Advertisement

அத்தியாயம் 16

           தாமதமாக வந்து சேர்ந்ததால் அறைக்கு சென்று பொருட்களை வைத்து விட்டு மீண்டும் கீழே வந்து உணவருந்தி விட்டு அனைவரும் சற்று நேரம் பேசி இருந்துவிட்டு அவனோடு தங்களின் அறைக்கு வந்துசேர்ந்தாள்…

         எல்லோரும் அவளிடம் கேட்டது ஒன்றே தான் “வேலையை கண்டிப்பா விடணுமா” என்று தான்.

         இவளும் “கண்டிப்பாக விட்டே ஆக வேண்டும்” என்று சொன்னாள்.

         ராஜசேகர் தான் “உன் பெயரைக் கேட்ட உடனே எனக்கு தோணுச்சு., இந்த பெயரை எங்கேயோ கேட்டு இருக்குமே ன்னு.,  அரசியல் வட்டத்தில் உன் பேர கேட்டா பயப்படுற ஆள் தான் உண்டு., என்று சிரித்தபடி சொன்னார். அபூர்வா சொல்றது சரிதான் வேலையை விட்டுரட்டும்.,  இதை வச்சி நாளைக்கு காரியம் சாதிக்கலாம் அப்படின்னு மத்தவங்க நினைக்க கூடாது., அது மட்டுமில்லாமல் மருமக ரொம்ப நேர்மையான ஆளு., எத்தனை பேரை எதிர்த்து இருக்காங்கனு எனக்குத்தான் தெரியும்” என்று ராஜசேகர் சொன்னதோடு, சில குறிப்பிட்ட விஷயங்களை சொன்னார்.

                அனைவரும் நீ அப்படிப்பட்ட சண்டக்காரி யா என்று அவளை பார்த்தன்ர்.

      அவளோ சிரித்துக் கொண்டே “அதனாலதான் வேலை வேண்டாம் ன்னு சொல்றேன்., எனக்கு வேலையை பொருத்தவரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணி போற பழக்கம் கிடையாது.., அதனால வேண்டாம்” என்று சொன்னாள்.

                        நரேன் எதுவும் சொல்லவில்லை., கல்யாண் கேட்டதற்கு “ஏற்கனவே சொல்லிப் பாத்துட்டேன்., வேணான்னு சொல்லிட்டா., முடியவே முடியாது போக மாட்டேன்னு.,  சரி அவளுக்கு இஷ்டம் இல்லாத ஒரு விஷயத்தை அவ செய்ய வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டு தான்., நானும் ஒன்னும் சொல்லல”., என்று சொல்லிக்கொண்டிருந்தான்..

                       குடும்பத்தினர் மட்டுமன்றி வேலை ஆட்களுமே நரேன் உடல்நிலை முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

                 அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே டெல்லியில் அத்தை வீட்டில் இருந்து அழைப்பு வர., “எப்போது டெல்லி வருகிறீர்கள்” என்று கேட்டார்கள்.

                   அவள்தான் “பத்தியம் முடிந்த பிறகு வருகிறேன்” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.,

           “இங்கு வந்தும் செய்யலாமே.,” என்று கேட்டார்கள்.

              “ வேண்டாம் நாங்க எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் வர்றோம்” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்..

                வைத்தியசாலையில் இருக்கும்போதே ராமநாதன் தினமும் பேசிக் கொள்வார் அதுபோல டெல்லியிலிருந்து தினமும் போன் வந்துவிடும்…

              இன்னும் 15 நாட்களுக்கு எண்ணெய் குளியல்., மருந்து பத்திய சாப்பாடு, என்ற நடைமுறை இருப்பதால் எங்கும் வர முடியாது என்று சொல்லிவிட்டாள்., பதினைந்து நாட்களுக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும் சொல்லி இருந்தாள்.

                 அதுமட்டுமன்றி இப்பொழுது கூட வரும் வழியிலேயே லலிதாவிற்கு போன் செய்து உணவு செய்முறையை சொல்லிவிட அதன்படியே லலிதா தயார் செய்து வைத்திருந்தார்., வரும் வழியில் கூட என்னென்ன சாப்பிடலாம் என்பதை வைத்தியரிடம் தெரிந்து கொண்ட பிறகே., வரும் வழியில் அதற்குத் தக்க உணவுகளை மட்டுமே நரேனுக்கு வாங்கி கொடுத்தாள்., அவளும் அப்படியே சாப்பிட்டாள்.

