Advertisement

அத்தியாயம் 10

நரேனிடம் சம்மதம் பெற்ற மறுநாளே பெரியவர்கள் அனைவரும் வெளியில் வைத்து பேசி முடிவு செய்தனர்..

         அபூர்வா  எப்போதும் போல மருத்துவமனைக்கு வந்து அவனைப் பார்த்துக் கொள்வதும் அவனுக்கு தேவையானவற்றை பார்ப்பதிலும் அவன் தொழில் சம்பந்தமான வேலைகளை கவனிப்பதிலும்  இருந்தாள்.

           அதைக் கேள்விப்பட்ட சந்தோஷ்  இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு.,  வேலைகளைப் பற்றி அபூர்வா விடம் பகிர்ந்துகொள்ள தொடங்கியிருந்தான். ஏனெனில்  இனி உரிமை பட்டவள் என்ற எண்ணத்தோடு அவன் சொல்ல.,  அவள் கவனமாக கேட்டுக் கொண்டாலும் “எந்த முடிவாக இருந்தாலும்., நரேன் தான்” என்பது போல சந்தோஷ் டம் சொல்லி வைத்தாள்.

         ஏனெனில் இது “அவனுடைய தொழில் அவன் தான் முடிவு செய்யவேண்டும்”.,   என்பதை  சந்தோஷடமும் தனியாகவே சொன்னாள். “எதுவாக இருந்தாலும் உங்க பாஸ் ட்ட கேட்டு முடிவு பண்ணுங்க சந்தோஷ்..,   நீங்க ஆபீஸ்ல பி.ஏ னா., நான் வீட்ல பி.ஏ அவ்வளவு தான்.. அவர் மனசு சின்ன விதத்தில் கூட காயப் படுவதை நான் விரும்பல., அதனால பேசுறது எதுவா இருந்தாலும்., கேர்ஃபுல்லா பேசணும்.,  எதுவா இருந்தாலும் அவர் கிட்ட கேட்டு அவர் ஓகே சொன்னா., அப்புறம் என்கிட்ட சொல்லுங்க., மத்தபடி  அவர் சொல்லுறத டைரக்டா நான் செய்வேன் அப்படிங்கற மாதிரி தான்”…, என்ற தனியாக அழைத்து சொன்னாள்.

         சந்தோஷ்ம் புரிந்துகொண்டான்., அவன் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தான்., இப்படி ஒரு மனைவி கிடைப்பதற்கு தன் பாஸ் கொடுத்து வைத்திருக்கவேண்டும் என்று..

    அத்தையும்., பாட்டியும் சேர்ந்து அவளுக்கு தேவையான அனைத்தும் ஏற்பாடு செய்து கொண்டிருக்க இவள் எப்பொழுதும்போல் மருத்துவமனைக்கு வந்து சென்று கொண்டிருந்தாள்…

                        அன்று வந்தவளிடம் நரேன் கைக்கட்டை பிரிக்க இன்னும் பத்து நாள் ஆகும் ன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க.., அந்த உடைந்த எலும்புக் சரியானலும்., கொஞ்ச நாளுக்கு கெவி வொர்க் வேண்டாம் ன்னு சொன்னாங்க.,  என்று சொல்லிக்கொண்டிருந்த அவன்..,

      ஆபிஸ் வேலையில் மும்முரமாக இருந்த அவளை பார்த்துக் கொண்டே இருந்தான்., அவன் பார்த்ததை உணர்ந்து நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் “என்ன” என்று கேட்டாள்.

         “உனக்கு எந்த வருத்தமும் இல்லையா” என்று மறுபடியும் கேட்க தொடங்கினான்.

     இவள் எழுந்து வெளியே பார்க்கும் போது வெளியில் திருமணப் பேச்சு தான் நடந்துகொண்டிருந்தது. அருகில் வந்தவள் அவள் வாயில் விரலை வைத்து காட்டி.,  “இந்த டாபிக்கை இதோட விடுங்க” என்று சொன்னவள்.

