நிழல்போலநானும்…நடைப்போடநீயும்…!
அத்தியாயம் 15
நாட்கள் கடந்து போவது இமைக்கும் நொடிகளாக இருவருக்கும் தோன்றத் தொடங்கி இருந்தது., ஏனெனில் அவனின் காதலை கண்கூடாக அவள் காண தொடங்கியிருந்தாலும், அவனது சந்தோஷம் அவனை மேலும் அழகாக காட்ட அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதே இவளது வேலையாக இருந்தது., இன்னும் இரண்டு நாட்களில் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்ற சூழலில் தான்...
வந்து விட்டு செல்லும்போது இவர்களுக்கு தேவை இல்லாத கொண்டு வந்த பொருள்களில் பாதியை கொடுத்துவிட்டாள். உடைகள் தேவைக்கு மட்டும் வைத்துக் கொண்டாள்., அவளுக்கும் அதுபோலவே எடுத்து வைத்துக்கொண்டு மீதி அனைத்தையும் ஒரே சூட்கேசில் போட்டு அனுப்பிவிட்டு., இங்கு இருப்பதே ஒரே பேக்கில் எடுத்து வைத்துக் கொண்டாள்.
கல்யாண் கிளம்பும் சமயம் அவனை வழியனுப்ப வெளியே...
அத்தியாயம்14
அழகான இயற்கை சூழலில் அமைந்திருந்தது வைத்தியசாலை., ஆங்காங்கு சிறு குடில்கள் போல இருந்த தங்கும் அறையோடு, நல்ல விஸ்தாரமான இடமாக அமைந்திருந்தது. தங்கும் அறைகள் வாடகை அவர்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தைப் பொறுத்தே நிர்ணயம் செய்திருந்தார்கள். நாலைந்து பேர் சேர்ந்து தங்கும் அறைகளும்., குடில் போன்ற அமைப்புடைய தனி வீடுகள் போன்ற அமைப்புடைய இடங்களும்..,...
‘பதவியை பயன்படுத்துவது என்றால் மிகவும் எளிதான விஷயம் அல்ல தான்., ஆனால் நினைத்தால் தன் அதிகாரத்தை பயன்படுத்தலாம்., அதற்கு முயற்சி செய்யாமல் ஆடும் சதுரங்கத்தில் முறைப்படி சரியாக காய் நகர்த்தி கவிழ்க்க வேண்டும்’ என்பது அவளின் எண்ணமாக இருப்பதை அனைவரும் அறிந்தனர்..
அதுமட்டுமன்றி அங்கு வைத்தே கல்யாண் இடம் அபூர்வா சொல்லிவிட்டாள்., “எந்த...
அத்தியாயம்13
அவனுக்கு சிகிச்சைக்காக பலரிடம் சொல்லி வைத்திருந்ததால்.., தோழி ஒருத்தியிடம் இருந்து செய்தி வந்திருந்தது.,
கேரளாவில் உள்ள வர்ம வைத்திய சாலை., அங்கு இதற்கான தீர்வு இருப்பதாகவும் எங்காவது அடிபட்டு உள்பகுதியில் நமக்கே தெரியாமல் நரம்புகள் முடிச்சிட்டுக் இருந்தாலோ அல்லது வர்ம அடி குறிப்பிட்ட புள்ளியில் பட்டிருந்தாலும்.., அதை வெளிப்புற எண்ணை பூச்சு மூலமாகவும்.., எண்ணெய்...
அப்போது லலிதா தான், “ நீ அங்கே கல்யாணத்திற்கு போகனுமே மா”, என்று சொன்னார்.
அதன் பிறகு தான் அவளுக்கு அபர்ணா கல்யாணம் என்பதே நினைவு வந்தது. “ம்ம்ம் போகனும் அத்தை” என்றாள்.
“நீ கிளம்புறதா இருந்தா கிளம்பு மா., கல்யாண் ம்., மாமாவும் உன்னோட வருவாங்க” என்றார் லலிதா.,
“மெதுவா.. போகலாம் அத்தை”...
