Advertisement

“கால் நடக்க முடியாது ன்னு சொல்லிட்டாங்க” என்று முடிக்கும் முன்,

       “சரியாகாது ன்னு ஒன்னும் சொல்லலை இல்ல”… என்றாள்.

     “சரி ஆகும் ன்னு உறுதியா யாராலையும் சொல்ல முடியாது”… என்றாள்.

         “சரி ஆயிருச்சுன்னா” என்று அவள் திருப்ப கேள்வி கேட்டாள்.

        ” ம்ஹூம்… நடக்குற விஷயத்தை பேசு” என்று அபர்ணா சொன்னாள்.

             ” நீ இந்த அளவுக்கு இருப்ப ன்னு., நான் எதிர்பார்க்கவே இல்ல.., அம்மா சொன்னா அப்படியே நம்புற.,  எப்பவுமே  இது நல்லது கிடையாது.., ஆஃப்டர் மேரேஜ் அவருக்கு காலில் அடிபட்டு இருந்துச்சுன்னா..,  நடக்க முடியாது என்று சொல்லி இருந்தாங்கன்னா..,  நீ விட்டுட்டு வந்திருவீயா”.,  என்று கேட்டாள்.

            “அப்படித்தான் நடக்கலையே… என் மேல கடவுளுக்கு இரக்கம் இருக்க போய் தான் காப்பாற்றி விடுறார்” என்று இவள் பதில் சொன்னாள்.

       அப்போதுதான் அபர்ணாவும்  இப்படி பேசுவாள் என்பது வீட்டில் உள்ள அனைவருக்குமே தெரிந்தது..  “ஓகே நீ சொல்ற ஆன்சர் எல்லாம் வச்சு பாக்கும் போது., உனக்கு பஸ்டே கல்யாணத்துல இஷ்டம் இருக்கிற மாதிரி தெரியல..,  இப்போ வீட்டில் பார்த்த மாப்பிள்ளை தானே சம்மதித்து இருக்க..,  இந்த கல்யாணத்துக்கு மட்டும் ஏன் இவ்வளவு சந்தோஷமா சமைச்சிருக்கே., மறுபடியும் மனசு மாறுமா”.., என்று கேட்டாள்.

            “மாறாது… இப்ப  அவங்க பார்த்து பேசி முடிச்ச உடனே ஷாப்பிங் கூட்டிட்டு போனாங்க.., ப்ரீ  மேரேஜ் போட்டோ சூட் கூட நேத்தே முடிஞ்சது”.. என்றாள்.

        “ஒஒ.. ரொம்ப ஸ்பீட் ஆ இருக்கே…  ஓகே இது மட்டும் தான் வாழ்க்கை நினைக்கிறாயா..,  வெளியே ஷாப்பிங் கூட்டிக்ட்டு போறது,  உனக்கு தேவையானதை வாங்கி கொடுப்பது, மட்டும் தான் வாழ்க்கை நினைக்கிறியா..,  அன்பு ஒன்னும் வேண்டாம் நினைக்கிறியா”., என்று அபூர்வா கேள்வி கேட்டாள்.

     “ஏன் பேசி பழகுறது தப்பு ன்னு சொல்லுறீயா” என்றாள்.

      “நான் என்ன கேட்குறேன்.., நீ என்ன சொல்லுற”., என்றாள்.

       “ஹஸ்பண்ட் ஆ வரப்போகும் ஒருத்தர் ட்ட பேசுறது தப்பு ன்னு தோணலை… நீ படிச்சி ஆபிஸர் ரேங்க் ல இருக்க ன்னு சொல்லுறது கூட வேஸ்ட் ன்னு தோணுது”… என்றாள்…

         “அது சரி.., எல்லாரும் அவங்க ஹஸ்பண்ட் வாழ்ந்து பார்த்துட்டு வந்து தான் கல்யாணம் பண்ணி இருக்காங்களா..,  இல்ல தானே.,  அவங்க குடும்பமும் அவங்கவங்க லைப் ன்னு  ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான்.,  அன்பு பாசம் எல்லாம் வரும்.,  கல்யாணத்துக்கு முன்னாடி இருப்பது ஜஸ்ட் ஒருத்தர ஒருத்தர் பார்த்த உடனே வர்ற ஈர்ப்பு தான்”..  என்று அபூர்வா சொல்லிக்கொண்டிருந்தாள்.

