குறுந்தொகை காதல் மைந்தா
அப்போது கையில் பார்சலுடன் அறைக்குள் வந்த ஆதி, அவள் தரையில் படுத்திருப்பதைக் கண்டு எங்கே மீண்டும் மயங்கிவிட்டாளோ என்று பதட்டப்பட, சிவாவோ சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.
அவளுக்கு ஒன்றுமில்லை என்ற பிறகு தான் அவனுக்கு மூச்சே வந்தது. ஆசுவாசமாய் மூச்சு விட்டவன்,
“கவி இதுல சாப்பாடு இருக்கு. அவளுக்கு வச்சுக் குடுத்துட்டு நீயும் சாப்பிடுமா”என்றான் ஆதி.
“பரவாயில்லண்ணா” என்றாள்...
“டேய் பாண்டி, இவ பொருளை எல்லாம் மேல எடுத்துட்டு வா” என்றவன் அவள் மறுப்பையும் மீறி, தூக்கிக் கொண்டு போய் அவனறையில் விட்டிருந்தான். பாண்டியிடமிருந்து பெட்டிகளை வாங்கி உள்ளே வைத்தவன்,
“கவிம்மா, கொஞ்ச நேரம் கூட இரும்மா, இதோ வந்திடுறேன்” என்றபடி வெளியே சென்று விட்டான்.
கீழே சென்றவன் நேராக விசாலாட்சியிடம் தான் சென்றான்.
“உங்களுக்கு இருக்குறது வாயா...
அத்யாயம் 8:
“ஏதாவது குடிக்கிறியா?” என்ற ஆதியின் வார்த்தைகள் சிவாவின் காதுகளில் விழுந்ததைப் போல் தெரியவில்லை. அவள் அந்த புகைப்படத்தையே வெறித்துக் கொண்டிருக்க, வேறுவழியின்றி அவளைத் தோள் தொட்டு அசைத்தான் ஆதி.
அவனின் தொடுதலில் உணர்விற்கு வந்தவள் சட்டென்று அவன் கையைத் தட்டிவிட்டிருந்தாள். அவளின் செய்கையில் பல்லைக் கடித்தபடி தலையில் கை வைத்தவனுக்கு எரிச்சலாய் வந்தது.
அப்போது அங்கே...
“டேய் ஆதி உங்க சுபா அத்தை பாப்பா பார்க்க பொம்மை மாதிரி பொசுபொசுன்னு அழகா இருக்குடா” என்று பாண்டி விளையாடும் போது சொல்லியிருக்க, யாருக்கும் தெரியாமல் சுபாவைப் பார்க்க சென்றிருந்தான் ஆதி கேசவன்.
“ஆதி” என்ற சுபா அவனை அணைத்துக் கொள்ள, அவனோ ஒரு திமிருடன் வீராப்பாய் முகத்தை திருப்பிக் கொண்டான்.
“அத்தைய பார்க்க மாட்டியா?” என்றாள்...
அத்யாயம் 7:
சிவாவின் வீட்டில் கிருஷ்ணனின் நிலைமையோ அதைவிட மோசம். எப்போதும் அவரை சுற்றியே இருக்கும் மகள் இல்லாத வீடு அவருக்கு வெறுமையாய் காட்சியளித்தது. வீட்டில் இருக்கும் நேரம் முழுவதும் அவர் பின்னேயே சுற்றிக் கொண்டிருப்பாள். தோட்டத்திலும் அப்படித்தான். அவளின்றி அவருக்கு அணுவும் அசையாது. எங்கு பார்த்தாலும் மகள் முகமே அவர் கண் முன் வர,...
“சிவா” என்று கவிதா அவளை அமைதிப்படுத்த, ஆதியின் கைப்பிடியில் இருந்து ஆவேசமாய் கையை உறுவிக் கொண்டவள்,
கழுத்தில் இருந்த மாலையையும் கழட்டி விசிறியிருந்தாள். கை வேகமாய் தாலிக்கும் போக,
“சிவா” என்று வேகமாய் ரேணுகா அவள் கை பிடித்து தடுத்திருந்தார்.
“என் பையன் கல்யாணத்தை பார்க்குற குடுப்பினை தான் இல்லாம போச்சு. இப்ப இதையும் கழட்டி என்னை மொத்தமா...
“பிரச்சனையை முடிச்சுட்டு ஆதி வர்றான்னு நினைக்கிறேன். நடந்ததை அவன்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ” என்ற விசாலாட்சி திரும்பி வாசல் பக்கம் பார்க்க, சிவ தீர்த்தாவுடன் அவன் ஜோடியாக வருவான் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
ஆதிகேசவனையும் சிவ தீர்த்தாவையும் மணக்கோலத்தில் பார்த்த ரேணுகாவிற்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. நிஜம் தானா என்பதைப் போல்...