                   அவன் மேற்கொண்டு பேச தொடங்கும் போது “இப்பதான் சொன்னேன் பேசக்கூடாதுன்னு.,  வாயில விரலை வச்சு சமத்தா  உட்காருங்க என்று சொல்லிக் கொண்டிருந்தாள்…

              “ஏய் நீ என்ன ஸ்கூல் பிள்ளைகளை அதட்டுற மாதிரி.,  அதட்டுற”என்று அவன் கேட்டான்.

         “பின்ன என்ன எப்ப பார்த்தாலும்., அதே பேசிட்டு..,  அதெல்லாம் இனிமேல் பேசக்கூடாது” என்று சொன்னபடி மறுபடியும் சந்தோஷ் கொடுத்து விட்டுப் போயிருந்த பைலை பார்த்துக் கொண்டிருந்தவளிடம்.,

    “நான் உன்னை எப்படி கூப்பிடனும்” என்று கேட்டான்..

     அடக்கமாட்டாமல் சிரித்தவளைப் பார்த்து “எதற்கு” என்று கேட்டான்.

          “இதெல்லாம் பொண்ணுங்க தான் பசங்கள கேட்பாங்க..,  ஆஃப்டர் மேரேஜ் நான் உங்களை எப்படி கூப்பிடனும் அப்படின்னு., இப்ப நீங்க கேக்குறதை பாத்தா சிரிக்காம என்ன செய்ய சொல்றீங்க”… என்றாள்.

          “எனக்கு தெரிஞ்சு இப்ப வரைக்கும்., நான் உன்னை பெயர் சொல்லி கூட கூப்பிடலை…,  எப்படி கூப்பிடறது அதுக்கு தான் கேட்டேன்”.. என்றான்.

“உங்களுக்கு எப்படி தோணுதோ., எப்படி பிடிச்சிருக்கோ., அப்படி கூப்பிடுங்க”.. என்றாள்.

ஒருநாள் விழிகள் பார்த்தது

என் வாழ்நாள் வசந்தம் ஆனது

என் இலையுதிர்காலம் போனது

உன் நிழலும் இங்கே பூக்குது

பாரதிக்கு கண்ணம்மா

நீ எனக்கு உயிரம்மா”

என்று பாடல் வரிகளை மனதிற்குள் நினைத்துக் கொண்டாலும்.. “இப்பதிக்கு அபூ னு கூப்பிடுறேன்..,  அப்புறமா நேம் சேன்ஜ் பண்ணிக்குவோம்” என்றான்.

       சிரித்தபடி தலையாட்டிக் கொண்டாள். “உனக்கு கோபமே வராதா” என்று அவன் கேட்டான்..

“கோபம் வரும்., காரணம் இல்லாம கோபப்பட மாட்டேன்., எந்த விஷயத்துக்கு கோபப்படனுமோ,  அந்த விஷயத்துக்கு கண்டிப்பா கோபப்படுவேன்.. சும்மா சும்மா கோபப்பட்டா., அதுக்கு என்ன மரியாதை இருக்கும்”… என்றாள்.

      அபர்ணாவின் திருமணத்திற்கு முந்தைய நாள் அவர்களுக்கு திருமணம் என்று பேசி இருந்ததால் அன்று டிஸ்ஜார்ச் செய்வதாகவும் சொல்லியிருந்தார்கள். அன்று காலையில் வீட்டிற்கு சென்ற பிறகு நரேன் வீட்டில் வைத்து திருமணம் என்ற அளவில் பேச்சு இருந்தது. நரேனின் வீட்டிற்கு ரிஜிஸ்டர் ஆபிஸில் இருந்து ஆள்கள் வருவதாகவும்., வீட்டில் வைத்தே ரிஜிஸ்டர் செய்து விட்டு., வீட்டில் வைத்து முறைப்படி திருமணமும் செய்யலாம் என்று பேசி இருந்தார்கள்.

