Advertisement

இவனும் “அதெல்லாம் யாரும் எதுவும்  நினைக்க மாட்டாங்க., சொல்லு நீ எதுக்கு யாரும் பார்ப்பாங்கன்னு பார்க்கிற., என் பொண்டாட்டிய தான் நான் தொல்லை செய்றேன்., என்றான். “நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லல., எங்க ஹனிமூன் போகலாம்” என்று கேட்டான்.

        “கண்டிப்பா போலாம்., நீங்க எங்க சொன்னாலும், நான் வர்றேன். ஆனா அதுக்கு முன்னாடி இந்த பிரச்சினை எல்லாம் முடிச்சுட்டு., டெல்லி போயிட்டு என்னுடைய ரிசைனிங் லெட்டர் கொடுத்துட்டு., அதுக்கப்புறம் நீங்க எங்க கூப்பிட்டாலும் நான் வர்றேன்” என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அவனும் சிரித்தபடி சரி என்று சொல்லிக் கொண்டிருந்தான்…

                 அதன் பிறகு அந்த இருவரின் வருகைக்காக விஷயம் தெரிந்தவர்கள் காத்திருக்க…, பெண்ணின் நிச்சயதார்த்தம் என்று நரேனின் தாய்மாமா ஓடிக் கொண்டிருந்தார்., அப்போது தான் கல்யாண் னிடம் அபூர்வா பேசும் போது “அந்த பொண்ணு லைஃப்ல வேற ஏதும் பிரச்சினை வந்து விடாதே” என்று கேட்டாள்.

       கல்யாண்  தான் சொன்னான் “கவலைப்படாத அந்த பொண்ணு ட்ட பேசியாச்சு., அந்த பொண்ணு ஏற்கனவே யாரையோ லவ் பண்ணுது போல., கரெக்டா அன்னைக்கு அந்த லவ் பண்ற பையன் வந்து ஏற்கனவே நிச்சயதார்த்தத்தை நிறுத்த மாதிரிதான் பிளான் ல இருக்காங்க.., அவங்க போய் நிச்சயதார்த்தத்தை நிறுத்தின அப்புறம்., நம்ம போய் அரஸ்ட் பண்ணிக்கலாம்., அதனால எந்த பிரச்சினையும் வராது”., என்று சொன்னான்.

             சற்று நிம்மதி மூச்சு வந்ததாக உணர்ந்தாள், ஏனெனில் ஒரு பெண்ணின் வாழ்வு தங்களால் கெட்டுவிடக் கூடாது என்பதை யோசித்துக் கொண்டே இருந்ததால் இப்போது அவளுக்கு சற்று நிம்மதியாக உணர்ந்தாள்..

                   சரியாக அவன் பத்தியம் முடிவதற்கு மறுநாள் அங்கு நிச்சயதார்த்தம் என்று சொன்னார்கள். அபூர்வா நிச்சயதார்த்தம் நிறுத்தி அவர்களை கைது செய்யும் போது தன் வேலையை ரிசைன் செய்திருக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தாள். எனவே கடைசி நாள் பத்தியம் மட்டும் வீட்டில் உள்ளவர்களை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு தன் டெல்லி செல்லலாம் என்று முடிவெடுக்க நினைத்தாள்.

               நரேன் தான் “வேண்டாம் இரண்டு நாள் கழித்து நீ வேலையை ரிசைன் செய்துகொள்ளலாம்., அவசரம் இல்லை” என்று சொல்லிக்கொண்டிருந்தான்…

                             நிச்சயதார்த்த நாள் நெருங்க நெருங்க யாருக்கு படபடப்பு இருந்ததோ.,  இல்லையோ., அபூர்வா சற்று பரபரப்பாகவே காணப்பட்டாள். இதில் எந்தவித குழப்பமும் வந்துவிட கூடாது என்பதில் தெளிவாக கொண்டு சென்றனர்., நரேன் குணமான விஷயம் வேறு யாருக்கும் தெரியாது., யாரிடமும் சொல்லவில்லை., மற்றவர்கள் அந்த விசேஷத்தில் தெரிந்து கொள்ளட்டும் என்ற காரணம் தான்., ஏற்கனவே இரவு நேரத்தில் வந்து சேர்ந்து இருந்ததால் நரேன் வீட்டில் இருப்பது யாருக்கும் தெரியாது…

