Wednesday, July 22, 2026

    குறுந்தொகை காதல் மைந்தா

    அவர்கள் ஜீப்பில் செல்வதைப் பார்த்த உள்ளூர்வாசிகள் விஷயத்தை விசாலாட்சியிடம் சென்று சொல்லிவிட, கேட்ட அவருக்கு நெஞ்சைப் பிளந்து விடும் அதிர்ச்சி. ‘அங்க தொட்டு, இங்க தொட்டு கடைசில அடி மடியிலேயே கையை வச்சுட்டாளா?’ என்று எண்ணியவர், “ஏலேய் காளி வண்டியை அந்த ஊருக்கு விடுடா” என்று கிளம்பிவிட்டார். வீட்டில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மண்டபத்தில் ஆதி கேசவனுடன் வந்து...
    “என்ன ஆதி உளர்ற?” என்றார் விசாலாட்சி. “உளறல் இல்ல பாட்டி, உண்மை இது தான்” என்றான் சாவகாசமாய். “அதெப்படி சொத்துக்கு உடமைப்பட்டவங்க இத்தனை பேர் இருக்கும் போது இந்த பொண்ணு பேர்ல மாத்த முடியும்?” என்றார் மகாதேவன், அதிர்ச்சியை விழுங்கிக் கொண்டு. “நான் தான் தெளிவா சொன்னேனே? என் சம்பந்தப்பட்ட, அதாவது என் பேர்ல இருந்த சொத்துக்கள், நான்...
    “சிவா” என்று கவிதா அவளை அமைதிப்படுத்த, ஆதியின் கைப்பிடியில் இருந்து ஆவேசமாய் கையை உறுவிக் கொண்டவள், கழுத்தில் இருந்த மாலையையும் கழட்டி  விசிறியிருந்தாள். கை வேகமாய் தாலிக்கும் போக, “சிவா” என்று வேகமாய் ரேணுகா அவள் கை பிடித்து தடுத்திருந்தார். “என் பையன் கல்யாணத்தை பார்க்குற குடுப்பினை தான் இல்லாம போச்சு. இப்ப இதையும் கழட்டி என்னை மொத்தமா...
    நேரம் அதன் போக்கில் சென்றிருக்க... “என்ன யாரும் கிளம்பலையா?” என்றார் ரேணுகா வீட்டினரிடம். “அம்மா ஒன்னும் சொல்லலை அண்ணி” என்றார் மணி மேகலை தயக்கத்துடன். ரேணுகா வீட்டில் இருந்து அனைவரும் வந்து விட்டிருந்தனர். “இன்னும் யோசிச்சுட்டே இருந்தா எப்படி? கல்யாணம் தான் நம்ம இல்லாம நடந்திடுச்சு. இதையாவது கண்ணு குளிர பார்க்க வேண்டாமா?” என்று ரேணுகாவின் அம்மா சொல்ல, விசாலாட்சியோ...
    அவள் அப்படியே நிற்க, “சாப்பிடு ஆதி. இன்னும் சிவாவும் சாப்பிடலை” என்றார் ரேணுகா. “சிவா” என்று ரேணுகா உலுக்க, “ங்கான்! ரேணுமா” என்றாள். “சாப்பிடுங்க சிவா. ஆதிக்கும் நேரம் ஆகிடுச்சாம்” என்றார் ரேணுகா. சிவா அவனைக் கேள்வியாய் பார்க்க, “இன்னைக்கு மதுரையில ஒரு அக்ரி கான்பரன்ஸ் இருக்கு. அதுல ஸ்பெஷல் கெஸ்ட்டா இன்வைட் பண்ணியிருக்காங்க” என்றவன் சாப்பிட ஆரம்பிக்க, எதிரில் இருந்த தாரணியோ, “மாமா...
    “இப்பல்லாம் நான் கடவுளுக்கு நன்றி தான் சொல்லிக்கிறேன். ஏன்னு தெரியுமாங்க?” என்றாள் ரேணுகாவிடம். ரேணுகா அவளை கேள்வியாய் பார்க்க, “நல்லவேளை இவங்க என்னை வேண்டாம்னு சொல்லிட்டு வந்துட்டாங்க. நான் என் அப்பாகிட்ட இருக்க போய் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கேன். ஒருவேளை இந்த வீட்ல இப்படிப்பட்ட மனுஷங்க கிட்ட வளர்ந்திருந்தா எப்படி வளர்ந்திருப்பேனோ? என்னால யோசிச்சுக் கூட பார்க்க...
