Advertisement

அத்தியாயம்13

 

அவனுக்கு சிகிச்சைக்காக  பலரிடம் சொல்லி வைத்திருந்ததால்.., தோழி  ஒருத்தியிடம் இருந்து செய்தி வந்திருந்தது.,

      கேரளாவில் உள்ள வர்ம வைத்திய சாலை., அங்கு இதற்கான தீர்வு இருப்பதாகவும் எங்காவது அடிபட்டு உள்பகுதியில் நமக்கே தெரியாமல் நரம்புகள் முடிச்சிட்டுக் இருந்தாலோ அல்லது வர்ம அடி குறிப்பிட்ட புள்ளியில் பட்டிருந்தாலும்.., அதை வெளிப்புற எண்ணை பூச்சு மூலமாகவும்.., எண்ணெய் மசாஜ் மூலமாகவும்., உள் கொடுக்கும் மருந்து மூலமாகவும் குணப்படுத்துவதாகவும் அதனுடைய விபரங்கள் அனைத்தும் அனுப்பி வைத்திருந்தாள்.

    அதை வாசித்தவளுக்கு மிகவும் சந்தோஷமான தீர்வு கிடைத்து இருப்பதாக நம்பினாள். எனவே அதைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்த பிறகே வீட்டினரிடம் சொல்லி அவனை மருத்துவத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.

        ஏனெனில் அங்கு சென்றால் தங்கியிருந்து மருத்துவம் செய்வது போல இருக்கும்., அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவனை இங்கிருந்து அழைத்துச் செல்லும் போது வீட்டிலுள்ளவர்கள் எதுவும் சொல்லக்கூடாது.., அதுமட்டுமில்லாமல் அவனை எங்கு அழைத்துச் செல்கிறோம் என்பது மற்றவர்களுக்கும் தெரிய கூடாது, என்ற சூழ்நிலை., அதற்கு தகுந்தார்போல் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு முதலில் வைத்தியசாலைக்கு அலைபேசியில் அழைத்து விபரங்களை அறிந்து கொண்டாள்..

         கேரளா என்றாலும்.., தமிழக எல்லையை ஒட்டியுள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியை குறிப்பிட்டிருந்தால் அப்பகுதிக்கு அலைபேசி மூலம் அழைத்து அங்குள்ளவர்கள் தமிழும் அறிந்திருந்ததால் இவளுக்கு பேசுவது எளிதாகவும் இருந்தது.

               அவர்களிடம் இவனுடைய நிலையை எடுத்துச் சொன்னாள். விபத்து நடந்த அந்த நாளிலிருந்து தான்  சொன்னாள்.., “விபத்தின் போது எந்த அடியும் படவில்லை ரத்த காயம் எதுவும் இல்லை.., மருத்துவ பரிசோதனையில் எங்கும் அடிப்பட்டு இருப்பதாகவும் தெரியவில்லை., என்ன செய்வது” என்று கேட்டாள்.

    “குறிப்பிட்ட வர்ம புள்ளியில் பின் பகுதி., முதுகு அல்லது இடுப்பு பகுதியில்., ஏதாவது ஒரு குறிப்பிட்ட வர்மப் புள்ளியில் பிடிப்போ அல்லது நரம்பு சுருட்டலோ இருக்கலாம்.., அதனால் கூட இப்படி இருக்க வாய்ப்பு உள்ளது”., என்று அவளிடம் பேசியவர்கள் சொன்னார்கள்.

      “நீங்கள் முதலில் அழைத்து வாருங்கள்., முதல்முறை தடவி பார்க்கும் போதே தலைமை வைத்தியர் சொல்லி விடுவார்., குணப்படுத்த முடியுமா முடியாதா என்பதை” என்று சொன்னார்கள்., இவளுக்கும் நம்பிக்கை வந்தது அதன் பிறகே வீட்டில் சொல்லலாம் என்ற முடிவோடு வீட்டில் உள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தாள்…

        நரேன் சந்தோஷோடு அலுவலக வேலையில் ஈடுபட்டிருக்க., காலையிலேயே கல்யாண் னிடம் சொல்லி இருந்தால்.., வீட்டில் அனைவரையும் வைத்துக்கொண்டு பேச வேண்டுமென்று…

                   ராஜசேகர் வந்தவுடன் “என்னம்மா விஷயம் ஏதோ பேசனும் ன்னு சொன்ன” என்று கேட்டார்.

               “ஆமா மாமா” என்று சொன்னபடி கேரளா வைத்தியசாலை பற்றியும் இவள் போன் செய்து விசாரித்த மற்ற விஷயங்களைப் பற்றியும் சொன்னாள்.

        “சரி போயிட்டு வா.., நான் கூட ஆள் அனுப்புகிறேன்” என்று சொன்னாள்.

