Wednesday, July 22, 2026

    குறுந்தொகை காதல் மைந்தா

    “போனதெல்லாம் எதுக்கு மாப்பிள்ளை,இனி நடக்குறது நல்லபடியா நடந்தா சரித்தான்” என்றவரை ஆழ்ந்து பார்த்தவன், “எனக்கு உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும் மாமா? “கேளுங்க” “இல்ல, எப்படி எல்லாத்தையும் கடந்து வந்திங்க மாமா? இப்பவும் எப்படி எதையும் வெளிய காட்டாமா இப்படி நிதானமா இருக்கீங்க? உங்களுக்கு சுபத்ரா அத்தை மேல கோபமே வரலையா?” என்றவனின் குரலில் இருந்த உணர்வுகளை கிருஷ்ணனால்...
    அத்யாயம் 25: சிவாவின் வீட்டிற்கு வந்திருந்தனர் ஆதியும் சிவாவும். வந்தவளை பிடித்துக் கொண்டனர் காவேரியும், பேச்சியும். “ஒரு ஊருக்குள்ள இருக்குறன்னு தான் பேரு? பார்க்க முடியுதா சிவா உன்னை?” என்ற காவேரிக்கு சற்று மனத்தாங்கல் தான். “அப்படி எல்லாம் இல்ல காவேரிம்மா! அதான் இப்ப வந்துட்டேனே? அறிவு அப்பா எப்ப வர்றார்? போன் பண்ணாரா?” என்றாள் சலுகையுடன். “இன்னும் ரெண்டு...
    “ரேணுகா தான் அத்தை..! இத்தனை வருஷமும் அமைதியா இருந்த அதே ரேணுகா தான். நீங்க செஞ்ச மொத்தப் பாவத்தோட அறுவடைக்கும் என் புருஷனை பலியா கொடுத்த அதே ரேணுகா தான். இப்போ உங்களுக்கு சந்தோஷமா இருக்குமே? நல்லா இருந்தவளோட வாழ்க்கையைக் கெடுத்து, ஒரு கேடுகெட்டவனுக்கு கட்டி வச்சு, அது மூலமா கௌரவத்தை காப்பாத்திக்க நினைச்சிங்கல்ல. அதான்...
    “விடு விசாகா, இந்த ஆளைக் கொன்னா கூட என் ஆத்திரம் அடங்காது. இன்னும் இந்தாளு என்னல்லாம் பண்ணியிருக்காருன்னு தெரிஞ்சா நீயும் இப்படித்தான்டா ஆத்திரப்படுவ”  என்று அடங்காத காளையாய் அவன் திமிரிக் கொண்டு நிற்க, கண்களைத் துடைத்துக் கொண்டு, மகாதேவனின் முன் சென்று அவரை நேர் பார்வையாய் பார்த்த சிவ தீர்த்தாவோ, “இதையெல்லாம் பண்ணச் சொல்லி இந்த கிழவியோட...
    அத்யாயம் 24: உணர்வுகளை அடக்க முடியாமல் நின்றிருந்த சிவாவின் அருகில் வந்த சுபத்ராவோ அவளின் கையைப் பிடிக்க, அவளுக்கு விபரம் தெரிந்த இத்தனை வருடங்களில் தாயின் முதல் தொடுகை உணர்வு. கண்ணீர் இப்பவோ அப்பவோ என்று விழி நிறைத்திருக்க, கிருஷ்ணனின் முகம் கண் முன் வந்து போன சில வினாடிகளில் சட்டென்று அவரின் கையை உதறியிருந்தாள்...
    அவளின் ருத்ர தாண்டவத்தில் அனைவரும் வாயடைத்து நிற்க, “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா  அப்பா வயசுல இருக்குற ஒருத்தரை அடிக்கக் கையோங்குற அளவுக்கு வந்திருப்ப?” என்றார் மேகலை கோபமாய். “ஏன்? பொண்ணு வயசுல இருக்குற என்கிட்ட கேவலமா பேசுனப்போ அமைதியா தான இருந்திங்க. இப்ப மட்டும் என்ன? நீங்கல்லாம் என்ன விதமான மனுஷ ஜென்மங்க?” என்றாள். “எல்லாம் இவளால...
    “என்ன ஆதி உளர்ற?” என்றார் விசாலாட்சி. “உளறல் இல்ல பாட்டி, உண்மை இது தான்” என்றான் சாவகாசமாய். “அதெப்படி சொத்துக்கு உடமைப்பட்டவங்க இத்தனை பேர் இருக்கும் போது இந்த பொண்ணு பேர்ல மாத்த முடியும்?” என்றார் மகாதேவன், அதிர்ச்சியை விழுங்கிக் கொண்டு. “நான் தான் தெளிவா சொன்னேனே? என் சம்பந்தப்பட்ட, அதாவது என் பேர்ல இருந்த சொத்துக்கள், நான்...
