Advertisement

அவன் சொன்னது “இதெல்லாம் சாதாரணம்., எதுவா இருந்தாலும் நான் பார்த்துப்பேன். என் குழந்தைகளை பெற்றெடுக்க ஒருத்தி உள்ள துடிச்சிட்டுருக்கா.., அந்த நேரத்துல எனக்கு இந்த கரை எல்லாம் பெருசா தெரியல”., என்றான்.

                       “ இல்ல தம்பி மத்தவங்க தான்., ஒரு மாதிரி பார்த்துவிட்டு போறாங்களே அதுக்காகத்தான் சொன்னேன்” என்றார்.,

                 “யார் எப்படிப் பார்த்தாலும் எனக்கு அதை பத்தி கவலை கிடையாது., தப்பா எடுத்துக்காதீங்க., உங்களுக்கு அவளைப் பற்றி தெரியாது., அதனால நீங்க எதை பத்தியும் பேசாதீங்க”., என்று சொல்லிவிட்டான்.

                 அப்போது தான் பெரியவள்   “இப்படி ஒரு மனிதனை இங்கு தான் பார்க்கிறேன்., லேசாக அழுக்கு பட்டால் உதறித் தள்ளும் மனிதர்களிடையே., பெரிய மனிதன் தோற்றத்தில் நல்ல உடையில் இருந்ததால்., அவனைப் பார்த்து அவர் சொன்னார்”.,

              அவனோ  எனக்கு எதுவும் தேவையில்லை., என் மனைவியை தவிர என்னும் நிலையில்  தான் அமர்ந்திருந்தான். இரட்டை குழந்தைகள் என்பதால் ஏற்கனவே சொல்லியிருந்தபடி சிசேரியன் தான் என்று முடிவு செய்திருந்தார்கள்., சற்று நேரத்தில் அதற்காக எல்லாம் தயார் செய்து குழந்தைகளை எடுக்க., ஆணும் பெண்ணுமாக இரு குழந்தைகளும் அப்படியே நரேனின் சாயலில் பிறந்திருந்தது., அனைவரும் மகிழ்ச்சியோடு அந்த தருணத்தை அனுபவித்துக் கொண்டிருக்க நரேன் மட்டும் எந்தவித உணர்ச்சியும் முகத்தில் காட்டாமல் குழந்தைகளைக் கொண்டு வந்து காட்டியவரிடம்.,  குழந்தைகளைப் பார்த்தான் ஆனால் அதைப் பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல் அமர்ந்திருந்தான்.,

             அவனிடம் கல்யாண்  தான் “என்னடா ஆச்சு ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க” என்று கேட்டான்.

            “எனக்கு இப்போ அபூர்வாவ பாக்கணும்., அப்ப மட்டும் தான் என்னால நார்மலா இருக்க முடியும்” என்று சொல்லி கண் கலங்க நின்ற அவனை பார்க்கும் போது கல்யாண் க்கு பெருமையாக இருந்தது., பெண்களை மதிக்கும் குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் தன் மனைவியை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் தன் தம்பியை பார்க்கும்போது மகிழ்ச்சியாகவும் இருந்தது…

               சிசேரியன் என்பதால் அதற்கான சிகிச்சை முறைகள் எல்லாம் முடிந்து., அவளை முதல் இரண்டு நாள் மட்டும் ஐசியூ வில் வைத்துவிட்டு., அதன் பிறகு அறைக்கு மாற்றுவதாக டாக்டர்கள் சொன்னார்கள். அவன் அனைவரையும் விட அதிகமாக பதறித் துடித்து விட்டான்.  அவர்களிடம் “எதுவும் பிரச்சனை இல்லையே”என்றான்.

                      “அவளுக்கு மயக்க மருந்து கொடுத்து இருப்பதால் முழிப்பதற்கு இன்னும் நேரமாகும்., அது மட்டுமல்லாமல் அவள் இன்னும் எழுந்து நடமாடவே இரண்டு மூன்று நாட்களாவது ஆகும். அதுவரை ஒரு இரண்டு நாளாவது இந்த அறையிலிருந்து மருந்து எல்லாம் எடுத்துக் கொண்டு., அவள் எழுந்து நடக்கத் தொடங்கிய பிறகு மாற்றுகிறோம்” என்று சொன்னார்கள்.

