Advertisement

இனி அவனிடம் மறைக்கத் தேவையில்லை என்ற எண்ணத்தோடு இதுவரை நடந்த அனைத்து விஷயங்களையும் சொன்னாள். அவனுக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அதற்கு அவள் செய்திருக்கும் ஏற்பாடுகளையும் சொல்லி கல்யாண் க்கு மட்டும் இந்த விஷயம் தெரியும் என்பதை சொன்னாள். இப்போது கவின் பேசி சொன்ன விஷயம் என்னவென்றால் “ப்ராப்பர் ஆ அவங்க ரெண்டு பேரையும் அரஸ்ட் பண்ணனும் அப்படின்னா அதற்காக ஆக்சிடென்ட் நடந்த பகுதியில் உள்ள ஏரியால கமிஷனர் ட்ட கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியது இருக்கு.., சோ அண்ணா தான் கம்ப்ளைன்ட் பண்ண போறாங்க., கவின் வந்து டீடைல்ஸ் எல்லாம் எடுத்துக் கொடுக்கப் போறாங்க., ஜான்சனும் டெல்லியிலிருந்து வரேன்னு சொல்லி இருக்காங்க., எல்லாருமா சேர்ந்து போய் யெவிடன்ஸ்  கொடுக்க போறாங்க., இதுக்கிடையில வீட்டிலுள்ளவங்களுக்கு தெரியாம இருக்க கூடாது என்பதற்காக எல்லா டீடைல்ஸ்  ம் வீட்டில் சொல்லலாம் அப்படின்னு சொல்றாங்க.., இதுவரைக்கும் நான் போஸ்டிங் ல இருக்கிறது., வீட்ல யாருக்கும் தெரியாது இல்ல.,  அண்ணனை தவிர., இப்பதான் உங்க கிட்ட சொல்லி இருக்கேன்.., இப்ப சொல்ல போறேன்னு சொன்னாங்க.., அதான் எதுக்கு வேண்டாம் ரிசைன் பண்ணிட்டு வந்துடறேன்., அதுக்கப்புறம் சொல்லிடுங்க நு சொன்னேன்., இப்ப என்ன பண்ணனும் தெரியல.., மாமா எதுவும் தப்பா எடுத்துப்பாங்களா”., என்று கேட்டாள்.

            “இதுக்கு போய் யாராவது தப்பா எடுப்பாங்களா.., வீட்டுல அண்ணன் பார்த்துப்பான்., கம்ப்ளைன்ட் எல்லாம் ப்ராப்பர் ஆகட்டும்., ஆனா இதுல பெரிய பிரச்சினை எதுவும் வருமா அப்படின்னு ஒரு ஃபீல் இருக்கு.., அதுதான் எனக்கு ஒரு யோசனையா இருக்கு., என்று சொன்னான்.

        “அப்புறம் கவின் வந்து நாளைக்கு கோயம்புத்தூரில் இருந்து கார் அனுப்பி வைக்கிறாங்க., டிரைவர் வந்து விட்டுட்டு போயிருவாரு., நம்ம பிளைட்டுல போலாம்னு நினைச்சு நான் டிக்கெட் போட்டு ரெடி பண்ணிட்டு இருந்தேன்., இப்போ பிளைட்டுல வரவேண்டாம் ன்னு கவின் சொல்றாங்க., நாம ஏர்லி மார்னிங் இங்க இருந்து கிளம்பினால் தான் நைட் நேரத்துல சென்னை போக முடியும்., அவ்வளவு தூரம் காரில் போகும் போது உங்களுக்கு கஷ்டம் ன்னு யோசிச்சேன்., உங்களுக்கு டிராவல் ஓகேவா இருக்குமா., எனக்கு உங்களை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு” என்று சொன்னாள்.

      “டேய் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல., நீ எப்படி அவ்வளவு தூரம் ட்ரைவ் பண்ண முடியும்., டிரைவர் வச்சுக்கலாம்” என்று சொன்னான்.,

      “இல்லை இல்லை யாரையும் நம்ப தயாராக இல்லை., யாரும் வேண்டாம் நாமளே போய்க்கலாம்” என்று அவள் சொன்னாள்., “பயம் கிடையாது நாம போகலாம்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்…..

