Advertisement

அத்தியாயம் 17

                அந்தமானில் அவர்களுக்கான தேன்நிலவு திகட்ட திகட்ட தொடங்கி வைத்தான் நரேன்.., அதில் தொலைந்து கரைந்து தான் போக தொடங்கியிருந்தாள் அபூர்வா..,

                 வாழ்க்கை என்பது வரமாய் மாற்றுவதும்., சமமாய் மாற்றுவதும் வாழ்க்கை துணையை பொருத்தே., என்பது எத்தனை உண்மை என்பதை அந்த நிமிடங்களில் உணர்ந்து கொண்டார்கள்., இருவரும் 15 நாள் அந்தமானில் தான் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் வந்திருந்தார்கள். இடையிடையே சிறிது நேரங்கள் மட்டும் ஒதுக்கி வெளியே சுற்றிப் பார்த்தாலும் மீதி நேரமெல்லாம் அவளோடு கழிக்கவே அவனுக்கு நேரம் பத்தவில்லை, என்னும் அளவிற்கு அவனுடைய மோகம், வேகம், காதல் எல்லாம் சேர்த்து அவளை திணறடித்து கொண்டிருந்தான்…

                     சற்று திணறிப் போனாலும் அவன் காதல் வேகத்தில் காட்டாற்றின் சூழலில் சிக்கியவளாய் மாறினாலும்., சற்றும் சலிப்படையாமல் அவனின் காதலுக்கு பதில் காதலை காட்ட தொடங்கியிருந்தாள்..

                   ஏற்கனவே அவள் மேல் பைத்தியமா சுற்றிக் கொண்டிருப்பவனிடம் பதில் காதலை காட்டினால் என்ன செய்வான்., முற்றிலும் அவளை மட்டுமே சரணடைந்தவனாக அவளுள் மூழ்கத் தொடங்கினான்..

                வீட்டில் உள்ளவர்களிடம் சற்று நேரம் ஒதுக்கி தினமும் பேசினாலும் அதிக நேரம் பேச அனுமதிக்க மாட்டான்., இவள் ஏதாவது உளறி வைப்பாள் என்றே., அதுபோல அன்று கல்யாணின் மனைவி பேசிக்கொண்டிருக்கும் போது குழந்தைகளைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள்.,

                அப்போது “நல்ல சுத்தி பார்த்தீர்களா”, என்று கல்யாணின் மனைவி கேட்டாள்.

          “எங்க” என்று சொல்லத் தொடங்குவதற்குள் அவன் வாங்கி “நல்ல சுத்தி சுத்தி பார்த்துட்டு தான் இருக்கேன்., அண்ணி”., என்று சொன்னான்.

             கல்யாணின் மனைவிக்கு புரியாவிட்டாலும் இவன் இங்கு செய்த ஜாடை அவளுக்கு புரிய அவனை சத்தமின்றி மொத்த தொடங்கினாள்..

                      போனை  வைத்துவிட்டு வந்தவன் “ஏய் இப்ப எதுக்கு நீ என்ன அடிக்கிற., என்று கேட்டான்.,

                    சுத்தி சுத்தி  பாத்துட்டு இருக்கேன் ன்னு.,என்னைய காட்டுறீங்க என்று சொன்னாள்.,

              நான் உன்னைய தான் சொன்னேன் னு., அண்ணிக்கு தெரியாதே.,  உன்கிட்ட தானே சொன்னேன்., உண்மைய சொன்னா கோபப்படுற அம்மு”., என்றான்.

             முகம் சிவந்தவள்., “நீங்க இப்படியே பேசிட்டு இருங்க” என்றாள்..,

          “வேற எப்படி பேசுவாங்க., ஹனிமூன் வந்துட்டு நாட்டின் பொருளாதாரம் பற்றியா பேச முடியும்”., என்று கேட்டான்.,

            “நீங்க எவ்வளவு நல்ல பிள்ளையா இருந்தீங்க.., இப்ப என்னவெல்லாம் பேசுறீங்க”., என்றாள்.

             அவளை அணைத்த படி.., “நான் உன்னை மட்டும் தானே சுத்தி சுத்தி பாத்துட்டு இருக்கேன்”.., என்று சொன்னான்.

        “போதும்பா இப்படிலாம் பேசாதீங்க., கேக்குறவங்க தப்பா நினைப்பாங்க”., என்று சொன்னாள்.

                 “இங்க பாரு காதலுக்கு கண்ணியமும் கிடையாது., கட்டுப்பாடும் கிடையாது., அதுவும் கல்யாணம் முடிஞ்ச பிறகு காதலிக்கும் போது., கண்டிப்பா கிடையவே கிடையாது.., அதனால தயவுசெய்து நான் சொல்றத மட்டும் கேளு., நீ இந்த சப்ஜெக்ட்ல ரொம்ப வீக்கு., என்ன  தான் படித்து பரீட்சை எழுதி பாஸ் பண்ணினயோ., எனக்கும் தெரியல” என்று சொன்னான்.

