Advertisement

“ஓகே வா இருக்கீங்களா..,  நான் பேசலாம் இல்ல.,  கூட கொஞ்ச நேரம் ஆனாலும் உங்களால உட்கார்ந்து இருக்க முடியும் தானே..,  டிஸ்டர்பா இருந்துச்சுன்னா சொல்லிடுங்க”..,  என்று சொன்னபடி பேசத் தொடங்கினாள்.

              “எங்க வீட்டில் உள்ளவங்க பேசுனத, கண்டிப்பா மன்னிக்க முடியாது.,என்று எனக்கும் தெரியும். அதே நேரத்துல அவங்க சார்பா நான் மன்னிப்பு கேட்க வந்திருக்கேன் என்று நினைக்காதீங்க…,  ஏன் னா தப்பு பண்ணது அவங்க தான்,  அவங்க தான் மன்னிப்பு கேட்கணும்..,  கேட்பாங்க.., நான் கேட்க வைப்பேன் என்று சொன்னவள்., அவனிடம் நேருக்கு நேராக முகம் பார்த்தபடி உங்களை நான் பேர் சொல்லி கூப்பிடலாம் இல்ல..,  தப்பா எடுத்துக்க மாட்டீங்களே”., என்று கேட்கும் போது அவன்  இடது கையை மட்டும்  சம்மதமாக  ஆட்டி விட்டு., கையை காட்டி மேற்கொண்டு பேசும்படி சொன்னான்.

          அவளும் மூச்சை இழுத்து விட்டபடி.,  “எனக்கு சுத்தி வளச்சி பேச தெரியாது” என்று சொல்லி விட்டு தன்னை பற்றிய சிறு அறிமுகத்தையும் செய்து கொண்டாள். “தான் வளர்ந்தது எல்லாம் டெல்லி தான்,  மாமா வீட்டில் இருக்கிறேன்., இப்போது கவர்மென்ட் உத்தியோகத்தில் இருக்கிறேன்.  தற்சமயம் லீவ் ல தான் வந்திருக்கிறேன் என்று சொன்னவள்., நான் வேலைய விடனும் அப்படின்னு ஒரு முடிவுல தான் இருக்கிறேன்”., என்று சொல்லவும்

        கல்யாண்  இடையில் பேசினான்., “இப்ப உள்ள  காலத்தில் கவர்மெண்ட் ஜாப் கிடைச்சது பெரிய விஷயமா இருக்கு., நீ என்ன வொர்க்  பார்க்கிற ன்னு எனக்கு தெரியாது., ஆனா உங்க வீட்ல இருக்கிற வசதிக்கும்.,  உங்க மாமா வீட்ட பொறுத்த வரைக்கும் நீ வேலைக்கு போக அவசியம் கிடையாது என்று எல்லாருக்கும் தெரியும். அதையும் தாண்டி  போயிருக்க அப்படி னா.,  கண்டிப்பா நல்லா ஆபிஸர் ரேங்க் ல தான் இருக்கும் அப்படின்னு தோணுச்சு.,  உன்னோட தோற்றம் கூட அப்படித்தான் இருக்கு..,  அப்புறம் எதுக்கு மா வேலையை விட முடிவு பண்ணி இருக்க” என்று கேட்டான்.

              “இப்ப அது மேட்டர் இல்ல அண்ணா.,  அண்ணன் ன்னு கூப்பிடலாம் இல்ல” என்று கேட்டாள்.

               கல்யாண்  சிரித்துக்கொண்டே சொல்லுமா., “ஏதோ விஷயம் சொல்லணும் நினைக்கிற சொல்லு” என்று கேட்டான்.

            அவள் நரேனை பார்த்துக் கொண்டே “நான் கேக்குறதுக்கு நீங்க உடனே பதில் சொல்லனும் ன்னு இல்ல.,  யோச்சி நிதானமா சொல்லுங்க” என்று சொன்னவள்.

          அமைதியாக அமர்ந்திருந்தவனின்   முகத்தை நேருக்கு நேராக பார்த்தபடி “நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களா” என்று கேட்க அவன்  முகத்தில் ஒரு நிமிடம் அதிர்ச்சி வந்து சென்றாலும்., உடனே நிதானத்திற்கு வந்தான். அனைவருமே சற்று அதிர்ந்து தான் போயினர்.

           இந்த பொண்ணு நேரடியாக இப்படி வந்து  கேட்கும் என்று எதிர்பார்க்காத லலிதாவும் ராஜசேகரும் “என்னம்மா சொல்ற” என்று சேர்ந்தே கேட்டனர்.