        நரேன்  தான் “இல்லை நீங்கள் அறைக்கு மாற்றுங்கள்., அவளை நான் பார்த்துக் கொள்வேன்” என்று சொல்லிவிட்டான்…

                 “தம்பி இது சாதாரண பிரச்சனை இல்லை, நீங்க நினைக்கிற மாதிரி இல்ல பொண்ணுங்களோட வலி வேதனை எல்லாம்  டெலிவரி நேரத்தில் உயிர் போய் உயிர் வர்ற மாதிரி தான்.., சிசேரியன் ங்கிறது., நார்மல் டெலிவரி விட கொடுமையான ஒரு விஷயம் தான்., அது நிறைய பேருக்கு தெரிவதில்லை.  நார்மல் டெலிவரி  ல வலிய ரொம்ப நேரம் தாங்க வேண்டியது இருக்கும்., ஆனால் சீக்கிரமா எழுந்து உட்கார்ந்துர்லாம்.,   சீக்கிரமா எல்லா வேலையும் நார்மலா செய்ய தொடங்கலாம். ஆனால் சிசேரியன்  அப்படி கிடையாது ஒவ்வொன்றுக்கும் நாளாகும்., அவளுக்கு சிங்கிள் பேபியா இருந்தா அபூர்வா க்கு நார்மல் டெலிவரி ஆயிருக்கும். மத்தபடி ஆரோக்கியமான பொண்ணுதான் கவலைப்படாதீங்க.., ரெண்டும்  நாள்ல ரூம் கூட்டிட்டு வரலாம்”  என்று சொன்னார்கள்.

              இவனும் முடியவே முடியாது “என் மனைவியே என்னால பாத்துக்க முடியும், அவளை எப்படி பாத்துக்கணும் எனக்கு தெரியும், நான் பாத்துக்குறேன் ஒரு பொண்ணா நடக்க முடியாம இருந்தா என்ன கிட்டத்தட்ட மூன்று மூன்று மாசத்துக்கு மேல அப்படி பாத்துக்கிட்டா.., அவளை நான் பார்த்துக் கொள்வதை விட எனக்கு வேற என்ன வேலை இருக்க போகுது” என்றான்.

              அங்கு அனைவர் கண்ணுக்கும் அவன் நாடறிந்த பிஸ்னஸ் மேன் ஆக தெரியவில்லை., சிறந்த மனிதனாக மட்டும் தான் தெரிந்தான்…

                     சரி உங்க விருப்பத்துக்கே விடலாம் ஆனால் அவங்க மயக்கம் தெளியட்டும் அது வரை  இங்க இருக்கட்டும்., என்றனர்.

                    “அவள் மயக்கம் தெளியும் வரை நான் அவளோடு இருக்கிறேன்” என்று சொன்னவன், அவள் அருகிலேயே இருந்தான்., அப்போது தான் அவனுக்கு கல்யாண் வேறு உடை அருகில் உள்ள கடையில் இருந்து வாங்கி கொடுத்து., அந்த சட்டையை மாற்றும் படி சொல்லிக்கொண்டிருந்தான். அவனும் மாற்றிவிட்டு வந்தான்., “இப்பவாது பிள்ளைங்க பாரு”., என்று சொன்னான். அவளை ஒரு முறை உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்த பிறகு தான் குழந்தைகளை கையில் வாங்கினான்…

                     மருத்துவமனையில் அபூர்வ இருந்தவரை அவளை நடக்க விடாத அளவிற்கு அவன் பார்த்துக்கொண்டான்.  ஒரு தந்தை தாயுமானவனாக இருக்கலாம்.., ஒரு தாய் ஒரு தந்தை ஸ்தானத்திலிருந்து அத்தனையும் செய்ய முடியும்., ஆனால் ஒரு கணவன்  மட்டும் தான் எல்லா இடங்களையும் பூர்த்தி செய்யமுடியும்., என்பதை அங்கிருந்த அத்தனை பேரும் உணர்ந்து கொள்ளும்படி நரேன்  நடந்து கொண்டான்., அவளைத் தாயாக தாங்குவதில் ஆகட்டும்., தந்தையாக தோள் கொடுப்பதில் ஆகட்டும்., தோழனாய் அரவணைத்துக் கொண்டு செல்வதில் ஆகட்டும்., அனைத்திலும் சிறந்தவன் என்பதை அனைவரும் அறியும்படி காட்டியவன் அபூர்வாவை கையில் வைத்து பார்த்துக் கொள்வது எப்படி என்பதை நிரூபித்துக் காட்டினான்…

