Advertisement

மனமும் உடலும் தளர்ந்திட, கட்டிலில் தொப்பென அமர்ந்தவளுக்கு வெளியே காட்ட முடியாத கோபம் அழுகை இயலாமை. இத்தனை நேரம் தம் கட்டி பேசியதற்கு சற்றும் பலனில்லாமல் போனதே என்று எண்ணும் போது அவளுள் தோன்றிய வலிக்கு வரையறை இல்லை. சொல்லி ஆறுதல் அடைய தாயின் மடியை தேடியது அவள் மனம். கோபத்தை சுமந்து கொண்டு இனி பயனில்லை அவன் வரும் வரை அமர்ந்திருந்தால் அதற்கும் சன்மானம் கிடைக்கும் என்று எப்போதும் போல மனதின் ஓரத்தில் ஆற்றாமையின் சுவடுகளை பத்திரப்படுத்தி கொண்டு எழுந்து சேவகம் செய்ய சென்றாள் காயத்ரி.

ஜீவாவின் திருமணத்தில் பங்கேற்க உற்சாகமாக கிளம்பி கொண்டிருந்தனர் திவாகரின் பெற்றோர். வேலை முடிந்து வருகிறேன் கிளம்பலாம் என்று திவகார் கூறியிருக்க, அவன் வருவதற்குள் இருவரும் கிளம்பியிருந்தனர்.

ஷியமளா எல்லாம் எடுத்து வச்சுட்ட தானே எதுவும் விட்டு போகலையே முக்கியமா அவனோட ஜாதகம்என்று பரபரப்புடன் தன்வந்திரி கேட்க,

அப்பவே எடுத்து வச்சிட்டேன் அவனுக்கு தெரிஞ்சா எதுக்கு என்னனு கேள்வி கேட்பான்னு என்னோட ஹேண்ட் பேக்ல வச்சிருக்கேன் எதுக்கு கேக்கிறீங்க?”.

மறந்து வச்சுட்டு போய்ட்டா அங்க போய் என்ன பண்றது அதான் கேட்டேன் இந்த முறை நிச்சயம் அவனுக்கு ஓகே ஆகிரும், விடா முயற்சி விஷ்வரூபா வெற்றி ஷியமளா”  என்று வீர வசனம் பேசியவர் வாசலில் நிழலாடிய உருவம் கண்டு திருதிருவென விழித்து நின்றார் தன்வந்திரி.

விழித்து கொண்டு நின்றவரை பார்த்து புருவம் சுருக்கியவர் வாசலை பார்க்க, தீர்க்கமான பார்வையை செலுத்தியபிடி நின்று கொண்டிருந்தான் திவாகர்.

வாடா திவா இப்போ தான் வந்தியாஎன்று கேட்டு கொண்டே அவன் அருகில் சென்ற ஷியமளா, “போய் குளிச்சிட்டு வா உனக்கு காஃபி போட்டு வைக்கிறேன். ஜீவா கல்யாணத்துக்கு நாங்க கிளம்பிட்டோம் உனக்காக தான் வெய்ட்டீங்கஎன்று அவனிடம் இருந்து விஷயத்தை மறைக்க பெரிதும் முயன்றவரின் முயற்சிகள் எல்லாம் வீணாய் போனது அவனின் அடுத்த வார்த்தையில்.

உங்க திட்டம் பலிக்க போறதில்லை ம்மா கல்யாணத்துக்கு நா மட்டும் தான் போறேன்என்றதும் திக்கென்று இருவரும் ஒருவரை ஒருவர் அதிர்வோடு பார்த்து கொண்டனர்.

என்ன பாக்குறீங்க உங்க மாஸ்டர் பிளான் எனக்கு தெரியாதுன்னு நினைக்காதிங்க எதுக்கு இவ்ளோ அவசரமா பரபரப்பா கிளம்பி இருக்கீங்கன்னு எனக்கு தெரியும்என்றவன் தன்வந்திரியை குறுகுறுவென பார்த்தான்.

அவன் பார்வையின் வீரியம் தாளாமல்,”டேய் திவா நா வேணாம்னு தான் சொன்னேன் உங்கம்மா தான் கேட்கலைஎன்று உளறி கொட்டி மகனிடம் சரணடைந்த கணவரை ஷியாமளா முறைத்து பார்க்க,

இதுக்கு தான் அவன்கிட்ட சொல்லிட்டு செய்யலாம்னு சொன்னேன் நீ கேட்கவே இல்லை அவனுக்கே விஷயம் தெரிஞ்சிருச்சுஎன்றார் தன்வந்திரி பரிதாபம் நிறைந்து.