              இத்தனை நாள் பொறுத்துக்கொண்டு அவனுக்கு இன்னும் 15 நாள் பொறுக்க முடியாதா என்று தான் வீட்டில் எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்., அதன்படியே பத்திய உணவை முடித்துக்கொண்டு தங்கள் அறைக்கு சென்றனர்.

               நாளை காலையிலிருந்து பழையபடி மருந்தை துவங்க வேண்டும்., ஒரு நாள் மட்டும் பயண அழுப்பின் காரணமாக மருந்து கொடுப்பது தடைப்பட்டிருந்தது., அதுமட்டுமல்லாமல் அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் போது கல்யாண் தான் சத்தம் போட்டு அனுப்பி வைத்தான்.., “அபூர்வா கிட்டத்தட்ட 16 மணி நேரமாக கார் ஓட்டிட்டு வந்து இருக்கா.., போய் ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று சொன்ன பிறகு அனைவரும் ஹாலில் இருந்து கலைந்தனர்…

                அறைக்கு வந்தவுடன் மனம் நிறைந்த மகிழ்வுடன் அவளை அருகில் இழுத்து வைத்துக் கொண்டு.., “தூக்கம் வருதா டி” என்றான்.

           “புதுசா டி போட்டு பேசுறீங்க என்ன இது ” என்று கேட்டாள்.

          “என் பொண்டாட்டிய நான் எப்படினாளும் பேசுவேன்” என்று சொன்னான்.

 “சரி நீங்க பேசிட்டு இருங்க., நான் தூங்குகிறேன்” என்று சொல்லியபடி சற்று தள்ளி படுத்தாள்.

           “இங்க பாரு, அங்க வச்சு சொல்லிட்ட ஊருக்கு வந்ததுக்கப்புறம் என் பக்கத்திலே இருப்பேன் ன்னு., ஒழுங்கா பக்கத்துல வந்துரு., என்று சொன்னான்.,

   “நீங்க பத்தியம்.,சத்தமில்லாமல் தூங்குங்க” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்

                 “ஏய் எனக்கும் தெரியும்., பத்தியம் இருக்குன்னு.., ப்ளீஸ் ப்ளீஸ் பக்கத்திலேயே இரு”., என்று சொல்லி இழுத்து அவளை தன் கைகளுக்குள் சேர்த்து அணைத்துக் கொண்டான்.,

             எதுவும் பேசாமல் அமைதியான மனநிலையில் ஏசியின் ரீங்காரம் தவிர வேறு எந்த ஒலியும் இல்லாமல்., அவன் நெஞ்சில் முகம் புதைத்தவளை தலைகோதி கொண்டிருந்தான்., சற்று நேரத்தில் அவளின் சீரான மூச்சு மட்டும் கேட்க தூங்கி விட்டாள் என்பதை உணர்ந்தவன்., நினைத்துக்கொண்டான் ‘தனக்காக அவளது அடையாளங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு தன்னோடு இருப்பவள் தன் உண்மை காதலுக்கு கிடைத்த பரிசு என்று’.,

       தூங்கிக் கொண்டிருந்தவளை சற்று தன் நெஞ்சில் இருந்து முகம் விலக்கி பார்த்தவன் அழுத்தமாக அவள் நெற்றியில் முத்தம் வைத்து., மீண்டும் அவள் தலையை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவனும் சற்று நேரத்தில் அப்படியே உறங்கிப் போனான்.

                    காலை எழுந்த பிறகு அவனுக்கு எப்பொழுதும் போல மருந்து எண்ணெய் தேய்ப்பது என்று அவளது வேலைகளில் பிஸியாக., அவன் தான் இப்போதும் பார்வையால்  தொடர்ந்துக் கொண்டு அவளோடு பேசிக் கொண்டு இருந்தான்., அவளோ  அவனுக்கு பதிலுக்கு பதில் சொன்னதோடு மட்டுமல்லாமல்., அவனுக்கான எண்ணைக்குளியல்., மருந்து உணவு., என்று அவனை உடன் இருந்து பார்த்துக் கொண்டாள்.

           அவன் குளித்து கிளம்பி வரும்போது., அவளுமே குளித்து அவனோடு கீழே வந்தவள்., பின்பு அவனுக்கான அனைத்து வேலைகளையும் அவளே பார்த்துக்கொண்டாள்.

            லலிதாவிற்கு சற்று பெருமையாகத் தான் இருந்தது., பதவி பவிசு என்று காட்டும் மற்றவர் முன்னிலையில் தன் கணவனுக்காக நிற்கும் இவளை காணும் போது மனம் பூரித்துப் போனது., தன்மகன் கொடுத்துவைத்தவன் என்ற எண்ணத்தில்.

