பிரியன் மதிய உணவை அலுவலகத்தில் முடித்துக் கொள்வான் என்பதால் அவனுக்கு உணவு தயாரிக்கும் வேலையில்லை அவளுக்கு.

 

ஆனாலும் அவளுக்கான மதிய உணவும் காலை இருவருக்குமான உணவு எல்லாம் அவள் தானே தயார் செய்துக் கொள்ள வேண்டும்.

 

அன்று காலையில் அப்படி ஒரு பரபரப்பில் இருவருக்குமாய் தோசை ஊற்றி முடித்துவிட்டு அவளுக்கான மதிய உணவை டப்பாவில் அடைத்துக்கொண்டு வந்து அவள் பையில் வைத்தாள்.

 

இன்னும் அரைமணி நேரம் தான் இருந்தது அவள் கல்லூரிக்கு கிளம்புவதற்கு. அவள் குளித்து கிளம்பத்தான் நேரம் சரியாக இருக்கும்.

 

அவள் அறைக்குள் நுழையவும் பிரியன் அவள் முகத்தில் சட்டையை விசிறியடிக்கவும் சரியாக இருந்தது.

பிரியனிடம் ஒரு கெட்டப் பழக்கம் உண்டு. அவன் கோபத்தில் எதையும் தூக்கி எறிவது அல்லது எதையாவது போட்டு உடைப்பது.

 

வதனாவிற்கும் அவனுக்குமானசிறு சிறு பூசல்கள் மட்டுமே என்பதால் இதுவரை அப்படி அவன் நடந்திருந்ததில்லை. இன்று தான் முதன் முறையாய் தன் அதீத கோபத்தை அவளிடத்தில் காட்டுக்கிறான்.

 

சண்டை போட்ட அன்று மாலை வீட்டிற்கு வந்த போது பிரியன் எப்போதும் போல் அவளிடத்தில் பேசினான். ஆனால் அவள் தான் எதுவும் பதில் சொல்லவில்லை.

 

ஓரிரு முறை பார்த்துவிட்டு சரி தான் போடி என்று விட்டுவிட்டான் அவன். அது தான் இப்போது ஒரு வாரத்திற்கும் மேல் சென்றுவிட்டது.

 

இருவருக்கும் சூழ்நிலையை கையாளத் தெரியவில்லை. இதனால் தான் பக்குவமில்லா மணங்கள் தோல்வியில் முடிகின்றன போலும்.

 

கூட்டுக்குடும்பமாய் இருந்தால் பக்குவம் இல்லதவர்களோ இல்லை பக்குவபட்டவர்களோ பெரியவர்களின்கண்காணிப்பில் இருப்பதால் தங்கள் பிரச்சனை வெளியே தெரியக் கூடாது என்று தங்களுக்குள் பேசி தீர்ப்பர்.

 

அப்படியே பெரிதாய் போனாலும் வீட்டு பெரியவர்கள் கவனித்து தீர்ப்பர். குழந்தைக்கு உடல் நலமில்லாமல் போனால் கூட ஆயிரம் கை வயித்தியம் வைத்திருப்பர்.

இப்போது போல் முணுக்கென்றால் மருத்துவரிடம் ஓடும் வழக்கம் அதில் இல்லை தான். கூட்டுக்குடும்பங்கள் இருந்த வரை இருக்கும் வரை கணவன் மனைவி பிரச்சனை என்பது அரிதானதே.

 

இப்போதுள்ள நாகரீக வளர்ச்சி கொண்டு வந்த மாற்றம் தனிக்குடித்தனங்களும் காதல் மணம் புரிவோரும் அதிகமாகி போயினர்.

 

நாலு பேர் இருக்கும் இடத்தில் தங்களுக்குள் இருக்கும் பிணக்கை பற்றி கணவன் மனைவி அமைதியாய் பேசுவர். பக்குவமில்லா மணமும் தனிக்குடித்தன வாழ்க்கையுமாக இருக்கும் தம்பதியர் தங்களுக்குள் கத்தி சண்டையிட்டு ஆளுக்கொரு பக்கமாய் முறுக்கேறிக் கொள்வர்.

