேசன் தலையாட்ட,

வியப்பு மேலோங்க மனைவியின் பார்த்து கொண்டிருந்த நேசமணிபார்த்தி போன பிறகு நீ இவ்ளோ பரபரப்பா இருந்து பாத்ததேயில்லை ஜெயா இப்போ தான் உன்னோட இயலப்பான குணம் எட்டிப்பாக்குதுஎன்றார் நிர்மலம் நிறைந்த மனதுடன்.

அதுவரை ஜெயசித்ராவிடம் இருந்த பரபரப்பு சட்டென மறைந்து போனது. சில நொடி அமைதி மூவரையும் அவன் நினைவில் அலைகழித்திட

மெல்ல தன்னை மீட்டு கொண்ட சிவநேசன்பழைய விஷயங்கள் இப்போ எதுக்கு மணி ஆக வேண்டிய காரியத்தை பத்தி மட்டும் பேசுவோமேஎன்று நிலைமையை மாற்றும் விதமாக பேசியவர், ஆறுதலாய் ஜெயசித்ராவின் கரத்தில் கை வைத்து அழுத்தம் கொடுத்தார்.

அழுத்தத்தின் அர்த்தம் புரிந்திட ஈரம் சுரந்த விழிகளை துடைத்து கொண்டுபேசிட்டு இருங்க சமையல் ஆச்சான்னு பாத்துட்டு வந்துடுறேன்என்று இயல்பாய் இருப்பது போல காட்டி எழுந்து சென்றுவிட,

இன்னும் அவ மாறலை நேசமணி நமக்காக அவளை மாத்திக்கிட்டாஎன்றவர்வெளிய போட்டுருந்த உர மூட்டைய எடுத்து வச்சுட்டு வறேன்என்று எழுந்து கொள்ள,

நானும் வறேன் மாமா ஒத்த ஆளா நீங்க மட்டும் எப்டி தூக்குவீங்கஉதவி புரிய உடன் சென்றார் நேசமணி.

எப்போதும் எதையாவது பேசி கொண்டே இருப்பவளை காணவில்லை என்று வீடு முழுதும் தேடி பார்த்த கவிபாரதி வீட்டின் பின்னால் சென்று பார்க்க, தாமரை குளத்தின் அருகே அமர்ந்து உனக்கும் எனக்கும் ஒத்து வராது என்பதை போல இலையில் ஒட்டிவிடாத தண்ணீரையும் மலரையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தாள் திவ்யபாரதி.

வீட்டில் இருப்பவர்களுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது. பிடிக்காத ஒன்றை திணித்து அதை எப்படி எதிர் கொள்வது ஏற்று கொள்வது, எதிர்பார்க்கும் வாழ்க்கை நிச்சயம் அமைய போவதில்லை என்று ஏன் இவர்களுக்கு புரியவில்லை, கேள்விகள் ஆயிரம் ஆனால் விடையோ பூஜ்யம். எத்தனை யோசித்தும் விடை கிடைக்கவில்லை என்றதும் மனம் தளர்ந்து போனாள் அவள்.

ஒத்து வருமா என்ற கேள்விக்கு அவளிடத்தில் பதில் இல்லை ஆனால் கோபம் இயலாமை இரண்டும் சேர்ந்து அவளை அவஸ்தையில் நிறைக்க, எதார்த்தத்தை ஏற்று கொள்ள முடியாமல் தவித்தாள் பெண்ணவள்

சற்று தள்ளி இருந்து அவள் செயலை பார்த்து கொண்டிருந்த இளையவளுக்கு தொண்டை அடைக்க,

நடுவிரலில் இருந்த மோதிரத்தை வருடியவளின் கண்ணீர் துளிகள் மோதிரத்தின் நடுவில் பொறுத்தியிருந்த கல்லில் பட்டு தெறித்ததுவலியை விவரிக்க வார்த்தைகள் வேண்டுமா என்ன?. 

அவ்ளோ தான்ல உங்களுக்கும் எனக்கும் இருந்த பந்தம். இந்த ரத்திரியோட நம்ம உறவுக்கான அர்த்தம் முடியிது, ஏன் என்னை விட்டு போனீங்க பார்த்தி?. எத்தனை கனவுகளோடு உங்களுக்காக காத்துட்டு இருந்தேன் வந்து தாலி கட்டுறேன்னு சொல்லிட்டு போனீங்களே சொன்ன வார்த்தைய காப்பாத்தமலே போயிட்டீங்க

நினைக்கவே கஷ்டமா இருக்கு எல்லாரும் அவங்கவங்க நிலையில இருந்து யோசிக்கிறாங்க எனக்காக யோசிக்க இங்க யாருமே இல்லை, நா என்ன நினைக்கிறேன் எனக்கு எது பிடிச்சிருக்கு பிடிக்கலை, எதையும் யாரும் கண்டுக்கலை இந்த நேரத்துல என்ன முடிவெடுக்குறதுன்னு எனக்கு தெரியலை பார்த்தி“,கண்ணீர் மட்டுமே அவளுடன் உறவாடியது.

