Advertisement

அத்தியாயம் 11

        அபர்ணாவின் திருமணத்தை நிறுத்திய அந்த நாட்களில் இருந்து அபூர்வாவின் நினைவுகள் தொடரத் தொடங்கியது.., அன்று அலுவலகத்திற்கு போன் செய்து மாமா சொன்ன செய்திகள் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும்., ஏன் அம்மா இப்படி பேசுறாங்க என்ற எண்ணத்தோடு வருத்தமே அடைந்தாள்., ஆனாலும் ஏதோ மனதிற்குள் சிறு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது எதனால் இந்த விபத்து நடந்திருக்கும் என்று ஒருவேளை டிரன்க் அண்ட் டிரைவ் என்றால் தவறு அவன் மீதுதான் அப்படியே என்றாலும்.., அம்மா பேசிய விதம் தவறு என்ற எண்ணத்தோடு இருந்தவள்., அன்று அதற்கு மேல் யோசிக்க கூட முடியாத அளவிற்கு வேலை..,

       மறுநாள் காலை அலுவலகம் சென்றவுடன் முதலில் அவன் எந்த நிலையில் வண்டி ஓட்டினான்., என்பதை அறிந்துகொள்வதற்காக தமிழ்நாட்டில் கோவையில் இருந்த அவளது பேட்ஜ் மெட்., கவின் க்கு அழைத்தால்., அவனிடம் விஷயத்தை சொல்லி தனக்கு அவன் எந்த நிலையில் விபத்து நேரத்தில் இருந்தான்., என்பதை கண்டு சொல்லுமாறு சொன்னாள். நீ ஏன் இந்த விஷயத்தில் இன்வால்வ் ஆகுற என்று கேட்க.., விஷயத்தை லேசாக கோடிட்டு மட்டும் காட்டினால்…

         கவின் இவளுக்கு கல்லூரி காலத்து தோழனும் அல்ல.., பள்ளி காலத்து தோழனும் அல்ல.., சிவில் சர்வீஸ் எக்ஸாம் கோச்சிங் சென்ற இடத்தில் கிடைத்த நண்பன் தான்..,

          கவின் அப்போதே திருமணம் ஆகி இருந்த குடும்பஸ்தன் அதனால் அவனுடன் மட்டும் நன்றாக பேசுவாள். அவன் மனைவியும் அவளுக்கு நல்ல தோழியாக இருந்தாள்., ஐ.டி யில் வேலைபார்த்து வந்த கனவினுக்கு சிவில் சர்வீஸ் எக்சாம் மேல் சிறு வயதிலிருந்தே இருந்த மோகத்தின் காரணமாக மனைவி உதவியோடு பரிட்சை எழுத வந்திருந்தான்.

     மனைவி வேலை பார்த்துக்கொண்டு பங்களூரில் இருக்க.., இவன் கோச்சிங் காக இங்க வந்து சேர்ந்திருந்தான். அப்போதுதான் இருவருக்கும் அறிமுகம் அந்த முறையில் தன் தோழன் என்ற முறையில் அவனிடம் உதவி கேட்டிருந்தாள். கவின் ஐபிஎஸ் கேடரில் பாஸ் செய்திருந்தான். அவளுக்கு முதலில் இருந்தே ஐஏஎஸ் என்ற எண்ணத்தைத் தவிர வேறு எதுவும் இருந்தது இல்லை.., அதற்காக கல்லூரி காலத்தில் இருந்தே தீவிரமாகப் படித்து இருந்தாள்.., அதனால் அவள் அந்த இடத்திலேயே பாஸ் செய்ய., ட்ரெய்னிங் பீரியட் எல்லாம் முடித்த பிறகு அவள் மாமாவின் உதவியின் மூலம் டெல்லி அருகிலேயே போஸ்டிங் வாங்கிக் கொண்டாள்..,

     முதலில் வேலையில் இருந்தது எல்லாம் பிரச்சினையான இடங்கள் என்றாலும்.., அவளுடைய தைரியமும்.., அவளுடைய மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை அவளை எல்லா இடங்களிலும் முதன்மையானவளாக காட்டியிருந்தது….