                   அவளை வீட்டிற்கு அழைத்து வரும் வரை., அவன் அலுவலகம் என்பதை பற்றி யோசிக்க கூட இல்லை., சந்தோஷ் டம் அனைத்து பொறுப்பையும் ஒப்படைத்து  அவனைப் பார்த்துக் கொள்ள சொல்லி விட்டான்.., வீட்டிற்கு வந்த பிறகு ஆளாளுக்கு பார்த்துக் கொண்டாலும் டெல்லியில் உள்ள அத்தை அவளோடு இருந்துவிட்டார்.

                           ஏனெனில் அவளுக்கு தேவையான பக்குவம் பார்க்கவேண்டும்., அது மட்டுமல்லாமல் இரட்டை குழந்தைகள் என்பதால் அனைவருக்குமே கஷ்டம் என்பது ஒரு புறம்.,கல்யாண் ன் பிள்ளைகளும் இருக்க., வினோதாவின் பிள்ளைகளும் அங்குதான் இருந்தார்கள்.., அத்தனை பேரையும் பார்த்து கொண்டு இரண்டு குழந்தைகளின் சேர்த்து பார்ப்பது என்பது லலிதாவிற்கு முடியாத காரியம் என்பதால்., அத்தையும் பாட்டியும் மாறிமாறி இருந்து கவனித்துக் கொண்டார்கள்., மூன்று மாதம் அவள் உடல் நலம் நன்றாக தேறும் வரை உடனிருந்து பார்த்துக்கொண்டனர்..,

                    இப்பொழுதெல்லாம் அபூர்வாவின் பார்வை நரேனை  சுற்றிக்கொண்டே இருக்கும்.., குழந்தைகளுக்கு தேவையானவற்றை கவனித்துவிட்டு நரேனையே பார்த்துக்கொண்டிருந்தாள்..,

                   அதைப்பார்த்த நரேன் “என்ன அம்மணி பார்வை ரொம்ப வேகமா இருக்கு.., என்ன விஷயம்” என்று கேட்டான்.

                           “ என் புருஷனை நான் சைட் அடிக்கேன்., இப்ப என்ன” என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.,

                  “ புள்ளைங்கள பக்கத்துல வைச்சிட்டு., என்னை ஏன்டி இப்படி வம்புக்கு இழுக்கிற” என்று அவன் கேட்டான்.

                    “அப்படியே வம்புக்கு இழுத்தாலும் வந்துட்டு  தான் மறுவேலை பார்க்க போறீங்க.., போங்க போங்க போய் வேலையை பாருங்க”.., என்றான்.

                                   “ரொம்ப முன்னேறிட்ட”..,என்றான். அவனோடு வம்புக்கு பேசுகிறாள் என்று தெரிந்துகொண்டே சிரித்த முகத்தோடு அவளிடம் பேசிக் கொண்டிருந்தவன். அருகில் வந்து குழந்தைகளை பார்த்தபடி அவளை அணைத்து உட்கார்ந்து., “ரெண்டு பிள்ளைங்க வந்துருச்சுடி.., நீ பிள்ளைகளை நடுவில் விட்டு., தள்ளி இருந்துப்பியா., என்று கேட்டான்.

“ நான் என்னைக்குமே உங்க பக்கம் மட்டும்தான்.., பிள்ளைங்க ரெண்டும் அந்த பக்கம்” என்று சொன்னாள்.

          “அப்ப சரி” என்று சொல்லி அவளை தோளோடு அணைத்து சிரித்துக் கொண்டிருந்தான்…

          “நிழல் போல நானும் நடை போட நீயும்

          தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்

           கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்

          மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது

         நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே                                                                                               

        நாள் தோரும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே”

 

 

ஐந்து வருடங்களுக்குப் பிறகு

 

                      காலையில் டைனிங் டேபிளில் அனைவரும் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருக்க கல்யாணின் பிள்ளைகள் இப்பொழுது பெரியவன் 12 வயதிலும் சிறியவள் 8 வயதிலும் இருக்க.., நரேனின் பிள்ளைகள் இருவரும் சரியாக ஐந்து வயதில் இருந்தனர்.

