Monday, May 6, 2024

    siru pookkalin thee(yae)vae

    வதனாவின் முகத்தில் இன்னமும் குழப்ப ரேகைகள் கண்ட பிரியன் அவளை கூட்டத்தில் இருந்து தனியே பிரிந்து சற்று தள்ளிச் சென்றான்.   “வது என்னாச்சு?? ஏன் இவ்வளவு டல்லா இருக்கே?? நம்ம கல்யாணம் நடந்ததுல உனக்கு சந்தோசமில்லையா??”   “நம்ம கல்யாணம் நடந்ததுல சந்தோசம் தான்... ஆனா...”   “என்ன ஆனா??”   “ரொம்ப அவசரப்பட்டுடோமோன்னு இருக்கு...”   “நான் இப்போ கட்டலைன்னா நாளைக்கு அந்த பிரவீன் அதைத்தான்...
    மனதில் நின்ற காதலி மனைவியான தருணத்தை அனுபவிக்க எண்ணித்தான் அவளை அணைத்தான்.   ஆனால் அத்துடன் நிறுத்திக்கொள்ள முடியும் போல் தோன்றவில்லை அவனுக்கு. அவன் அணைப்பு இன்னமும் இறுகி அவள் இடையில் பதிந்த அவன் கரம் கொடுத்த அழுத்தத்தில் வதனாவின் உடல் நடுங்க தொடங்கியது.   அவனைவிட்டு நகர அவள் முயற்சி செய்ய ஒரு இன்ச் கூட அவளால் நகர...
    பிரியன் மதிய உணவை அலுவலகத்தில் முடித்துக் கொள்வான் என்பதால் அவனுக்கு உணவு தயாரிக்கும் வேலையில்லை அவளுக்கு.   ஆனாலும் அவளுக்கான மதிய உணவும் காலை இருவருக்குமான உணவு எல்லாம் அவள் தானே தயார் செய்துக் கொள்ள வேண்டும்.   அன்று காலையில் அப்படி ஒரு பரபரப்பில் இருவருக்குமாய் தோசை ஊற்றி முடித்துவிட்டு அவளுக்கான மதிய உணவை டப்பாவில் அடைத்துக்கொண்டு வந்து...
    “உங்களை பார்க்க ரெண்டு பேர் வந்திருக்காங்க...”   “யாரு?? என்னை எதுக்கு அவங்க பார்க்கணும்?? என்ன விஷயமா??” என்று கேள்விகளாய் தொடர்ந்தாள்.   “அவங்க பர்சனலா உங்களை பார்க்க வந்திருக்காங்க...” என்று சொல்லி முடித்துவிட்டான்.   “பர்சனலாவா!! யாரு?? அவங்க பேரென்ன??”   “மேம் அவங்க நம்ம சாரோட...”   “எந்த சாரோட??”   “வல்லவரையன் சாரோட...” என்று இப்போதும் அவன் முடிக்காமல் இருக்கவும் அவள் முகம் யோசனைக்கு தாவியது.   “அவருக்கு என்ன??”   “அவரோடபேரன்ட்ஸ்தான்...
    அறைக்கு வெகு நேரம் கழித்து சோர்ந்து போய் ராம் திரும்பி வரும் வரையில் சுகுணாவிற்கு உறக்கம் பிடிக்கவில்லை.   கணவனின் கவலை தோய்ந்த முகம் மனதை எதுவோ செய்ய “என்னாச்சுங்க??” என்றாள்.   ஏதோ நினைவில் கட்டிலில் அமர்ந்திருந்தவனை லேசாய் உலுக்க “என்ன?? என்ன சுகு??”   “என்னாச்சுங்க?? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க??”   “ஹ்ம்ம் ஒண்ணுமில்லை...”   “ஒண்ணுமே இல்லாம எல்லாம் நீங்க இவ்வளவு யோசிக்க...
    சுகுணாவின் பின்னேயே அவளறைக்கு சென்றவனுக்கு இருக்கையை அவள் காட்ட அவன் அமரவும் அவள் நின்ற வாக்கிலேயே இருக்க “உட்காரு” என்றான்.   “என்னை பத்தி உங்க வீட்டில சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். சோ நான் என்ன பேசணுமோ டைரக்ட்டாவே பேசிடறேன்” என்றுவிட்டு நிறுத்தினான் ராம்.   “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு, உனக்கு என்னை பிடிச்சிருக்கான்னு நான் கேட்பேன்னு நீ நினைக்க வேண்டாம்......
    பின்னால் இருந்து அவளை அணைத்தவன் “என்ன டார்லிங் வீட்டில யாருமில்லையா... பசங்க, வதனாலாம் எங்கே??” என்றவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து அவள் கன்னத்தில் தன் இதழ் பதிக்க அவளிடம் எந்த சலனமும் இல்லை.   “பார்க் போயிருக்காங்க...” என்றாள்.   “என்னாச்சு சுகு டல்லாயிருக்கே??” என்றவன் கட்டிலில் அமர்ந்துக் கொண்டு அவளை தன் மடி மீது அமர்த்திக்கொண்டான்.   “ஒண்ணுமில்லை...”   “வதனா என்ன...
    ராமிற்குள் குழப்பம், நடந்ததை இன்னமும் நம்ப முடியவில்லை அவனுக்கு. தான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்ற எண்ண ஊர்வலம்.   தன்னுடைய எண் எப்படி அவனுக்கு கிடைத்திருக்கும். அதுவொன்றும் பெரிய விஷயமில்லை தான் ராவ் கிரானைட்ஸ் என்ற தங்களின் அடையாளமே போதுமே...   ராமினால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. ராகேஷ் தற்போது ஆஸ்திரேலியாவில் இருப்பதை அவனறிவான். அவனின்...
    error: Content is protected !!