          அவள் அலுவலக விஷயங்களைப் பொறுத்த வரை யாருக்கும் பயப்பட மாட்டாள். குறுக்கீடாக யார் வந்தாலும் அவர்களை கண்டு ஒதுக்கவும் மாட்டாள். நேருக்கு நேராக மோதும் பழக்கம் கொண்டவள்., அதனால் அவளிடம் மற்றவர்கள் ஒதுங்கிப் போக பழகிக் கொண்டார்கள்..,

       தவறு என்றால் அதை எப்பாடுபட்டாவது சுட்டிக் காட்டி அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரும் வரை ஒய்வதில்லை.., இதனால் அவள் அடிக்கடி டிரான்ஸ்பரில் மாறிக் கொண்டே இருக்கக் கூடிய சூழ்நிலை வந்தது.., எனவே வேலைக்கு சேர்ந்த புதிதில் எல்லாம் ஒவ்வொரு இடமாக சுற்றி விட்டு தற்போது தான் டெல்லியில் அவர்களுக்கு அருகில் உள்ள இடத்திலேயே கலெக்டராக அமர்ந்திருந்தாள்..

         அவள் நேர்மையை கண்டு பயந்த பாட்டி தான் “சீக்கிரம் வேலையை விட்டுவிட்டு கல்யாணத்தை பண்ணி கொள்”., என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்..,

       அப்பொழுதெல்லாம் இரண்டு வருடங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவள்., இப்போது இவனுக்காக மாறி போனாள்…

      அவளோடு கோச்சிங் ல் படித்த காரணத்திற்காகவே கவின் குடும்ப நண்பன் ஆகிப் போனான்.

     அவள் போன் செய்த பிறகு அவனிடமிருந்து வந்த தகவல் “அவன் டிரன்க் அண்ட் டிரைவ் இல்லை.., அது மட்டுமல்லாமல் அவன் வந்தது புறவழிச்சாலை.., அதில் வருவதற்கு தனி வழி போவதற்கு தனி வழி என்று இருக்க கூடிய இடத்தில் கூட அவனின் எதிர்ப்புறமாக வந்து வண்டி மோதியது எப்படி, என்று தெரியவில்லை.., ஏனெனில் எதிர்த்தாற்போல  மோதியிருக்க வேண்டும்.., அதனால் தான் முன்பக்கம் அந்த அளவு அடிப்பட்டிருக்கிறது”.,என்றான்.

        காரின் முன்பக்கம் என்று சொன்னவுடன் மேற்கொண்டு “வேறு ஏதாவது தகவல் கிடைக்குமா” என்று கவினிடம் விசாரிக்க சொன்னாள்.

        அவனும் “சரி.., என்னால் முடிந்த அளவு தீவிர படுத்தி விசாரிக்கிறேன்” என்றான்.

           ஆனாலும் அப்போதே அவளுக்கு தெரிந்த டெல்லியில் இருந்த மிகச்சிறந்த டிடெக்டிவ் ஏஜென்சி மூலமாக மற்ற அனைத்து விவரங்களும் வேண்டும் என்றும் கேட்டிருந்தாள்…

       அதன்படி அந்தத் தகவல்கள் தான்., அடுத்த நான்கு நாளில் அவளை அவசரமாக அவனைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவிற்கு கொண்டு வந்து சேர்த்தது…

       அரசியல் எதிரிகளால் தொல்லை என்றால்., அவன் அப்பாவிற்கோ., இல்லை அண்ணனுக்கோ தான் பிரச்சினை வந்திருக்க வேண்டும்.., ஆனால் அவர்களுக்கு வராமல் இவனுக்கு வந்தது தான் சந்தேகத்தை எழுப்பியது., அதன் மூலம் விசாரிக்க தொடங்கியிருந்தாள்., அப்படி விசாரிக்கும்போது தெரிந்த தகவல்கள்  டிடெக்டிவ் நண்பர் மூலமாக தெரிந்தது…

               அன்று அலுவலகத்தில் இருக்கும் போதே டிடெக்டிவ் ஏஜென்சி சேர்ந்த ஜான்சன் வந்திருந்தார்..