அத்தியாயம் 12
அதிகாலையில் கண்விழித்தவனுக்கு அருகில் உறங்கிக்கொண்டிருந்த அவளைப் பார்க்கும் போது இது எல்லாம் கனவா என்று முதலில் தோன்றினாலும்.., பின்பு கலைந்த தலைமுடி முகம் மறைக்க தூங்கிக் கொண்டிருந்தவளின் முடியை கோதி விடும் பொருட்டு., வலது கையில் கட்டு போடாமல் இருந்த விரல்களைக் கொண்டு மெதுவாக கோதி விட்டவனுக்கு முதலில் தோன்றியது.., ‘தனக்கு...
அத்தியாயம் 11
அபர்ணாவின் திருமணத்தை நிறுத்திய அந்த நாட்களில் இருந்து அபூர்வாவின் நினைவுகள் தொடரத் தொடங்கியது.., அன்று அலுவலகத்திற்கு போன் செய்து மாமா சொன்ன செய்திகள் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும்., ஏன் அம்மா இப்படி பேசுறாங்க என்ற எண்ணத்தோடு வருத்தமே அடைந்தாள்., ஆனாலும் ஏதோ மனதிற்குள் சிறு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது எதனால்...
அவன் "வச்சுக்கோ இதிலென்ன இருக்கு" என்று சொன்னான்.
" உங்களுக்கு ஓகே தானே" என்று கேட்டாள்.
" எனக்கு டபுள் ஓகே வச்சுக்கோ" என்று சொல்லிக்கொண்டிருந்தான்...
அதுபோல அன்றுமாலை வீட்டில் வைத்து திருமணத்திற்கு முதல்நாள் செய்வதுபோல குடும்பத்தில் சாமி கும்பிடுவதை செய்து அவளுக்கு வீட்டு பெரியவர்களாக., அப்பா வழி சொந்தம், அம்மா வழி சொந்தம்,...
அத்தியாயம் 10
நரேனிடம் சம்மதம் பெற்ற மறுநாளே பெரியவர்கள் அனைவரும் வெளியில் வைத்து பேசி முடிவு செய்தனர்..
அபூர்வா எப்போதும் போல மருத்துவமனைக்கு வந்து அவனைப் பார்த்துக் கொள்வதும் அவனுக்கு தேவையானவற்றை பார்ப்பதிலும் அவன் தொழில் சம்பந்தமான வேலைகளை கவனிப்பதிலும் இருந்தாள்.
அதைக் கேள்விப்பட்ட சந்தோஷ் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு., வேலைகளைப் பற்றி அபூர்வா விடம்...
அந்த பத்தாவது நாளில் தான் பிஏ சொன்னார். "சார் பழையபடி திரும்பி வந்துருவாரு நம்பிக்கை இருக்கு மேடம்., நீங்க சூப்பரா ஹேன்டில் பண்ணுறீங்க.., இந்த எட்டு நாள் பார்க்காமல் விட்டதை இரண்டே நாள்ல முடிச்சிட்டிங்க... இனி தினமும் பார்க்க சரியா இருக்கும்".. என்றான். நரேன் முன்னிலையிலேயே...
அதற்கு நரேன்., "அப்ப எனக்கு பிசினஸ்ல ஒண்ணுமே...
அத்தியாயம் 9
வாழ்க்கை என்பது முடிவு எடுக்கும் வரைதான் குழப்பங்களும்., புலம்பல்களும்., முடிவெடுத்த பின் எதுவாக இருந்தாலும் எளிதாகத்தான் இருக்கும். அப்படித்தான் அபூர்வாவிற்கும் தோன்றியது.
அவன் உறங்கிய பிறகு அவனையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தவள்., அவனுடைய மனப் போராட்டத்தை உணர்ந்ததை போல., இப்போது அவன் அறியாமல் அவள் கையை அழுத்தமாக பற்றி இருப்பதை பார்த்தவள், முடிவெடுத்துவிட்டாள்.
...
அதுமட்டுமன்றி சில ஞாபகங்கள் அவனை புரட்டிப் போட தொடங்கியிருந்தது., இல்லை 'அவள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும்., என்னை திருமணம் செய்தால் அவள் வாழ்க்கை வீணாகிவிடும் என்ற பயமும்., அவனுக்கு இருந்தது. அதை மீறி மனதிற்குள் சிறு ஆசை அவள் தன்னுடன் இருப்பாளா'., என்ற எண்ணமும் அவனுக்கு வந்து போய்க்...
