Advertisement

உங்களுக்கு புத்தி எதுவும் கெட்டு போச்சா இல்லை என்ன பேசுறோம்னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா?, அந்த குடும்பத்து ஆளுங்களோட நிழல் கூட என் பையன் மேல பட கூடாது படவும் விடமாட்டேன். நாம பொண்ணு பாத்திருக்கிற விஷயம் தெரிஞ்சாலும் அவங்களால என்ன செய்ய முடியும்?.

என்னைக்கு நம்ம ரெண்டுபேரையும் அப்பா அம்மாவா ஏத்துகிட்டேனோ அன்னைக்கே அவனோட வாழ்க்கையில முடிவெடுக்கிற உரிமைய நமக்கு கொடுத்துட்டான். கண்டவங்களை நினைச்சு கவலைபடாதீங்க அவன் முன்னாடி அந்த குடும்பத்தை பத்தி பேசிறாதிங்க நாளைக்கு சீக்கிரம் எந்திரிக்கணும் போய் படுத்து தூங்குங்கஎன்று மூச்சுவிடமால் வேகமாக பேசிவிட்டு வேலையில் கவனத்தை செலுத்த

மேற்கொண்டு எதையாவது பேசி கோபத்தை ஏற்படுத்தமால் அமைதியாக ஹாலில் வந்து அமர்ந்து கொண்டார் ராகவேந்திரன். என்ன தான் விஷயத்தை விலக்கி வைக்க நினைத்தாலும் மீண்டும் அதே எண்ணம் தூளிர்விட, உறக்கமின்றி தவித்தார்.

ஜீவாவிற்கு அப்போது ஐந்து வயது, ஏமாற்றத்தின் சாயலை முதன் முதலாய் உணர்ந்த தருணம். வெளியே சென்று வருகிறேன் என கூறிவிட்டு ஜீவாவை அபிராமியிடம் விட்டு சென்றவர், இரவு கடந்தும் வீடு வந்து சேர வில்லையே என்ற பதைப்பதைப்பில் குடும்பத்தினர், பொட்டு உறக்கமில்லாமல் அமர்ந்திருக்க, வாசலில் காரின் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த அபிராமி அதிர்ச்சியில் உறைந்து போனார்

மடியிலேயே படுக்க வைத்து கொண்ட ஜீவாவை கீழே படுக்க வைத்து எழுந்தவர்அய்யோ என்ன காரியம் பண்ணிட்டு வந்துருக்கான்னு பாருங்க இங்க வாங்களேன்என்று நெஞ்சில் அடித்து கொண்டு கத்த

தன்னையும் மறந்து உறங்கி போனவர் சத்தம் கேட்டு என்னவோ ஏதோ என்று பதறி விழித்து, வாசலில் நின்ற உடன் பிறந்தவளின் கோலம் கண்டு உறைந்து போனார் ராகவேந்திரன்

ஆத்திரமும் அவமானமும் சேர்ந்து கட்டுக்கடங்காத கோபத்தை விளைவிக்க,

வேகமாக வாசலுக்கு விரைந்தவர்என்ன காரியம் பண்ணிருக்க, வெளிய போறேன்னு சொல்லிட்டு இப்டி ஒரு அசிங்கத்தை பண்ணிட்டு வந்து நிக்கிறயே அறிவில்லைஎன்று அடிக்க கை ஓங்கியவரின் கரத்தை பிடித்த கௌரியை திகைத்து பார்த்தார் ராகவேந்திரன்

இதுவரை கௌரி தன்னிடம் அதிர்ந்து பேசி அறிந்திடாதவருக்கு தங்கையின் அதிரடி செயல் அதிர்ச்சியை அளித்தது.

உங்க கோபம் நியாயமானது தான் ஆனா உங்களுக்காக என்னோட வாழ்க்கைய பாழாக்க முடியாது இல்லையா?” என்று திமிராக பேசி,பிடித்த கையை வேகமாக உதற, பிடிமானம் இல்லாமல் தடுமாறிய ராகவேந்திரனை தாங்கி பிடித்து கொண்டார் அபிராமி.