           முக்கியமான உறவுகளுக்கு மட்டும்  சொல்லப்பட்டது., அபூர்வாவின் தாய்வழி சொந்தமாக மாமா., பாட்டி.,  தாத்தா.,  இருக்க… தந்தைவழி சொந்தமாக அபர்ணாவின் திருமணத்திற்கு முதல்நாள் வருபவர்கள் மட்டும் அழைத்துக் கொள்ளலாம் என்று பேசி இருந்தார்கள். அவர்களுக்கும் திருமணத்தை பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

          பட்டு.,  நகை.,  தாலி., என்று அனைத்து வேலைகளையும் வீட்டில் உள்ள பெரியவர்கள் பார்த்துக்கொள்ள,  நரேனையும்.,  அலுவலக வேலையும்.,  அபூர்வா பார்த்துக்கொண்டாள்.

           டிஸ்ஜார்ச் செய்வதற்கு முதல் நாள் மருத்துவர் தற்செயலாக காரிடரில் வைத்து அபூர்வா வை பார்த்தவர். அபூர்வா தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறாள் என்பது வரை தெரிந்தவர் என்பதால்..,  அவளிடம் நரேனை பற்றி பேசவேண்டும் என்றார்.

           அருகில் கல்யாண் ம்  இருந்ததால் பேசலாம் என்று சொன்னபடி மருத்துவரின் அறைக்கு செல்ல முடிவு செய்த பின்.,  ராஜசேகர் ஐ நரேனிடம் பேசிக்கொண்டு இருக்குமாறு சொல்லி விட்டு கல்யாண் அபூர்வா வை அழைத்து கொண்டு மருத்துவரைக் காணச் சென்றான்.

         அவருடைய அறைக்கு சென்ற உடன் முதலில்  அபூர்வாவிடம் வாழ்த்துக்களை தெரிவித்த மருத்துவர் உட்காருமா…

என்று அமர சொன்னார்.

             “சொல்றேன்னு தப்பா எடுத்துக்க கூடாது மா.., நீ வந்து நரேனை  கல்யாணம் பண்ண முடிவு பண்ணி எல்லாம் ரெடி பண்ணியாச்சு.., இப்ப இத கண்டிப்பா உன்கிட்ட  சொல்லணும்.., ஏன் னா  நீ தான் 24 மணி நேரமும் அவன் கூட இருக்க போற பொண்ணு..,  அதனால தான் சொல்றேன்.,  டாக்டரா சொல்லுறத விட.,  நரேன்   ஃபேமிலி பிரெண்ட் அப்படிங்கற முறையில் சொல்லுறேன்.  நரேன் இங்கே வந்து 13 நாள் ஆகுது., நாளைக்கு  வீட்டுக்கு வந்துடுவான்.,  ஒரு பத்து நாளைக்குள்ள கட்டு பிரிச்சிடலாம்., அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நார்மல் ஆக்டிவிடீஸ் ல இருக்கும். இதெல்லாம் ஓகே.., இந்த இடுப்புக்கு கீழே இருக்கிற பிரச்சனை  அவனுக்கு எதனால அப்படி ன்னு., முழுசா   தெரியல…, நீயும் டாக்டர்ஸ் ட்ட விசாரிக்கிற அப்படின்னு எனக்கு தெரியும்.., நாங்களும் விசாரிச்சுட்டு தான் இருக்கிறோம்.., ஏதாவது கண்டிப்பா ஒரு சொல்யூஷன் இருக்கும்., நாமத் தேடிப் பார்க்கலாம்.., ஆனால் அது சரியாகுற வரைக்கும் அவனோட மனநிலை எப்படி இருக்கும்,  அப்படிங்கிறது நாம கண்டிப்பா சொல்ல முடியாது…,  ஏன் னா  நல்ல ஓடியாடி வேலை பார்த்தவன்.., எப்பவும் தன்ன  பிஸியா வச்சுக்கிட்ட ஒரு பிசினஸ்மேன்.., இப்போ  என்னால முடியல அப்படிங்கிற ஒரு பிலீங் இருக்கும்., மனசுக்குள்ள அவன அறியாமல் ஒரு தாழ்வு மனப்பான்மை வந்திருக்கலாம்..,  இந்த பத்து நாளும் எல்லாத்துக்கும் நம்ம மத்தவங்கள டிஃபன் பண்றோம்., மத்தவங்க கிட்ட போயி உதவி கேட்கிறோம்., அப்படிங்கற மாதிரி அவன் ஃபீல் பண்ண ஆரம்பிச்சிருக்க வாய்ப்பிருக்கிறது… ஆனால் வெளியே காட்டிக்கல.., சோ இதுல ஏதாவது  கோபப்பட்டாலும்.., டென்ஷனாகி கொஞ்சம் பேசத் தெரியாமல் பேசினாலோ.., வீட்ல இருக்குறவங்க., நீங்க தான் பொறுத்துக்கனும்”., என்று பொதுவாக கல்யாண் னையும்., அபூர்வா வையும் பார்த்து சொன்னார்…