                  “கஷ்டம் இல்ல டா., நீ அவ்வளவு தூரம் ட்ரைவ் பண்ணனுமே., எனக்கு இப்ப ட்ரைவ் பண்ணலாமான்னு தெரியலையே”., என்று அவன் கேட்டான்.

     “நீங்க ட்ரைவ் பண்ண கூடாது., அவங்க என்ன சொல்லி இருக்காங்க., நீங்க ரொம்ப நேரம் உட்காரக்கூடாது, எனக்கு அதுதான் யோசனையா இருக்கு, உங்கள அவ்வளவு தூரம் எப்படி நான் உட்கார வைத்து கூட்டிட்டு போறது”., என்று சொன்னாள்.

        “ஒன்னும் இல்ல நான் பாத்துக்கிறேன்” என்றான். சற்று நேரத்தில் அம்மு நான் ஒன்னு சொன்னா நீ தப்பா எடுத்துக்க மாட்ட இல்லை” என்று நரேன் கேட்டான்…

          “தப்பா எடுத்துக்க மாட்டேன் கேளுங்கள்” என்று சொன்னாள்.

   “கண்டிப்பாக வேலையை ரிசைன் பண்ணனுமா., அதை நல்ல யோசிக்கோ., எனக்கு வேண்டாம் தோணுது, ஆனா இது உன் இஷ்டம் தான். நான் எதுவும் சொல்ல மாட்டேன்.  உனக்கு எது பிடிச்சிருக்கோ., உனக்கு எது சந்தோஷமோ அதை மட்டும் செய்., ஒரு போதும் உன்னோட சந்தோசத்தை மிஸ் பண்ற மாதிரி எந்த ஒரு காரியத்தையும் செய்யக் கூடாது., அதற்காகத்தான் நான் உன் கிட்ட கேட்டேன்” என்று சொன்னான்…

              “இல்ல நான் ஆசைப்பட்டு படிச்சது தான்., உள்ள போனதுக்கு அப்புறம்தான் எவ்வளவோ பிரச்சனை இருக்கு., எவ்வளவு ஃபேஸ் பண்ண வேண்டியது இருக்கு ன்னு பார்த்தேன்., நான் ஒர்க் பண்ற வரைக்கும், நான் ரொம்ப நேர்மையா தான் இருந்தேன்., போதும் இனி எனக்கு என்னோட ஃபேமிலி முக்கியம், அதனால இந்த வேலை வேண்டாம்., ஏன் நான் வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்தா உங்க கம்பெனில ஒரு வேலை தர மாட்டீங்களா” என்று கேட்டாள்.

      அதற்கு நரேன் “மேடம் நீங்க தான் ஓனர்.., நீங்க என்கிட்ட கேக்க கூடாது., நான் தான் உங்க கிட்ட கேக்கணும்” என்று பதிலளித்தான்…

        “இப்படியெல்லாம் பேசக்கூடாது., அந்த கம்பெனியோட ஓனர் நீங்க.., உங்களோட சொந்த முயற்சியில் உருவாக்கின கம்பெனி., இன்னைக்கு நல்ல லெவல்ல இருக்கு.., நான் இப்ப தானே வந்திருக்கேன்” என்று சொன்னாள்.

 “அப்படி இல்ல டா அம்மு.., நான் ஆக்சிடென்ட் ஆகி படுக்கையில் விழுந்த பிறகும்., எனக்கு பிசினஸ் நினைப்போ வேற எந்த நினைப்பும் இல்லை.., உண்மையிலேயே அப்போ எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு.., சத்தியமா நீ வருவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல.., அது மட்டுமில்லாம வந்ததோடு பிஸினஸை பழையபடி கொண்டு வந்த.., சோ அப்ப நீ தான் இப்ப ஒனர்” என்று சொன்னான்.