    “இல்ல மாமா.., அண்ணன் கிட்ட சொல்லி இருக்கேன்” என்று சொன்னாள். அவள் கல்யாணை பார்க்க..,

             கல்யாண் “இல்ல தம்பி ட்ரீட்மெண்ட் போறது., வெளியே தெரிய வேண்டாம்” என்றான்.

     “ஏன்டா” என்று கேட்டார்.

     “இல்லப்பா காரணம் பெருசா இல்லை.., வெளியே தெரிய வேண்டாம்.., மத்தவங்க கண்ணு படும்.., யாராவது ஏதாவது நெகட்டிவ் ஆ சொல்லக்கூடாது.., ட்ரீட்மெண்ட் பத்தி விசாரிச்சுட்டு இருக்கோம் அப்படின்னு மட்டும் சொல்லலாம்” என்று தயங்கி தயங்கி சொன்னான்.

       இவன் ஏன் எதற்கு இவ்வளவு தயங்குகிறான் என்ற யோசனையோடு., ராஜசேகரும் “அதுக்கு ஏன்டா இவ்வளவு யோசிக்கிற., நீ சொன்னா சரி தான்” என்று சொன்னார்.

       “அவர்களிருவரும் கேரளா போவதே வெளியில் தெரியாதபடி பார்த்துக் கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டார் ராஜசேகர்.

           அதன் பிறகு நரேனிடம் பேச.., “நரேன் நீ கூட வர்ற இல்ல., அப்புறம் எதுக்கு என் ட்ட கேட்கிற.., நீ கூட வரும் போது நீ எங்க போனாலும் நானும் வருவேன்” என்று சொன்னான். யாரும் அருகில் இருக்கிறார்களா என்று சுற்றி பார்த்துவிட்டு அழுத்தமாக அவன் நெற்றியில் முத்தமிட்டு., “தேங்க்ஸ்” என்றாள்.

   “ஏன்” என்று கேட்டான்.

     “என் மேல இவ்வளவு நம்பிக்கை வைத்ததற்கு” என்று சொன்னாள்..

         “உன்னை நம்பாம்ம.., நான் வேற யாரை நம்ப போறேன்., நீ ஏன் இவ்வளவு யோசிக்கிற”  என்று கேட்டான்.

      “இதே நம்பிக்கையை கடைசி வரை வைங்க.., நான் எது செஞ்சாலும் அது உங்களோட நல்லதுக்காக மட்டும்தான்” என்று அவள் சொன்னாள்.

     “இது தெரியாதா எனக்கு” என்று அவன் பதிலுக்கு சொல்லிக்கொண்டிருந்தான்., “அதுமட்டுமல்லாமல் மேடம் மத்த நாளெல்லாம் ஒரு தடவைக்கு பத்து தடவை கேட்டால் மட்டும் தான் நெத்தியில லேசான ஒரு முத்தம் கிடைக்கும். ரொம்ப வற்புறுத்தி கேட்டா மட்டும் தான் கன்னத்தில் கொடுப்பீங்க.., இன்னைக்கு நீங்களாவே கீழே யாரும் இல்லை என்கிறத கன்ஃபார்ம் பண்ணிட்டு நெத்தில இத்தனை நாள் இல்லாம ஒரு அழுத்தமான முத்தம் கொடுத்து இருக்கீங்களே மேடம்”.., என்று அவன் கிண்டலாகக் கேட்டான்…

      அது ட்ரீட்மென்ட் க்கு சம்மதம் சொன்னீங்க இல்ல.., அதுக்கு.., தான் என்றாள்.

    “அப்போ ட்ரீட்மென்ட் போயிட்டு வந்த அப்புறம்” என்றான்.

“ ம்ம்ம்.., இன்னும் ஸ்டிராங்காக நெத்தியில கொடுக்கிறேன்” என்று சொன்னாள்.

  “அப்பவும் நெத்தியில தானா”.., என்றான் கண் சிமிட்டியப் படி…,

    சிரித்தபடி அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.  அதே நேரம் அவனிடம் “கல்யாணோடு அலுவலக வேலை சம்பந்தமாக வெளியில் சென்று வர வேண்டும்” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

        “என்ன விஷயம்” என்று கேட்டான்.

   “அபிஷியல் மேட்டர்., ஒரு பைல் மட்டும் சைன் பண்ணி கொடுத்துட்டு வந்துடறேன்.., வெளிய வெயிட் பண்ணுவாங்க”.., என்று சொன்னாள்.