கண்காணாத தூரத்துக்கு தொலைஞ்சு போயிடலமான்னு தோணுது. இப்ப வரைக்கும் உங்களை நேசிச்சிட்டு இருக்கேன் சட்டுன்னு இன்னொருதரை கல்யாணம் பண்ணிக்கோன்னா எப்டி? நானும் சாதாரண மனுஷி தானே மனசு வலிக்கிது பார்த்தி அழ பிடிக்கலை ஆனா கண்ணீர் வருதுஎன்று தனியாக அமர்ந்து எண்ணத்தில் நிறைத்து வைத்தவனிடம் பேசி கொண்டிருந்தாள் திவ்யபாரதி.

அக்காஎன்று தோளில் கைவைத்த இளையவளை கண்டதும் அடக்கி வைத்த உணர்வுகள் விம்மலாய் ஆர்பரிக்க,

கவிஎன்று கட்டிக்கொண்டு அழுதாள்.

அக்காஎன்று ஆதுரமாய் அரவணைத்து கொண்டவளுக்கும் அழுகை வெளிப்பட, “அழுகாத க்கா எனக்கும் அழுகை வருதுஎன்றாள் கவிபாரதி, சிறு விசும்பலுடன்.

முடியலை கவி பார்த்தி போன இடத்துக்கே நானும் போயிறலாம்னு தோணுதுஎன்று அரற்றியவளை அமைதிபடுத்தும் வழி தெரியாது விழித்தாள் கவி.

அவள் இடத்தில் இருந்து பார்த்தாள் தானே வலியின் ஆழம் என்னவென்று தெரியும் இழப்பு ஒன்று என்றாலும் அவளுக்கும் மற்றவர்களுக்கும் வலி ஒன்றாகி விடுமா?.

அப்டியெல்லாம் பேசாத க்கா வாழுறதை விட சாகுறது ரொம்ப கஷ்டம் அதுக்கெல்லாம் தைரியம் வேணும்னு சொல்லுவியே.எப்பவும் போல நிதானமா யோசி ஏதாவது வழி கிடைக்கும் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாய் பேசினாள் கவிபாரதி.

பொண்ணு பாக்க தானே வர்றாங்க எதையும் நேரடியா கையாளுறது தான் பெஸ்ட் நீயே மாப்பிள்ளைக்கிட்ட பேசு உனக்கு விருப்பமில்லைன்றதை சொல்லி அவர் மூலமாவே விருப்பமில்லைன்னு சொல்ல வை, பிடிக்கலைன்னு சொன்ன பிறகு யாரும் அடுத்த கட்டத்துக்கு போக மாட்டாங்க க்கா. எனக்கென்னவோ உன்னை பொண்ணு பாக்க வர்றவரு ரொம்ப ஜென்யூனா நடந்துபாருன்னு தோணுதுஎன்று திடமாய் பேசினாள் கவிபாரதி.

நா பிடிக்கலைன்னு சொன்னா அவரோட மனசு கஷ்டப்படுமே என்னோட சுயநலத்துக்காக இன்னொருத்தரோட உணர்வுகளை காயப்படுத்துறது சரியா இருக்காது கவிஎன்று இக்கட்டான நிலையிலும் நியாயம் பேசினாள் திவ்யா.

ப்ச் அக்கா எப்பவும் அடுத்தவங்களை பத்தி யோசிக்காத உனக்காக யோசி தனக்கு போக தான் தானமும் தர்மமும் யார் மனசோ கஷ்டப்படும்ன்றதுக்காக பிடிக்காதை ஒன்னை ஏத்துக்க போறியா அதை உன்னால சந்தோஷமா அனுபவிக்க முடியுமா சொல்லு?. 

நீயும் பார்த்தி மாமாவும் எப்டி இருந்திங்கன்னு எனக்கு தெரியும். சொல்றது ஈஸி அதை செய்யிறது ரொம்ப கஷ்டம் உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காத இந்த கல்யாணம் நிச்சயம் நடக்காதுஎன்று அறுதியிட்டு உரைத்தவள்

கவலைய விடு நா இருக்கேன் கண்ணை துடை வா போய் சாப்பிடலாம் காலையில இருந்து நீ எதுவுமே சாப்பிடலைன்னு அம்மா சொன்னாங்க எதுக்காகவும் யாருக்காகவும் வயித்தை பட்னி போட கூடாது என்று பெரியவளை போல பக்குவமாய் பேசி விழிநீரை துடைத்தவள் கையோடு அழைத்து சென்றாள்.

வாசம் வீசும்

Advertisement