அறைக்கு வெகு நேரம் கழித்து சோர்ந்து போய் ராம் திரும்பி வரும் வரையில் சுகுணாவிற்கு உறக்கம் பிடிக்கவில்லை.

 

கணவனின் கவலை தோய்ந்த முகம் மனதை எதுவோ செய்ய “என்னாச்சுங்க??” என்றாள்.

 

ஏதோ நினைவில் கட்டிலில் அமர்ந்திருந்தவனை லேசாய் உலுக்க “என்ன?? என்ன சுகு??”

 

“என்னாச்சுங்க?? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க??”

 

“ஹ்ம்ம் ஒண்ணுமில்லை…”

 

“ஒண்ணுமே இல்லாம எல்லாம் நீங்க இவ்வளவு யோசிக்க மாட்டீங்க…”

 

“இந்த வல்லவனை பத்தி தான் யோசனை…”

 

“என்னாச்சுங்க அண்ணாய்யாக்கு, நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நேரமா பேசிட்டு இருந்த மாதிரி இருக்கு… என்னாச்சுன்னு சொன்னாங்களா??”

 

“ஆமா சுகு… அதை கேட்டு கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு… நானெல்லாம் கஷ்டமேபடலை தெரியுமா, எல்லாமே எனக்கு சுலபமா தான் கிடைச்சுது…”

 

“பட் வல்லா அப்படியில்லை தெரியுமா…”

 

 

“என்னாச்சு அவர் எத்தனை மணிக்கு வர்றதா சொன்னார்??” என்று அங்கிருந்தவர்களை விரட்டிக் கொண்டிருந்த அந்த தும்பைப்பூ தலைக்காரருக்கு என்பது வயதிருக்கும்.

 

இந்த வயதிலும் திடகாத்திரமாய் இருந்தார் அவர். அங்கிருந்தவர்கள் அத்தனை பேரும் அவரின் சொல்லுக்கு அடிப்பணிபவர்களாய் இருந்தனர்.

 

இந்த வயதிலும் தடி ஊன்றாதவர், பார்வையில் அப்படியொரு கூர்மை. அவர் மக்களைவிட அவர் கம்பீரமாய் நடப்பார்.

 

அனைவராலும் வி.கே.பி என்றழைக்கப்படும் அவரின் பெயர் வரகுணபாண்டியன்.

 

“நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலை… இன்னும் என்ன தான் செஞ்சுட்டு இருக்கீங்க எல்லாரும், கொஞ்சமாச்சும் பொறுப்பிருக்கா…” என்று அவர் கொஞ்சம் அதட்டலாய் பேசவும் அவர் முன் வந்து நின்றார் அவரின் மூன்றாம் மருமகள்.

 

“இல்லை மாமா அவர் அதை தான் போன் பண்ணி கன்பார்ம் பண்ணிக்கிட்டு இருக்கார்…” என்று அவர் முடிக்கும் முன்பே வி.கே.பியின் மூன்றாம் மகன் குலசேகரன் வந்து நின்றிருந்தார்.

 

 

“அந்த பொண்ணு இந்த வீட்டுக்கு வர்றது தான் இந்த குடும்பத்துக்கு நல்லது…இனி இந்த வீட்டுக்கு வாரிசு அந்த பொண்ணு தான், இதை நான் அப்போவே சொன்னேன் நீங்க மறந்தாச்சு…” என்றார்சாஸ்திரி குற்றம் சாட்டும் விதமாய்.

 

“இனி தாமதிக்காம அவளை இங்க கூட்டிட்டு வர்றோம்… இந்த குடும்பத்துல இனி எந்த இழப்பும் ஆகாம இருக்க வேற எதுவும் பரிகாரம் இருக்கா…” என்றார் பெரியவர்.

 

சாஸ்திரி ஒன்றும் சொல்லாமல் அருகில் வைத்திருந்த தன் துணிப்பையில் இருந்து சோழிகளை எடுத்தார். தரையில் அதை உருட்டி எதையோ கணித்தார். பின் கண் மூடி நிதானித்தார்.

 

மெதுவாய் கண்ணை திறந்தவர் “உங்க வம்சம் தழைச்சிருக்கே!!”

 

“என்ன சொல்றீங்க??” என்று அருகில் இருந்த அனைவருமே கோரசாய் கேட்டனர்.

 

“பெண் வாரிசு இல்லாத உங்க குடும்பத்துல அடுத்த பெண் வாரிசும் உண்டாகியிருக்கே!! அது இப்போ வளர்ந்து நிக்குதே!! அழைச்சுட்டு வரும் போது ரெண்டுபேரையும் ஒண்ணாவே கூட்டிட்டு வாங்க”

 

“கடைசியா ஒரு விஷயம்… எக்காரணம் கொண்டு அந்த ஆளு கூட இவங்க சேரவே கூடாது… அப்படி சேர்ந்தா அவங்க இங்க வரமாட்டாங்க… உங்களோட பிரச்சனைகளும் எப்பவும் முடியாது…” என்று சொல்லி முடித்தார் சாஸ்திரி.