    அத்யாயம் 23: காலையில் சற்று தாமதமாகத்தான் எழுந்திருந்தாள் சிவ தீர்த்தா. ‘என்ன இவ்வளவு நேரம் தூங்கிட்டேன்’ என்றவள் அருகில் பார்க்க, ஆதியையும் காணவில்லை. “அவங்க தான் சீக்கிரமே எழுந்து ஒரு ரவுண்ட் போய்டுவாங்களே? இப்படி தூங்கிட்டியே தீர்த்தா” என்றவள் வேகமாய் குளித்து முடித்து கீழே வந்தாள். “சாரி ரேணுமா, இன்னைக்கு தூங்கிட்டேன்” என்று பாவமாய் சொன்னபடி நின்ற மருமகளைப் பார்த்து...
    குளித்து முடித்து நைட்டியுடன் வந்தவள், அவனைக் காணாமல் திகைக்க, பிறகு தான் கவனித்தாள் அவன் பால்கனியில் நின்றிருந்ததை. அவன் உடலிலும், முகத்திலும் தெரிந்த இறுக்கத்தில் அவளுக்கு உள்ளுக்குள் குளிர் பிறந்தது. சற்று நேரத்திற்கு முன்பு வரை சிரித்து கலாட்டா செய்து கொண்டிருந்த ஆதி கேசவன் இவன் தான் என்று சத்தியம் செய்து சொன்னாலும் நம்புவதற்கில்லை....
    அத்யாயம் 22: சிவா விடாமல் அவனைக் கட்டிக் கொண்டே நிற்க, “இன்னும் எவ்வளவு நேரம்டி இப்படி கட்டிபிடிச்சுகிட்டே நிக்கிறதா உத்தேசம்?” என்றான் ஆதி. “ம்ம்.. வாழ்நாள் முழுசுக்கும்” என்றாள் கண்களைத் துடைத்தபடி. “கால் வலிக்குமே” என்றான் சிரிப்புடன். “வலிச்சா தாங்கிக்கத்தான் நீங்க இருக்கிங்களே” என்றாள் சிவா. “தாங்கிக்க நான் ரெடியா தான் இருக்கேன். தாக்குப்பிடிப்பியான்னு தான் தெரியலையா?” என்றான் நமட்டு சிரிப்புடன். நிமிர்ந்து அவனை...
    “சரி அதை விடுங்க, எங்க உங்க பெரிய பையனை காணோம்? ஒரு பொறுப்பிருக்கா அவங்களுக்கு?” என்றாள் கடுப்பாய். “ஏன்? அவன் பொண்டாட்டி தான நீ? நீயே போன் பண்ணி கேட்க வேண்டியது தான?” என்றார் சிரிப்புடன். “ஏன் கேட்க மாட்டேனா நானு?” என்று முறைத்தவள், அடுத்த நிமிடம் போனை எடுத்து அவனுக்கு அழைப்பு விடுத்திருந்தாள். அவளின் அழைப்பை அலைபேசி...
    அத்யாயம் 21: உள்ளுக்குள் தோன்றிய அத்தனை கோபத்தையும் அடக்கிக் கொண்டிருந்தவளுக்கு, வந்த அழுகையே அடக்குவதும் பெரும்பாடாய் இருந்தது. “போதும் இதோட நிறுத்திக்கங்க” என்றாள் பல்லைக் கடித்தபடி. “எதுக்குடி நிறுத்தனும்? அதான் ஊரே பேசி சிரிக்குதே? உன் வீட்டு லட்சணத்தையும், உன் அப்பனோட லட்சணத்தையும்” என்றார் விசாலாட்சி. பொறுமையை இழந்தவள், “இவர் உங்க புருஷனோட தம்பி தான?” என்றாள் மணிமேகலையைப் பார்த்து. “ஏன் தெரியாதா...
    ஒரு வாரமாக வேலை வேலையென்று ஓடிக் கொண்டிருக்கிறான் ஆதிகேசவன். அதிகாலையில் சென்று விடுவதும், இரவு வெகு நேரம் கழித்தே வீடு திரும்புவதுமாய் இருக்க, சிவ தீர்த்தாதான் துவண்டு போனாள். அவளை கல்லூரியில் இறக்கி விட்டு, அழைக்கும் வேலையையும் ஒரு வாரமாக பாண்டி தான் செய்து கொண்டிருந்தான். “அப்படி என்னண்ணா அவங்களுக்கு தலைபோற வேலை” என்று பாண்டியிடம்...
    அத்யாயம் 20: மகா தேவன் பேசி விட்டு சென்றதும் சுபத்ராவின் நினைவுகளோ கடந்த காலத்தை நோக்கி சென்றிருந்தது. பஞ்சாயத்தில் குழந்தையை கொடுத்து விட்டு வந்திருந்த சுபத்ரா வீட்டில் ரத்தினத்தின் காலைப் பிடித்து அழுது கொண்டிருந்தார். “அப்பா என் குழந்தை எனக்கு வேணும். தயவு செஞ்சு என் குழந்தையை மட்டும் வாங்கிக் குடுத்துடுங்க” என்று கதற, “அவனோட வாரிசு இந்த வீட்ல...