     “அப்போ ஓகே உங்களுக்கு வேலை தருவதை பத்தி நான் யோசிக்கிறேன்” என்று இவள் சிரித்தபடி சொல்லிக் கொண்டு இருந்தாள்.

                “மாமா ஏதும் தப்பா நினைப்பாங்களா” என்று மறுபடியும் கேட்டதற்கு “அதெல்லாம் நினைக்க மாட்டாங்க., ரொம்ப சந்தோஷப்படுவாங்க பார்த்துக்கலாம்., என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் தைரியமா இரு”., என்று சொல்லிக் கொண்டிருந்தான்…

               ட்ரீட்மென்ட் முடிந்த மறுநாள் அதிகாலையில் கவின் அனுப்பிய காரில் அவர்களுடைய பொருட்களை எடுத்து வைத்துவிட்டு., அவனுக்காக சீட்டில் நன்றாக பின்புறம் தள்ளி நன்கு சாய்ந்து அமர்ந்து., அவன் காலை நன்றாக நீட்டி அமர்ந்து வருமாறு வசதி செய்துவிட்டு அதன்பிறகு அமர விட்டாள். “பின்னாடி உட்கார்ந்தா ப்ரியா உட்கார்ந்து வரலாம் இல்ல” என்று கேட்டாள்.

     “ஏன் மேடம் நான் உங்க கூட உட்கார கூடாதா” என்று கேட்டுக்கொண்டே அமர்ந்தான். அவளும் அதன்பிறகு அங்கிருந்து கிளம்பினாள்.

  காரில்தான் பயணம் என்பதால் “சாதாரணமாக இலகுவான உடையைப் போட்டுக் கொள்ளுங்கள் என்று அவனிடம் ஷார்ட்ஸும்., டி-சர்ட்டும்  போட்டு கொள்கிறீர்களா” என்று கேட்டாள்.

         அவன் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வேஷ்டி., சட்டை போட்டுக் கொண்டான்.,  அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே அவ்வப்போது திரும்பிப் பார்த்துக்கொண்டே கார் ஓட்டிக் கொண்டிருந்த அவளிடம் வம்பு வளர்ப்பதற்காக “பொண்டாட்டி அடிக்கடி திரும்பித் திரும்பி சைட் அடிக்காத., ஒழுங்கா ரோட்ட பாத்து ஓட்டு” என்று சொன்னான்.

      அவள் சிரித்துக்கொண்டே “என் புருஷனை சைட் அடிக்கிறேன். உங்களுக்கு என்ன செய்து” என்று கேட்டாள். வேகமாக தான் ஓட்டி வந்தாள். சற்று தூரம் சென்ற பிறகு தான் திருவனந்தபுரம் கடக்கும் முன்பு தான் பார்த்தாள் அவளுக்கு பின்பக்கம் ஒரு போலீஸ் வாகனம் பாதுகாப்பிற்காக வந்துகொண்டிருந்தது., எதற்கு என்று தெரியாமல் காரில் உள்ள ப்ளூடூத் கனெக்ட் செய்து கவினிடம் பேச.,  போன் ஸ்பீக்கரில் தானிருந்தது., “கவின் பின்னாடி போலீஸ் வருது” என்று சொன்னாள்.

    அதன் பிறகுதான் நரேனும் திரும்பிப் பார்த்தான் பின்பக்கம் போலீஸ் வாகனம் ஒன்று பாதுகாப்பிற்காக வருவது தெரிந்தது., கவின் சொன்னது “நேற்று கம்ப்ளைன்ட் கொடுத்துவிட்டோம்., உங்களுடைய பாதுகாப்பிற்கு போலீஸ் ஏற்பாடு செய்தது தான் அதனால பயப்படாம வாங்க., நீங்க நிப்பாட்டுற இடத்துல உங்க கூட நிப்பாங்க”., என்று சொன்னான்.

   “சரி ஃபுட் எல்லாம் நான் வாங்கி கொடுக்கிறேன்., அவங்ககிட்ட சொல்லிடு” என்று சொன்னபடி அங்கிருந்து மறுபடியும் பேசிக்கொண்டே இருவரும் வந்தனர்..