           “மேம் நீங்க சொன்னதால தான் நான் வீட்டுக்கு வரல”., என்றார்.

       “தெரியும்.., நீங்க வீட்டுக்கு வந்துட கூடாது ன்னு. தான் ஆபீஸ்லே இவ்வளவு நேரம் வெயிட் பண்றேன்.., சொல்லுங்க என்ன ஆச்சு” என்று கேட்டாள்…

                 “மேம் பிஸினஸில் வளர்ந்துட்டு வர்ற., ஒரு பெரிய ஆளு அதுமட்டுமில்லாம அவருடைய பிசினஸ் இப்போ பயங்கரமான வளர்ச்சியில் இருக்கிற ஒரு ஸ்டேஜ்.., இந்த ஸ்டேஜ்ல அவரை முடக்கி ஒரேடியா முடிக்கலாம்., அப்படின்னு எதிர்த்தரப்பு பிளான் பண்ணி இருக்கலாம்., அது மட்டுமில்லாம அவரோட ஆபீஸ்ல இருக்கிற டீடைல்ஸ் அதாவது மெயில் ஏதாவது டீடைல்ஸ் கிடைக்குதான்னு பார்க்கலாம்.., போன் லிஸ்ட் இதுவரைக்கும் உள்ள டிடைல்ஸ் கலெக்ட் பண்ண சொல்லி இருக்கேன்.., அது கிடைத்தவுடன் மீதி டீடைல்ஸ் உங்களுக்கு நான் சொல்றேன்.., இவர் வந்த கார்ல  அதோட ஏர்பேக் லா தான் அவர் உயிரோட இருக்காரு.., இல்லாட்டி மோதின ஸ்பீட்க்கு.., அதாவது முன்பக்கமும் நசுங்கிப் போனதோட கம்பேர் பண்ணும் போது.., இவர் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம்” என்று சொன்னார்.

 “எனக்கு அந்த டீடைல்ஸ் எப்போ கொடுப்பீங்க ஜான்சன்” என்று கேட்டாள்…

       “ரெண்டு நாள்ல முடிஞ்ச அளவு கலெக்ட் பண்ணி தர பாக்குறேன் மேடம்” என்று சொன்னார்.

         “நான் இரண்டு நாள்ல சென்னை கிளம்பனும் அதுக்குள்ள எனக்கு புல் டீடெயில்ஸ் வேணும்” என்று சொன்னவள் அதன் பிறகு அதைப் பற்றிய யோசனையிலேயே சுற்றிக் கொண்டிருந்தாள்…

         சென்னை கிளம்புவதற்கு முதல் நாள் தான் அனைத்து டீடெயில்ஸ்ம் அவள் கையில் கிடைத்தது. ‘அதாவது அவன் தொழில் தொடங்கிய புதிதில் அவனோடு சேர்ந்து தொழிலை கற்றுக் கொள்கிறேன் என்று உடன் வந்தவன் தான் மோகன். அதாவது லலிதாவின் அண்ணன் மகன், அவன் தொழில் கற்றுக் கொள்கிறேன் என்று சொல்லி அலுவலகத்தில் சில தில்லுமுல்லுகளை செய்ய அதை கண்டுபிடித்த நரேன் பயங்கரமாக திட்டி வெளியேற்றி விட்டான். அவன் மாமாவையும் அழைத்து அம்மாவுக்காக பார்க்கேன்., இல்லாட்டி   இவன் பண்ணின தில்லுமுல்லு.., இவன் பண்ண பணம் கையாடல் எல்லாத்துக்கும் சேர்த்து நான் இவன உள்ள தூக்கி வைத்திருப்பேன் என்று சொல்லி மிரட்டியே வெளியே அனுப்பினான். அதன்பிறகு மோகன் அவ்வூரில் இல்லை., அவன் மலேசியாவிற்கு சென்று விட்டான். மலேசியாவில் இருக்கும் ஒரு நிறுவனம் நரேன் செய்யும் அதே தொழிலை செய்து வருகிறது. எனவே அங்கு சென்று அங்குள்ள அந்த கம்பெனியில் சேர்ந்து கொண்டு அவர்களுக்கு சாதகமாக முடித்துக் கொடுக்க சில காரியங்களை செய்து இருப்பது தெரியவந்தது. ஏற்கனவே அந்த கம்பெனியில் உள்ள தன் தோழனுக்காக தான் இவன் இங்கிருந்து வேலை செய்ததும்.., அதன் பிறகு தான் தெரிந்தது., அவன் அங்கு வேலைக்கு சென்ற பிறகு எக்கேடும் கெட்டு ஒழியட்டும்.., என்று நரேன் விட்டுவிட்டான். ஆனால் மோகனின் நண்பனும்.., மோகனும் சேர்ந்துதான் இந்த காரியங்களை செய்து இருக்கிறார்கள் என்பது அதன் பிறகே தெரிய வந்தது……