                  ஏற்கனவே நரேனின் மாமா குடும்பத்தோடு வந்து விடவேண்டும் என்று சொல்லி இருந்ததால் அனைவரும் வருவதாக சொல்லி இருந்தனர். எனினும் அபூர்வாவும்., நரேனும் வருவார்கள் என்று அவர் எதிர்பார்க்காததால் அதை பற்றி சொல்லவில்லை., ஆனால் கண்டிப்பாக வருவார்கள் என்பது வீட்டினர் அனைவருக்கும் தெரியும்…

              சாதாரணமாகவே கிளம்பினாள்., அவள் அலுவலகத்திற்கு சென்றாள் எப்படி செல்வாளோ., அப்படிதான் கிளம்பி இருந்தாள். ஒரு விசேஷ வீட்டிற்கு போவது போல அவள் கிளம்ப வில்லை., இது அனைவரும் அறிந்தது தான்.

             மற்றவர்கள் எல்லாம் விசேஷ வீட்டிற்கு போவது போல கிளம்ப இவள் சொல்லி விட்டாள்., “நீங்கள் முன்னாள் போங்கள்., நான் பின்னால் வருகிறேன்” என்று ஏனெனில் அவர்கள் வரும் நேரத்தில் கவினும் ஜான்சனும் வருவதாக சொல்லி இருந்ததால் அவள் காத்திருந்து அவர்களோடு வருவதாக சொன்னாள்…

                அவர்களிருவரும் ஏர்போர்ட்டில் இருந்து ஒன்றாக கிளம்பி விசேஷம் நடக்கும் மண்டபத்திற்கு வந்து விடுவதாகவும்., அபூர்வா நரேனோடு அங்கு வந்துவிட வேண்டும் என்றும் சொல்லி இருந்ததால்., அவர்கள் வரும் நேரத்திற்கு இவள்  சென்றாள்.

                 அரசியலில் பெரும் புள்ளி என்ற ஒரே காரணத்திற்காக ராஜசேகர் சென்ற இடத்திற்கு போலீஸ் வந்திருப்பதாக மற்றவர்கள் நினைத்தார்கள்., அங்கு போலீசார் இருந்ததின் காரணம் வேறு யாரும் அறியவில்லை., சற்று நேரத்தில் நிச்சயதார்த்த மேடையில் சலசலப்பு தொடங்கியிருந்தது.

         லலிதாவின் அண்ணன் மகள் விரும்பி இருந்தவன் வந்து பிரச்சினையை உருவாக்கி இருந்தான். தான் அவளை தான் விரும்புகிறேன் என்பதை அனைவரிடமும் சொன்னான்.

              அவரோ தான் “கண்டவனுக்கு எல்லாம் பெண் கொடுக்க முடியாது” என்று பேசினார்.

               அதே நேரத்தில் “நான் அவனை தான் கட்டிக் கொள்வேன்” என்று அவள் சொல்ல பிரச்சனை கிளம்பியது.

                 மலேசியாவிலிருந்து வந்திருந்த அவனின் பெற்றோர்கள் “அது எப்படி நாங்கள் இதற்காக தான் மலேசியாவிலிருந்து வந்தோமா.., எங்களை அவமானப் படுத்துவதற்காக தான் நிச்சயதார்த்த ஏற்பாடு செய்தீர்களா”., என்று கேட்டதோடு மட்டுமல்லாமல் மோகன் ஐயும் சேர்த்து திட்டத் தொடங்கினர்.

          சொந்தபந்தங்கள் ராஜசேகர் பேசுவார் என்று பார்த்திருக்க., அவர் யாருக்கு வந்த விருந்தோ என்பது போல அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

          அப்போது தான் லலிதாவின் அண்ணன் வந்து ராஜசேகரிடம் “நீங்க வந்து பேசுங்க” என்று கூப்பிட்டார்.

               அவர் “இதுல நான் என்னப்பா பேச இருக்கு., கல்யாண பொண்ணு சொல்லிடுச்சு., அந்த பையன விரும்புறதா., அதுக்கப்புறம் நாங்க என்ன சொல்ல இருக்கு”., என்று யாரோ போல் பேசினார்.

            “என்ன மச்சான் யாரோ மாதிரி பேசுதீங்க” என்று சொன்னார்.

            யாரோ மாதிரி பேசுறதோட விட்டுடேனே ன்னு., நினைத்து சந்தோஷப்பட்டுக்கோ அல்லது உன் பையன் பண்ணியிருக்க காரியத்துக்கு”., என்று  சத்தமாகவே சொன்னார்.

