Advertisement

மனதில் நின்ற காதலி மனைவியான தருணத்தை அனுபவிக்க எண்ணித்தான் அவளை அணைத்தான்.

 

ஆனால் அத்துடன் நிறுத்திக்கொள்ள முடியும் போல் தோன்றவில்லை அவனுக்கு. அவன் அணைப்பு இன்னமும் இறுகி அவள் இடையில் பதிந்த அவன் கரம் கொடுத்த அழுத்தத்தில் வதனாவின் உடல் நடுங்க தொடங்கியது.

 

அவனைவிட்டு நகர அவள் முயற்சி செய்ய ஒரு இன்ச் கூட அவளால் நகர முடியவில்லை.

 

அவளை தன் புறம் திருப்பியவனின் கண்கள் அவள் கண்களை நோக்க அதில் அவன் கண்டதோ பயம் மட்டுமே…

 

என்ன செய்து விடுவானோ என்ற அச்சமும் கலவரமும் அவள் கண்களில் அப்பட்டமாய் வழிந்தது.

 

அவளை தள்ளி நிறுத்தியவன் ஒன்றும் சொல்லாமல் விருட்டென்று உள்ளே சென்றுவிட்டான்.

 

அவன் எதுவும் சொல்லாமல் சென்றது அவளுக்கு மேலும் கலக்கத்தை கொடுக்க கோபமாயிருக்கிறானோ என்று அவன் பின்னோடு உள்ளே சென்றாளவள்.

 

பிரவீனின் விஷயத்தில் வதனா தான் வெகுவாய் கலங்கி போயிருந்தாள். அவன் எதையும் துணிந்து செய்ய யோசிக்க மாட்டான் என்று சொல்லி பிரியனை எந்த வம்பிற்கும் போக வேண்டாம் என்று சொல்லியிருந்தாள்.

 

உண்மையிலேயே வெளியில் வந்திருந்த பிரியனுக்கு பிரவீனை ஒருவழியாக்க தான் எண்ணமே… தனக்காய்வருந்துபவளை எண்ணத்தில் கொண்டு பேசாமல் சென்றான்.

 

பிரவீனும் சற்று அடங்கியே இருந்தான் போலும்… அந்த கல்லூரில் இருந்து அவனை எப்போதோ டிஸ்மிஸ் செய்திருந்தனர்.

 

இருந்தாலும் அவ்வப்போது வெளியில் வதனாவின் பார்வையில் அவன் விழுந்துக் கொண்டே தானிருந்தான்.

 

அவள் செய்த தவறு அவனை கண்டதை பிரியனிடம் சொல்லியிருக்கவில்லை. எங்கே மீண்டும் ஒரு பிரச்சனை எழுமோ என்ற அச்சம் அவளுக்கு.

 

பிரியன் வெற்றிகரமாய் தன் கடைசி வருட படிப்பை முடித்திருந்தான். வதனாவும் மூன்றாம் வருடத்திற்கு வந்திருந்தாள்.

 

மேலும்இரண்டு மாதம் கடந்திருக்க பிரியன் வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தான்.

 

வாரம் ஒரு முறை வந்து வதனாவை பார்த்து செல்வது அவன் வழமை. அந்த வாரம் அவன் பெற்றோரை காண ஊருக்கு செல்வதால் வரமுடியாது என்பதை முன்பே அவளிடம் தெரிவித்திருந்தான்.

 

அதுவரை சமயம் பார்த்து காத்துக்கொண்டிருந்த குள்ளநரி பிரவீன் மெதுவாய் தன் வேலையை ஆரம்பித்தான்.

 

கோவில் என்றால் பொது இடம் எப்படியும் ஆட்கள் இருப்பார்கள், அங்கிருந்து எப்படியும் தப்பித்தே தீரவேண்டும் என்று வெகு தீவிரமாய் யோசிக்க ஆரம்பித்தாள்.

 

மெதுவாய் அவள் தயாராகி வெளியில் இருந்த கட்டிலில் வந்து அமர அந்த அறையின் கதவு திறந்து உள்ளே வந்தான் பிரவீன்.

 

“வாவ் பேபி சூப்பரா ரெடி ஆகிட்ட” என்றவன்“எதுவும் பிளான் பண்ணுறியா??”

 

“பிளான் பண்ணா மட்டும் என்ன நடக்கப் போகுது…” என்றாள் அலட்சியமாய்.

 

“அப்போ ஏதோ பிளான் பண்ணியிருக்க??”

 

“நான் என்ன பிளான் பண்ணாலும் அதை கண்டுப்பிடிச்சு நீ தான் முறியடிப்பேன்னு சொன்னேல… அதை செய்…” என்றுவிட்டு அமைதியாய் இருந்தாள் அவள். அவளின் ஐந்தே பேச்சே அவனுக்கு சந்தேகத்தை கிளம்பியது.

 

“சரி வா போவோம்… உன்திட்டம் என்னவா இருந்தாலும் அது நிறைவேறாது… அதையும் உன் மைன்ட்ல ஏத்திக்கோ” என்றுவிட்டு அவன் முன்னே செல்ல பின்னோடு அவளும் சென்றாள்.

 

வெளியில் நின்றிருந்த காரில் முன்னே டிரைவர் இருக்கையில் ஒருவனும் அருகே மற்றொருவனும் அமர்ந்துக்கொள்ள நடுவில் இருந்த இருக்கையில் அவளை அமரச்செய்து தானும் ஏறி அதில் அமர்ந்து கொண்டான் பிரவீன்.

 

மீதமிருந்த ஒருவனும் பிரவீனின் அருகிலேயே ஏறியிருக்க கார் அங்கிருந்து கிளம்பியது. உள்ளுக்குள் பதட்டம் எவரெஸ்ட்போல் உயர்ந்திருந்தாலும் வெளியில் ஒன்றும் காட்டிக்கொள்ளாமல் வேடிக்கை பார்த்தாள் அவள்.

 

பிரவீனுக்கு அவளின் இந்த நடவடிக்கை தான் அதிகம் யோசிக்க வைத்தது. எப்படிஎதுவுமேநடக்காதது போல அமைதியாய் இருக்கிறாள்.

 

அவளிடம் ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தையே எதிர்பார்த்திருந்தான் அவன். முதல் நாள் கூட அவ்வளவு பேசினாளே… என்று அவளை சுற்றியே யோசித்துக் கொண்டிருந்தான் பிரவீன்.

 

Advertisement