  பேப்பரில் கூட விபத்து என்று மட்டும்தான் போட்டு இருந்ததே ஒழிய.., அதை பற்றி மற்ற விபரங்கள் எதுவும் இல்லை’.

      அபூர்வா கவினிடம் “ஏதும் கேஸ் பைல் பண்ணி இருக்காங்களா”.., என்று கேட்டாள்.

          “இல்ல விபத்து என்று மட்டுமே ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டிருக்கிறது.., மற்றபடி அது திட்டமிட்ட விபத்து என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரம் இல்லை”.., என்று சொன்னான்

       பிறகு தான் இவள் ‘கவினிடம் அனைத்து ஆதாரங்களையும் சொன்னாள். அப்போது தான் நரேனின் போன் கால்கள் எந்தெந்த இடங்களில் இருந்து வந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்கவும்., விபத்து நடந்த பகுதியில் இருந்த போன் நம்பர்களை கொண்டு., அந்தப் பகுதியில் இருந்த போன் நம்பரை வைத்து கண்டுபிடிக்க சொன்னதின் மூலமே மோகனும்., மோகனின் தோழனும் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்பது கண்டறியப்பட்டது……

           ஏனெனில் விபத்து நடந்த அன்று காலைதான் மோகன் சென்னை வந்து இறங்கியிருக்கிறான். ஆனால் அவன் வீட்டிற்கு சென்றது போல் தெரியவில்லை.., வேறு எங்கேயோ தங்கியிருந்து விட்டு., இரவு ஆக்சிடென்ட் நடந்த பிறகு அவன் அந்த பகுதியில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறான்., மறுநாள் காலை அவன் பிழைத்து விட்டான் மற்றும் அங்குள்ள நிலவரம் என்று தெரிந்த பிறகு தான் அங்கிருந்து கிளம்பி இருக்கிறான். இதற்கு இடையில் அவன் பேசிய நண்பர்கள்.., மலேசியாவிலிருந்து வந்த அழைப்புகள் என அனைத்தும் கண்டறியப்பட குற்றவாளி அவன்தான்.., அவன் தோழனும் கூட்டாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தாலும்…, இன்னும் அவர்களுக்கு தேவையான எவிடென்ஸ் எடுக்க நாள் ஆகும்., என்ற காரணத்தினால் அவனை வேறு யாரும் நெருங்க விடாத படி இருக்க தான் அருகில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் முதலில் சென்னை கிளம்ப வேண்டும் என்ற முடிவோடு கிளம்பியது.., அதன் பிறகுதான் அவனை மணந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது….