        அவனும் “சரி சந்தோஷ் வந்த பிறகு.., நீ போய்ட்டு வா”., என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

      அதேநேரம் கல்யாண் வந்தவுடன் “அபூர்வா அவளது அலுவலக விசயமாக வெளியே செல்ல வேண்டுமாம்.., நீ கூட போயிட்டு வா ண்ணா”.., என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

  கல்யாண் க்கு இவள் பெர்மிஷன் கேட்டு இருப்பது புரிந்தது., எனவே அவனும் சரி என்று சம்மதித்தான்…

       சந்தோஷ் வந்த பிறகு இருவருக்கும் தேவையானவற்றை எல்லாம் எடுத்துக் கொடுத்துவிட்டு., வேலைகளை அவர்கள் தொடங்கிய பிறகு இவள் கல்யாணோடு வெளியே வந்தாள்.,

            கல்யாண் இடம் அவள் சொல்லி இரண்டு நாட்கள் ஆகி இருந்ததால்., அன்றே போன் செய்து ஜான்சனையும் கவினையும் சென்னைக்கு வந்துவிட்டு செல்லுமாறு அழைப்பு விடுத்திருந்தாள். எனவே இருவரும் காலை பிளைட்டில் வந்து இறங்கி இருந்தனர். அவர்கள் இருவரும் புகழ்பெற்ற ஹோட்டல் ஒன்றில் வைத்து சந்திப்பதாக சொல்லி இருந்ததால் கல்யாணை அழைத்துக்கொண்டு அங்கே சென்றாள் அபூர்வா…

           அங்கு அழைத்துச் சென்ற பிறகு கவினை அறிமுகம் செய்து வைத்தாள். ஒரு ஐபிஎஸ் ஆபீஸர் வந்து அவளுக்காக காத்து இருக்கிறார்., என்பது முதலில் யோசனையாக இருந்தாலும் பின்பு அவன் தோழன் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் ஜான்சனை அறிமுகப்படுத்தும் போது டெல்லியில் உள்ள சிறப்பான டிடக்ட்டிவ்  ஏஜென்சியின் தலைவர் என்பதையும் அறிமுகப்படுத்தி வைத்தாள்.

        கல்யாண் க்கு என்ன  விஷயம்  என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் வந்தது. அப்போது தான் அனைத்து விஷயங்களும் சொல்லப்பட அவனிற்கு அதிர்ச்சி ஆனந்தம் என அனைத்தும் சேர்ந்தே வந்தது..,

         தன் தம்பியின் மனைவி தற்சமயம் கலெக்டர் என்பதும்., தன் தம்பிக்காக அனைத்தையும் விட்டுவிட்டு வந்து இங்கு இருப்பது இரண்டு மகிழ்ச்சி என்றால்.., தன் தம்பிக்கு பின்னே பெரிய சதிவலை பின்னப்பட்டு இருப்பதை கண்டு அவனும் என்ன செய்வது என்பது குழம்பி போனான்..,

        ஒரு நிமிடம் கைதேர்ந்த அரசியல்வாதியாக அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடலாம் என்று கோபப்பட்டாலும்., கவினும் அபூர்வாவும் சேர்ந்து அவனுக்கு நடைமுறை சூழ்நிலையை எடுத்து சொன்னார்கள்…..

    “அவசரப்பட வேண்டாம் ண்ணா., இதுக்குதான் யார்கிட்டயும் சொல்லாம..,இவங்க ரெண்டு பேருக்கு மட்டும் சொல்லி.., எனக்கு ஹெல்ப் வாங்கினேன்”.,என்றாள்.

     “அவ்வளவு எவிடென்ஸ் ம்., கையில் வைத்து காத்து இருப்பதாகவும்., அதற்காக தான் அன்று எப்போது வருவார்கள் என்று விசாரிக்க சொன்னதாகவும்” சொன்னாள்.

     “அதுமட்டுமன்றி தான் நரேனை சிகிச்சைக்காக அழைத்துச் செல்வது எக்காரணம் கொண்டும் வெளியில் தெரியக்கூடாது.., அதற்கு தான் நேற்று உங்களிடம் சொன்னேன்., கேரளா அழைத்துச் செல்வது வெளியில் தெரியக்கூடாது என்று, நீங்களும் என்ன ஏது என்று கேட்காமல் மாமாவிடம் சொன்னது மிகவும் நல்லதாக போயிற்று.., இதே போல் கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும்” என்று சொன்னாள்.

    அவனுக்கு அப்போது விஷயத்தின் தீவிரம் புரிந்தது., “நீ எப்படிமா தனியா அங்க பார்த்துப்ப., அங்க கூட்டிட்டு போயிட்டு ஏதும் பிரச்சினை வந்துடிச்சின்னா” என்று கேட்டான்.

    “என்கிட்ட லைசென்ஸ்ஸோட துப்பாக்கி இருக்குது அண்ணா., ஏதும் ப்ராப்ளம் வந்துச்சுன்னா., நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லும் போது “அவள் தன் அதிகாரத்தை பயன்படுத்தாமல் இவ்வளவு நாள் அமைதியாக இருப்பதே பெரும் விஷயம்” என்பதை கவின் சொன்னான்…

Advertisement