Advertisement

காலையில் கௌரியிடம் வாங்கிய மண்டகபடியில் இன்னும் கோபம் அடங்கவில்லை அவளுக்கு. கௌரியை கூட மன்னித்து விடலாம் ஆனால் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கணவனை தான் மன்னிக்க மனம் வரவில்லை காயத்ரிக்கு. திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் கழிந்து விட்டது எத்தனையோ மாற்றங்கள் எதிர்பார்ப்புகள் நிராசைகள் என அனைத்தையும் கடந்து அதை ஏற்று கொண்டவளுக்கு அவனின் குணத்தை மட்டும் இன்றுவரை ஏற்று கொள்ள முடியவில்லை.

சொந்தங்களை விட்டு இவன் ஒருவனை நம்பி இவன் மூலம் வந்த உறவுகளை தாங்க வந்தவளுக்காக ஏதாவது ஒரு இடத்தில் ஒரு வார்த்தை ஆதரவாய் அனுசரணையாய் பேசினால் என்ன? நினைக்க நினைக்க உள்ளம் குமுறியதுமனம் ஆற்றமாட்டாமல் அலைகளிக்க, நகத்திடம் கோபத்தை காட்டி கொண்டிருந்தாள் காயத்ரி.

வேலை முடிந்து வீடு திரும்பியவன் தேடியது என்னவோ மனைவியை தான். ஒற்றை சிரிப்பை ஏந்தியபடி வரவேற்கும் அவளது சுபாவம் அத்தனை பிடிக்கும் அவனுக்கு. மனைவியை நாடி அறைக்கு வந்தவன், அவளது மனநிலை உணராது பின்னால் இருந்தவாறு அணைத்து கொள்ள, எந்த வித உணர்வையும் காட்டாது அமைதியாய் அமர்ந்திருந்தாள் காயத்ரி

வழமைக்கு மாறான அவளது செயலில் புருவம் சுருக்கி நோக்கியவன் காரணம் விளங்க,

என்னாச்சு! காலையில நடந்த விஷயத்தை இன்னுமா நினைச்சிட்டு இருக்கஎன்று இயல்பாய் கேட்டான் அவளது கணவன் தமிழ்ச்செல்வன்.

அவனை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் என்ன தோன்றியதோ, வேதாளம் போல முன்பிருந்ததை தோரணையோடு சற்று தள்ளி அமர்ந்து கொண்டாள்.

ப்ச் இன்னும் எத்தனை மணி நேரத்துக்கு இப்டி கோபத்தை சுமந்துட்டு இருக்க போறதா உத்தேசம். இவ்ளோ தூரம் இறங்கி வந்து கேக்குறேன்ல ஏதாவது பதில் பேசுடி, அமைதியா முகத்தை தூக்கி வச்சுட்டு இருந்தா என்ன அர்த்தம்?”,பொறுமையின் எல்லை கடந்து எரிச்சலாய் கேட்டான்.

வெளியே இருக்கும் அழுத்தம் இல்லம் வந்தால் மறையும் என்று எண்ணி வந்தவனுக்கு அதைவிட அழுத்தம் கொடுத்தது அவளது அமைதி.

உங்க கூட பேச பிடிக்கலைன்னு அர்த்தம்என்றாள் வெடுக்கென.

முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்திருந்தவளின் முகவாயை பிடித்து தன் புறம் திருப்பியவன்என்னை பாரு. இப்போ சொல்லு என்கூட பேச பிடிக்கலைஎன்று சிறு சிரிப்புடன் கேட்க,

பிடிக்கலைஎன்று உதட்டை சுழித்தவள்,”ப்ச் போங்க தமிழ்என்று கையை தட்டிவிட்டாள் அயர்வு மேலோங்க.

எது பேசணும் பேச கூடாதுன்னு வரைமுறை வச்சு தான் இந்த வீட்டுல பேசணும் அப்டி தானே? கோபமா வருது. எனக்குன்னு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்க கூடாதா எல்லாமே உங்க அம்மா தான் முடிவு பண்ணனும் அப்டி தானேஎன்று வேகமாக பேசினாள் காயத்ரி

சட்டென எழுந்து கொண்டவள்உங்க கூட பேசவே பிடிக்கலை எதுக்கு வாழுறோம் யாருக்காக வாழுறோம்னு தெரியாத ஒரு வாழ்க்கைய தான் நா வாழ்ந்துட்டு இருக்கேன்என்றாள் கோபத்தில் உதடு துடிக்க,

அவள் பேசுவதை கேட்டு எழுந்து காயத்திரியின் அருகே சென்றவன்நா என்னடி பண்ணனேன் என்மேல உனக்கு என்ன கோபம்அம்மா கோபமா பேசுனா நீ அவங்கிட்ட தானே முறுக்கிட்டு இருக்கணும் என்னை எதுக்கு அவாய்ட் பண்ற காயுஎன்று குரலை தணித்து பேசினான்.