         இப்பொழுதும் டிடெக்டிவ் ஏஜென்சியில் சொல்லி போன் கால்களின் ரெக்கார்டை எடுக்க சொல்லி இருக்கிறாள்., அதற்கான சட்டப்பூர்வமான வாங்க வேண்டிய அனுமதியும் வாங்கி நடத்திக் கொண்டிருக்கிறாள்.., இது வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாது…

         தன்னைச் சுற்றி பின்னப்பட்ட சதிவலை கூட தெரியாமல் அனைவரையும் நம்பிய நரேனும் சரி.., நரேன் வீட்டினரும் சரி.., எப்படி இவர்களை நம்பினார்கள் என்று யோசித்துக் கொண்டே இருந்தாள். ஏனெனில் அரசியலில் இருப்பவர் அவருக்குத் தெரியாதா என்று அப்பாவை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். பிரச்சினைகள் எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்பதை யோசிக்காமல் போனாரே’ என்பதை பற்றியும் சிந்தித்து கொண்டே இருந்தாள்…..

          இப்போதுவரை நரேனுக்கு ‘எந்த ட்ரீட்மென்ட் க்கும் வழி தெரியாமல் கண்ணைக்கட்டி காட்டில் காட்டில் விட்டது போல தடுமாறி நின்று’ கொண்டிருக்கிறாள்..,

       ‘சரியாகிவிடும் என்று அவனிடம் நம்பிக்கையாக சொல்லிவிட்டேன்.., ஆனால் எங்கு சென்றாலும், ரிப்போர்ட்டை எங்கு அனுப்பினாலும் என்ன அடி பட்டிருக்கு என்று தெரியாமலேயே எப்படி ட்ரீட்மெண்ட் செய்வது’ என்று கேட்பவர்களிடம் என்ன சொல்வது என்ற குழப்பத்தோடு மறுபடியும் தன் தோழிகளிடம் சொல்லி வைத்திருந்தாள். ‘இதற்கான சிகிச்சை ஏதாவது இருக்கிறதா என்று விசாரித்து சொல்லுங்கள்’ என்று….

             தற்போது அவள் கண்ணீரெல்லாம் “அவனுக்கு எப்படியாவது குணமாக வேண்டும் என்பது மட்டுமின்றி அவனை எந்த பிசினஸில் தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்தார்களோ.., அவர்கள் முன்னிலையில் அவனை பிசினஸில் பழையபடி காலூன்ற வைத்துவிட வேண்டும்”.., என்ற எண்ணமே அவளை அவனுக்காக அனைத்தையும் செய்ய வைத்தது..,

            டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் விசாரிக்கும்போது நரேனின் குணநலன்களும் அவனுடைய உதவும் மனப்பான்மையும் அறிந்திருந்தாள் ‘தன் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் யாரும் அவனை ஒரு வார்த்தை   தவறாக சொல்லக் கிடையாது. அந்த அளவுக்கு அனைவருக்கும் உதவி செய்திருக்கிறான்., அதுமட்டுமல்லாமல் வெளியிடங்களிலும் சரி தான் ஒரு அரசியல்வாதியின் மகன் என்றோ.., தன்னிடம் இவ்வளவு வசதி இருக்கிறது என்று ஒருபோதும் யாரிடமும் நடந்து கொண்டது இல்லை., என்றும் எல்லோரிடமும் அன்பும் பாசத்தையும் காட்டும் ஆகச்சிறந்த ஒரு நல்ல மனிதன்., என்பதும் தெரிந்த அந்த நிமிடத்திலிருந்து மனமெல்லாம் நல்லவர்களுக்கு என்றால் யாரும் உதவ மாட்டார்களா’.., என்ற எண்ணம் மட்டுமே இருந்து கொண்டிருந்தது.

           அதன் காரணமாகவே அம்மாவின் மீது அதிகபட்ச கோபமும் இருந்தது.., மனதை புரிந்து கொள்ளாமல்., பணத்தையும் ஆடம்பரத்தையும் விரும்பும் அம்மாவின் முன்.., இப்படி ஒரு நல்ல மனிதனின் மனம் நோகக் கூடாது என்பதும் அவள் திருமணத்திற்கு முடிவெடுத்து அதற்கான முக்கியக் காரணம் அது மட்டுமல்லாமல் அவளுக்கு நரேனை எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு ஒருவன் இருக்கும் போது.., கடவுளிடம் அவளுடைய பிரார்த்தனை எல்லாம் நல்லவர்களை சோதிக்கும் அளவிற்கு., என்ன பாவம் செய்தான். ஏன் அவனுக்கு இப்படி ஒரு தண்டனை., என்ற வேண்டுதலோடு இத்தனை நாள் கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் என்று முதன்முதலாக அவனருகில் இருக்க அவள் அறியாமல் வெளிப்பட்டது’ அப்போதுதான் அவளது சிந்தனை எல்லாம் இப்படிப்பட்டவர்களை எப்படி வலையில் சிக்க வைத்து மாட்டி வைப்பது என்ற எண்ணத்தோடு யோசிக்க தொடங்கினாள்…

