Sunday, May 19, 2024

    Kanavu Kai Sernthathu

    கனவு கைசேர்ந்தது. அத்தியாயம் 09. அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆதலால் எந்த பரபரப்புமின்றி மெதுவாக கண்விழித்தாள் பவானி. இரண்டு மாதகால திருமண வாழ்வில் முகம் பூரித்துப் போய்க் கிடந்தது. தலையைத் திருப்பி பக்கத்தில் பார்க்க,  அசந்து தூங்கிக் கொண்டிருந்தான் கணவன். நேற்று  ஈரோடு எஸ்பி யாக இடமாறுதலாகி வந்திருக்கும் தன் நண்பன் சந்தீப் ஐ சந்தித்து விட்டு பரணிதரன்  வரும்போதே இரவு...
    அதிலிருந்து சிம்கார்டை வேறு ஒரு ஃபோனில் போட்டு ஆக்டிவேட் செய்து பார்க்கும் போது கடைசியாக அவன் பேசிய எண் இந்த கைத்தடியுடையதாக  இருக்கவே இவனுக்கு ஃபோன் செய்திருக்கிறார் அந்த காவல் துறை அதிகாரி. ஆக்ஸிடென்ட் ஆனவனின் நிலையைக் குறித்து  இங்கே இருந்த அதிகாரி கேட்க,"உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால் கைகால் எல்லாம் பயங்கர முறிவு இருக்கும் போல"...
    இப்போது வாசித்தல்  அவளுக்கு சுவாசித்தல் போலாக,  இதோ சிவகாமியின் சபதம் நான்காவது பாகம் வாசித்து கொண்டிருக்கிறாள். அதையும் தனது பேறுகாலத்திற்கு முன்னால் வாசித்து முடித்துவிட வேண்டும் என்று ஆண்டு இறுதி தேர்விற்காக தயாராகிக் கொண்டிருக்கும் வீட்டின் இளையவர்களுடன் தானும் போட்டி போட்டு கொண்டு படித்துக்கொண்டிருக்கிறாள் பவானி. ஓடும் தண்ணீரில் எப்படி பாசிபிடிக்க முடியாதோ, அதேப்போல பவானியின் உலகம்...
    கனவு கைசேர்ந்தது. அத்தியாயம் 11. "சிட்அவுட்ல சிட்டுக் குருவி கூடு கட்டியிருக்கு பார்த்தியா கோத..."  பால் விற்பனை முடிந்து ஒரு பத்து மணிக்கு போல் வந்த மதியழகன், வீட்டுக்கு முன்பக்கத்தில் நின்ற மரங்களிலிருந்து விழுந்து கிடந்த இலைச்சருகுகளை பெருக்கிக் கொண்டிருந்த தன் மனைவியைப் பார்த்து கேட்டார்.  "ம்ம்...பார்த்தேன் ங்க...இப்ப இரண்டுமூனு நாளைக்கு முன்னாடி பாக்கும் போது கூட இல்லீங்களே! அதற்கிடையில்...
    களைத்து போயிருந்த மனைவியை தன் கையணைவில்  மேலே தங்கள் அறைக்கு அழைத்து வந்திருந்தான் பரணிதரன். அறைக்குள் வந்து மனைவியை கட்டிலில் அமர்த்தி, அந்த சோர்ந்து போன பூமுகத்தை தன் இருகைகளிலும் தாங்கி தன் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் ஒற்றை முத்தமாக்கி மனைவியின் பிறைநுதலில் இட்டு மகிழ்ந்தவன்,"ரொம்ப... ரொம்ப...நன்றி... பவானி" என்றான் காதலாக. குரல் தந்தையாகப் போகும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது... பவானியின்...

    Kanavu Kai Sernthathu 19 1

    கனவு கைசேர்ந்தது. அத்தியாயம் 19. அன்று வீடே ஒளிவெள்ளத்தில் ஜெகஜோதியாக மின்னிக்கொண்டிருந்தது. குழந்தை சிந்துவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஹால் முழுவதும் வண்ணவண்ண கலர் பேப்பர்களாலும் பலூன்களாலும் அலங்கரித்திருந்தனர் பவித்ராவும் நந்தினியும். சுவரெங்கும் டோரா புஜ்ஜி, மிக்கி மௌஸ், டாம் அண்ட் ஜெர்ரி, சோட்டா பீம், சுட்கி என்று குழந்தைகள் ரசிக்கும் கார்ட்டூன்களின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தது. ஹாலின் நடுவே கேக் கட் பண்ணுவதற்கு...

    Kanavu Kai Sernthathu 19 2

    சிந்து பிறந்த நாள் முடிந்து ஐந்து நாட்களுக்கு பிறகு திருச்செந்தூர் முருகப்பெருமானின் திருஆலயத்தில் வைத்து அவளுக்கு பிறந்த முடி இறக்குவதற்காக எல்லோரும் வந்திருக்கிறார்கள். பொதுவாக குழந்தைகளுக்கு ஒன்பது அல்லது பதினோராவது மாதத்தில் இதை செய்வது வழக்கமென்றாலும் பரணிதரன் வீட்டில் இல்லாத காரணத்தால் யாரும் இதைப்பற்றி பேசவே இல்லை. இப்போது அவன் வந்திருக்கவே அதற்கு மேலும் தாமதிக்காமல் குடும்பத்தோடு...