நீங்க எதுவுமே பண்ணாதது தான் என்னோட கோபமே அதைக்கூட உங்களால புரிஞ்சிக்க முடியலை. எது நடந்தாலும் அமைதியா தான் இருப்பீங்களா நாளைக்கே உங்கம்மாவுக்கு என்னை பிடிக்காம போயிருச்சின்னா வீட்டை விட்டு வெளிய போக சொன்னா அப்பவும் பாத்துட்டு அமைதியா தான் இருப்பீங்களா தமிழ்?”,ஆதங்கத்தின் உச்சகட்டம் அவள் குரலில் நிறைந்திருந்தது.

எப்டி பேசுனாங்கன்னு பாத்துட்டு தானே இருந்தீங்க எனக்கு சப்போர்ட் பண்ண வேணாம் அட்லீஸ்ட் எதுக்கு இப்டி பேசுறீங்கன்னாவது கேட்டுருக்கலாமே ஏன் அமைதியாவே நின்னுட்டு இருந்திங்கஎன்று கேட்கும் போதே தொண்டை அடைத்தது.

இல்ல காயு நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட அம்மா கோபப்பட்டு பேசுறாங்கன்னா அதுல காரணம் இருக்கும்என்று அவளின் மனநிலை பற்றி யோசியாது கௌரிக்கு பரிந்து பேச,

அடக்கமாட்டாத கோபம் ஆனால் அதை காட்டும் வழிதான் தெரியவில்லை அவளுக்குகாரணம் பொல்லாத காரணம் ஒருத்தருக்கு தனிப்பட்ட விருப்பம்னு எதுவும் இருக்க கூடாது தான் மட்டும் தான் எதையும் நினைக்கணும் பேசனும்னு நினைச்சிட்டு இருக்காங்க,

எதையும் நா மறக்கலை தமிழ் நீங்களும் மறந்திருக்க மாட்டீங்க உங்க அம்மாவும் மறந்திருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்என்றதும் முகம் வாடி போனது தமிழ்செல்வனுக்கு.

நம்ம கல்யாணம் எப்டி நடந்துச்சுன்னு உங்களுக்கு தெரியும் தானே. சொல்லி காட்டணும்னு சொல்லலை புரிய வைக்க முயற்சி பண்றேன் என்னை பத்தி கொஞ்சம் யோசிங்க எனக்கும் விருப்பு வெறுப்புகள் இருக்கும்,

அத்தைக்கு ஜீவா அத்தானுக்கு பாத்த பொண்ணை பிடிக்கலைன்னா எனக்கும் பிடிக்க கூடாதுன்னு அவசியமிருக்கா சொல்லுங்க தமிழ்என்றவள் அவன் முக வாட்டத்தையும் அமைதியையும் கண்டு மனம் இளகி அவனின் கரம் பற்றினாள்.

நம்ம வாழ்க்கையில நாம நினைச்சதுக்கு மாறா பல விஷயங்கள் நடக்குது, அதையெல்லாம் கடந்து வர்ற மாதிரி தான்! நம்ம கல்யாணம் நடந்த விதத்தையும் கடந்து வந்துட்டேன். நினைச்சு பாக்கும் போதும் கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு ஆனா எதார்த்தம் இது தானேஎன்று அவனை பார்த்தாள்,

உங்களை எனக்கு பிடிக்கும் தமிழ் பேச்சுக்காக சொல்லலை நிஜமாவே உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனாஉங்க குணம். அது தான் எனக்கு புரியலை என்மேல அதீத அன்பு வச்சுருக்கீங்க எனக்கு ஒண்ணுன்னா துடிச்சு போறீங்க எல்லாத்துக்கும் மேல அக்கறை எடுத்து பாத்துக்கிறீங்க,

 இதையெல்லாம் அனுபவிக்கும் போது சந்தோஷமா இருக்கு ஆனா அந்த சந்தோஷத்தை ஒரு நிமிஷத்துல சுக்குநூறாக்கிடுறீங்க அதை தான் என்னால ஏத்துக்க முடியலைஎன்று நிறுத்தி கொண்டவளை அமைதியான பார்வையில் பார்த்தான் தமிழ்ச்செல்வன்.

உங்கம்மா என்ன பேசினாலும் ஏன் அமைதியாவே இருக்கீங்க ஜீவா அத்தான் மேல அவங்களுக்கு என்ன கோபம்? அவரு சந்தோஷமா இருக்குறதை ஏன் இவங்களால பொறுத்துக்க முடியலை, வேணான்னு வந்த உறவுக்கு எதுக்கு இவ்ளோ முக்கியத்துவம் கொடுக்கிறாங்கன்னு  எனக்கு தெரியலை,

இன்னைக்கு அவங்க பேசுன பேச்சு ரொம்ப அதிகம் தமிழ் பழசை நினைச்சிட்டு இருக்கேன்னா அதுக்கு என்ன அர்த்தம்?”என்று கேட்டாள். சொல்லும் போதே உதடுகள் நடுங்கி கண்கள் கலங்கியது காயத்ரிக்கு.

ப்ச்என்று அவள் பிடியில் இருந்த கரத்தை உறுவி கொண்டவன்உனக்கு என்னை பத்தி தெரிஞ்சது அவ்ளோ தான்என்றான் ஆதங்கம் நிறைந்து.