 

வதனாவிற்கு, ஒரு குடும்பம் இப்படி தான் இருக்கும் என்று பார்த்து வளர்ந்தவளோ இல்லை அவளுக்கு எடுத்துச் சொல்லவோ அன்னையோ உற்றார் உறவினரோ யாருமில்லை.

 

“சாரிடா பிபி நிஜமாவே சாரி செல்லம்… நீ இவ்வளவு தனியா பீல் பண்ணுவேன்னு எனக்கு தெரியலை… ஏதோ வேலை டென்ஷன்… என் முன்கோபம் அதான் அப்படி எல்லாம்”

 

“இனிமே அப்படி இருக்க மாட்டேன், அதுக்காக நீயும் நான் எப்போடா பேசுவேன்னு பார்த்திருந்து என்கிட்ட பேசணும்ன்னு அவசியமில்லை…”

“நான் உன்னோட பிபி… இந்த பிரியாவோட பிரியன்… எப்பவும் அவளுக்கு பிரியமானவன்…”

 

“என்கிட்ட உரிமையா பேசவோ சண்டை போடவோ திட்டவோ அடிக்கவோ கொஞ்சவோ…” என்றவன்கடைசியாய் தன் உதடுகளை தொட்டுக் காட்டி “இங்க முத்தம் கொடுக்கவோ உனக்கு முழு உரிமையும் இருக்கு” என்று முடித்தான்.

 

“நான் சொல்றது புரியுதா… எனக்கு யார் இருக்கான்னு நினைச்சு நீ எப்பவும் அழக்கூடாது. உனக்கே உனக்கா உனக்கான உறவா நான் எப்பவும் இருப்பேன்…”

 

“ஹ்ம்ம்…”

 

“ஹ்ம்ம்எல்லாம் வேணாம்… உம்மா தான் வேணும்…” என்றவன் அவள் முகம் நிமிர்த்தி அவள் இதழில் தன் இதழ் முத்திரையை ஆழப் பதித்தான்.

 

மறுநாளைய விடியல் பொழுதில் அவனறையில் உறங்கிக் கொண்டிருந்த ராமிற்கு அழைப்பு என்று அவன் அம்மா வந்து அவனை எழுப்பினார்.

 

‘இந்த நேரத்தில் யாராய் இருக்கும்… வேண்டுமானால் என் மொபைலுக்கு கூப்பிட்டிருக்கலாமே…’ என்று எண்ணிக்கொண்டே  அவன் டிஷர்ட்டை எடுத்து மாட்டிக்கொண்டு ஹாலில் இருந்த தொலைபேசியை நோக்கிச் சென்றான் அவன்.

 

“ஹலோ எவரதி…”

 

“ராம்… பவள்… பவளப்பிரியன் பேசறேன்… பிரியன்…” என்றது எதிர்முனை.

 

தூக்கக்கலக்கத்தில் இருந்த ராமிற்கு நிஜமாகவே ஒன்றுமே புரியவில்லை. “எவரு நுவு?? நாக்கு தெல்லேது…”

 

“ராம் இட்ஸ் மீ பிரியன்… யூவர் கிளாஸ்மேட் பிரியன் ராகேஷ் பிரண்ட்” என்று தன்னை பலவிதமாய் புரிய வைக்க முயன்றவன் ஏதோ அவசரகதியாய் பேசுவது அப்போது தான் உணர்ந்தான் அவன்.

 

‘இவன் எதுக்கு எனக்கு போன் பண்ணுறான்… அதுவும் இந்த நேரத்துல…’ என்று புரியாமல் விழித்தான் ராம்.

 

இருவருக்குமான ஆங்கில உரையாடலை தமிழில் பார்ப்போம்… “என்ன விஷயம் நீ எதுக்கு எனக்கு கால் பண்ணுறே??”

 

“ராம் எனக்கு உன்னோட உதவி வேணும்…” என்ற பிரியன் குரலை கேட்டவனுக்கு அதை நம்புவது கடினமாயிருந்தது.

 

தான் கேட்டது பிரியனின் குரல் தானா என்று. அது அவன் குரலே என்பதை இப்போது அடையாளம் கண்டுவிட்டிருந்தான் தான் ஆனாலும் அவனுக்கு தான் உதவ வேண்டுமா எதற்காய்?? என்ற யோசனை குமிழ்கள் அவனிடத்தில்.