            அவர்கள் வருவதை அறிந்து சந்தோஷ் காலையில் எப்போதும் போல வந்தான்.  நரேன் அவனை எழுந்து நின்று “நல்லாயிட்டேன் டா” என்று  சொல்வதைக் கேட்டு அவன் வந்து கண்கலங்க நரேனை அணைத்துக் கொண்டான்…

              ஒரு பி.ஏ வாக நடத்தாமல் தன் குடும்பத்தில் ஒருத்தன் ஆக நடத்திய நரேனை அவனுக்கு அத்தனை பிடிக்கும்.., அதன் காரணமாகவே அவனை கண்டவுடன் கண்கலங்க ஓடிவந்து அணைத்துக் கொண்டது…

               அதனை சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்த அபூர்வா விற்கும் நரேனின் மேல் இருந்த அன்பு இன்னும் பெருகியது., ஏற்கனவே நரேன் அடிபட்டு இருக்கும்போதே சந்தோஷ் ம் வந்து பார்த்து செல்வான் தெரிந்தது தான்., ஆனால் இவன் உண்மையில் எத்தனை அன்பாக நடத்தி இருந்தால் அவன் இப்போது இந்த அளவிற்கு ஒரு அன்பான நடைமுறையை காணமுடியும் என்ற எண்ணம் தான். அத்தனை அன்புக்கும் சொந்தக்காரி., உரிமைக்காரி என்ற எண்ணமே அவளுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. மற்றவர்கள் மேல் அன்பாய் இருப்பது வேறு அவனுடைய மொத்த காதலும் அவளுக்கு தான் எனும் போது இன்னும் சந்தோஷமாக இருந்தது..,

                     சற்று நேரம் பேசிக்கொண்டிருந்த பின்., அலுவலக சம்பந்தமாக பழையபடி பேச தொடங்கவும்., எப்போது அலுவலகம் நரேன் வருவான் என்பதை பற்றி சந்தோஷ் விசாரித்துக் கொண்டிருந்த போது., அபூர்வா தான் சொல்லிக் கொண்டிருந்தாள்,

    “இன்னும் ஒரு மாசம் மட்டும் அவர் வீட்டில் இருக்கட்டும் அதன்பிறகு வருவார்” என்று சொன்னாள். நரேனும் ஆமாம் என்று தலையசைத்தான்.

         அபூர்வா விற்கு தான்., என்ன சொன்ன உடனே சம்மதம் சொல்லிட்டாங்க., என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

             சந்தோஷ் போன பிறகு., அபூர்வா  “ஒரு மாசம் கழிச்சு தானே போறீங்க”., என்று அவனிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.

                  அவனும் கண்டிப்பா பத்திய சாப்பாடு எல்லாம் எப்ப முடியுமோ., அப்புறமா நம்ம ஒரு ஹனிமூன் டிரிப் போகணும்., அதுக்கு அப்புறமா வந்து  ஆபீஸ் போய்க்கிறேன்” என்று சொன்னான்.

                  “அதுதானே பார்த்தேன்., நீங்க சும்மா சரின்னு சொல்ல மாட்டீங்களே, எப்படி உடனே ஒத்துக் கொண்டீர்கள் என்று நினைச்சேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்..

                        “நான் எல்லாம் கேட்டுட்டு தான் வந்து இருக்கேன்” என்று அவன் சொன்னான்.

             “தெரியும் தெரியும், நீங்க கேட்டீங்க ன்னு., எனக்கு தெரியும், எனக்கும் சொல்லிட்டாங்க” என்று சொன்னாள்.

              “ யார் சொன்னாங்க” என்று கேட்டான்.

             பெண்களுக்கென இருக்கும் வைத்தியம் பார்க்கும் பெண்மணி அழைத்து பத்திய முறைகளை சொன்னதாக சொன்னாள்..,

       “உனக்கு எல்லாம் தெரியும்.., தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருக்க” என்று கேட்டான்.

                  “ஹலோ உங்க பத்தியத்தை பத்தி சொன்னாங்க., பேசாம இருங்க” என்று சொன்னாள்.

              “சரி இப்போ சொல்லு., ஹனிமூன் எங்க போகலாம்” என்று  அவளை தோளோடு உரசிக்கொண்டு, அவள் காதருகே சாய்ந்தபடி கேட்டுக்கொண்டிருந்தான்.

                அவளுக்குத்தான் என்னவோ போலிருந்தது உள்பக்கமாக இருக்கும் ஹால் தான்., என்றாலும் வீட்டில் யாரும் இருப்பார்களோ என்று லேசாக சுத்தி பாக்க யாருமில்லை.,

Advertisement