       அவளோ “இதுல  நீங்க இப்படி கேட்கிற அளவுக்கு எதுவும் இல்லைன்னு நினைக்கிறேன்..,  அன்னைக்கு எங்கம்மா பிளஸ் அபர்ணா வந்து பேசிட்டு போனாங்க அப்படினு கேள்விப்பட்ட அந்த நிமிடத்தில் இருந்து.., என்னோட முடிவு மாறி போச்சு., ஏன் நான் கல்யாணம் பண்ணிக்க கூடாது அப்படின்னு தோணிச்சு..,  நெஜமா சொல்லனும்னா எனக்கு அந்த நிமிஷம் வரைக்கும்  கல்யாணம் பண்ணனும்  ஐடியாவே இல்லை..,  ஒரு டூ இயர்ஸ் வொர்க் பண்ணனும்.., அதுக்கு அப்புறம் தான் கல்யாணத்தை பத்தி யோசிக்கணும் அப்படின்னு நினைச்சிருந்தேன்.., அவளுக்கு மேரேஜ் பேசின நேரத்துல கூட அப்பா, தாத்தா , மாமா எல்லாருமே கேட்டாங்க.,  உனக்கு மாப்பிள்ளை பார்க்கட்டுமா ன்னு…, அப்ப எல்லாம் அப்படி ஒரு எண்ணம் வரவேயில்லை…   சோ இப்ப நீங்க தான் இப்ப பதில் சொல்லணும்., என்ன பத்தின டீடெயில்ஸ் சொல்லிட்டேன்.,  உங்களை பத்தி இப்போ எனக்கு தெரிஞ்சது, இங்க பிசினஸ் பண்றீங்க, உங்க பேமிலி டிடெயில்ஸ் ஓரளவுக்கு தெரியும்.,  அவ்வளவு தான் மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது..,  நீங்க சொல்ற முடிவில் தான் நான் முடிவு செய்யணும்.,  நீங்க தான் சொல்லணும், என்னோட முடிவை சொல்லிட்டேன். இந்த முடிவோட தான் நான் இப்போ லீவு போட்டுட்டு வந்து இருக்கேன்”. என்று சொல்லி கொண்டே இருந்தாள்.

            அவள் சொல்லியதை கேட்டவுடன் கல்யாண் “காலைல பேசிட்டு இருந்தீயே மா உங்க வீட்டில..,  இந்த விஷயம் சேர்த்து சொல்லிட்டீயா”  என்று கேட்டான்.

          “இல்ல வீட்ல யாருக்கும் தெரியாது.,  உங்க தம்பி கிட்ட பேசிட்டு தான், எங்க வீட்டுல நான் சொல்லனும்” என்று சொன்னாள்.

           யாரிடமும் எதுவும் பேசாமல் நரேன் ஒரே வார்த்தையில் “இல்லை நீங்க ஏதோ பரிதாபத்தில் முடிவு பண்ணிட்டீங்க.,  நல்லா யோசிச்சு பாருங்க., எவ்வளவு தப்பான முடிவு ன்னு தெரியும்”.,  என்று சொன்னான்.

         ” இதுல யோசிப்பதற்கு எதுவும் இல்லை…  நான் நல்ல யோசித்து முடிவோட தான் வந்து இருக்கேன்”..,  என்று சொன்னாள்.

          லலிதாவும் ராஜசேகரும் “என்னம்மா சொல்லுற” என்று கேட்க..  கல்யாண் “நிஜமா சொல்றியா”  என்று கேட்கும் போது…

      நரேனும் “நீங்க யாரும் எதுவும் பேசாதீங்க..,  நான் பேசுகிறேன்” என்று சொன்னவன்.  “இங்க பாருங்க அவசரப்பட்டு முடிவெடுக்காதீங்க..,  இது நடக்காது”…, என்று சொன்னான்.

          இவளோ.. “ஏன் நடக்காது” என்று கேட்டாள்.

         “எனக்கு சம்மதமில்லை” என்று நரேன் பதிலுக்கு பேசினான். “நீங்க  என்ன சொன்னாலும்  கல்யாணம் நடக்காது., நடக்கவும் முடியாது., நீங்க கிளம்புங்க” என்று சொன்னான்.

