Sunday, July 19, 2026

    Ennithayam Keta Aaruthal

                        என்னிதயம் கேட்ட ஆறுதல் - 10 சுற்றி இருக்கும் ஆட்கள் பிடிக்கவில்லை எனில், அவர்களிடம் இருந்து விலகிப் போகலாம். சூழல் பிடிக்கவில்லை எனில், வேறெங்கிலும் செல்லலாம். ஆனால், நமக்குள்ளே தோன்றும் எண்ணங்களே நமக்கு பிடிக்கவில்லை எனில்? என்ன செய்திட முடியும்??!!  எங்கு சென்று ஓடி ஒழிய முடியும்??!! வானதி ‘ஜிங்கிள்ஸ்...’லும், இளம்பரிதி ‘மருந்துக்கள்’ ன் பின்னேயும் சென்று தங்களை புகுத்திக்கொண்டனர்.. நேரம் காலம்...
    அத்தியாயம் – 23 மறுநாளே விஜயனும், மோகனாவும் ஜிங்கிள்ஸ்கான புதிய இடத்தினை பார்த்துவிட்டு வர, ஒரு நல்ல நாள் பார்த்து முன் பணம் கொடுத்து பேசி முடித்துவிடலாம் என்று முடிவானது. வானதிக்கும் சரி, இளம்பரிதிக்கும் சரி மனதிலும் உடலிலும் ஒரு புதிய உற்சாகம் தோன்ற, கிடைக்கும் தனிமைகளை எல்லாம் தங்களுக்கு ஏற்ற வகையில் ரசித்துக்கொண்டு இருக்க, ...
    அத்தியாயம் –19 எதிர் எதிர் இருக்கையில் இளாவும், தியாகுவும் அமர்ந்திருக்க, இளம்பரிதிக்கு தியாகு கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியவில்லை. இதற்கும் இளாவின் கவனிப்பில் தான் ஷாலினி மருத்துவமனையில் இருந்தாள் என்பது அவனுக்குத்  தெரிந்திருக்கவில்லை. இளம்பரிதி நினைத்துக் கூட பார்க்கவில்லை, தனக்கு வாழ்வில் இப்படியொரு சூழல் வரும் என்று. தானுண்டு தன் வாழ்வுண்டு என்று வாழ...
    அத்தியாயம் – 24 கொடைக்கானல்... அழகிய மலையகம். மிதமான குளிரையும் தாண்டி, அந்த காலைப் பொழுதில் உடலை சில்லிட வைக்கும் குளிர். பொழுது விடிந்து பல நேரம் ஆகியும் கூட இன்னும் எங்களுக்கு விடியவில்லை என்பதுபோலவே இருந்தனர் இளம்பரிதியும், வானதியும். முதல் நாள் மதியம் வந்திருந்தனர். இதற்கு முன் இருவருமே இங்கே வந்திருந்தாலும், இது ஒரு புதிய உணர்வு. ஒரு...
    என்னிதயம் கேட்ட ஆறுதல் – 16 வீட்டினுள் நுழைந்த வானதிக்கு அப்படியொரு கோபம். இன்னதென்று அளவிட முடியாத அளவு ஓர் உணர்வு வந்து அவளை அழுத்தியது. நான் என்ன பேச போனேன், அதற்கு அவன் என்ன இப்படி பேசிவிட்டான் என்று. அதிலும் இளா, திருமணம் பற்றி பேசியது, தாங்கிடவே முடியவில்லை. தனக்கு மட்டும் ஏன் இப்படி திருமணம்...
    அத்தியாயம் - 26                         இளம்பரிதி நினைத்தது போலவே எல்லாம் நடந்தாலும், அவன் எதிர்பாரா ஒன்றும் நடந்தது. அவன் மட்டுமல்ல யாருமே எதிர்பாரா ஒன்று. அதுதான் இளம்பரிதி – வானதி இருவருக்கும் நடந்தேறிய பிளவு...! ஆம்..! பிளவு தான்.... பிரிவு என்பதனை தாண்டி அதை...
    நீயும் தானே இவர்களோடு வந்தாய்.. அப்போ உனக்கு தெரியாது இருக்குமா என்று... ‘மீட் பண்ணதுக்கு இந்தக்கா இவ்வளோ அக்கப்போர் செய்யுது...’ என்று நினைத்தவன், அருணைக் காண, அவனோ சொல்லிவிடாதே என்று பார்வையில் பேச, “அப்போ நான் சொன்னா நம்ப மாட்டீங்களா?? வெளியாளுங்களை வச்சுத்தான் இதெல்லாம் பேசணுமா??” என்றாள் வானதி. அவ்வளோதான், இதற்குமேல் இளா பொறுப்பானா என்ன??     “இங்க பாருக்கா... நீ இவங்களுக்கு  கல்யாணம் பண்ணு இல்லை...