            இவளோ “ஹலோ அந்த எக்ஸாம்ல எல்லாம் இதபத்தி கேட்க மாட்டாங்க”., என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

                    “அது தெரிந்துதானே நான் உனக்கு பாடம் எடுத்துட்டு இருக்கேன்., ஒழுங்கா நல்ல ஸ்டுடென்ட் ஆ கவனி பாடத்தை..,  ஒழுங்காக கத்துக்கோ” என்று சொன்னான்.

                  “எனக்கு தெரிஞ்சி நல்ல ஸ்டுடென்ட்  ஆ  தான் இருக்கேன்” என்று இவள் பதிலுக்குச் பேசிக்கொண்டிருந்தாள்…

                       ஹனிமூன் முடிந்து வந்தவர்களின் முகத்தைப் பார்த்தாலே..,  அவர்களுடைய மகிழ்ச்சி தெரியும் அளவிற்கு இருவரின் முகமும் இருந்தது.,  வீட்டில் உள்ளவர்களும் அவர்களின் சந்தோஷத்தை கண்டு மகிழ்ந்தனர்.

              அதன் பிறகு நரேனின் வாழ்க்கை இயல்பான  வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கி இருந்தது., அவனுடைய பிஸ்னஸ் வீடு என்று அவன் இருந்தாலும் மனைவியோடு நேரம் செலவழிக்க தயங்கவில்லை. அவ்வப்போது அபூர்வா அலுவலகம் சென்று அவனுக்கு தேவையான உதவிகளை செய்ய தொடங்கியிருந்தாள். அதனால் அவனது தொழில் மேலும் முன்னேற தொடங்கியிருந்தது.

        கல்யாண் அவனது அரசியல் வாழ்வில் நன்றாகவே காலூன்ற தொடங்கியிருந்தான்., கைது செய்யப்பட்டவர்களுக்கான விசாரணை கோர்ட்டில் நடந்து கொண்டிருந்தாலும் ஏற்பட்ட அவமானத்தில் அவர்கள் அனைவரும் குறுகிப் போய் தான் இருந்தனர். மோகனும் அதில் விதிவிலக்கல்ல., மலேசியாவிலுள்ள அவர்களின் பேச்சைக் கேட்டு நடந்து கொண்ட காரணத்தினால் இன்று அவன் குடும்பத்திற்கு தலைகுனிவு வந்ததை நினைத்து மிகவும் வருந்திக் கொண்டிருந்தான். இனி அவனுக்கு பெண் கொடுக்கவும் யோசிப்பார்கள் என்ற எண்ணத்தில் லலிதாவின் அண்ணன் மிகவும் வருத்தத்தில் இருந்தார்..

                   நாட்கள் வேகமாக ஓட நரேன் குணமாகி., அவர்கள் ஹனிமூன் சென்று வந்த மூன்றாவது மாதத்தில் அபூர்வா தாயாகப் போகும் செய்தி வீட்டில் உள்ள அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.., இடையில் ஒரு முறை வர்ம வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டு வந்திருந்தனர்…

                  அதன்பிறகு கருவுற்றிருந்த அவளுக்கு நல்ல கவனிப்பும் ஆரோக்கியமான உணவும் என வீட்டிலுள்ளவர்கள் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டிருந்தனர். அவ்வப்போது டெல்லியிலிருந்து வந்து பார்த்துவிட்டு சென்றனர்..

               இடையில் ஒரு முறை அபூர்வாவும்., நரேனும் ராமநாதன் அழைத்ததன் பேரில் வீட்டிற்கும் சென்று விட்டு வந்தனர். அப்போது நிர்மலாவிற்கு தான் முகம் கொடுத்து பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஏனெனில் அன்று அப்படி இருந்தவர் இன்று நிமிர்ந்த நடையோடு., தன் மகளுக்கு ஏற்றாற்போல் அழகான ஜோடியாக வந்து நிற்கும் இருவரையும் காணும்போது என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு தான் நின்றார் நிர்மலா.. அபர்ணாவிற்கு  பாட்டியின் அறிவுரை  கொஞ்சம் வழிக்கு கொண்டு வந்திருந்த்து  என்றால்., அபூர்வா தாயாக போகும் செய்தி  அவளுக்கும்  நல்லபடியாக வாழ வேண்டும்  என்ற எண்ணத்தை விதைத்தது.