             “புரியுது டாக்டர் நானும்  உண்மையை சொல்லனும் னா.,  இங்க தான் நேற்று ஈவினிங் வீட்டுக்கு கிளம்புறது க்கு முன்னாடி ஒரு சைக்கார்டிஸ்ட் பார்த்துட்டு தான் போனேன்.., சோ இது  எனக்கு தெரியும்., அவர எப்படிப் பார்த்துக்கணும் ன்னு., ஆனால் அவர் எப்படி பீல் பண்ணுறாங்க ன்னு., இப்ப வரைக்கும் என்னால புரிஞ்சுக்க முடியல..,  கண்டிப்பா நான் நல்ல பார்த்துக்க முடியும் ன்னு நம்புறேன்., அவரோட கோபம்., அவருடைய டென்ஷன்., எதையுமே நான்  பொருட்படுத்த மாட்டேன்., அவங்கள நல்ல பார்த்துக்கிறேன் டாக்டர்..,  நீங்களும் எனக்காக டிரீட்மெண்ட் மட்டும் விசாரிங்க”..,  என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

        “கண்டிப்பா விசாரிக்கிறேன் மா.., அதுமட்டுமில்லாம  நீ மனைவியா இருக்குற அந்த இடத்தில்  நிறைய விஷயங்களை நீ சந்திக்க வேண்டியது இருக்கும்.., அதற்காக தான் நான் இப்போ உன் கிட்டே சொன்னது. புரிஞ்சு நடந்துக்கோ.., அவனை நல்ல பார்த்துக்கோ..,   இப்போ மனசுல இருக்கிற பிரச்சினை என்னன்னா.., தன்னால் எதுவும் முடியாது அப்படிங்கற ஒரு பீல் வந்து இருக்கு..,  அது மட்டும் இல்லாம மனசளவுல அவன்  இப்போ 30 வயசு தான்.. ஆனா இந்த அடிபட்ட பிரச்சினை.., அவனால எதுவும் முடியல அப்படிங்கற ஃபீல் வந்துரும்.., நான் சொல்வது புரியும் நினைக்கிறேன்.., அந்த மாதிரி ஃபீல் வரும் போது அவனறியாமல் உன் கிட்ட அதிகமா கோபப்படலாம்.., இல்ல னா., தனக்குள்ளே போட்டு மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு… அதனால பார்த்துக்கோ”..,  என்று சொன்னார்.