அத்தியாயம் 8
வீட்டிலிருந்து அங்குள்ள காரில் டிரைவரை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மருத்துவமனையில் வந்து இறங்கிக்கொண்டு காரை திருப்பி அனுப்பினாள்.
மருத்துவமனை வாசலுக்கு வந்த பிறகுதான், நேரத்தை பார்க்கும் போது மணி காலை ஒன்பது கூட ஆகவில்லை என்று தெரிந்தது. 'இவ்வளவு சீக்கிரமாக வந்தால் ஏதும்...
அங்கு அமைதியாக இருக்க மீண்டும் பேசத் தொடங்கினார்.
"அவங்க வீட்ல இருப்பேன் ங்கிறா வெளியே தெரிந்தால் அசிங்கம் யோசிக்கோ ன்னு அவ நல்லதுக்கு சொன்னா..., அவ என்னையே பிளேம் பண்றா.., நீங்க எல்லாம் பார்த்துகிட்டு இருக்கிங்க".., என்று நிர்மலா கேட்டார்.
பாட்டி தான் பதில் சொன்னார்.., நீ முதல்ல இந்த மாதிரி கத்துறத விடு.,...
அத்தியாயம் 7
மதியம் வரை மருத்துவமனையில் இருந்தவள்., மாலை நேரம் அவளுக்கு தேவையான சில துணிகள் மற்றும் பொருள்களோடு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். ஷாப்பிங் சென்று வந்திருப்பாள் என்பது நன்றாகவே தெரிந்தது. ஆனால் எதுவும் சொல்லாமல் அனைத்தையும் அவள் அறையில் வைத்து விட்டு குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்தவள். அவளுக்கு தேவையான காபியை...
"ஓகே வா இருக்கீங்களா.., நான் பேசலாம் இல்ல., கூட கொஞ்ச நேரம் ஆனாலும் உங்களால உட்கார்ந்து இருக்க முடியும் தானே.., டிஸ்டர்பா இருந்துச்சுன்னா சொல்லிடுங்க".., என்று சொன்னபடி பேசத் தொடங்கினாள்.
"எங்க வீட்டில் உள்ளவங்க பேசுனத, கண்டிப்பா மன்னிக்க முடியாது.,என்று எனக்கும் தெரியும். அதே நேரத்துல அவங்க சார்பா நான் மன்னிப்பு கேட்க வந்திருக்கேன்...
அத்தியாயம் 6
ஹாஸ்பிட்டல் வாசலில் இறங்கிய உடனே அவளுள் தோன்றிய உணர்வுக்கு என்ன பெயர் வைப்பது என்று அவளுக்கு தெரியவில்லை. இது புதுவித உணர்வு என்பது மட்டுமே புரிந்தது. ஒரு பெருமூச்சை இழுத்து விட்ட படி., அவன் சொன்ன அறை எண்ணுக்கு சென்றாள்.
அங்கு வெளியே நின்றவர்கள் அனைவரும் அவளைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர்....
"கால் நடக்க முடியாது ன்னு சொல்லிட்டாங்க" என்று முடிக்கும் முன்,
"சரியாகாது ன்னு ஒன்னும் சொல்லலை இல்ல"... என்றாள்.
"சரி ஆகும் ன்னு உறுதியா யாராலையும் சொல்ல முடியாது"... என்றாள்.
"சரி ஆயிருச்சுன்னா" என்று அவள் திருப்ப கேள்வி கேட்டாள்.
" ம்ஹூம்... நடக்குற விஷயத்தை பேசு" என்று அபர்ணா சொன்னாள்.
" நீ...
அத்தியாயம் 5
சென்னை வந்து இறங்கிய பிறகும் சரி., வீட்டிற்கு வந்த பிறகும் சரி., எல்லோரிடமும் கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் அளித்தாள். யாரிடமும் அதிகமாக பேசவில்லை, ராமநாதன் இது விஷயமாக அபூர்வாவின் மாமாவிடம் கேட்டார்.
"அவள் நிர்மலாவின் மேல் கோபமாக இருக்கிறாள்., அது மட்டும் தெரியும். மருத்துவமனையில் நடந்துகொண்ட முறையை சொல்ல வேண்டியதாகி...