Advertisement

அத்தியாயம் 5

             சென்னை வந்து இறங்கிய பிறகும் சரி.,  வீட்டிற்கு வந்த பிறகும் சரி., எல்லோரிடமும் கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் அளித்தாள்.  யாரிடமும் அதிகமாக பேசவில்லை,  ராமநாதன் இது விஷயமாக அபூர்வாவின் மாமாவிடம் கேட்டார்.

         “அவள் நிர்மலாவின் மேல் கோபமாக இருக்கிறாள்., அது மட்டும் தெரியும். மருத்துவமனையில் நடந்துகொண்ட முறையை சொல்ல வேண்டியதாகி விட்டது., அது மட்டும் இல்லாமல் அவசர அவசரமாக வேற  மாப்பிள்ளை அபர்ணாவுக்கு பார்த்ததும் அவளுக்கு பிடிக்கவில்லை”., என்றாலும் அவளுக்கு சற்று வருத்தம் இருக்கத்தான் செய்கிறது போல என்று சொன்னார்.

      “அவளுக்கு என்ன தெரியும் அவ சின்ன பிள்ளை., நீ சொல்லுற விதமா சொல்லனும்”, என்று நிர்மலா சத்தமாக சொன்னார்.,

           “பாட்டியோ., யார் சின்ன புள்ள அவ கூட சேர்ந்து பிறந்தவளுக்கு தானே  இப்ப கல்யாணம் பேசி வச்சிருக்க., ஒருத்திக்கு கல்யாணம் வைக்கும் போது.., இவளுக்கும் கல்யாண வயசு தான் இருக்கும்.., அவ நியாயத்தை பேசினா அவ சின்ன புள்ளயா.,   அவ எந்த முடிவு எடுத்தாலும் கரெக்டா இருக்கும்”, என்று பாட்டி சொல்ல.., பாட்டியை திரும்பி பார்த்த அபூர்வா எதுவும் சொல்லாமல் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் போய் தன் மாமா பிள்ளைகளோடு தங்கி கொண்டாள்.

         இரவு உணவையும் ஏனோ தானோ வென்று முடித்து விட்டு அறைக்கு செல்ல போனவளை தடுத்த மாமா.

           “ஏன் மா எதுவும் சொல்லனுமா” என்று கேட்டார்.

        ” காலையில பேசுறேன் மாமா…, காலைல தான் பேசணும்., டிடெயில் ஆ பேசுறேன்., எனக்கு கொஞ்சம் யோசிக்க வேண்டியது இருக்கு”.., என்று சொல்லி யோசனையோடு தன் நேரத்தை போக்கி கொண்டிருந்தாள்.

             ஏனெனில் அவள் எடுத்திருப்பது அத்தனை பெரிய முடிவு என்பது அவளுக்கு மட்டும் தான் தெரியும்.

       காலையில் எழுந்து உடற்பயிற்சியோ.,  வாக்கிங் காக வெளியே செல்லாமல்.,  எப்போதும் செய்யும் யோகாவை மட்டும் செய்துவிட்டு குளித்து கிளம்பி கீழே வந்தாள். யாருக்கும் எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை இப்போது அவள் பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும்.,  யோசனையோடு இருப்பதாக தெரியவில்லை.

          மாமாவிற்கு மட்டும் புரிந்தது அவள் முடிவெடுத்து விட்டாள். அதனால் தான் இத்தனை தெளிவாக இருக்கிறாள் என்று, பாட்டியும்  தாத்தாவிடம் அதை தான் பேசிக் கொண்டிருந்தார்கள். அதே நேரம் ராமநாதன் என்ன வென்று கேட்க.,  அவள் தெளிவாக இருந்த விதமே அவள் எதோ முடிவெடுத்திருக்கிறாள். அதை செயல்படுத்த தான் இத்தனை யோசனை என்று சொல்ல., ராமநாதனுக்கு சற்று யோசனையாக இருந்தது மகள் தெளிவான முடிவு தான் எடுப்பாள்., என்றாலும் ஒரு பெற்றவராக பிள்ளை என்ன முடிவெடுத்திருக்கிறாள்., எதை சார்ந்த முடிவு அது என்று தெரியவில்லை என்ற எண்ணம் அவருக்குள் வருத்தத்தை உண்டு பண்ணிக் கொண்டே இருந்தது.  என்னவென்று தெரியும் வரை அமைதியாக இருந்து கொள்ள வேண்டும் என்ற முடிவோடு தான் அனைவரும் இருந்தனர்.