அத்யாயம் 6:
ஆதியின் சரிபாதியாகி இருந்தாள் சிவ தீர்த்தா. அவள் கனவில் கூட நினைத்திராத செயல்கள் எல்லாம் நடந்தேறியிருந்தது. சற்று முன் தந்தையிடம் மட்டுமல்ல ஆதியிடம் கூட கெஞ்சியிருந்தாள்.
“அப்பா தான் என் கல்யாணம் நின்ன ஆதங்கத்துல அப்படி சொல்றார். நீங்களாவது சொல்லுங்களேன், பிளீஸ். என்னால கண்டிப்பா இதை ஏத்துக்க முடியாது.வேண்டாம்னு சொல்லுங்க பிளீஸ்” என்று அவள்...
அவர்கள் ஜீப்பில் செல்வதைப் பார்த்த உள்ளூர்வாசிகள் விஷயத்தை விசாலாட்சியிடம் சென்று சொல்லிவிட, கேட்ட அவருக்கு நெஞ்சைப் பிளந்து விடும் அதிர்ச்சி.
‘அங்க தொட்டு, இங்க தொட்டு கடைசில அடி மடியிலேயே கையை வச்சுட்டாளா?’ என்று எண்ணியவர்,
“ஏலேய் காளி வண்டியை அந்த ஊருக்கு விடுடா” என்று கிளம்பிவிட்டார். வீட்டில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
மண்டபத்தில் ஆதி கேசவனுடன் வந்து...
காலை ஐந்து மணியளவில் நல்ல உறக்கத்தில் இருந்த விசாகன் அலைபேசியின் ஒலியில் எழுந்தான்.
“என்னடா இந்த நேரத்துல?” என்றான் கொட்டாவியுடன்.
“மச்சான் சீக்கிரம் கிளம்பி உங்க உங்க ஊர் ஆத்தோர விநாயகர் கோவிலுக்கு வந்திடு” என்று அவன் நண்பன் உரைக்க,
“எதுக்குடா?” என்றான் சலிப்பாய்.
“சீக்கிரம் வாடா, முக்கியமான விஷயம். சிவா பொண்ணை தூக்கிட்டோம். நீ வந்த உடனே கல்யாணம்...
அத்யாயம் 5:
சிவ தீர்த்தாவின் திருமண நாளும் நெருங்கியிருந்தது. விடிந்தால் திருமணம் என்ற நிலையில் எந்த வித பரபரப்புமின்றி எப்போதும் போல் அமைதியாக இருந்த சிவ தீர்த்தாவைப் பார்த்த கவிதாவிற்கு தான் அய்யோ என்றிருந்தது.
“நாளைக்கு உனக்கு கல்யாணம் சிவா. கொஞ்சமாவது சந்தோஷமா இரு” என்றாள் கவி.
“நான் சந்தோஷமாத்தான் இருக்கேன். என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உனக்கு?”...
“அண்ணா..!!!” என்றவனுக்கு, ’இவரும் இங்க தான் இருந்தாரா? இது தெரியாம வந்து மாட்டிகிட்டியே விசாகா’ என்று உள்ளுக்குள் நொந்து கொண்டான்.
“உனக்கு என்ன வேலை குடுத்துட்டு வந்தேன். நீ இங்க என்ன பண்ற?” என்றான் இடுங்கிய பார்வையுடன்.
“அண்ணா அதை எல்லாம் முடிச்சுட்டேன்ண்ணா” என்றான் வேகமாய்.
“அப்போ தோப்புக்கு போ. தேங்காய் எண்ணிப் போட ஆள் வந்திருக்கு. போய்...
அங்கே மில்லுக்கு சென்று கொண்டிருந்த விசாகனை வழி மறைத்துக் கொண்டது அவனின் நண்பர்கள் பட்டாளம்.
“என்ன மச்சான் உன்ன ஆளையே பார்க்க முடியலை. திருவிழா முடிஞ்சதும் ஓவர் பிசி ஆகிட்ட போல” என்றனர் நக்கலாய்.
“கடுப்பை கிளப்பாம பேசாம போங்கடா அங்கிட்டு. திருவிழாக்கு வந்தோமா போனோமான்னு இல்லாம ஒரண்டையை இழுத்து விட்டது பாத்தாதா?” என்றான் எரிச்சலாய்.
“இதெல்லாம் ஓவர்டா....
“சரிப்பா” என்பதோடு முடித்துக் கொண்டாள்.
“அக்கா கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா அப்பறம் நான் மட்டும் தனியா இருக்கனுமா?” என்றான் விக்னேஷ்.
“அதுக்காக உன் அக்கா காலம் முழுசுக்கும் உன்கூட இருக்க முடியுமா?” என்றார் காவேரி.