    ஒரு வாரமாக வேலை வேலையென்று ஓடிக் கொண்டிருக்கிறான் ஆதிகேசவன். அதிகாலையில் சென்று விடுவதும், இரவு வெகு நேரம் கழித்தே வீடு திரும்புவதுமாய் இருக்க, சிவ தீர்த்தாதான் துவண்டு போனாள். அவளை கல்லூரியில் இறக்கி விட்டு, அழைக்கும் வேலையையும் ஒரு வாரமாக பாண்டி தான் செய்து கொண்டிருந்தான். “அப்படி என்னண்ணா அவங்களுக்கு தலைபோற வேலை” என்று பாண்டியிடம்...
    அப்போது கையில் பார்சலுடன் அறைக்குள் வந்த ஆதி, அவள் தரையில் படுத்திருப்பதைக் கண்டு எங்கே மீண்டும் மயங்கிவிட்டாளோ என்று பதட்டப்பட, சிவாவோ சட்டென்று எழுந்து அமர்ந்தாள். அவளுக்கு ஒன்றுமில்லை என்ற பிறகு தான் அவனுக்கு மூச்சே வந்தது. ஆசுவாசமாய் மூச்சு விட்டவன், “கவி இதுல சாப்பாடு இருக்கு. அவளுக்கு வச்சுக் குடுத்துட்டு நீயும் சாப்பிடுமா”என்றான் ஆதி. “பரவாயில்லண்ணா” என்றாள்...
    “ரேணுகா தான் அத்தை..! இத்தனை வருஷமும் அமைதியா இருந்த அதே ரேணுகா தான். நீங்க செஞ்ச மொத்தப் பாவத்தோட அறுவடைக்கும் என் புருஷனை பலியா கொடுத்த அதே ரேணுகா தான். இப்போ உங்களுக்கு சந்தோஷமா இருக்குமே? நல்லா இருந்தவளோட வாழ்க்கையைக் கெடுத்து, ஒரு கேடுகெட்டவனுக்கு கட்டி வச்சு, அது மூலமா கௌரவத்தை காப்பாத்திக்க நினைச்சிங்கல்ல. அதான்...
    அத்யாயம் 21: உள்ளுக்குள் தோன்றிய அத்தனை கோபத்தையும் அடக்கிக் கொண்டிருந்தவளுக்கு, வந்த அழுகையே அடக்குவதும் பெரும்பாடாய் இருந்தது. “போதும் இதோட நிறுத்திக்கங்க” என்றாள் பல்லைக் கடித்தபடி. “எதுக்குடி நிறுத்தனும்? அதான் ஊரே பேசி சிரிக்குதே? உன் வீட்டு லட்சணத்தையும், உன் அப்பனோட லட்சணத்தையும்” என்றார் விசாலாட்சி. பொறுமையை இழந்தவள், “இவர் உங்க புருஷனோட தம்பி தான?” என்றாள் மணிமேகலையைப் பார்த்து. “ஏன் தெரியாதா...
    “அப்படி எதைப் பார்த்துட்டு குனிஞ்ச தலை நிமிராம போறா? அதுவும் அம்மா ரூம்குள்ள இருந்து?” என்று யோசித்தவன், ரேணுகாவைத் தேடி சென்றான். “என்னம்மா? அதிசயமா உங்க மருமக உங்க ரூம்கெல்லாம் வந்துட்டு போறா? அதுவும் சிரிச்ச முகமா?” என்றான். “அது ஒண்ணுமில்லை ஆதி. சும்மா பேசிட்டு இருந்தோம்” என்றவர் போட்டோவை உள்ளே வைக்க, “ஆமா அது என்ன போட்டோ?”...
    “அண்ணா..!!!” என்றவனுக்கு, ’இவரும் இங்க தான் இருந்தாரா? இது தெரியாம வந்து மாட்டிகிட்டியே விசாகா’ என்று உள்ளுக்குள் நொந்து கொண்டான். “உனக்கு என்ன வேலை குடுத்துட்டு வந்தேன். நீ இங்க என்ன பண்ற?” என்றான் இடுங்கிய பார்வையுடன். “அண்ணா அதை எல்லாம் முடிச்சுட்டேன்ண்ணா” என்றான் வேகமாய். “அப்போ தோப்புக்கு போ. தேங்காய் எண்ணிப் போட ஆள் வந்திருக்கு. போய்...
    அதை ரேணுகா கவனித்தாரோ இல்லையோ ஆதி கவனித்துக் கொண்டு தான் இருந்தான். கழுத்தில் அவள் ஏற்கனவே அணிந்திருந்த நகைகளே போதுமானதாய் இருக்க, சிவாவை தலைமுதல் பாதம் வரை ஒரு பார்வை பார்த்த ரேணுகா, மனதிருப்தி அடைந்தவராய், அவளுக்கு திருஷ்டி கழித்தார். “ராசாத்தி கணக்கா இருக்கடா” என்றவர், “உள்ளங்காலை காட்டுமா” என்று சொல்ல அவளோ புரியாமல் முழித்தபடி காலைக் காட்ட,...