எனக்கு இவரை பிடிச்சிருக்கு அவருக்கும் என்னை பிடிச்சிருக்கு என்னை பத்தி சொன்ன பிறகு தான் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டாரு  நானும் சரின்னு சொல்லிட்டேன்,

பத்து பொருத்தம் பாத்து என் தலையில ஒருத்தரை கட்டி வச்சிங்களே அவரை மாதிரி இல்லை. குடும்பனா என்ன யாரை எப்டி பாத்துக்கணும்னு தெரிஞ்சவரு,

எதுக்கு சம்பாதிக்கிறோம் யாருக்காக சம்பாதிக்கிறோம்னே தெரியாம எங்கயோ போய் இருந்துகிட்டு நா என்ன பண்றேன் ஏது பண்றேன்னு கூட தெரியாத தெரிஞ்சுக்க விரும்பாத  மனுஷன் கூட வாழ எனக்கு விருப்பமில்லை. அவர்கிட்ட பேசி விவாகரத்து நோட்டீஸ் கூட அனுப்பிட்டேன் பதில் தான் இன்னும் வரலை,

நா போறேன் எனக்கான வாழ்க்கைய இனிமே தான் வாழ போறேன் இனி இந்த வீட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவரோட பையன நீங்களே பாத்துக்கோங்கஎன்று கூறிவிட்டு அருகில் நின்றவனின் கைபிடித்து அழைத்து செல்ல,

என்னங்க இது இப்டி பேசிட்டு போறா கட்டுனவன் வேணா சரி பெத்த பிள்ளை கூட வேணான்னு சொல்லிட்டு போறா நீங்களும் பாத்துட்டு அமைதியா இருக்கீங்கஎன்று வேகமாக கேட்டு, உலுக்கிய பின் தான் சுயநினைவு பெற்றார் ராகவேந்திரன்.

மனம் உடைந்து தரையில் சரிந்தவர்இப்டி ஒரு முடிவை எடுத்தவ கிட்ட என்ன பேச சொல்ற? யாரைபத்தியும் கவலைபடாம குடும்ப மனதை சந்தி சிரிக்க வச்சிட்டு போனவகிட்ட கெஞ்ச சொல்றியா? இல்லை என்னால முடியாதுஎன்றார் வேதனை நிரம்ப. ஆர்பாட்டமில்லாமல் பேசினாலும் கோபம் குவிந்து தான் இருந்தது ராகவேந்திரனுக்கு.

நமக்கு பிள்ளை இல்லைன்னு வருத்தப்பட்டியே கடவுளா பாத்து நமக்கு பிள்ளைய கொடுத்துருக்கான் இனி நமக்கு எல்லாமே ஜீவா தான்என்று ஆத்மார்த்தமாய் உரைத்தவர் உறங்குபவனை பார்த்து கண்ணீர் வடித்தார் ராகவேந்திரன்.

அழுகுரல் சத்தம் கேட்டு விழித்து கண்களை கசக்கி பார்த்த ஜீவா இருவரும் அழுவதன் காரணம் புரியாமல் விழித்தவன் எழுந்து அபிராமியிடம் சென்று

அம்மா வந்துட்டாங்களா பெரியம்மா எனக்கு பசிக்கிதுஎன்று அபிராமியின் முகம் காண , இருவரும் துடித்து போயினர்.

வாரி அணைத்து கொண்ட அபிராமிஇப்டி ஒரு பையன மனசாட்சி இல்லாம வேணான்னு சொல்லிட்டு போறாளே பாவி நல்லா இருப்பாளா?” என்று மனம் தாளாமல் சபிக்க,

விடு ம்மா அவ எப்டியோ போய் தொலையிறா நீ போய் சாப்ட ஏதாவது ரெடி பண்ணு நைட்டு பையன் சரியாவே சாப்பிடலைஎன்று அபிராமியின் மடியில் இருந்த ஜீவாவை தன் மடிக்கு மாற்றி கொண்டார்.

அபிராமி எழுந்து உள்ளே சென்றுவிட, “இதை அவர் கிட்ட ஒப்படைச்சிடுங்கஎன்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்க்க

மாங்கல்யத்தை நீடியபடி நின்றார் கௌரி, அருவருப்பு மேலோங்க பார்த்தவர்,

இதை ஏதாவது கோவில் உண்டியல்ல போட்டுரு கட்டுனவனையே மதிக்கலை அவன் கட்டுனதுக்கு மதிப்பு கொடுத்து என்ன ஆக போகுது ,உன்னோட பாவத்துல எங்களுக்கு பங்கு வேணாம் முதல இங்க இருந்து கிளம்பு உன்னை பாத்தாலே ஆத்திரமா வருது என் கண்ணு முன்னாடி வந்துறாதஎன்று பல்லை கடித்தவர் ஜீவாவை தன் மார்போடு அணைத்து கொண்டார்.

தாயை கண்டதும் விழிகள் பிரகாசிக்கம்மாஎன்று அவர் அணைப்பில் இருந்து விலக முற்பட, அவனை கெட்டியாக அணைத்து கொண்டார் ராகவேந்திரன்.

சத்தம் கேட்டு சமைப்பதை நிறுத்திவிட்டு வெளியே எட்டி வந்து எட்டி பார்த்த அபிராமி

நீ எதுக்கு உள்ள வந்த நன்றி கெட்டவளே போடி வெளிய இந்த வீட்டுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லிட்டல அப்றம் எதுக்கு வந்த“.