           “நீங்க எனக்கு பதில் சொல்ற வரைக்கும் நான் இங்க இருந்து கிளம்ப மாட்டேன்”., என்று அவள் அடம் பிடிக்க சற்று நேரம் அமைதியாக  தலைகுனிந்து அமர்ந்து இருந்தவன் பேசத்தொடங்கினான்.,

          ” உங்க அம்மா., உங்க சிஸ்டர் சொல்லிட்டு போனது கடைசி வரைக்கும் எனக்கு வீல்சேர் தள்ள வேண்டியது வருமோ ன்னு.,  அது மட்டுமில்லாம சரியாகவே  மாட்டேன் அப்படிங்கற மாதிரி  சொல்லிட்டு போனாங்க…, அது மட்டுமில்லாம எங்க மாமா சொன்னாரு.,  அதே மாதிரி தான் சொன்னாங்க.., அது மட்டுமா ஒரு நல்ல புருஷனா இருக்க முடியுமான்னு கேட்டார்..,  அதையே தான் இப்ப நான் உங்க கிட்ட  கேக்குறேன்”.., என்றான்.

            “நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது.., அது மட்டும் வாழ்க்கை இல்லை அப்படி ங்கிறது அவங்களுக்கு புரியலையா இருக்கும்..,  என்ன விஷயத்துக்காக சொன்னார்களோ அது மட்டும் வாழ்க்கை இல்லை அப்படி ன்னு அவங்ளுக்கு புரிய வைக்கலாம்.., பாசிட்டிவ் வா திங்க் பண்ணுங்களேன் எப்பவும் நல்லதுதான் நடக்கும்”… என்றாள்.

         “என்னால அப்படி எல்லாம் யோசிக்க முடியாது..,  என்னால கல்யாணத்துக்கு சம்மதிக்க முடியாது., அவ்வளவு தான்”., என்று நரேன் அழுத்தமாக சொல்லவும் வீட்டில் உள்ள மற்றவர்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

         சிரித்துக் கொண்டே நரேனிடம் பேசத் தொடங்கியவள் “நம்ம ஊரில் அந்த காலத்தில் இருந்தே பசங்க தான் பொண்ணுங்க கழுத்தில் தாலி கட்டனும் ன்னு., வைச்சிருக்காங்க.., பசங்க கழுத்தில் தாலி கட்டுற ஸ்கீம் இருந்தா நானே கட்டியிருப்பேன். என்ன பண்ண உங்கள கட்டாயப்படுத்தி  என் கழுத்துல தாலி கட்ட வைக்க முடியாது.,  அதனால  நீங்க எப்ப சரி சொல்லுறீங்களோ அப்ப கல்யாணம் பண்ணிக்கலாம். அது வரைக்கும் வெயிட் பண்றேன்” என்று சொன்னாள்.

          அவன் உட்பட அனைவருக்கும் அவள் சொன்ன விதத்தில் சிரிப்பு வந்தாலும் நரேன் எதுவும் கோபப்பட்டு விடக்கூடாது என்று அமைதி காக்க… அவனோ சிரித்தால் அதையே அவள் ப்ளஸ் ஸாக எடுத்து விடக்கூடாது என்று அமைதி காத்தான்..,

                  அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன். “எனக்கு  கால் கடைசி வரைக்கும் சரியாகலை னா., என்ன பண்ணுவ., கடைசி வரைக்கும் வெயிட் பண்ணுவீயா., என்று கேட்டான்.

       “கிளம்பி போய் லீவை கேன்சல் பண்ணிட்டு வேலையை பாரு” என்று சொன்னான்.

       “ஹலோ கடைசி வரை காத்திருப்பேன் சொன்னேன்.., எங்க இருப்பேன்  ன்னு சொன்னேனா..,  உங்க கூட..,  உங்க வீட்டுல தான் இருக்கப் போறேன்., இதுதான் என் முடிவு” என்று சொன்னாள்.

     வீட்டிலுள்ளவர்கள் சுற்று அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

          “ஹலோ உடனே தப்பா நினைச்சுக்காதீங்க..,  உங்க வீட்டில உங்கள பாத்துட்டு ஒரு நர்ஸ் மாதிரி உங்க கூடவே இருந்துருவேன்..,  பட் உங்கள விட்டுட்டு போற ஐடியாவோட எல்லாம் நான் வரல.,   கடைசி வரைக்கும் உங்கள பார்த்துக்குறேன்., நீங்க எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம் ன்னு சொல்றீங்களோ..,  அப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்”.,  என்று அவள் தெளிவாக முடிவெடுத்து பேசினாள்.

        கல்யாண் ந்தான் “இல்லமா.,  உங்க வீட்ல  பிரச்சினை வரும் வேண்டாம்”., என்று சொன்னான்.