       கண்டிப்பா பார்த்துப்பேன் சார் புரியுது., நீங்க சொல்றது, என்னால கண்டிப்பா அவங்கள பாத்துக்க முடியும் ன்னு நம்புறேன்” என்று சொன்னாள்..,

கல்யாண் தான் “சீக்கிரமா வேற ஏதாச்சு டிரீட்மெண்ட்  இருக்கா ன்னு பாருங்க.., என் தம்பி பழையபடி எழுந்து நடமாடனும்.,  எனக்கு அதுதான் வேணும்” என்று  சொல்லிவிட்டு கிளம்பி வெளியே வந்தான்.

       கல்யாண் அபூர்வாவிடம் கேட்டான். “டாக்டர் சொல்றதெல்லாம் வச்சி நீ ஏதும் பயந்துட்டீயா.., மா, இப்பவும் இந்த கல்யாணத்துல உனக்கு இஷ்டம் தானே” என்று கேட்டான்.

         “ஏன் அண்ணா இப்படி யோசிக்கிறீங்க.,  எனக்கு தெரியும் அவங்களுக்கு பிராப்ளம் வந்த அந்த நாளிலிருந்து., நானும் நிறைய டாக்டர் கன்சல் பண்ணிட்டு தான் இருக்கேன்..,  அவங்களோட ரி ஆக்சன்ஸ் எப்படி மாறும் அப்படிங்கிற வரைக்கும் எனக்கு தெரியும்.., என்னால பாத்துக்க முடியும்..,  நான் உங்க தம்பிய  நல்ல பார்த்துக்கிறேன்.., நீங்க நம்புங்க” என்று சொன்னவள் சிரித்த முகமாகவே நரேன் அறைக்கு வந்து சேர்ந்தாள்..

         அதன்பிறகு கல்யாணின் மனைவியும் வந்து விட.,  ராஜசேகரும் வெளியே சென்றார்.,  லலிதாவும் கடைகளுக்கு சென்று விட்டு வந்து சேர கல்யாண் அவர்களை தனியாக அழைத்து சென்று.,  மருத்துவர் சொன்னவற்றை சொன்னான்.

         அதுமட்டுமல்லாமல் தான் அபூர்வாவிடம் கேட்டதையும்., அபூர்வா டாக்டரிடம் அளித்த பதில்.,  தன்னிடம் அளித்த பதில்., என அனைத்தையும் அவர்களிடம் சொன்னான்.  லலிதாவிற்கு தான் அபூர்வா விற்காகவாவது., அவனுக்கு  சரியாகி விட வேண்டும் என்று வேண்டுதல் வைக்கத் தொடங்கினார் கடவுளிடம்…

               அன்று மதியத்திற்கு மேல் மருத்துவமனைக்கு வந்த அபூர்வாவின் அத்தை அனைவர் முன்னிலையிலும் “இன்னைக்கு அபூர்வாவை கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு கூட்டிட்டு போய் விடுறேன்”என்று சொல்லிக் கொண்டிருந்தார்..,

      “ஏன்”, என்று லலிதா கேட்டார்.

             நான் அவளுக்கு மெஹந்தி வைக்கணும்.,  ஒரு பொண்ண வளர்த்த ஒரு அம்மாவா., எனக்கு  என் பொண்ணோட கல்யாணத்தில் என்னென்ன பண்ணனும்னு ஆசைப்படுறனோ,  அத்தனையும் பண்ணனும்.., மெஹந்தி வைக்கணும்.,  கல்யாணத்துக்கு முதல் நாள் வீட்ல சாமி கும்பிட்டு., ஒரு பூஜை செய்யனும்”..,    என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் மாலை 4 மணிக்கு மேல் இவளையும் கட்டாயப்படுத்தி கிளப்பிக் கொண்டு சென்றார்…

       அபூர்வா அங்கிருந்து கிளம்புவதற்கு முன் நரேனிடம் சென்று “அத்தை சொல்றாங்க..,  மெஹந்தி வச்சிக்கவா, வேண்டாமா”, என்று கேட்டாள்.

Advertisement