      அபர்ணா அபூர்வாவை  மடக்க கேள்வி கேட்டாள்.   “கல்யாணத்துக்கப்புறம் வருவது மட்டும் உண்மையான காதலா.., அதற்கு முன்பு வருவது இல்லையா.., அது வெறும் ஈர்ப்பு தானா..  சும்மா கடமைக்காக குடும்ப நடத்துறவங்க இல்லையா…,எத்தனையோ குடும்பம் அப்படி தான் போகுது உனக்கு தெரியுமா”., என்று கேட்டாள்.

              “கடமைக்காக வாழ்றது வேற.., உண்மையான அன்புக்கு கட்டுப்பட்டு வாழ்வது வேற.., உனக்கு சொன்னா புரியாது, நீ  சும்மா ஷாப்பிங் போவது.,  சினிமா போறது., கேட்கிறதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறது., இது மட்டும் தான் லைஃப் நினைச்சுக்கிட்டே இல்லை”., என்று கேட்டு விட்டு அவள் நிர்மலாவை பார்த்து அபூர்வா கேட்ட கேள்வி “நீங்கள் இப்படித் தானே இருக்கீங்க..,  அப்பா ஆபீஸ் ஆபீஸ் என்று சொல்லிட்டே இருக்குறாங்க.,  அப்பா கூட உங்களுக்கு டைம் ஸ்பென்ட் பண்ண தோனல இல்லை., உங்க ஃபிரண்ட்சோட  ஷாப்பிங் போறீங்க, எல்லாம் செய்யுறீங்க,  கேட்டா.., அப்பாக்கு தேவையானதும் நீங்களே வாங்கறே ன்னு சொல்றீங்க..,  என்னைக்காவது அவர் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும் ன்னு உங்களுக்கு தோனி இருக்கா., இல்லை இல்ல…  என்னைக்காவது அவரை மதித்து அவர் சொல்றத கேட்டு நடந்துருக்கீங்களா…, அன்னைக்கும் அப்படித்தான் ஆஸ்பத்திரி போய் கத்திட்டு வந்து இருக்கீங்க..,  என்னம்மா இதெல்லாம்  யார் கூடவும் பேசறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசுங்க..,  அவங்கள ஏற்கனவே நொந்து போயிருக்கிறாங்க., போய் கூட கொஞ்சம் நோகடிச்சிட்டு வந்து இருக்கீங்க..,  உங்கள எல்லாம் என்ன பண்ண.., முடிஞ்சா நாலு வார்த்தை ஆறுதல் சொல்லிட்டு வாங்க..,  முடியலையா வாய மூடிட்டு வந்துருங்க..,  அப்ப அவங்களை புரிஞ்சுபாங்க.., அத விட்டுட்டு நீங்களே ஒ ஒ ன்னு கத்தி கத்தி.., ஏன் எல்லார்ட்டையும்  கெட்ட பேர் வாங்கறீங்க.,  ரொம்ப அசிங்கமா இருக்கு மா”..,  கேள்விப்படும் போது என்றாள்.

             “நீ பெரிய மனுஷன் மாதிரி பேசாதடி” என்கவும்.  “பெரிய மனுஷியா., சின்ன மனுஷியா ங்கிறது.,  வேற விஷயம்…,  யார் ட்ட எப்படி பேசுறது ங்கிறது தான் முக்கியமான விஷயம்.., எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும்.,  நம்ம பேசுற விதத்துல தான் நமக்கு கிடைக்கிற மரியாதையும்., மரியாதை இல்லாததும் இருக்கு..,  யோசிச்சி பேசி இருக்கனும் ம்மா…,   ஒரு குடும்பத்தின் மொத்த நிம்மதியும் முடிச்சிட்டு வந்து இருக்கீங்க…,  அவங்கள நோகடித்துட்டு  உங்க பொண்ணுக்கு இன்னொருத்தர கல்யாணம் பண்ணி கொடுத்தா.., நல்லபடியாக வாழ வைக்கலாம் ன்னு நம்புறீங்களா”.., என்று கேட்டாள்.