அவனுக்கு எங்க தெரிஞ்சது  நீங்க தான் எல்லாத்தையும் உளறி கொட்டிடிங்க உங்ககிட்ட சொன்னேன் பாருங்க என்னை சொல்லணும்என்று சிடுசிடுத்தவர்

நீ நினைக்கிறது சரி தான் திவா உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணைய அமைச்சு கொடுக்க வேண்டிய பொறுப்பு கடமை எங்களுக்கு இருக்கு அதுக்கான வேலைய தான் பாத்துட்டு இருக்கோம். காலகாலத்துல நீ ஒரு பொண்ணை பாத்து ஓகே பண்ணியிருந்தா நாங்க எதுக்கு ஜாதகமும் கையுமா அலைஞ்சிருக்க போறோம்என்றார் மனகுறையோடு.

அம்மா மாதிரி பேசுங்க அடுத்தவங்க மாதிரி பேசாதிங்கஎன்றவன் சமையல் அறைக்குள் நுழைந்து தண்ணீரை குடித்து விட்டு வெளியே வந்தான்.

இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு விருப்பம் இல்லை நானே சொல்றேன் அப்ப கல்யாண பேச்சை எடுங்கஎன்றான் விட்டேரியாக.

ம்ஹும் நீ சொல்ற வரைக்கும் எங்களால காத்திட்டு இருக்க முடியாது இனிமே தான் இளமை திரும்ப போகுதா எங்களுக்கு?”.

ம்மா சொன்னா புரிஞ்சுக்கோங்க நானே சொல்றேன் அதுவரைக்கும் பொறுமையா இருங்க எனக்கு டைம் ஆச்சு கிளம்பனும்என்று அறைக்குள் மறைந்து கொண்டவனை இருவரும் பின் தொடர்ந்து சென்றனர்.

எத்தனை நாளைக்கு பொறுமையா இருக்கணும் அதையும் சொல்லிடு எதிர்பார்ப்பில்லமா எங்க வேலைய பாத்துட்டு இருப்போம்என்றார் சற்று வேகமாகவே.

ப்ச் ப்பா கூட்டிட்டு போங்க அம்மாவை டைம் ஆச்சு கல்யாணம் முடியட்டும் வந்து பேசிக்கிறேன் இப்போ என்ன கேட்டாலும் எப்டி கேட்டாலும் என்னோட பதில் ஒன்னு தான் எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்என்று தீர்க்கமாக உரைத்து விட்டு மாற்று உடையை எடுத்து கொண்டு குளியலறை புகுந்து கொண்டான் திவகார்.

டேய் திவாஎன்று சத்தமிட்டு அழைக்க,

விடு ஷியாமளா இப்போ எது சொன்னாலும் அவனுக்கு புரியாது எதுக்கு வீணா கத்திட்டு இருக்க வா போலாம்என்று அறையில் இருந்து வெளியே அழைத்து வந்தவர்,

காரியம் ப்ளஸ் வீரியம் ரெண்டுமே நமக்கு முக்கியம் அதனால நா என்ன சொல்றேன்னா இவன் சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டிட்டு போவோம் அங்க போய் என்ன பண்ண முடியுமோ அதை செய்யலாம். கல்யாணத்துக்கு போனா தான் நாம நினைச்ச காரியம் நடக்கும்என்று சமயோஜிதமாய் யோசித்து எண்ணத்தை சொல்ல,

அங்க வந்து ஏதாவது சொன்னான்னா, இங்க நம்ம கிட்ட பேசுறது சரி போன முறை மண்டபத்துல பேசுனானே பொண்ணோட அப்பாகிட்ட நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு அந்த மாதிரி ஊர் வேலையில இறங்கிட்டானா?”, பயம் தொனிக்க சொன்னார் ஷியாமளா.

அது மாதிரி எதுவும் நடக்காது என்னை நம்பு“. 

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் உங்களை நம்பி ஒரு விஷயத்தை சொன்னேனே நல்லா காப்பாத்துனிங்கஎன்று நொடித்து கொள்ள,

ப்ச் அது வேற ஷியாமா நாம பேசினதை கேட்டுட்டான் அதனால தான் சொல்ல வேண்டியதா போச்சு இனி அந்த மாதிரி பண்ண மாட்டேன் என்னை நம்பு. இனி இந்த தன்வந்திரியோட குணமே வேற பாக்க தானே போற என்னோட ஆட்டத்தைஎன்று பட வசனத்தை பந்தவாய் பேசியவர் அசைத்த கையை அந்தரத்தில் நிறுத்தி கொண்டார்.

