Advertisement

பெண் வீட்டில் அடக்கி வைத்த கோபத்தை எல்லாம், இல்லம் வந்ததும் கணவரிடம் காட்டி கொண்டிருந்தார் அபிராமி. திமிராக சவால் விட்டு சென்ற கௌரியை நினைக்க நினைக்க மனம் பற்றி கொண்டு வந்தது அவருக்கு. அமர்வதும் பின் எழுவதுமாய் தன் கோபத்தை வெளிப்படுத்த,

எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற நீ டென்ஷன் ஆகிற அளவுக்கு இங்க ஒன்னும் நடக்கலை அபிராமிஎன்று இயல்பாய் உரைத்த கணவரை முறைத்து பார்த்தார்.

அவ உங்க கூட பிறந்த தங்கச்சி ஆச்சே என்ன தப்பு பண்ணாலும் உறவே வேணான்னு உதறிட்டு போனாலும் அவளுக்கு தான் சப்போர்ட் பண்ணி பேசுவிங்கஎன்று குத்தலாக வார்த்தைகள் வெளிவர,

ப்ச் இது தான் ஆகாதுங்கிறது உன்னை டென்ஷன் ஆக வேணாம்னு சொன்னா நீ என்னை டென்ஷன் படுத்துற. என்னைக்கு நாம யாருமே வேணான்னு விட்டுட்டு போனாளோ அப்பவே அவளோட உறவை மறந்துட்டேன் நீ தான் குத்தி காட்டுறேன்னு அடிக்கடி ஞாபக படுத்துறஎன்று தணிவாகவே பேசினார் ராகவேந்திரன்.

யாரு நானா?” என்று வேகமாக கேட்டவர்அவளுக்கு நாம பொண்ணு பாக்க போற விஷயம் எப்டி தெரிஞ்சது. நேத்து நைட்டு நீங்க தானே புலம்பிட்டு இருந்திங்க விஷயத்தை சொல்லிடலாம்னு, அப்ப நீங்க தான் சொல்லிருப்பிங்க உங்களை தவிர வேற யார் சொல்லிருக்க முடியும் என்று அறுதியிட்டு உரைத்தார் அபிராமி.

நா சொல்லலைன்னா அவளுக்கு விஷயம் தெரிய வாய்பில்லையா? இங்க யாராவது சொல்லிருப்பாங்க. ஜீவாவுக்கு பொண்ணு பாக்க போற விஷயம் வெளிய யாருக்கும் தெரியாதா?, நம்பிக்கை இல்லாம பேசாத அபி கஷ்டமா இருக்கு இத்தனை வருஷம் என்கூட இருக்க என்னை பத்தி இவ்ளோ தான் தெரிஞ்சுகிட்டயா?”, ராகவேந்திரனின் குரல் வருத்தத்தை பிரதிபலித்தது.

அவரின் வருத்தம் உண்மை என ஏற்க வைத்தாலும் விஷயத்தை கௌரியிடம் சேர்ப்பித்தது யார் என்ற யோசனை வண்டாய் குடைந்து ராகவேந்திரனின் மீதே சந்தேகத்தை விளைவித்தது

வேற யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை நீங்க தான் அவகிட்ட விஷயத்தை சொல்லிருக்கணும்என்று அழுத்தமாய் கூறியவர், “பொண்ணு வீட்டோட அட்ரஸ் அவளுக்கு எப்டி தெரியும் நீங்க சொல்லாம அவளா வந்தாளா?”, கோபத்தின் அளவு கூடி கொண்டே சென்றதே தவிர குறைந்தபாடில்லை.

இருந்திருந்து இப்போது தான் நல்ல வாழ்வு அமைய போகிறது அதையும் கெடுக்க வந்துவிட்டாளே எத்தனை தைரியம் சவால் விட்டு செல்லும் அளவிற்கு. மகனாம் மகன் என்று மனதோடு குமைந்து கொண்டிருந்தவரின் முன்னால் தண்ணீர் டம்ளரை நீட்டினார் ராகவேந்திரன்.

மனைவியின் மனம் அறிந்து இதமாகவே பேச தொடங்கினார்ரொம்ப கோபமா இருக்க தண்ணி குடி, நிதானமா பேசு அபிராமி ஜீவா வெளிய தான் இருக்கான் அவன் காதுல நீ பேசுனது எல்லாம் விழுந்திருக்கும். அவன் மனசு கஷ்டப்படுற மாதிரி இனி ஒரு வார்த்தை பேசிறாதஎன்றதும் தான் வெளியே அமர்ந்திருந்தவனின் நினைவு வந்தது அபிராமிக்கு

தான் பேசியதை கேட்டிருப்பானே என்று மனம் பதற, திகைப்பிட்ட பார்வையில் கணவனை பார்த்தவர் உயிர் மொத்தமும் வடிந்து போனதை போல கீழே அமர்ந்தார். கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு நின்றது.

பயமா இருக்கு முடியலைங்க கௌரி பேசிட்டு போனதை நினைக்க நினைக்க மனசு ஆற மாட்டிங்கிது இத்தனை வருஷம் கழிச்சு உறவு கொண்டாடுறவ அன்னைக்கு ஏன் ஜீவாவை அம்போன்னு விட்டுட்டு போனா?,

அவ பேசிட்டு போன வேகத்தை பாத்திங்க தானே கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம என்னோட பையன்னு அத்தனை பேர் முன்னாடி தைரியமா சொல்றா அப்ப நா யாரு அவனுக்கு?,இத்தனை வருஷம் அவனை பத்திரமா பாத்துகிட்ட நா யாருஎன்று கண்ணீர் மல்க நியாயம் கேட்டவர்என்ன தான் பாசமா வளத்தாலும் பெத்தவளுக்கு தான் அதிக உரிமை அப்டி தானே?. பயமா இருக்குங்க ஜீவாவை நம்மகிட்ட இருந்து பிரிச்சிடுவாளோன்னுஎன்று கண்ணீர் சிந்தினார் அபிராமி.