          “பார்றா என் பொண்டாட்டி போலீஸ் பாதுகாப்போடு என்னை கூட்டிட்டு போறா”, என்று சொன்னான்.

     அவளும் சிரித்தபடி “ஏன் என் புருஷன் அவ்வளவு பெரிய விஐபி தான்”., என்று சொன்னதோடு நான் கூட நேர்மையா இருப்பதற்கு இவ்வளவு எதிர்ப்பு வரலை”., என்று சொன்னாள்.

              “சொந்தக்காரங்க தாண்டி முதல் எதிரியா இருப்பாங்க.., அதுக்கப்புறம் தான் மத்தவனெல்லாம்., நாம நினைக்கலாம் நம்ம விட்டுக் கொடுத்துதான் போறோம் சொந்தம் வேண்டும் என்பதற்காக., ஆனால் சில சொந்தங்கள் வந்து நம்ம எவ்வளவு தான் விட்டுக்கொடுத்து போனாலும்., புரிஞ்சுக்காம இருக்கத்தான் செய்றாங்க, என்ன பண்ண சரி சரி என்று போக வேண்டியது தான்., ஆனா இந்த அளவுக்கு போகும்னு நானும் எதிர்பார்க்கல” என்று பேசிக்கொண்டு வந்தான்.,

     அவனுக்கு உணவுக்கு முன் மருந்தை கொடுத்து., அதன் பிறகு வழியில் நிறுத்தி ஹோட்டலில் இறங்கி உணவு உண்டபின் சற்று தூரம் அவன் நடந்து அதன் பிறகே வண்டியில் ஏறினான்., ஏனெனில் அமர்ந்தே வருவதால் கால் வலிக்கிறதா என்று அப்போதும் கேட்டுக் கொண்டாள்….

        அதிகாலையில் கிளம்பியதால் பின் மாலை நேரத்தில் திருச்சியைத் தாண்டி இருந்தனர். சற்று வேகம் தான், அவன் கூட சொன்னான் “இவ்வளவு வேகம் வேண்டுமா” என்று அவளும் “இல்லை இரவுக்குள் வீடு சென்று சேரவேண்டும்” என்பதில்  இருந்தாள்.

       ஏனெனில் பகலில் தான் அக்கம் பக்கம் வருபவர்களை கண்காணிக்க முடியும்., இரவு நேரத்தில் அது முடியாது என்பதால் சற்று வேகமாக செல்வதால் அவ்வப்போது பின்புறம் வரும் போலீஸ்காரர்களும் அவளோடு பேசிக் கொண்டு தான் வந்தனர்…

    மதிய உணவிற்கு பிறகு காரில் வந்து கொண்டிருக்கும் போதே நரேன் தான் “கலெக்டர் எனக்கு  கார் ஓட்டுற டிரைவரா”, என்று சொன்னான்.,

        அவள் சொன்னாள் “ஊருக்கே கலெக்டரா இருந்தாலும்., நரேனுக்கு பொண்டாட்டி தான்., அதனால செய்யறது தப்பு இல்லை”என்று சொன்னாள்.,

          “இதான் சாக்குன்னு பேர் சொல்லிட்டே இருக்க” என்றான்.

     “பத்து தடவை என்ன., பத்தாயிரம் தடவை கூட சொல்லுவேன்” என்று சொல்லி அவனோடு வம்பு வளர்த்துக் கொண்டே வந்துகொண்டிருந்தாள். அந்த நிமிடம் இருவரும் மனதிலும் மிகவும் மகிழ்ச்சியான ஒரு சூழலே நிலவியது.,

       கிட்டத்தட்ட இரவு 10 மணிக்கு மேல் சென்னை வந்து சேரும்போது வீட்டில் அனைவரும் காத்திருந்தனர். காத்திருந்த போலீசார் அவளுக்கு சல்யூட் வைத்து., வணக்கம் செலுத்த அவளும் தலையசைத்து ஏற்றுக் கொண்டவள்.,  வீடு வேலை ஆட்களை அழைத்து  பேக்கை மட்டும் எடுத்துக் கொடுத்தாள்.,