என்னவென திரும்பி பார்த்த ஷியாமளா, “இது தான் உங்க ஆட்டமா?” என்று கிண்டல் தொனிக்க சொன்னவர், “கிளம்புங்க அவனே ரெடியாகி வந்துட்டான்என்று உடமைகளை எடுத்து கொள்ள,

நீங்க எங்க வர்றிங்க?” என்று தடுப்பை போட்டான் திவாகர்.

எங்கனா! ஜீவா கல்யாணத்துக்கு தான் வேற எங்க” ,சிறு அதிர்வு கலந்து  ஷியாமளா சொல்ல

இந்த வீட்டு சார்பா நா ஒருத்தன் போனா போதும் நீங்க வரவேண்டாம் ஜீவா கேட்டா நா பேசிக்கிறேன். நீங்க எதுக்கு வர்றிங்கன்னு எனக்கு தெரியாதா? ஒருத்தன் ஒரு முறை தான் அவமானப்பட முடியும் என்னை விட்டுருங்கஎன்று முடிவாய் கூறிட,

கணவன் மனைவி இருவரும் ஒருவரை வருத்தத்துடன் பார்த்து கொண்டனர்.

 “டேய் திவா எல்லாம் உன்னோட நல்லதுக்கு தான் பண்ணோம் அது வேற மாதிரி முடியும்னு எங்களுக்கு எப்டிடா தெரியும் அந்த ஒரு சம்பவத்தை மனசுல வச்சுகிட்டு பேசாதா அம்மா உனக்கு ஒரு நல்ல பொண்ணா பாத்து கட்டி வைக்கிறேன் நீ சரின்னு மட்டும் சொல்லுஎன்று நைச்சியமாய் பேசி அவனை சம்மதிக்க வைக்க முடியன்றார்.

ம்மாஎன்று பொறுமை அடக்கி கொண்டு அடிக்குரலில் சீறியவனை கண்டு,

 

விடு ஷியாமா அவனுக்கு தான் விருப்பம் இல்லைன்னு சொல்றானே விட்டுருஎன்று இடைப்புகுந்தார் தன்வந்திரி.

ஜீவா கல்யாணத்துக்கு மட்டும் தான் வறோம் வேற எந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை ப்பா உன்னை போல அவனும் எங்களுக்கு பையன் தான்என்றவர்,”ஷியாமா அந்த ஜாதகத்தை எங்க எடுத்தயோ அங்கயே போய் வச்சுட்டு வாஎன்று அதிகாரமாய் உரைத்திட,

வேறு எதுவும் பேசாமல் இருந்த இடத்திலேயே பத்திரப்படுத்திவிட்டு வந்தார் ஷியாமளா.

இதை பத்தி யாரும் எதுவும் பேச வேணாம் வாங்க போலாம்என்று உடைமைகள் அடங்கிய பையை எடுத்து கொண்டு வெளியேறிவிட்டார் தன்வந்திரி.

அவன் முன்னே நின்று நெடுநேரம் அதிகாரம் செய்ய முடியாது அளவாய் பேசிவிட்டு இடத்தை காலி செய்திட வேண்டும் இல்லையென்றால் பேசிய அனைத்தும் நடிப்பு என்று நொடி பொழுதில் கண்டு கொள்வான் என்ற பயத்தில் இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.

என்னமோ போடா எதுக்கும் கொடுப்பினை வேணும்என்று சலித்து கொண்டே வீட்டு சாவியை திவாகரின் கையில் திணித்து விட்டு மன அமைதியின்றி பயணத்திற்கு ஆயத்தமானார் ஷியாமளா.

நடை மட்டுமல்ல மனமும் சோர்ந்து செல்பவரை பார்க்க வருத்தமாய் தான் இருந்தது அவனுக்கு, அவன் மனதிலும் திருமண எண்ணம் இல்லாமல் இல்லை ஆனால் ஏதோ ஒன்று மனதை கட்டி வைக்க இயலமையோடு வீட்டை பூட்டியவன் மனதையும் பூட்டிவைத்துவிட்டு கிளம்பி சென்றான் திவாகர்.

மணம் வீசும்..

Advertisement