       “ஏண்டி நீயே சாபம் கொடுக்கிற”.. என்று நிர்மலா கத்தினாள்.

 “அவ நல்லா இருந்தா சந்தோஷ படுற முதல் ஆள் நான் தான்”… என்றாள்.

      “அது எல்லாம் நல்லா தான் இருப்பா” என்றார்.

      “நான் உன்கிட்ட பேச தயாரா இல்லம்மா…,  அப்பா எந்த ஹாஸ்பிடல்ல அவங்க இருக்காங்கன்னு,  எனக்கு அட்ரஸ் தாங்க” என்று கேட்கவும் கல்யாண் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

          கல்யாணை பார்த்தவுடன் ராமநாதன் அவசரமாக எழுந்து “வாங்க தம்பி” என்று வரவேற்று விட்டு நிர்மலாவின் அம்மா குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தி வைக்க.,  அப்போது தான் அபூர்வா திரும்பி பார்த்தாள். அதன்பிறகு அவளை அபர்ணாவோடு பிறந்த இரட்டை பிறவி என அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு.,  “டெல்லியிலே வளர்ந்ததால் இங்கு பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை” என்று சொன்னார்” …,

        அபூர்வா அழகாக கை குவித்து வணக்கம் வைத்து விட்டு “உங்க வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க.., உங்க தம்பி எப்படி இருக்காங்க”.., என்று நலம் விசாரிக்க தொடங்கினாள்.,

     “நல்லா இருக்கோம் மா” என்று அவளிடம் சிரித்த முகமாக பேசியவன்., அவர்கள் வீட்டில் மற்றவரிடமும் சாதாரணமாக பேசினாலும்., நிர்மலாவிடம் மட்டும் முகம் கொடுத்து கூட பேசவில்லை.  “உங்களை மிரட்டிட்டு  போக தான்.,  நான் வந்தேன். என் தம்பி அங்க நொந்து போய் கதற விட்டுட்டு.,  நீங்க உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணுவீங்களா..,  என்று கேட்பதற்காக தான் வந்தேன்.,  ஆனா அந்தக் கேள்வி எல்லாம் உங்க பொண்ணு கேட்டுட்டா.., நான் திருப்பி கேட்க வேண்டிய அவசியமில்லை”..,  அதுக்காகத் தான் வந்தேன் என்று சொல்லிவிட்டு கிளம்ப போகும் போது அபூர்வ அவனை நிறுத்தினாள்.

    ” ஒரு நிமிஷம்” என்று தடுத்து அழைக்கவும்..,  “என்னமா” என்று அவளிடம் அன்பாக பேசினான்.

       ” நான் உங்க தம்பியை பாக்கணும்.., எந்த ஹாஸ்பிடல் ன்னு சொல்லிட்டு போங்க”. .  என்று சொன்னாள்.

        “இல்லம்மா வேண்டாம்..,  யாரும் வரவேண்டாம்”..,  என்று சொன்னான்.

      “இல்ல.,  நான் கொஞ்சம் அவங்களோட பேசணும்”., என்று சொன்ன உடன்..,

        அவன் ஏதோ யோசனையில்  மருத்துவமனையின் பெயரையும்..,  அறையின் எண்ணையும்.., சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பும் போது அபூர்வா வை பார்த்துக் கொண்டே கிளம்பினான்..

          கல்யாண் வெளியே சென்றதைப் கணக்கிட்டு நிர்மலா அபூர்வாவிடம் கத்தத் தொடங்கினாள்.., “நீ இப்ப எதுக்கு அங்க போற..,  அங்க போய் என்ன செய்ய போற..,  அவன் கூட உனக்கு என்ன பேச்சு வேண்டி இருக்கு” என்றார்.

       “இதோ இப்ப பேசுறீங்க இல்ல.., இந்த மாதிரி பேசி பேசி.., அங்க ஒரு ஆளை நோகடிச்சு வெச்சுட்டு வந்திருக்கீங்க இல்ல.,  அதற்காக போறேன்.,  போய் நான் பேசி பார்க்க போறேன்”., என்று சொன்னாள்.