      அதற்குள் கவினிடம் தேங்க்ஸ் சொல்லி கார் சாவியை ஒப்படைத்து விட்டாள்., அவள்  இறங்கி திங்ஸ் எடுப்பதற்கு முன்பே கல்யாண் நரேன் கைப்பற்றி அழைத்துச்செல்ல போகும் போது லலிதா வந்தவர் நரேனை கட்டிக்கொண்டு சந்தோஷமாக முத்தமிட்டவர் கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.,

       “ அம்மா என்ன இது சின்னபுள்ள மாதிரி” என்று சொன்னான்.

      “எவ்வளவு பயந்தோம்., எங்களுக்கு தான்டா தெரியும்” என்று சொன்னார். அபூர்வா தள்ளி நின்று அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதே நேரத்தில் அவன் தங்கை  குடும்பத்தாரும் அங்கு இருக்க., அத்தனை பேர் கண்களிலும் அவன் நடப்பதை கண்ட பிறகு ஆனந்த கண்ணீர் தான் வந்தது.,

        இவளும் மற்ற போலீஸ்காரர்களை பேசி அனுப்பி விட்டு அவளை சந்தோஷமாக வரவேற்ற குடும்பத்தினரிடம் சாதாரணமாக பேசிக் கொண்டு இருந்தாள்.

       “முதல்ல வந்தவங்களுக்கு சாப்பாடு கொடு மா., அதுக்கப்புறம் மற்றதை பேசலாம்” என்று சொன்னார் ராஜசேகர்., அதன் பிறகு உடன்  வந்த போலீஸ்காரர்கள் உணவு உண்ண அழைக்க., அவர்கள் “இல்லை வெளியே சாப்பிட்டு கொள்வோம் என்று சொல்லிவிட்டனர்” தான் பார்த்துக் கொள்வதாக சொன்னான் கவின்.

      அப்போது கவினை இருந்து விட்டு செல்லுமாறு சொல்ல., அவர்கள் ஏற்கனவே வெளியே அறை ஏற்பாடு செய்து இருந்ததால் அங்கு செல்வதாக சொல்லி சென்றனர். காலையில் வந்து ஜான்சனும் கவினும் பார்ப்பதாகவும்., அதன் பிறகு அவரவர் இடங்களுக்கு கிளம்புவதாக சொன்னான். இங்கு அனைவரும் பேசிக்கொண்டிருக்க தனது அலைபேசி எடுத்தவள் திருவனந்தபுரத்தில் அருகிலுள்ள  வைத்தியசாலைக்கு அழைத்து “இப்போது தான் வந்து சேர்ந்தோம்., இதன் பிறகு எண்ணை தேய்க்க வேண்டுமா., இல்லை இன்று ஒரு நாள் மட்டும் விட்டுவிட்டு நாளை வைத்துக்கொள்ளலாமா” என்று அவனுடைய வைத்திய முறைகளை  கேட்டாள்.,

         இங்கிருந்து நரேனோ “இன்னிக்கு ஒரு நாள் தானே  வேண்டாம்” என்று சொன்னான். அவனை பார்த்து கையை காட்டி மிரட்டிவிட்டு அவர்களுடன் பேச சென்றாள்.

       லலிதா தான் “அவ சொல்றத கேளுடா” என்று சொன்னார்.

          அதற்குள் அவர்களும் “இன்று இரவு நேரத்திற்கு பிறகு தேய்க்க வேண்டாம்., காலையில் பார்த்துக்கொள்ளலாம்” என்று சொன்னவுடன் சரி என்றதோடு., அவனிடம் “இன்னைக்கு ஒருநாள் எஸ்க்யூஸ்  நாளிலிருந்து கண்டிப்பா எல்லாம் உண்டு என்று சொன்னவுடன் அவனும் சரி என்றான்…

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று”

 

குறள் விளக்கம்:

ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

Advertisement