                       என்னிதயம் கேட்ட ஆறுதல் – 9 ஒருபக்கம் நிச்சய வேலைகள் பரபரப்பாய் நடந்து கொண்டு இருக்க, இளம்பரிதிக்கு பெண் பார்க்கும் படலமும் மிக மும்முரமாய் நடந்துகொண்டு இருந்தது. வெற்றிவேலன் விஜயனிடமும் மோகனாவிடமும் பேசியிருந்தார். போதாத குறைக்கு சரோஜா வேறு “அருண் வேற இளா வேறன்னு நாங்க நினைக்கல.. என்னவோ.. இளாக்கு அங்க வேலை செய்ய பிடிக்கல.. அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா...
                                                      என்னிதயம் கேட்ட ஆறுதல் – 2 “என்ன அருண் சொல்ற நீ??!!” என்று இளா கேட்டமைக்கு, ‘நீயுமாடா...’ என்றுதான் பார்த்தான் அருண். இளம்பரிதிக்கு இதில் எவ்வித ஒப்புதலும் இல்லை. கட்டிக்கொள்ளப் போகும் இருவரில் ஒருத்திக்கு இவ்விசயமே தெரியாது, இவனுக்கோ உடன் பாடு இருப்பதாய் தெரியவில்லை. இதில் வீட்டினர் சொல்லி கேட்காதவன் தான் சொல்லி கேட்பானா?!! அப்படி என்ன இந்தத் திருமணம்...
    அத்தியாயம் – 20 எதிர்பாராததை எதிர்பார் – திருமண வாழ்வில் இது எத்துனை நிஜம்...! இளம்பரிதி இதனை நன்கு உணர்ந்த தினம் இது என்றுதான் சொல்லிட வேண்டும். ராதாவின் அழைப்பை மறுக்க முடியாது, அதுவும் வானதியும் பைக்கில் செல்வோம் என்று சொல்லியபிறகு, முடியாது என்று சொல்ல முடியாது, இருவரும் கிளம்ப, அங்கே சென்று சிறிது நேரம் வரைக்கும்...
    “ஷ்..!! சத்தம் போடாதே...” என்று ஹஸ்கி வாய்சில் சொன்னவன், “கொஞ்ச நேரத்துல உனக்கு அப்படியா பறக்குற மாதிரி இருக்கும்.. செமையா இருக்கும்..” என்று கண்களை சொருகவிட்டு சொல்ல, பயமாகிப் போனது வானதிக்கு. இவன் சீரழிந்தது போதாது என்று, என்னையும் இதற்கு பழக்கம் செய்யப் பார்க்கிறானா??!! நானா..??!! நோ.... அவன் சொன்ன அந்த ‘கொஞ்ச நேரம்...’ அது வருவதற்குள், இவனிடம் இருந்து வெளி செல்ல வேண்டும் என்று துரிதமாய் நினைத்தவள்,...
                             என்னிதயம் கேட்ட ஆறுதல் – 5 ‘வானதியா??!!!’ என்று அருணின் உள்ளம் திடுக்கிட, “அ..!! அ... சொல்லுங்க...” என்றான் தன் பதற்றம் மறைக்க பெரும்பாடு பட்டு. இருந்தும் அது வானதிக்கு நன்கு தெரிந்து விட “கூல்...” என்றாள் மெதுவாக. அருணோ இதற்கு தான் என்ன பதில் சொல்ல என்பதுபோல் விழித்து நிற்க “ஆக்சுவலி... உங்களோட நான் கொஞ்சம் பேசணும்...” என்று அடுத்து வானதி...
    அத்தியாயம் - 22 அழகிய சங்கமம்...! இருவருக்கும் இடையில் அனைத்தும் அப்படியே தான் இருந்தது. பேசிக்கொள்ள வேண்டியதும் தெரிந்துகொள்ள வேண்டியதும் நிறையவே இருந்தது. இருந்தாலும் வாழ்வின் அடுத்த கட்டம், இந்நிலை என்பது பல விசயங்களுக்கு பதிலை கொடுத்துவிட்டதாகவே தான் இருவரும் நினைத்தனர். உறக்கம் என்பது வெகு நேரம் கழித்தே என்றாலும், உறங்கியதும் வெகு சிறு நேரமே.. விழிப்பு வந்துவிட,...
    அத்தியாயம் – 27 இளம்பரிதிக்கு வானதியின் பார்வையை எதிர்கொள்ளவே முடியவில்லை. அப்படியெனில் அவள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் மட்டும் எப்படி சொல்லிடுவான். மறுநாள் அவளை அழைக்கவென்று இளம்பரிதி வந்திருக்க, வானதி எதுவும் காட்டிக்கொள்ளாது அவனோடு கிளம்பினாள்தான். என்ன பிருந்தாவிடம் முகம் கொடுத்து பேசிட முடியவில்லை. அதெப்படி முடியும் அவளுக்கு?! இளா ஆவலாய் அவள் முகம் பார்க்க, அவளோ...