என்னை உனக்கு ரெண்டு வருஷமா தானே தெரியும் அவங்களை பிறந்ததுல இருந்து பாக்குறேன் அவங்க எப்டி பேசுவாங்க என்ன நினைப்பாங்க எந்த நேரத்துல என்ன பண்ணுவாங்க எல்லாம் எனக்கு தெரியும்,

அப்பா இல்லாத பையன்னு ஒரு நாளும் நா ஃபீல் பண்ணதே இல்லை அதுக்கு காரணம் அவங்க தான். என்னை வளர்க்க அவங்க எவ்ளோ கஷ்டப்பட்டாங்கன்னு கண்கூடா பத்துருக்கேன் இன்னைக்கு நா இந்த நிலைமையில இருக்குறேனா அதுக்கு அம்மா தான் காரணம் நீ எனக்கு கிடைச்சதும் அவங்களால தான் காயத்ரி.

அவங்க எது சொன்னாலும் என்ன பண்ணாலும் அமைதியா இருக்குறேனா அதுக்கு காரணம் அவங்க மேல எனக்கு இருக்குற மரியாதை மதிப்பு தான். என்னைக்குமே என்னோட அம்மா பெஸ்ட் தான் அவங்க உன்னை சத்தம் போட்டதுல தப்பிருக்குற மாதிரி எனக்கு தெரியலை

ஜீவாவை அவங்களுக்கு பிடிக்காதுன்னு இல்லை மூத்த மகனுக்கு நல்ல வாழ்க்கைய தானே அமைச்சு கொடுக்கனுமன்ற நல்ல எண்ணம். அவங்க பாத்துருக்கிற பொண்ணுக்கு என்ன குறை?, அழகா அறிவா இருக்கா, நல்ல வேலையில இருக்கா, மாசம் ரெண்டு லட்சம் சம்பளம் வாங்குறா. ஜீவா வேலைக்கு போக வேணாம் அவளே எல்லாத்தையும் பாத்துப்பா எந்த கஷ்டமும் அவனுக்கு வராதுஎன்றவனை வெறுப்பாய் பார்த்தாள் காயத்ரி.

நானும் வேலைக்கு போறேன் நீங்க வீட்டுல இருங்கஎன்று துறுத்துறுத்த நாவை அடக்கி அமைதி படுத்தியவள்,

இதே மாதிரியான சூழ்நிலை உங்க லைஃப்ல வந்தப்போ நீங்க என்ன முடிவெடுத்திங்க தமிழ்?” என்று நிதனமாக கேட்டாள் காயத்ரி.

எதிர்வாதம் என்று எண்ணவில்லை ஆனால் கேள்வியின் வீரியம் சற்று உவர்ப்பாகவே இருந்தது தமிழ்ச்செல்வனுக்கு.

நீங்க எடுத்த முடிவு இப்ப வரைக்கும் பெஸ்டுன்னு தானே நினைச்சிட்டு இருக்கீங்க அதே மாதிரி தான் ஜீவா அத்தானோட முடிவும். வாழ போற அவருக்கு தான் பிடிக்கணுமே தவிர வேற யாருக்கும் பிடிக்க வேண்டிய அவசியமில்லை, நீங்க என்ன தான் அத்தைக்கு சப்போர்ட் பண்ணி செண்டிமென்டா பேசினாலும் அவங்களோட எண்ணம் ரொம்ப தப்பு.

வெறும் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை தமிழ் நல்ல குணம் இருக்கணும் அது உங்க அம்மா பாத்த பொண்ணுகிட்ட சுத்தமா இல்லைஎன்று பேசி கொண்டே சென்றவளை போதும் என்று கை மறித்து நிறுத்தினான் தமிழ்ச்செல்வன்.

அவன் வேகம் சற்று பயத்தை கொடுத்தது அவளுக்குஉள்ளுக்குள் எடுத்த உதறலை விழுங்கி கொண்டு நின்றாள் காயத்ரி.

நீ இப்டி பேசுவன்னு நா நினைகலை காயத்ரி போதும் இதுக்கு மேல இந்த விஷயத்தை பத்தி பேச வேணாம் இருக்குற வரை அவங்கள சந்தோஷமா வச்சுப்பேன் மத்தவங்க என்ன நினைக்கிறாங்கன்றது எனக்கு முக்கியமில்லை உன்னையும் சேர்த்து தான் சொல்றேன். உன்னோட கோபம் உனக்கு நியாயமா படலாம் ஆனாஎனக்கு கொஞ்சம் கூட நியாயமா படலை,

 அவங்க மேல இருக்குற காரணமில்லாத வெறுப்பு தான் உன்னை இப்டி பேச வைக்கிது காயத்ரி. யாரையும் வெறுக்குறதுக்கு நாம பிறப்பெடுக்கலை கோபத்தை ஒதுக்கி வச்சிட்டு வந்து காஃபி போட்டு கொடுஎன்று அமைதி கலந்த அதிகாரமாய் கூறிவிட்டு துண்டை எடுத்து கொண்டு குளியலறை சென்று மறைந்து கொண்டான் தமிழ்ச்செல்வன்.

Advertisement