    Kanavu Kai Sernthathu 20 1

    கனவு கைசேர்ந்தது. அத்தியாயம் 20 ( Pre final ) அந்த ஆழிமுத்தையே தன் கைகளில் அள்ளிக்கொண்டு வந்த பாவனையில் பவித்ராவை சுமந்து வந்தான் குமரன்.  அவன் கைகளில் அவளை கண்டபின்பு தான் கரையில் நின்றிருந்தவர்களின் மூச்சே நேரானது.  யார் செய்த புண்ணியமோ ஓங்கி அடித்த அந்த பெரிய அலையை தொடர்ந்து வந்த மற்றொரு பெரிய அலை உள்ளே இழுக்கப்பட்ட...
    கனவு கைசேர்ந்தது. அத்தியாயம் 12. திறந்திருந்த ஜன்னல் வழியே இரவு நேரக் காற்று சிலுசிலுவென்று வீசிக்கொண்டிருந்தது. அந்த காற்றின் குளுமையை அனுபவிக்கும் மனநிலை மாடி அறையில் தங்களது படுக்கையில் இருந்த தம்பதியருக்கு இல்லை.   ஜன்னல் வழியே வானில் தெரிந்த நிலவு கூட, ஏனோ கொஞ்சம் சோம்பலாக வானில் ஊர்வலம் போய்க்கொண்டிருந்தது போல் இருந்தது பரணிதரனின் கண்களுக்கு...  கணவனின் மார்பில் தஞ்சம்...

    Kanavu Kai Sernthathu 16 1

    கனவு கைசேர்ந்தது. அத்தியாயம் 16. சூரியன் கீழ்வானில் உதயமாகும் அந்த அதிகாலை நேரத்தில் தன் தாய்க்கு அதிகப்படியான சிரமம் எதையும் கொடுக்காமல் நலமாகவே பிறந்தது பரணிதரன் பவானி தம்பதியினரின் பெண்குழந்தை. வீட்டில் இருந்து கிளம்பும் போதே மருத்துவருக்கு ஃபோன் செய்து பரணிதரன் விசயத்தை சொல்லிவிடவே மருத்துவமனையில் தயாராக இருந்தார் டாக்டர் ஜானகி.  ஹாஸ்பிடல் வந்து சேரவும் மருத்துவர் இது பிரசவ...
    கனவு கைசேர்ந்தது. அத்தியாயம் 15. வீட்டின் முற்றத்தில் அலுங்காமல் குலுங்காமல் கணவன் கொண்டு வந்து நிறுத்திய ஸ்கார்பியோவிலிருந்து இறங்கினாள் பவானி. இறங்கியவள் தனது அலுவலக பைகளோடு சேர்த்து கணவனுடையதையும்  எடுக்க முயல,"உன்னோட பேக்ஸ்ஸையே விட்டுட்டு போன்னு நான் சொன்னா நீ என்னோடதையும் சேர்த்து அள்ளிக்கட்டுறியா? ஓடு..." என்று அவன் செல்லமாய் விரட்ட "தாராளமா... கொண்டுவாங்க எனக்கென்ன வந்துச்சு?" என்று சிரித்தபடியே...
    கனவு கைசேர்ந்தது. அத்தியாயம் 13. ஹாலில் குழுமியிருந்த வீட்டு உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் முகமும் ஒவ்வொரு உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தது. நேரம் இரவு ஏழு மணி... ஹாலில் கிடந்த அந்த பெரிய சோஃபாவில் தன் அக்காவின் மடியில் தலைசாய்ந்திருந்த நந்தினியின் கண்களோ சுவரில் பளிச்சிட்டு கொண்டிருந்த டியூப் லைட்டையே வெறித்தபடி இருந்தது. திவ்யா தன் கைகளால் தங்கையின் முதுகைத் தடவி அவளை...
    கனவு கைசேர்ந்தது. அத்தியாயம் 14. மறுநாள் காலை வழக்கம் போல நந்தினி பள்ளிக்கு கிளம்பி நின்றாள். அதைக் கண்ட கோதை நாயகிக்கு சந்தோஷத்தில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மகள் பள்ளிக்கு இனி செல்லப் போவதில்லை என்று சொன்ன போது அதிர்ந்து தான் போனார். ஆனால் அவளை கண்டிப்பதற்கான சூழ்நிலை அப்போது இல்லாத காரணத்தினால் அமைதியாக இருந்தார். ஆனால் தன் மகனோ...

    Kanavu Kai Sernthathu 17 1

    கனவு கைசேர்ந்தது. அத்தியாயம் 17. பரணிதரன் வேலையை விட்டு விடுவதாகச் சொல்ல மதியழகனோடு சேர்ந்து எல்லாருமே அதிர்ச்சியாகத் தான் பார்த்தார்கள் பரணிதரனை. மதியழகனோ மருமகளைப் பார்க்க, அவளின் முகபாவம் கணவனின் முடிவு ஏற்கனவே அவளுக்குத் தெரியும் என்று சொன்னது. "என்னப்பா திடீருன்னு இப்படி ஒரு முடிவு?" மதியழகன் தான் கேட்டிருந்தார்.  "திடீர்னு இல்லப்பா...கொஞ்சநாளாவே எம்மனசுல இந்த எண்ணம் ஓடிட்டு தான் இருக்கு"...
    error: Content is protected !!