                  அந்த சத்தத்தில் அமைதியாக இருந்தது மண்டபம்., அதேநேரத்தில் நரேன் உள்ளே நடந்து வர பார்த்தவர்களுக்கு சற்று ஆனந்த அதிர்ச்சி என்றால்., மோகனுக்கும்., அவன் நண்பனுக்கும் பயங்கர அதிர்ச்சியாகவே இருந்தது.

          லலிதாவின் அண்ணன் “ட்ரீட்மென்ட் போயிட்டு வந்தீங்களா., சொல்லவே இல்லையே மச்சான்” என்று கேட்டார்.

         போலீஸ் அருகில் நிற்க., அபூர்வா கவினோடு பேசிக் கொண்டு வந்தாள். அவள் வரவும் அருகிலிருந்த போலீசார் அனைவரும் அவளுக்கு வேகமாக சொல்லி வைத்தது  போல சல்யூட் வைக்க அனைவருக்குமே அதிர்ச்சி தான்., எதற்கு இந்த பெண்ணுக்கு சல்யூட் வைக்கிறார்கள்., என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே., அபூர்வா கையை காட்ட அங்கிருந்த விபத்து நடந்த பகுதியில் உள்ள கமிஷனர் பேசினார்..,

                பிரச்சினைகளை எடுத்துக் கூறி “நீங்கள் அவரின்  தாய் மாமாவாக போனதால் உங்கள் பெயரை எல்லாம் இதில் சேர்க்கவில்லை.., அவனும் மலேசியாவில் இருந்து வந்திருக்கும் இந்த பையனும் மட்டும் தான் காரணம் என்பதால்., அவர்கள் இருவரை மட்டுமே சேர்த்திருக்கிறது., மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்” என்றார்.

                 அவர் வாயை திறக்கவில்லை மலேசியாவிலிருந்து வந்த அவனின் பெற்றோர்கள் “இல்லை எங்கள் பையன் அப்படிப்பட்டவன் கிடையாது” என்று சொன்னார்கள்.

       அதற்கான சாட்சியங்களையும்., பேசிய ஆடியோ ரெக்கார்டிங் கையும் எடுத்து போட அனைவரும் அதிர்ந்து விட்டனர். இது லலிதாவின் அண்ணன் குடும்பத்திற்கு பெரிய தலைகுனிவு., மலேசியாவிலிருந்து வந்தவனுக்கு அதற்கு மேல் அடி., இன்னும் அவர் அரசியல் செல்வாக்கு உள்ளவர் என்பதால் இங்கிருந்து செல்லும் கம்ப்ளைன்ட் க்கு அங்கு விசாரணை நடக்கும்., அதுமட்டுமல்லாமல் இனி இங்கு கைது செய்யப்படுவதால் அவனால்  மற்ற இடங்களில் தொழில் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும்., மிக அதிர்ச்சியாகவே உணர்ந்தனர்.., எப்படி கண்டுபிடித்தனர், என்று அதன் பிறகுதான் தெரியும் அபூர்வா டெல்லியில் கலெக்டராக இருந்தவள். என்பது.,

          அவர்களை அரஸ்ட் செய்த  அடுத்த நொடி அங்கிருந்து அவனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள். லலிதா வாயை திறந்து எதுவும் பேசவில்லை., லலிதாவின் அண்ணன் கேட்டதற்கு “என் பையனை விட வேற யாரும் எனக்கு முக்கியம் இல்லை” என்று சொல்லிவிட்டார்.

              அதன்பிறகு மறுநாளே டெல்லி கிளம்பி விட்டாள்.  நரேனை அழைத்துக் கொண்டு சென்றாள்., ஏனெனில் மாமா வீட்டில் கூப்பிட்டுக் கொண்டே இருந்ததால்.,  அவனோடு அங்கு சென்று இரண்டு நாள் தங்கியவள் தன் வேலையை ராஜினாமா செய்து., அதற்குரிய விளக்க கடிதத்தையும் கொடுத்து., ஒருநாள் முழுவதும் அவர்களது கேள்விக்கு பதிலளித்து விட்டு வந்தாள்..

         இரண்டு நாள் டெல்லியில் அவர்களுக்கான விருந்து தடபுடலாக இருந்தது. அப்போதுதான் மாமா சொல்லிக்கொண்டிருந்தார்., “அபர்ணா இன்னும் உங்க அம்மா பேச்சை தான் கேட்கிறா.., ஹரி வீட்டிலிருந்து கம்ப்ளைன்ட் ஆயிருச்சு., சண்டை போடாம இருக்க மாட்டாங்க போல., என்று சொன்னார்.