            காலை உணவை முடித்த நேரம் அனைவரும்  ஹாலில் அமர்ந்து இருக்கும்போதே அபூர்வா சற்று அதிகார தோரணையில் அபர்ணாவை அமர சொன்னாள்.

      அவளோ “ஏன் எதுக்கு” என்று பதில் கேள்வி கேட்டாள்.

       ” உட்காரு ன்னு சொன்னா உட்காரணும் புரியுதா” என்று சொன்னாள்.

          அபர்ணா கோபத்தோடு அமர்ந்தாள்.

      அதேநேரம் வெளியில்  இவர்களை மிரட்டி விட்டு போக வென்று வந்த கல்யாண்  க்கு வீட்டின் சூழ்நிலை வித்தியாசமாக தெரிந்தது.   சற்றுத்தள்ளி இருந்தே என்ன நடக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தான்.

      கல்யாண்  க்கோ  அபர்ணாவின் கல்யாணத்திற்காக வீட்டிற்கு விருந்தினர் வந்திருப்பதாக நினைத்து தான் முதலில் தயங்கி நின்றது. ஆனால் எப்படியும் மிரட்டுவதை மிரட்ட தான் வேண்டும்., என்ற எண்ணத்தோடு வீட்டிற்குள் வர நுழைந்த போது அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து, இவன் நிற்கும் இடத்தை பார்த்தால் தெரியாத வண்ணம் இருந்ததால்., இவன் வந்தது தெரியவில்லை.

       ஆனால் இவனுக்கு அவர்கள் பேசுவது தெளிவாக கேட்டதோடு மட்டுமல்லாமல்., அவர்கள் அமர்ந்திருந்ததையும் பார்க்க முடிந்தது. அபர்ணா ஏன் எதற்கு என்று கேட்டது இவன் முகத்திற்கு நேராக தெரிந்தது. ஆனால் அவனுக்கு முதுகு காட்டி இருந்த பெண்ணை யாரென்று தெரியவில்லை.  அவள் தான் அபர்ணாவிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள் என்பதை தூரத்திலிருந்தே கண்டு கொண்டு அமைதியாக இருந்து பார்த்தான்.

        அவளோ,  “நான் இப்ப நான் கேட்கிற கேள்விக்கு.. நீ சரியா பதில் சொல்லணும்”., என்று அதிகாரமாகவே அபூர்வா கேட்டாள்.

         “என்ன.. உனக்கு என்ன பதில் சொல்லனும்” என்று அபர்ணா கேட்கும் போது கூடவே.,  நிர்மலா குறுக்கே  வந்து “தேவையில்லாமல் பேசவேண்டாம் அபூர்வா.,  அவளை எப்ப பார்த்தாலும் அதிகாரம் பண்ணாதே”.,  என்று சொன்னார்.

        “இதுக்கு பேரு அதிகாரம் இல்லம்மா.., நான் கேக்குறதுக்கு எனக்கு பதில் சொல்லணும்.,  அது மட்டும் இல்லாமல் எனக்கு உண்மைத் தெரிஞ்சாகனும்”., என்றவள். நிர்மலாவையும் அதட்டி பேசினாள்.

