Advertisement

   ‘பதவியை பயன்படுத்துவது என்றால் மிகவும் எளிதான  விஷயம் அல்ல தான்., ஆனால் நினைத்தால் தன் அதிகாரத்தை  பயன்படுத்தலாம்., அதற்கு முயற்சி செய்யாமல் ஆடும் சதுரங்கத்தில் முறைப்படி சரியாக காய் நகர்த்தி கவிழ்க்க வேண்டும்’ என்பது அவளின் எண்ணமாக இருப்பதை அனைவரும் அறிந்தனர்..

            அதுமட்டுமன்றி அங்கு வைத்தே கல்யாண் இடம் அபூர்வா சொல்லிவிட்டாள்., “எந்த சூழ்நிலையும் வீட்டில் யாருக்கும் எதுவும் தெரியக்கூடாது என்று., நான் வேலையை விட்ட பிறகு மற்றவற்றை சொல்லிக்கொள்ளலாம்” என்று சொன்னாள்.

     “உனக்கு கொஞ்சம் கூட வருத்தமே இல்லையாமா” என்று கல்யாண் கேட்டான்.

    “எதுக்கு அண்ணா” என்றாள்

     “எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்திருப்ப., படிச்சு எக்ஸாம் எழுதி., ஆசைப்பட்டதை இழக்கும் போது மனசு கஷ்டமா இல்லையா”., என்று கேட்டான்.

      “இல்ல ண்ணா., கண்டிப்பா நான் நேர்மையா இருக்கும் போது நிறைய பிரச்சினைகள் வரும்., என்னால குடும்பத்துக்கு எந்த விதத்திலும் பிரச்சினை வர்றத நான் விரும்ப மாட்டேன்.., அது மட்டும் இல்லாம இப்போ ஒரு அரசியல் பேக்ரவுண்ட் உள்ள ஒரு வீட்டுக்கு மருமகளா வரும் போது., என்னால மாமா க்கு பிரச்சனை வந்துவிடக் கூடாது., அது ரொம்ப முக்கியம் அதனால வேலையை விடுவதில் வருத்தம் இல்லை., ஏற்கனவே முடிவு பண்ணுனது தானே..,” என்று சொன்னாள்..

         கல்யாண் க்கு சந்தோஷமாக இருந்தது.., இப்படி ஒரு மருமகள் தங்கள் வீட்டிற்கு கிடைப்பதை பார்த்து…

        “அண்ணா.., ஒரு சின்ன ஹெல்ப் நாங்க கேரளா போய் இருக்கும் சமயத்தில்., இங்கு உள்ள கேஸ் டீடைல்ஸ் எல்லாம் கவின் உங்ககிட்ட தான் சொல்வாங்க., ஜான்சனும் உங்ககிட்ட டீடைல்ஸ் சொல்லுவாங்க.., அது மட்டும் இல்லாம உங்க தம்பியோட போன கையில கொண்டு போக மாட்டோம்.., அதுக்கு பதிலா உங்க தம்பிக்கு வேற நம்பர்  தான் கொண்டு போகனும்., உங்க தம்பியோட வேற நம்பர் சந்தோஷ் க்கு மட்டும்தான் தெரியும்.., அதுவும் சந்தோஷ் ம்  நம்ம வீட்டுக்கு வந்துதான் எதுனாலும் பேசுவாங்க.., சோ இப்போ உங்களுக்கு தான் வேலை ஜாஸ்தியா இருக்கும்., சமாளித்து விடுவீர்கள் தானே”., என்று கேட்டாள்.

        “என்னமா செய்யணும்., அத மட்டும் சொல்லு” என்று சொன்னான்.

     “கவின்., ஜான்சன்., சொல்ற விஷயங்களை நீங்க தான் பார்த்துக்கணும்., சந்தோஷ் ஆபீஸ் விஷயம் இதெல்லாம் நீங்க தான் பாத்துக்கணும்.., அதுமட்டுமில்லாம அவங்க ரெண்டு பேரும் என்னைக்கு மலேசியாவில் இருந்து இந்தியா வர்றாங்க ன்னு.,  நீங்கதான் விசாரிக்கணும்., உங்களுக்கு தான் நிறைய வேலை இருக்கு இவங்க எல்லாம் பார்த்துக் கொண்டாலும்.., நீங்கதான் சில விஷயத்தில் செய்ய வேண்டியதிருக்கும்” என்று சொன்னாள்…

“என் தம்பிக்கு கெடுதல் பண்ணின அவன நான் விஷயம் தெரிஞ்சு இவ்வளவு நேரம் சும்மா விட்டு வச்சிருக்கிறதே., தப்போ ன்னு.,  பீல் பண்றேன்.., அவனுக்காக இது கூட செய்ய மாட்டேனா.., நீதான் மத்த மாதிரி பிரச்சினை எதுவும் வேண்டாம் ன்னு சொல்ற”., என்று சொன்னான்.