        “என்ன பேசி பார்க்க போற” என்று நிர்மலா  கேட்டதற்கு.., அமைதியாக  வீட்டில் உள்ளவர்களை நிமிர்ந்து பார்த்தவள். “போய் பேசிட்டு வந்து உங்கிட்ட சொல்றேன்”.., என்றாள்.

       “ஒகோ..  அந்த அளவுக்கு உனக்கு ஆகிப்போச்சா… அங்க  பேசிட்டு தான் எங்ககிட்ட சொல்லுவியா”… என்று கேட்டார்.

    “ஆமாம் இது நானா முடிவெடுக்க முடியாது.., அங்க  விஷயத்த கேட்டுட்டு முடிவு பண்ணனும்., அதுக்கு அப்புறம் தான் உன்கிட்ட சொல்ல முடியும்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்…

           அவள் சொன்ன விதத்திலேயே ஏதோ பெரிய முடிவு எடுக்கப் போகிறாள். என்று அவளின் மாமாவிற்கு தோன்றியதால் அவர் மட்டும் அவளிடம் சொன்னார்.  “எதை செய்தாலும் யோசித்து செய் பாப்பா..,  நீ ஒன்னும் சின்ன குழந்தை இல்லை”..,  என்று சொல்லிவிட்டு அமைதியாக..,  ராமநாதன் “என்ன” என்று கேட்க “அவள் எதை செய்தாலும் சரியாக தான் செய்வாள்” என்று அமைதியாகி விட்டார். வீட்டிலுள்ள அனைவருக்கும் புரிந்தது அவள் ஏதோ பெரிய முடிவோடு தான் வந்திருக்கிறாள் என்று..

      தனக்கு மருத்துவமனைக்கு செல்ல ஒரு கார் புக் செய்து தருமாறு அவள் தந்தையிடம் கேட்டுக்கொண்டிருந்தாள். தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை தோழனாக பாவிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில்., இவ்வளோ பெரும் பதவியில் இருப்பவள் யோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்க மாட்டாள்.,  என்ற நம்பிக்கையில் அனைவரும் அவள் எடுக்கும் முடிவை ஆதரிக்க தயாராக இருப்பவர்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் அவளிடம் ஏன் எதற்கு என்று கேள்விகளை எழுப்ப மனமில்லாமல் அனைவரும்  சொல்லி அவளை அனுப்பி வைத்தனர்.

           ” வீட்டிலுள்ள காரை எடுத்து போக சொல்ல”.. அவள் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

        “நான் திரும்பி வருவதற்கு நேரமாகும்.,  அங்கிருந்து கிளம்பும் போது வேண்டுமானால் போன் செய்கிறேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்., போதே..,

               “உனக்கு அவ்வளவு நேரம் ஆஸ்பத்திரில என்ன வேலை” என்று நிர்மலா குறுக்கு கேள்வி கேட்டாள்.

        “நான் ஆஸ்பத்திரியில் மட்டும் தான் போறேன் ன்னு உங்கிட்ட சொன்னேனா..,  வெளியே எனக்கு வேலை இருக்கா, இல்லையா ன்னு.., உங்களுக்கு என்ன தெரியும்”என்று கேட்டார்.

        வாயை மூடிக் கொண்டார் நிர்மலா..,  நிர்மலாவின் தாய் “என்னடி  உனக்கு வாய் வைத்து சும்மாவே இருக்க முடியாதா”.. என்றார்.

   ” அபூர்வா வ பொருத்த வரை காரணம் இல்லாம போக மாட்டா., ன்னு தான் நாங்க அமைதியா இருக்கோம்…, உனக்கு எதுக்கு தேவையில்லாத பேச்சு”.., என்று தாத்தா வந்து சத்தம் போட்டார்..,

         அபூர்வா., அவளுக்கான கார் வரவும்..,  மருத்துவமனை நோக்கி கிளம்பினாள்.

     “உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி, உன் மீது கோபம் கொண்டவர்களை அதை விட அதிகமாக நேசி”

       – அன்னை தெரசா

 

 

 

Advertisement