                 கவின் உதவியோடும்., டிடெக்டிவ் ஏஜென்சி உதவியோடும்., அனைத்து காரியங்களும் நடத்தினாலும் அவனுடைய கம்பெனி பொறுப்பையும் எடுத்து இப்பொழுது வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கம்பெனி மெயிலை சோதனை செய்ததில்., மோகனிடம் இருந்து வந்த சில மெயிலும்.., அவனுடைய தொலைபேசி எண்ணும் கண்டுபிடித்து., அதன் மூலம் அவன் தான் என்பதை உறுதி செய்யும் வகையில் இப்பொழுது செல்பேசி அலுவலகங்களிலிருந்து அதற்கான விபரங்கள் சேகரித்து பெரும் வேலையில் மும்முரமாக இருப்பதால்.., அவர்களை எப்படி மலேசியாவில் இருந்து இந்தியா கொண்டு வருவது என்றும்.., இங்கு வந்த பிறகு எவ்வாறு சுற்றிவளைத்து கைது செய்யலாம்.., அதற்கு தேவையான ஆதாரத்தை திரட்ட வேண்டும்.., இப்பொழுது உள்ள முக்கிய நோக்கமாக உள்ளது.., முக்கால்வாசியை நிறைவேற்றி விட்டால் 15 நாளில்.., இன்னும் சற்று நாளில் அனைத்தையும் நிறைவேற்ற முடியும் என்ற எண்ணம் இருந்தது..,

              அதனால்தான்., தான் யார் என்ன வேலை செய்கிறேன் என்று யாரிடமும் தெரியப்படுத்தவில்லை.., ஏனென்றால் அவள் டெல்லியில் வேலை பார்க்கும் கலெக்டர் என்பது வெளியில் தெரிந்தால்.., எதிரிகள் சுதாரித்து விடக்கூடாது என்பதற்காகவே எதைப்பற்றியும் வெளியில் சொல்லவில்லை…

           தான் ஆடப்போகும் சதுரங்க வேட்டையில் காய்களை மெதுமெதுவாக நகர்த்திக் கொண்டிருக்கிறாள். ஒரு ராணியின் கம்பீரத்தோடு எதிரிப்படைகளை அளிக்கும்போது தன் ராஜாவின் அருகில் சரியாக நிற்க வேண்டும்., என்ற ஒரே காரணத்திற்காக அழகாக காய் நகர்த்தி கொண்டிருப்பது யாருக்கும் தெரியாமலே நடந்துகொண்டிருக்கிறது..,

     இதில் அவளுக்கு உதவுவது இருவர் மட்டுமே காவல்துறை சம்பந்தப்பட்ட விஷயங்களை கவின் பார்த்துக்கொள்ள.., வெளி வட்டாரங்களில் இருந்து சேகரிக்கும் விஷயங்களை டிடெக்டிவ் ஏஜென்சி ஜான்சன் பார்த்துக்கொள்ள.., வீட்டில் உள்ளவர்களை வைத்து எப்படி காய் நகர்த்துவது என்பதை அழகாக நகர்த்தி கொண்டிருக்கிறாள் அபூர்வா…

    “அன்பு என்பது ஆழமானது என்று அனைவருக்கும் தெரியும். தான் நேசிக்கும் ஒருவருக்காக எது வேண்டுமானாலும் செய்யத் துணியும் மனது., அன்பிற்கு அடிமையான மனது.”

Advertisement