      “இல்லன்னா சாதாரணமா தண்டனை கொடுத்துட்டா அவனுக்கு அதோட வலி என்னனு தெரியாது.., கொடுக்கப் போற தண்டனை வந்து லைப் லாங் இருக்கனும்.., இனிமேல் யார் மேலையும் கை வைக்கணும் நினைப்பு கூட வரக்கூடாது…, உங்க தம்பி தப்பு பண்ணிட்டாங்க., ஆபீஸ்ல பிரச்சினை பண்ணி., பணம் கையாடல் பண்ணி., ஆபீஸ் விட்டு வெளியே போகும் போதே.., இனிமேல் பக்கத்துல நெருங்க முடியாத அளவுக்கு ஒரு பனிஷ்மென்ட் கொடுத்து அனுப்பி இருந்தாங்கனா., இன்னைக்கு இந்த அளவுக்கு பிரச்சனை வந்திருக்காது”., என்று சொன்னாள்.

       “சரி மா பார்த்துக் கொள்வோம்” என்று சொன்னபடி பேசிக்கொண்டிருந்து விட்டு.., அங்கிருந்து கவினிடமும் ஜான்சனிடமும் விடை பெற்று வீட்டுக்கு கிளம்பினர்., அவர்களிருவரும் அன்றே அடுத்த பிளைட்டில் கிளம்பி கோவைக்கும் டெல்லிக்கும் சென்றனர்…

             வீட்டிற்கு வரும்போது அடுத்து என்ன செய்யலாம் என்பதை பற்றி தீவிரமாக பேசியபடி தான் வந்தனர். கல்யாண் க்கு ‘எப்படி இத்தனை நாள் இந்த பெண் எதையும் காட்டாமல் சாதாரணமாக வீட்டில் இருந்தாள்’ என்பது ஒருபக்கம் யோசனையாக இருந்தாலும் அதை வாய்விட்டு கேட்கவும் செய்துவிட்டான். “ஒரு சாதாரண ஆபீசராக இருந்தாலே நான் பெரியவனாகும் அப்படிங்கிற ரேஞ்சுல பேசுறாங்களே., நீ எப்படி இப்படி இருக்க” என்று கேட்டான்.

        “இது மாமாவோட ட்ரைனிங் அண்ணா.., மாமாவோட பழக்கம் அப்படித்தான்.., மாமா செகரெட்ரியேட் ல பெரிய போஸ்ட் ல இருக்காங்க.., ஆனா மாமா இது வரைக்கும் தன்னோட தகுதியோ.., தன்னுடைய    பதவி பலத்தையும் காமிச்சது கிடையாது.., அவங்க உண்டு அவங்க வேலை உண்டு என்று இருப்பார்கள்., அதே மாதிரிதான் இருக்கணும் அப்படின்னு சொல்லியே வளர்த்தாங்க.., நான் எக்ஸாம் எழுதணும், இப்படி வேலைக்கு போகணும் அப்படின்னு சொல்லும் போதெல்லாம்., மாமா சொன்னது இது தான்., எப்பவும் உன்னோட தகுதியும்., உன்னோட திறமையும்., உன்னோட வசதியும்., வந்து உன் கூட நிற்க போறது கிடையாது.., அதனால யாரையுமே எந்த சூழ்நிலையிலும் பகைச்சுக்க கூடாது.., எல்லார்ட்டையும் அன்பா போ.., எல்லார்ட்டையும் சிரிச்ச முகமா பழகு.., இதுதான் மாமா சொல்லிக்கொடுத்தது.., தப்புன்னு தெரிஞ்சா கண்டிப்பா அந்த இடத்தில் தட்டி கேட்டு தான் ஆகணும்.., அப்போ யார் வந்தாலும்.., எதிர்ப்பக்கம் நிற்கிறவங்கள பார்த்து பயப்பட கூடாது.., தைரியமா இருக்க தெரியணும்.., உன்னால தைரியமாக இருக்க முடியும் அப்படின்னு சொன்னா மட்டும்தான் இந்தப் பதவிக்கு தகுதியானவ., அப்படி சொல்லி தான் வளர்த்தாங்க”… என்றாள்.