நா ஒன்னும் உறவாட வரலை இதை உங்க கிட்டயே கொடுத்துட்டு போலாம்னு தான் திரும்பி வந்தேன். போற வழியில கோவில் ஏதாவது இருந்தா போட்டுடுறேன் என்னை பிடிச்ச ஏழரை இன்னையோட முடிஞ்சதுஎன்று அகம்பாவத்துடன் பேசிவிட்டு முகத்தை திருப்பி கொண்டு செல்ல,

ம்மா நானும் வறேன் என்னையும் கூட்டிட்டு போங்கம்மாஎன்று கௌரியை நோக்கி ஓட்டம் பிடித்தவனை ஒரே எட்டில் பயந்து சென்று பிடித்து கொண்டார் அபிராமி

அவ போகட்டும் ஜீவா உனக்கு அவ வேணாம்என்றார் வலி இயைந்த குரலில்.

பெரியம்மா நா அம்மா கூட போறேன் என்னை விடுங்க நா போறேன்என்று கீழே விழுந்து அழுது புரண்டவனின் அழுகுரல் கேட்டும் திரும்பி பாராமல் காரில் ஏறி சென்றுவிட

அம்மா போறாங்க கார் போகுது என்னை விடுங்க பெரியம்மாஎன்று கால்களை உதறி ஆர்ப்பாட்டம் செய்தான் ஜீவானந்தம்.

அவ நமக்கு வேணா ஜீவா இனி அவ உன்னோட அம்மா இல்லை உனக்கு நாங்க இருக்கோம்என்று அணைத்து கொண்டவருக்கு கண்களில் நீர் வடிந்தது.

ப்பா ப்பாஎன்ற அழைப்பு குரல் பலமாய் மிகசமீபத்தில் கேட்டு நினைவில் இருந்து விழித்த ராகவேந்திரன் என்னெவென்று எதிரில் நின்றவனை பார்த்தார்.

என்னாச்சு ப்பா எதுக்கு அழுகுறிங்கஎன்றதும் தான் கன்னத்தில் வழிந்த உப்பு நீரை உணர்ந்து தடவி பார்த்தார்.

அம்மா எதுவும் திட்டிடாங்களா?.

இல்லை சித்து வேற ஏதோ ஒரு யோசனைஎன்று சமாளித்தவர்நீ எப்போ வந்த இன்னைக்கு ஏன் இவ்ளோ லேட்டு“. 

கிளாஸ் இருந்தது ப்பா அம்மாகிட்ட சொல்லிட்டு தான் போனேன்என்றவன்ஜீவா அண்ணா வந்துட்டாங்களா?” என்று ஆவலோடு கேட்க,

நாளைக்கு வறான் இப்ப தான் அம்மாவும் நானும் பேசுனோம் நீ போய் குளிச்சிட்டு சாப்டு எனக்கு தூக்கம் வருதுஎன்று மகனின் தலை கோதி கலைத்துவிட்டு எழுந்து சென்றுவிட,

ஏமாற்றம் பொதிந்த முகத்துடன் எழுந்து அபிரமியிடம் சென்றவன், அமைதியாக சமையல் திண்டில் ஏறி அமர்ந்து கொண்டான் சித்தார்த்.

என்னடா இப்ப தான் வந்தியாஎன்ற கேள்விக்கும் மௌனமே பதிலாய் கிடைக்க,

என்னாச்சு சித்துஎன்றவர் செய்யும் வேலையை நிறுத்திவிட்டு மைந்தனின் முகத்தை கூர்மையாய் கவனித்தார்.

ஜீவா ண்ணா இன்னைக்கு வறேன்னு சொன்னிங்கமுகத்தை சுருக்கி வைத்து கொண்டு கோபமாக கேட்டான் சித்தார்த்.

வறேன்னு தான் சொன்னான் ஏதோ முக்கியமான முடிக்க வேண்டிய வேலையாம் அதையெல்லாம் முடிச்சிட்டு இப்போ தான் கிளம்புறான் நாளைக்கு காலையில வந்துருவான்“. 

போங்கம்மா எவ்ளோ ஆசையா ஜீவா ண்ணா வந்துருப்பாங்கன்னு எதிர்பார்த்து வந்தேன் தெரியுமா?, என் பிரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் பெருமையா சொல்லி வச்சிருந்தேன் என்னோட பிளான் எல்லாம் சொதப்பலா போச்சு“.