        “அட இங்க இப்படி அதட்டி கேள்வி கேட்குற ஒரு ஆளா., அதுவும் இந்த வீட்ல” என்று யோசித்துக் கொண்டே கல்யாண் பார்த்து கொண்டிருந்தான்..,

         “என்ன தெரியும் உனக்கு இங்கே உள்ளதை பற்றி”  என்று நிர்மலா பேசத் தொடங்கினார்.

        ” உங்க கிட்ட பேசலை., நான் அவ கிட்ட தான் பேசிட்டு அவ்வளவு தான்.  கல்யாணம் அவளுக்கு தானே,  அப்ப அவள் தான் பேசணும்.., நீங்க வாயை திறக்கக் கூடாது.,  தூரப் போய் உட்காருங்க”.., என்று அவளை அதட்டி அமர வைத்துவிட்டாள்.

          அபர்ணாவிடம் “இப்ப சொல்லு இந்த கல்யாணத்துல உனக்கு இஷ்டமா” என்று கேட்டாள்.

     “ஆமாம்” என்று பதில் சொன்னாள்.

        “சரி அப்போ இதுக்கு முன்னாடி கல்யாணம் ஒன்னு பேசினாங்க இல்ல., அதுல உனக்கு இஷ்டம் இல்லையா.,” என்று கேட்டாள்.

      “அது அம்மா சொன்னாங்க…, நல்ல இடம் நீ அங்கே போனா இங்க இருக்குற மாதிரி இருக்கலாம் ன்னு சொன்னாங்க., அதுனால தான் சம்மதிச்சேன்”., என்றாள்.

     அம்மா சொன்னாங்க.., அப்பா சொன்னாங்க..,  ஆட்டுக்குட்டி சொன்னாங்க..,  எல்லாம் கதை விடாதே., என்கிட்ட,  உன்னை பற்றி எனக்கு தெரியும்., என்ன விஷயம்., எதுக்காக அந்த கல்யாணத்தை வேண்டாம் சொன்னே., இப்ப பேசின கல்யாணத்திற்கு சரினு சொல்லியிருக்க..,  அது எனக்கு தெரிஞ்சாகனும் சொல்லு”..,  என்று கேட்டாள்.

       கல்யாண் தான்… ‘அட நம்ம கேட்கணும்னு நினைச்ச கொஸ்டின் எல்லாம் இந்த பொண்ணு கேட்டுகிட்டு இருக்கே’.., என்று அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தான்…,

      அமைதியாக வந்த சுவடு தெரியாமல் தன் ஆட்களோடு அங்கேயே நின்று கொண்டான். மீண்டும் நிர்மலா “இங்க பாரு அந்த விஷயம் முடிந்து போனது.,அதை பத்தி பேசாதே இப்போ அவளுக்கு என் பிரண்டு பையன் ஹரியோட மேரேஜ் பிக்ஸ் ஆயிடுச்சு..,  தேவையில்லாம பேசாதே”.., என்று சொன்னார்.

        பதிலே பேசாமல் அவள் தாயை பார்த்த பார்வையில் நிர்மலா தானாக வாயை மூடிக்கொண்டார். ‘அங்க என்னடா நடக்குது’ என்று கல்யாண் ஒரு நிமிஷம் ஆச்சரியப்பட்டு பின் அவர்கள் பேசுவதை கவனிக்க தொடங்கினான்.

      “சொல்லு அபர்ணா.,  நீ ஒன்னும் சின்ன பாப்பா இல்ல.., காலேஜ் முடிச்சு இருக்க.,  பிரண்ட்ஸோட சுத்துற,  பிரெண்ட்ஸ் கிட்ட போன்ல பேசற.,  ஜஸ்ட் லைக் தட் சொல்லிட்டு இந்த ஒரு விஷயத்தை அடிச்சு தூக்கிப் போட்டுட்டு போயிட்டே இருக்க முடியாது..  எதனால வேண்டாம் ன்னு சொன்ன சொல்லு.,” என்று  அபூர்வா கேட்டாள்.

Advertisement