    “என்னாச்சு ஆதி? எதுக்கு இந்த கையெழுத்து?” என்று ரேணுகா தான் கேட்டிருந்தார். “அது டிவேர்ஸ் பேப்பர்ஸ் தான்மா” என்றான் அலுங்காமல் குலுங்காமல். சொன்னவன் போனை எடுத்துக் கொண்டு பைலுடன் வெளியே செல்ல, விசாலாட்சியும் மகாதேவனும் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியுடன் பார்த்திருந்தனர். அன்று மாந்தோப்பிற்கு சென்று ஆதியிடம் அவர்கள் பேசிய விஷயமும் இது தானே. அதற்கு பிறகு அவன்...
    அத்யாயம் 19: “விசாலாட்சி பேரனை புருஷனா ஏத்துக்கிறதுல அவ்வளவு தயக்கம் உனக்கு இல்லையா?” என்றவனின் குரலில் அவள் அதிர்ந்து பார்க்க, “இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. என்னோட கட்டாயத்துக்காக உன்னை பிடிச்சு வச்சிருக்க மாதிரி இருக்கு. விருப்பம் இல்லாத வாழ்க்கையை சகிச்சுகிட்டு இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை” என்று பேசி கொண்டிருந்தவனின் பேச்சு தடைபட்டிருந்தது. அவனை நெருங்கி அமர்ந்திருந்தவள்,...
    அவள் அப்படியே நிற்க, “சாப்பிடு ஆதி. இன்னும் சிவாவும் சாப்பிடலை” என்றார் ரேணுகா. “சிவா” என்று ரேணுகா உலுக்க, “ங்கான்! ரேணுமா” என்றாள். “சாப்பிடுங்க சிவா. ஆதிக்கும் நேரம் ஆகிடுச்சாம்” என்றார் ரேணுகா. சிவா அவனைக் கேள்வியாய் பார்க்க, “இன்னைக்கு மதுரையில ஒரு அக்ரி கான்பரன்ஸ் இருக்கு. அதுல ஸ்பெஷல் கெஸ்ட்டா இன்வைட் பண்ணியிருக்காங்க” என்றவன் சாப்பிட ஆரம்பிக்க, எதிரில் இருந்த தாரணியோ, “மாமா...
    அத்யாயம் 18: நாட்கள் யாருக்காகவும் காத்திருக்காமல் அதன் போக்கில் உருண்டோடிக் கொண்டிருக்க, சிவ தீர்த்தாவிற்கும் கல்லூரி திறந்து, அவளும் கல்லூரி சென்று வந்து கொண்டிருந்தாள். அந்த வீடோ, வீட்டில் இருப்பவர்களின் குணமோ எதுவும் மாறியிருக்கவில்லை. ஆனால் இப்போதெல்லாம் ரேணுகாவிற்கும், சிவாவிற்கும் இடையிலான உறவு பிணைப்பு மேலும் வலுவாகியிருந்தது. சிவாவை விட ரேணுகா தான் அவளை அதிகம் எதிர்பார்த்தார். அவளை...
    “என்னாச்சு?” என்றான் ஒன்றும் தெரியாதவனைப் போல். அவள் கீழே இறங்க, தானும் இறங்கியவன்,அவளின் சொருகி இருந்த முந்தானையை எடுத்து வேர்வையை துடைத்துக் கொள்ள, அவளோ அவனை முறைத்தாள். “ஹேய் கர்சீப் இல்லம்மா” என்றான். “நம்பிட்டேன்” என்பதைப் போல் பார்த்தவளுக்கும் சிரிப்பு வர, அது ஆதியின் கண்களிலும் பட்டிருந்தது. “இப்படி ஒரு சில்வண்டு பின்னாடி சுத்துவேன்னு நினைச்சு கூட பார்க்கலை”...
    அத்யாயம் 17 அவளைத் தோட்டத்தில் இறக்கி விட்டவன், நீ இங்க இரு. முக்கியமான வேலை ஒன்னு இருக்கு. முடிச்சுட்டு வரேன்” என்று சொல்ல, அவன் வீட்டிற்கு தான் போகிறான் என்று அவளுக்கு அப்பட்டமாய் தெரிந்தது. நடந்த விஷயம் ஆதிக்கு தெரிந்தால் பிரச்சனை அதிகமாகும் என்று தான் தோன்றியது சிவாவிற்கு. ஏற்கனவே ரேணுகாவின் உடல்நிலையும் மன நிலையும் சரியில்லாமல்...
    error: Content is protected !!