ப்ச் இன்னைக்கு ஒரு நைட் தானடா நாளைக்கு காலையில இங்க இருக்க போறான்என்று அபிராமி சமாதானம் செய்ய,

போங்கம்மா அண்ணா வந்தா என்பீல்டுல லாங் ட்ரைவ் போலாம்னு இருந்தேன் எல்லாமே போச்சுஎன்று புலம்பி தள்ள,

இதுக்கு தான் இவ்ளோ ஃபீல் பண்ணியா நான் கூட அவன் மேல இருந்த பாசத்துலயோன்னு நினைச்சிட்டேன்“,அங்கலாய்த்து கொண்டார் அபிராமி.

பாசம் இருக்கு அதே நேரம் ஆசையும் இருக்கு போங்க எனக்கு சாப்பாடு வேணாம்என்று திண்டில் இருந்து துள்ளி இறங்கியவன் கோபமாக சென்று விட,

சித்து நில்லுடா சாப்பாடு வேணாம்னா என்ன அர்த்தம் டேய் சித்துஎன்று கத்தி கொண்டே சமாதானம் செய்ய அவன் பின்னோடு சென்றார் அபிராமி.

கோயம்பேடு பேருந்து நிலையம், பேருந்தில் ஏறி அமர்ந்ததும் திவாகருக்கு அழைத்து, விஷயத்தை சொல்ல தொடர்பு கொண்டவன் மறுமுனையில் அழைப்பு ஏற்கப்படவில்லை என்றதும் அவனே அழைக்கட்டும் என்று இசையில் மனதை ஈடுபடுத்தினான் ஜீவாந்தனம்.

இருதயமே துடிக்கிறதா துடிப்பது போல் நடிக்கிறதா? உரைத்திடவா? மறைத்திடவா ரகசியமாய் தவித்திடவா

ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும் எனை கத்தி இல்லாமல் கொய்யும் இதில் மீள வழி உள்ளதே இருப்பினும், உள்ளம் விரும்பாது யே…”

இயர் போனை செவியில் சொருகி, கண்களை மூடி இசையின் மொழியை உள்வாங்கி கொண்டிருக்க, திவாகரிடமிருந்து அழைப்பு.

சொல்லுடா?”.

நீ தான் சொல்லணும்“.

பஸ் ஏறிட்டேன் திவா இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடும். இதை சொல்ல தான் கால் பண்ணேன் வச்சிடுறேன்என்று அழைப்பை துண்டிக்க போக,

ஜீவா போனை கட் பண்ணிறாத ஒரு நிமிஷம் கொஞ்சம் பேச வேண்டி இருக்குஎன்றான் அவசர குரலில்.

சொல்லு திவா“.

சொன்னது ஞாபகம் இருக்கு தானே?”,திவாகர் கேட்க,

என்னடா சொன்ன?”.

நாசமா போச்சு போ கிளம்பி போகும் போது அவ்ளோ சொன்னேனே எல்லாத்தையும் தலையாட்டி பொம்மை மாதிரி கேட்டுட்டு இப்போ என்ன சொன்னனு கேக்குற!“.

ப்ச் எல்லாம் எனக்கு தெரியும் திவா இன்னும் முடிவு பண்ணலை ஜஸ்ட் பாக்க தான் போறேன், பொண்ணை பாத்து பேசின பிறகு தான் அடுத்த கட்டத்துக்கு போவேன். அந்த பொண்ணோட மனசுல இப்போ என்ன இருக்குன்னு தெரியாம நாமளா ஒரு முடிவுக்கு வர கூடாது திவாஎன்றான் ஜீவானந்தம்.

என்னமோடா வர வர அனுபவசாலி மாதிரி பேச ஆரம்பிச்சிட்டஎன்று பெருமூச்சை வெளியிட்டவன், “பொண்ணுகிட்ட போசும் போதும் கொஞ்சம் காதலோட பேசு அங்கயும் போய் விருமாண்டி மாதிரி விறைப்பா நிக்காதஎன்று கிண்டல் பேசினான் திவாகர்.

வீடு போய் சேந்ததும் எனக்கு கால் பண்ணுடா ஊர் எல்லையில கால் வச்சதும் என்னை மறந்துடாதஎன்றதும் ஜீவாவிடம் புன்னகை மிளிர்ந்தது.

சரிடா போனை வைக்கிறேன் மீதிய நாளைக்கு பேசலாம். நாளைக்கு பொண்ணுகிட்ட என்ன பேசலாம் எப்டி பேசலாம்னு யோசிச்சிட்டே ஊர் போய் சேருஎன்று திவாகர் அணைப்பை துண்டித்துவிட,

சிறு வெட்கம் இழையோட மீசையை நீவி கொண்டவன் பெயரை கொண்டே நினைவில் வரைந்து வைத்த அவள் உருவத்தை உரு போட்டவாறு மீண்டும் இசையின் மொழியில் அமிழ்ந்தன் திவ்யத்தின் ஜீவன்.

வாசம் வீசும்

Advertisement