        “பரவால்லைம்மா சும்மா சொல்லக்கூடாது.., ஒரு குழந்தையை எடுத்து வளர்க்கிறது என்பது சாதாரண விஷயம் கிடையாது., வளர்த்தால் தான் பெத்த புள்ளையா இருந்தா எப்படி வளர்ப்போமோ., அதே அளவு முழு கவனத்தையும் செலுத்தி அந்த பிள்ளையை வளர்க்கணும்., அதுதான் ஒரு நல்ல தகப்பன் தாய் ஸ்தானத்திற்கு உரிய கடமை., அதை பொறுத்தவரைக்கும் உங்க அத்தையும் மாமாவும் ரொம்ப நல்ல வளர்த்திருக்காங்க உன்னை” என்று சொன்னான்.

 “சிரித்தப்படி உண்மைதான் என்னை பொருத்த வரைக்கும் நான் ரொம்ப ஃபீல் பண்ணுவேன்., அதே மாதிரி மாமா பசங்களையும் அப்படித்தான் பாத்துப்பாங்க.., என்னை அக்கா ன்னு தான்., கூப்பிடுவாங்க.., இப்ப வரைக்கும் பசங்க  அத்தை பொண்ணா பார்த்ததில்லை.., நான் சின்ன வயசிலிருந்து மாமா அத்தை ன்னு தான் கூப்பிடுறேன். சர்டிபிகேட் ல பாதர் நேம் அப்படிங்கறது ல மட்டும் தான் எங்க அப்பா பேரு இருக்கு., மத்தபடி எல்லாமே எங்க மாமா தான்.., தாத்தா பாட்டியும் நல்ல பாத்துப்பாங்க.., அவங்க  சொல்லி வளர்த்தே அதுதான்.., இப்போ இந்த நிமிஷம் வரைக்கும் எங்க வீட்டில் எல்லா வேலையும் கத்துக்கணும் அப்படின்னு சொல்லி தான் வளர்த்தாங்க., பாட்டிக்கு  சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ.., சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ.., நீ வேலைய விட்டுட்டு அப்படின்னு சொல்லி அட்வைஸ் பண்ணிட்டு இருப்பாங்க.., அவங்களுக்கு பயம் பிரச்சனை ஏதும் வந்துவிடுமோ.., அப்படின்னு பயப்படுவாங்க” என்று சொன்னாள்.

      பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். “அண்ணா தயவு செய்து முகத்தில் எதையும் காட்டாதீங்க.., எதுவும் சொல்லாதீங்க”.., என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள்…

      “என்ன அண்ணா” என்று ஹாலில் இருந்து வரவேற்றான் நரேன்.

  “என்னடா” என்று கேட்டபடி அருகில் அமர்ந்தான்.

 “இன்னைக்கு இந்த மேடம் கூட வெளிய போயிட்டு வந்த பிறகு உன் முகம் ஒரு பிரைட்டா தெரியுது.., மேடம் பெரிய  லெவல்ல இருக்காங்களோ.., கையெழுத்துப் போட்டுக் கொடுக்க போனதுக்கே., மேடம் அ பெருமையா ஒரு பார்வை பார்த்துட்டு வந்த மாதிரி இருந்துச்சு”., என்று சொன்னான்.

    ‘அவன் கண்ணு எக்ஸ்ரே கண்ணு போல’ என்று மனதிற்குள் இருவருக்கும் ஒன்று போல தோன்றியது…

        “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா.., வேலையை விடபோறேன்னு சொல்லிட்டு இருந்தா.., அதுதான் ட்ரீட்மெண்ட் முடிஞ்சு வந்ததுக்கப்புறம் முடிவு பண்ணிக்கலாம்., இப்ப அவசரப்படாதே ன்னு சொல்லிட்டே வந்தேன்” என்று சொல்லிக் கொண்டு இருந்தான்…

      அதன் பிறகு வீட்டில் உள்ளவர்களிடம் பேசி இரண்டு நாட்களுக்குள் கேரளா செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய தொடங்கியிருந்தாள்.., ட்ரீட்மென்ட் க்கு ரிப்போர்ட் அனைத்தையும் எடுத்துக்கொண்டாள்.,

      “ராஜசேகர் எவ்வளவு பணம் வேண்டும்” என்று கேட்டதற்கு “இல்லை மாமா., எங்கிட்ட கார்ட்டு இருக்கு” என்று அவள் சொன்னாள்.

 “ அதெல்லாம் சரி வராது மா.., கேஸ்ஷா வச்சுக்கோ” என்று சொல்லிக் கொண்டு இருந்தார். அவர்களை அங்கே விட்டு வர வேண்டும்., என்ற சூழலில் வீட்டிலிருந்து நம்பிக்கையான ஒரு டிரைவரோடு அவர்களின் பயணம் துவங்கியது…

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.

குறள் விளக்கம்:

எல்லாரிடமும் அன்புள்ளவனாக வாழ்வது. உலகத்தோடு ஒத்து வாழும் நல்ல குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும்.

Advertisement