    என்னிதயம் கேட்ட ஆறுதல் – 17 சரோஜா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அபிராமியம்மன் கோவிலில் அருண் பெயரில் பூஜையும், அன்னதானமும் நடந்துகொண்டு இருந்தது. அனைத்தும் இளாவின் மேற்பார்வையில். கோபியும் அங்கே அவனோடு இருக்க, இளம்பரிதி அவனை ஒரு பொருட்டாய் கூட மதிக்கவில்லை. சரோஜாவும் ரேணுகாவும் கூட அங்கேதான் இருந்தார்கள். சரோஜா கோபியை ஒரு புழுவைப் பார்ப்பது போல்...
                         என்னிதயம் கேட்ட ஆறுதல் – 3 “வானதிம்மா...” என்றபடி ராதா வாசலுக்கே வந்துவிட, பிருந்தாவோ கணவனை கேள்வியாய் பார்த்தவள் பின் “வா வானதி...” என, “அடடா என்ன வரவேற்பு எல்லாம் பலமா இருக்கே.. விட்டா மாலை மரியாதை எல்லாம் செய்வீங்க போல...” என்று சொல்லி சிரிக்க, மற்றவர்கள் தான் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். “என்ன இப்போ.. நான் இப்படி வாசல்லயே நிக்கனுமா இல்லை...”...
                         என்னிதயம் கேட்ட ஆறுதல் – 15 இளாவிற்கு கொஞ்சம் அதிர்ச்சி தான். சரோஜாவும் ரேணுவும் வீட்டிற்கு வந்தது. வானதிக்கு கொஞ்சம் சங்கடமும் கூட. தயக்கமும் கூட. “வா... வாங்கத்தை... வாங்கக்கா...” என்றவளுக்கு அதை தாண்டி பேச்சு வரவில்லை. பிருந்தா முன்னிலையில் இளம்பரிதியோடு பேசவே அவளுக்கு மனதில் ஓர் ஓரத்தில் உறுத்திக்கொண்டே இருந்ததுதான். என்ன இருந்தாலும் அருண் அவளின் தம்பி அல்லவா.. தம்பியை மணக்க இருந்தவள்,...
                         என்னிதயம் கேட்ட ஆறுதல் – 7 அருணுக்கு துணிந்து எந்தவொரு முடிவிற்கும் வர முடியவில்லை. சரி என்று முழுமனதாகவும் சொல்லிட முடியவில்லை. அவனின் மனது வேண்டாம் என்ற பக்கமே வேகமாய் சென்றுகொண்டு இருக்க, வீட்டிலோ இவனின் மௌனம் கண்டு நல்லமுடிவாய் சொல்லப் போகிறான் என்றெண்ணி சரோஜா, ரேனுவிடம் “ஆள் விட்டு வீடெல்லாம் கொஞ்சம் சுத்தம் செய்யணும்... தட்டு மாத்துறது அவங்க...
                         என்னிதயம் கேட்ட ஆறுதல் – 11 “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை…” தூரத்தில் எங்கோ இந்த பாடல் வரிகள் கேட்க, இளம்பரிதிக்கு இவ்வரிகள் செவியில் விழுந்த நொடி மனதில் தோன்றியது ஒன்றே ஒன்றுதான் ‘எத்தனை நிதர்சனம் இது...’ என்று பின்னே நடந்தவைகள் அனைத்தும் யாரும் நினைத்திராதவை அல்லவா...! தன் புறங்கையை நெற்றி மீது வைத்து கொட்ட கொட்ட முழித்து படுத்திருந்தான். அவனுக்கு அருகே...
                         என்னிதயம் கேட்ட ஆறுதல் – 14 எத்துனை கடினமான சூழல் என்றாலும், அதனை கடந்து வந்து தானே ஆகிட வேண்டும்.! தேங்கி அதனிலயே நின்றுவிட முடியாதே..! அப்படியொரு முடிவினில் தான் இருந்தான் இளம்பரிதி. எதுவாகினும் சரி நின்று பார்த்துவிடுவது என்று.. யாராகினும் சரி, நீயா நானவென்று பார்த்துவிடலாம் என்று.. அது வானதியானாலும் சரி.. வெற்றிவேலன் என்றாலும் சரி... இல்லை யாரோ என்றாலும் சரி.. மற்ற அனைத்தையும் விட, அவனுக்கு இப்போது அவனின் மன...
    error: Content is protected !!