       அவள் பாட்டியிடம் சொன்னாள்., “பாட்டி நீங்க அட்வைஸ் பண்ணுங்க., நான் பண்ண நல்லா இருக்காது., நீங்க கொஞ்சம் அவளுக்கு சொல்லிக் கொடுங்க.., அப்படி இல்லாட்டி அம்மா வாயை மூட வைங்க., வேற வழி இல்ல., அவளோட லைஃப் நல்லா இருக்கும்னு நினைச்சா., அம்மா வாய மூடிட்டு இருந்தா மட்டும் தான்., நல்லா இருக்கும்” என்று சொன்னாள்.

       அவரும் சரி என்று சொல்லிக்கொண்டிருந்தார்., அதேநேரம் ராமநாதனும் போன் செய்ய., ராமநாதனிடம் அம்மாவை கண்டித்து வையுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தாள்., “அபர்ணாவின் வாழ்க்கை இப்போதும் அம்மாவின் பேச்சை கேட்பதால் கெட்டுப் போகும்” என்று சொன்னாள்.

           ராமநாதன் கண்டிப்பாக தலையிட்டு அவளின் வாழ்க்கை பிரச்சனை இல்லாமல் பார்த்துக்கொள்வதாக சொல்லியிருந்தார்..

             அதன் பிறகு சென்னை வந்தவர்கள் அவர்களது வாழ்க்கைக்கு திரும்பும் படி அவள் பார்த்துக் கொண்டாள்.

                 அவனை கம்பெனிக்கு சென்று விட்டு வருமாறு சொல்ல.., அவனோ பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தான். “நான் ஹனிமூன் போயிட்டு வந்ததுக்கு அப்புறம் தான் ஆபீஸ் போவேன்” என்று சிறுபிள்ளை போல பிடிவாதம் பிடிக்க இவளுக்கு தான் என்ன செய்வது என்று தெரியவில்லை..,

          பத்தியம் முடிந்திருந்தாலும் இன்னும் இவள் ஏதாவது காரணம் சொல்லி அவர்களுக்கான பத்தியத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தாள்..

        இதைப்பற்றி நரேன் கல்யாண் னிடம் பேசிவிட கல்யாண் ந்தான் “போய்விட்டு வாருங்கள்” என்று சொன்னான்.,

         இவள்தான் “இன்னும் பத்து நாள் கழித்து போகலாம்” என்று அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்…

           “ ஏன்” என்று கேட்டதற்கு., “காரணம் பெருசா ஒன்னும் இல்ல., ஆபிஸ் ல இருந்து ஒரு லட்டர் வரனும்., அதான் சொல்றேன்.,  சமத்து பிள்ளையா கம்பெனிக்கு கிளம்புங்க” என்று அவனை விரட்டுவதிலேயே குறியாக இருந்தாள்.

          அவள் சொல் பேச்சு கேட்டு கம்பெனிக்கு செல்ல தொடங்கியிருந்தாலும்., அவளோடு இருக்கும் நேரங்களில் காதல் மன்னனாகவே மாறி போய் இருந்தான்.  அவள் தான் அவன் காதலில் திணறும் நிலைக்கு வந்து இருந்தாள். உண்மையில் மனதிற்கு நிறைவாக உணர்ந்தாள்., இப்படிப்பட்ட காதலை பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும்.,என்று நினைத்தாள்.

      ஏனெனில் அவள் அனுமதி இல்லாமல் அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை.., அதன்படியே வாழ்க்கை சுமூகமாக சென்று கொண்டிருக்க.., இன்னும் அவர்களுக்கான பிரத்தியோக வாழ்க்கைக்குள் இருவரும் அடி எடுத்து வைக்கவே இல்லை., அதில் அவன் உறுதியாக இருந்தான். தங்களுக்கான தனிமை வேண்டும் என்பதில்.,

 ஹனிமூன் அந்தமான் செல்வதாக முடிவு செய்தான்., அங்கு ரிசார்ட் எல்லாம் புக் செய்துவிட்டு., இவளிடம் சொன்னான் நரேன்., ஏனெனில் இவள் ஏதேனும் காரணம் சொல்லி தள்ளிப்போடுவாள் என்ற எண்ணத்தில் தான்.., அவன் சொல்லும்போது அவள் சிரித்தபடி தலையாட்டினாளே ஒழிய வேறு எதுவும் சொல்லவில்லை.. அவனோடு கிளம்ப தயாராக இருந்தாள்..

பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை

எல்லா அறமுந் தரும்”

 

குறள் விளக்கம் :பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.

Advertisement