“மாப்பிள்ளை பக்கத்து ஊர் தானாம்டா விக்கி. நீ வரணும்னா உடனே வந்துடு” என்றாள் சிரிப்புடன்.
தான் ஒரு வார்த்தை சொன்னவுடன் மாப்பிள்ளையை கூட பார்க்காமல்,...
அத்யாயம் 3:
விசாகனின் வார்த்தைகளில் அதிர்ந்தவள்,”என்ன உளறீங்க?” என்றாள் கோபமாய்.
“எனக்கு தெரியும் சிவா. நீயும் என்னை லவ் பண்ற. ஆனா உன்னோட கோபம் அதை மறைக்குது.எங்க வீட்டாளுங்க மேல இருக்குற கோபத்துல நீ என்னை வெறுக்குற மாதிரி நடிக்கிற” என்றான் விசாகன்.
‘நீயென்ன லூசா?’ என்பதைப் போல் பார்த்து வைத்தாள்.
“பிளீஸ் சிவா” என்றவன் மீண்டும் கையை பிடிக்க...
வீட்டிற்குள் ஜீப் வந்து நின்ற சத்தத்திலேயே புரிந்து போனது ஆதியின் கோபம். இறங்கி வேகமாய் உள்ளே சென்றவனை பின் தொடர்ந்தார் விசாலாட்சி.
“ஆதி என்னப்பா ஆச்சு?” என்று ரேணுகா பதட்டத்துடன் வர,
“இன்னும் என்ன ஆகணும்மா? இவங்களை யாரு தோட்டத்து பக்கம் வர சொன்னா? பேரு தான் ஊருக்குள்ள பெரிய குடும்பம். செய்றது எல்லாம் பார்த்தா அப்படி...
அத்யாயம் 2 :
தனி ஒருத்தியாக ஐந்து மணி நேரங்கள் உழவை ஓட்டி முடித்திருந்தாள் சிவ தீர்த்தா. இன்னும் கொஞ்சம் மட்டுமே மிச்சமிருக்க, கிருஷ்ணன் வரப்பை வெட்டி சமன் செய்து கொண்டிருந்தார். வானம் மீண்டும் இருட்டுக் கட்டிக் கொண்டு நின்றது. அந்த காலநிலை அவள் மனநிலையை கொஞ்சம் சாந்தமாக்கியிருக்க இப்போது ஒரு ரசனையுடன் ட்ராக்டரை ஓட்டிக்...
“ஏன் இவ தான் படிக்கனுமா? மத்த யாருக்கும் படிக்கத் தெரியாதா?” என்றார் விசாலாட்சி.
அவரின் கேள்வியில் பெண்கள் அமைதியாகிவிட, அதுவரை யோசித்துக் கொண்டிருந்த சிவ தீர்த்தா சற்றும் யோசிக்காமல் கும்மிப் பாடலைப் படிக்கத் தொடங்கியிருந்தாள் முறைப்புடன்.
“பொன்னால பல்லாக்கு, பூவால அலங்காரம்..
முத்தால தாய் உனக்கு முத்தரசி பொங்கலிட்டோம்..
காடு கரை உழுதவனுக்கு கைரேகை மிச்சமடி..
காத்து படியளந்து பட்ட குறை...
“என்னடி அப்படி பார்க்குற?” என்றாள் சிவா.
“என்ன சொல்றதுன்னு தெரியலை சிவா. அவ்ளோ அழகா இருக்க. உன்மேல இருந்து கண்ணை எடுக்கவே முடியலைடி” என்றாள் கவிதா.
“ஆரம்பிச்சுட்டியா?” என்றவள்,
“பாருங்கப்பா இவளை” என்றாள் கிருஷ்ணனிடம்.
“கவி புள்ள சொன்னது நிஜம் தான்மா. எங்க கண்ணே பட்டிடும் போல” என்றார் கிருஷ்ணன்.
“இவ்வளவு அழகா இருக்குறதால தான் வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்குற...
குறுந்தொகை காதல் மைந்தா..!
அத்யாயம் 1 :
“அம்பிகையே ..ஈஸ்வரியே!
எமை ஆளவந்த கோவில் கொண்ட குங்குமக்காரி..
ஓங்காரியே வேப்பிலைக்காரி..
ஒரு உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி..
வேளையிலே மனசு வச்சோம் முத்துமாரி..நாங்க
வெற்றிக்கொடி நாட்டுகிறோம் முத்துமாரி,
ஆலமரம் போலிருக்கும் எங்கள் கூட்டம்-எமை
ஆதரிச்சு வாழ்த்துமடி முத்துமாரி..!”
என்ற அம்பிகையின் பாடல் ஊரைச் சுற்றிலும் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளில் ஒலித்துக் கொண்டிருக்க, அந்த ஊரே திருவிழாக் கோலம்...