          ” அதை நான் பார்த்துக்குறேன்.., நீங்க யோசிக்காதீங்க.,  முடிவெடுத்தால் எடுத்தது தான்.,  இது எங்க வீட்டில் உள்ள எல்லோருக்குமே தெரிந்த ஒரு விஷயம்., என்கிட்ட மேக்சிமம் போனா ஒரு தடவையோ.,  இரண்டு தடவையோ., அழுத்தி பேசுவாங்க.., அப்புறம் இது தான் என்னோட முடிவு தெரிஞ்சுக்க வரும் போது யாரும் எதுவும் பேச மாட்டாங்க”.., என்று சொன்னாள்.

         ராஜசேகர்  “எங்க வீட்டுக்கு வந்து இருக்குறதுல எங்களுக்கு பிரச்சனை இல்ல மா..,  உன்னை யாரும் தப்பா சொல்லி விடக்கூடாது” என்று சொன்னார்.

     “அது தான் அங்கிள்., நான் உங்க பையன் கிட்ட கேட்டேன்., என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க னு..,  அவரு தான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் னு சொல்றாரு., அவரை எந்த விதத்திலும் கட்டாயப்படுத்த வேண்டாம். சோ கல்யாணம் பண்ணிக்காட்டிலும் பரவாயில்ல”., என்று சொன்னாள்.,

      அனைவரும் யோசனையோடு நரேன் முகத்தை பார்க்க.., நரேனோ பேசிக் கொண்டிருந்த அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..,

              அதுவரை அவளை மரியாதையுடன் பேசிக்கொண்டிருந்தான்., “கோபத்துல மரியாதை கைவிடக்கூடாது பார்க்கிறேன். இல்லாட்டி பயங்கரமாக திட்டிருவேன்” என்று சொன்னான்.

        அவளோ “உங்ககிட்ட நான் ஒன்னும் மரியாதையை கேட்கல.., நீங்க எப்படி கூப்பிட்டாலும் ஒன்னும் பிரச்சனை இல்ல.,  ஒன்னு கல்யாணத்துக்கு ஒகே சொல்லுங்க..,  இல்லனா நான் உங்க வீட்டுக்கு வர்றது ஒத்துக்கோங்க..,  இரண்டில் ஏதாவது ஒரு சாய்ஸ் தான் உங்களுக்கு..,  என்றாள்.

         நரேன் அவளிடம் “சரி எனக்கு குணம் ஆயிடுச்சின்னா..,  வீட்டை விட்டு போயிருவீயா” என்று கேட்டான்.

       ” நான் எதுக்கு போகணும்.,  உங்களுக்கு சரி ஆயிடுச்சின்னா., என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க” என்றாள்.

      அவளை பார்த்து “எதுனாலும் பிடிவாதம் தானா” என்று கேட்டான்.

     ” கரெக்ட் எங்க வீட்டிலேயும் இப்படியே தான் சொல்லுவாங்க..,  பிடிவாதமே தான்.,  அதெல்லாம் ஒண்ணும் தப்பு இல்ல..,  எனக்கு வேணும் முடிவு பண்ணிட்டேனா., வேணும்னு தான் நிப்பேன்”., என்று அவள் தெளிவாக சொன்னாள்  .

        “உனக்கு இருக்குற அதே பிடிவாதம் எனக்கும் இருக்கு..,  என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது.., அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை”.,  என்று அவன் சொன்னான்.

            அவளும் “அதுதான் நான் ஏற்கனவே சொல்லிட்டேன்ல.., கட்டாயப்படுத்தி தாலி கட்ட வைக்க முடியாது..,  நீங்க என்ன முடிவெடுத்தாலும் எனக்கு ஒ.கே தான். நீங்க தான் முடிவு பண்ணனும்..,  நான் முடிவு எடுத்து தான் வந்தேன்..,  அது.,  என்ன  ஆனாலும்  நான் உன்கூட தான் இருப்பேன்”.., அவன் முகத்தை நேருக்கு நேராக பார்த்து சொன்னாள்.

        அவனும் அருகில் இருப்பவர்களை  பற்றி யோசிக்காமல் அவள் முகத்தையே அளவிடுவது போல பார்த்துக் கொண்டிருந்தான்.  கண்ணில் தேங்கிய கண்ணீரோடு.

  “அன்பு ஒன்றுக்கு மட்டுமே., அனைத்தையும் அடக்கி ஆளும் சக்தி உண்டு.

Advertisement