ப்ச் பயத்துல எதையாவது உளறிட்டு இருக்காதா அபிராமி பொல்லாத காலம் சொல்லாம வரும்னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க. கழுதை கத்திட்டு போறதை பாத்து கவலைப்பட கூடாது , அவ பேசிட்டு போனதை நினைச்சி உன்னை நீயே வருத்திக்காத,

 அத்தனை பேர் முன்னாடி தானே ஜீவா சொன்னான் இவங்க சம்மதம் சந்தோஷம் தான் முக்கியம்னு. அதை ஏன் நினைச்சு பாக்க மாட்டிங்கிற அவன் நம்ம பையன் நம்மளை விட்டு எங்கயும் போக மாட்டான். அத்தைன்னு கூப்பிட்டா அந்நியமா தெரியும்னு தானே அம்மான்னு கூப்பிடுறான்என்று பயத்தில் உறைந்த மனதை மெல்ல மெல்ல தெளிய வைத்தார் ராகவேந்திரன்.

இருந்தாலும் கௌரியை நினைத்து மனம் தெளிவடையாமல் கலக்கம் கொள்ள, மனைவியின் முகத்தில் தெரிந்த உணர்வுகளை கண்டு அவரின் கரம் பற்றி இதமான அழுத்தம் கொடுத்தார் ராகவேந்திரன்.

நல்லதே நடக்கும் மனசை போட்டு குழப்பிக்காதஎன்று தெம்பூட்ட

உள்ளே நடக்கும் பேச்சு வார்த்தையை முடிவிற்கு கொண்டுவர எண்ணி, “பெரியம்மா பசிக்கிது இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கீங்கஎன்று ஹாலில் இருந்தவாறே குரல் கொடுத்தான் ஜீவானந்தம்.

பசி என்றதும் மற்றது மறைந்திட மின்னல் வேகத்தில் எழுந்து அறையில் இருந்து வெளி வந்தவர்மறந்தே போனேன் இரு ஜீவா அஞ்சு நிமிஷத்துல எல்லாம் சூடு பண்ணி எடுத்துட்டு வறேன்என்று அவசரமாக சமையல் அறைக்குள் நுழைந்து பரபரப்புடன் வேலையை தொடங்கினார்.

அறையில் இருந்து வெளியே வந்த ராகவேந்திரன் மனைவியின் பரபரப்பை கண்டு நிம்மதியான பெருமூச்சை வெளியிட்டவர்,”ரொம்ப தங்க்ஸ் ஜீவாஎன்று அவன் தோளில் கை வைத்தார்.

என்ன பெரியப்பா நன்றி மறப்பது நன்றன்று நீங்க தானே சொல்லி கொடுத்திங்க நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும், இன்னைக்கு இந்த மாதிரி ஒரு வாழ்க்கை எனக்கு கிடைச்சிருக்குன்னா அதுக்கு நீங்களும் பெரியம்மாவும் தான் காரணம் என்னைக்கும் அதை மறக்க மாட்டேன்.

 சித்துகிட்ட காட்டுற பாசத்தை விட என்மேல அதிகமா கட்டுறீங்க கடைசி வரைக்கும் உங்க பையனா தான் இருப்பேன் யார் என்ன சொன்னாலும் உங்களை விட்டு போகவும் மாட்டேன் யாருக்காகவும் உங்களை விட்டு கொடுக்கவும் மாட்டேன்என்று திண்ணமாய் உரைத்தவனின் தோளை தட்டி கொடுத்தார் ராகவேந்திரன்.

அவன் நன்றி கடனில் மெய் சிலிர்க்க ரொம்பநல்லாவே பேசுற ஜீவாஎன்று மெச்சுதலாய் கூற,

என்னோட குருவே நீங்க தானே பெரியப்பாஎன்று நகைத்தவனை,

படவாஎன்று போலியாய் அடிக்க கை ஓங்கியவர் ஆரத்தழுவி கொண்டார்.

“பேசினது போதும் வந்து சாப்டுங்க” என்று உணவு மேஜையில் பாத்திரங்களை பரப்பி வைத்த அபிராமி இருவருக்கும் பரிமாற,

“நீங்களும் உக்காருங்க பெரியம்மா சேந்து சாப்பிடலாம் நானே உங்களுக்கு ஊட்டி விடுறேன்என்று கைபிடித்து அமர வைத்தான் ஜீவாந்தனம்.

“அதெல்லாம் வேணா ஜீவா நீ முதல சாப்டு நா அப்றமா சாப்டுறேன் பசியில்லைடாஎன்று மறுத்து பேச,

“ம்ஹும் சொன்னா கேட்கணும் நா ஊட்டிவிடுறேன்என்று கவளத்தை உருட்ட, வாய் திறந்து வாங்கி கொண்டவருக்கு அவனின் பாசத்தை கண்டு கண்கள் கலங்கியது.

“அதென்ன பெரியம்மாவுக்கு மட்டும் எனக்கில்லையா” என்று ராகவேந்திரன் கேட்க,

“உங்களுக்கு இல்லாததாஎன்று அவருக்கும் ஊட்டிவிட, கணவன் மனைவி இருவரும் அவனுக்கு ஊட்டி விட்டு ஒருவருக்கொருவர் பாசத்தில் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டி கொண்டவாறே மதிய உணவை உண்டு முடித்தனர்.

Advertisement