            ஒவ்வொரு மாத செக்கப் க்கும்., நரேன் உடன் செல்வது வழக்கம் தான். அப்பொழுது தான் அபூர்வா விற்கு இரட்டை குழந்தைகள் என்று தெரிய., வீட்டில் அனைவரும் இன்னும் பத்திரமாக கவனிக்க தொடங்கி விட்டனர்.,  எந்த குழந்தையாக இருந்தாலும் சந்தோஷம் என்ற நிலையில் மிகவும் மகிழ்ச்சியாகவே உணர்ந்தனர்.

             எப்போதும் நரேன் கையணைவில்., தூங்குவது தான் அபூர்வ விற்கு வழக்கம்., வயிறு பெரிதாக பெரிதாக நரேனின் அருகில் அவன் அணைப்பில் இருந்தாலும் அவர்களின் இரட்டைகளும்  இப்போது சேர்ந்து கொண்டிருந்தது…

               சில நேரங்களில் இரட்டை குழந்தைகள் என்பதால் அவள் சற்று திணறுவது போல தான் அனைவருக்கும் தெரியும்.., ஆனாலும் அவரின் கவனிப்பில் அவளை நல்லபடியாகவே பார்த்துக்கொண்டார்கள். ஒன்பதாவது மாதம் தொடக்கம் வரை அவள் எப்படியோ தாக்குப் பிடித்து விட்டாள்., டெல்லிக்கு அழைத்துச் செல்லலாம் என்று மாமாவும் அத்தையும் முடிவு செய்த போது  நரேன் அனுப்ப மறுத்து விட்டான் ., “அவளை நான் பார்த்துக் கொள்வேன்” என்று கூறினான்…

                 எனவே  தான் ஒன்பதாவது மாத தொடக்கத்தில் அவளுக்கு வீட்டில் வளைகாப்பு வைத்திருந்தனர்.  மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது அவளது வளைகாப்பு.,

                       அதிலிருந்து இரண்டு நாளிலேயே அவளுக்கு வலி வர வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் அனைவரும்  விசேஷத்திற்காக சென்றிருக்க.., அன்று தற்செயலாக நரேன் வீட்டில் இருக்க.., இவளுக்கு வலி வந்ததும் எதைப்பற்றியும் யோசிக்காமல் அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று விட்டான்..,

           மருத்துவமனையின் வாசலில் நிறுத்திவிட்டு., டாக்டருக்கு ஏற்கனவே அழைத்து சொல்லியிருந்ததால், அவர்கள் வீழ்சேர் கொண்டு வருவதற்குள் காரைவிட்டு அவள் இறங்கவும்., பனிக்குடம் உடைந்து விட்டது.

                எதைப்பற்றியும் யோசிக்காமல் கார் சாவியை அங்கிருந்த வாட்ச்மேனிடம் கொடுத்து காரை பார்க் செய்ய சொல்லிவிட்டு., அவளை அப்படியே தூக்கியவன்.,  வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்து, அவளுக்கான சிகிச்சை பிரிவின் அருகில் வரும்போதே அவளுக்கு பிளிடிங் தொடங்கியிருந்தது.

                     அவள் தான் “வேண்டாம்  இறக்கி விடுங்கள்” என்று சொன்னாள்.

                       அவன் ஏந்தியபடியே தான் வந்தான்., அவன் உடையில் எல்லாம் ரத்தம் வடிய அவள் தான் முடியல என்று கண் கலங்க சொல்லவும்., அதற்குள் பிரசவ அறைக்குள் அவனே கொண்டு சென்றான்.

                 சற்று நேரத்திற்கெல்லாம் அவன் ஏற்கனவே வீட்டினருக்கு சொல்லி இருந்ததால் அனைவரும் வந்து சேர்ந்து விட்டனர் ., அன்று பார்த்து நிர்மலாவை இடம் பேசுவதற்காக அத்தையும் மாமாவும் போயிருக்க., இவர்களும் கல்யாண் மாமியார் விட்டு வழியில் விசேஷம் என்பதால் அங்கு சென்றிருக்க.., உடலில் ரத்த கரையோடு வெளியே உட்கார்ந்து இருந்தவனை காணும்போது அனைவருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது.., திடீரென்று எப்படி இத்தனை சீக்கிரத்தில் என்று யோசிக்கும் போதே.,அவன் வேறு எதுவும் சொல்லவில்லை அவளுக்கு எதுவும் பிரச்சனை வரக்கூடாது என்பதைத் தவிர அவன் மனதில் வேண்டுதல் எதுவும் இல்லை…

                     அப்போது அருகில் மருத்துவத்திற்காக வந்த மற்றொரு பெரியம்மா தான் “மனைவியை தூக்கி வந்ததெல்லாம் சரி தான் தம்பி.., அதற்காக இப்படி இரத்த கரையோடு இங்கே அமர்ந்திருக்க வேண்டுமா., உடை மாற்றிக்கொள்ளுங்கள்” என்று சொல்லும் போது.,

Advertisement