    நாள் முழுக்க ஒரே இடத்தில் இருந்து அவளுக்கு கால்கள் மரத்துப் போயிருந்தது.எழுந்து அறைக்குள்ளேயே நடை பயின்றவள், அந்த அறையையே அப்போது தான் நன்றாக பார்த்திருந்தாள். தேவையற்ற பொருட்கள் எதுவும் அங்கில்லை. அறையும் ஒரு நேர்த்தியுடன் அழகாக இருந்தது. ஒரு பெரிய ஸ்க்ரீன் தொங்க, அங்கு ஜன்னல் எதுவும் இருக்கும் என்று எண்ணியவள், அந்த ஸ்க்ரீனை விலக்கி...
    அடுத்த மூன்று நாட்களில் அவளை டிஸ்சார்ஜ் செய்ய, “நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்மா” என்றார் கிருஷ்ணன். “அண்ணா ஒரு மாசம் நம்ம வீட்ல இருக்கட்டும். புள்ள உடம்பைத் தேத்திட்டு அங்க கொண்டு வந்து விடுறோம். நான் நல்லா பார்த்துக்குவேன் ண்ணா” என்ற ரேணுகாவிடம் அதற்கு மேல் அவரால் மறுத்துப் பேச முடியவில்லை. வீட்டிற்கு வந்தவுடன் சிவா செய்தது என்னவோ...
    அத்யாயம் 19: “விசாலாட்சி பேரனை புருஷனா ஏத்துக்கிறதுல அவ்வளவு தயக்கம் உனக்கு இல்லையா?” என்றவனின் குரலில் அவள் அதிர்ந்து பார்க்க, “இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. என்னோட கட்டாயத்துக்காக உன்னை பிடிச்சு வச்சிருக்க மாதிரி இருக்கு. விருப்பம் இல்லாத வாழ்க்கையை சகிச்சுகிட்டு இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை” என்று பேசி கொண்டிருந்தவனின் பேச்சு தடைபட்டிருந்தது. அவனை நெருங்கி அமர்ந்திருந்தவள்,...
    அத்யாயம் 17 அவளைத் தோட்டத்தில் இறக்கி விட்டவன், நீ இங்க இரு. முக்கியமான வேலை ஒன்னு இருக்கு. முடிச்சுட்டு வரேன்” என்று சொல்ல, அவன் வீட்டிற்கு தான் போகிறான் என்று அவளுக்கு அப்பட்டமாய் தெரிந்தது. நடந்த விஷயம் ஆதிக்கு தெரிந்தால் பிரச்சனை அதிகமாகும் என்று தான் தோன்றியது சிவாவிற்கு. ஏற்கனவே ரேணுகாவின் உடல்நிலையும் மன நிலையும் சரியில்லாமல்...
    “டேய் ஆதி உங்க சுபா அத்தை பாப்பா பார்க்க பொம்மை மாதிரி பொசுபொசுன்னு அழகா இருக்குடா” என்று பாண்டி விளையாடும் போது சொல்லியிருக்க, யாருக்கும் தெரியாமல் சுபாவைப் பார்க்க சென்றிருந்தான் ஆதி கேசவன். “ஆதி” என்ற சுபா அவனை அணைத்துக் கொள்ள, அவனோ ஒரு திமிருடன் வீராப்பாய் முகத்தை திருப்பிக் கொண்டான். “அத்தைய பார்க்க மாட்டியா?” என்றாள்...
    “என்னம்மா கொழுப்பா? நானும் பார்த்துட்டே இருக்கேன், எங்க அத்தையை எதிர்த்தெதிர்த்து பேசிட்டு இருக்க? என்ன ஆதி உனக்கு சப்போர்ட் பண்றான்ற திமிரா?” என்றார் மகா தேவன். “அண்ணா பார்த்து பேசுங்க. சிவாவைப் பேச உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது” என்றார் ரேணுகா கோபமாய். “என்னமா நேத்து வந்த மருமகளுக்கு சப்போர்ட்டா. பெரியவங்க கிட்ட மரியாதை இல்லாம பேசிட்டு...
    குளித்து முடித்து நைட்டியுடன் வந்தவள், அவனைக் காணாமல் திகைக்க, பிறகு தான் கவனித்தாள் அவன் பால்கனியில் நின்றிருந்ததை. அவன் உடலிலும், முகத்திலும் தெரிந்த இறுக்கத்தில் அவளுக்கு உள்ளுக்குள் குளிர் பிறந்தது. சற்று நேரத்திற்கு முன்பு வரை சிரித்து கலாட்டா செய்து கொண்டிருந்த ஆதி கேசவன் இவன் தான் என்று சத்தியம் செய்து சொன்னாலும் நம்புவதற்கில்லை....
    error: Content is protected !!