        பிள்ளைகள் இருவரும் காலையிலேயே அவர்கள் தாத்தாவிடம் புகார் தெரிவித்துக் கொண்டிருந்தனர்., “தாத்தா இங்க வாங்க என்னன்னு கேளுங்க” என்று பேரன் அழைத்தான்.

                     “என்னடா செல்ல குட்டி” என்று வந்து அருகில் அமர்ந்தார்.

                  “இந்தப்பா அம்மாவை என் பக்கத்திலேயே விடமாட்டேங்காங்க தாத்தா” என்று பேரன் புகார் வாசிக்க..,

            அவர் சிரித்துக்கொண்டே “அதெல்லாம் ஒன்னும் இல்லடா., உங்க அம்மா உனக்கு தான்” என்று சொன்னார்.

                                   பேத்தியோ “இல்ல தாத்தா.., அப்பா அப்படித்தான் பண்றாரு காலையில எங்களை  கிளப்ப., அம்மா வந்தா எனக்கு அதை எடுத்து வை., எனக்கு இதை எடுத்து வா., ன்னு அம்மாவை வேலை  சொல்லிட்டே இருக்காரு.., எங்களை கிளப்ப விட மாட்டாரு” என்று இரு குட்டிகளும் மாறி மாறி புகார் தெரிவித்தனர்.

                அவனோ “உனக்கு பாட்டி இருக்காங்க., தாத்தா இருக்காங்க., பத்தாததுக்கு பெரியம்மா இருக்காங்க., பெரியப்பா இருக்காங்க., உங்க அண்ணன் இருக்கான்., உங்க அக்கா இருக்கா., இத்தனை பேர் இருக்காங்க இல்ல.., இங்கேயே இருந்துக்கோங்க.., மேல இனிமேல் ரூமுக்கு வந்தீங்க உங்க ரெண்டு பேருக்கும் இருக்கு” என்று குழந்தைகளை மிரட்டி கொண்டிருந்தான்.

                   அபூர்வா அவனை கிள்ளிவிட்டாள்.., “நீ எதுக்கு என்னைக் கிள்ளுற” என்றான்.

                          “பேசாமல் இருங்க” என்று சொல்லி அவனை அதட்டிவிட்டு  பிள்ளைகளிடம் பேசத்தொடங்கினாள்..,

         இவன் அப்பாவிற்கு தான் இவனோடு பெரிய தொல்லை என்ற எண்ணம் வந்தது…

                 குழந்தைகளிடம் “குட்டீஸ் அப்பா சும்மா சொல்றாங்க டா.., அம்மா நாளைக்கு அப்பாக்கு சீக்கிரம் டிரஸ் எடுத்து குடுத்துட்டு ., அப்பாக்கு தேவையானது எல்லாம் செஞ்சு கொடுத்துட்டு வந்து உங்கள கிளப்பி விடறேன் சரியா”., என்று சொல்லி குழந்தைகளிடம் தாஜா பண்ணிக் கொண்டிருந்தாள்.

                நரேனும் சிரித்தபடி அவள் குழந்தைகளிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டே இருந்தான்., அனைவருக்கும் தெரியும் நரேனின் அன்பு என்பது அவள்மீது தனித்துவமானது என்பது., இது அனைவரும் அறிந்ததே குழந்தைகள் பேசுவதற்கு எல்லாம் தலையாட்டி கேட்டுக்கொண்டிருந்தார்கள்., ஏனெனில் அது அவ்வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கூட தெரியும்., நரேன் அபூர்வாவை எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டேன் அவனுக்கு மட்டும்தான் சொந்தம் என்பதில் சிறு குழந்தை போல அடம்பிடிப்பான் என்பது…

             புரிந்து கொண்ட குடும்பம் என்பதால் அங்கு அன்பிற்கு பஞ்சமில்லாமல் நிம்மதியோடு சென்றது., குடும்பத்தில் சிறுசிறு உரசல்களும் குழப்பங்களும் வருவது சகஜம் தான்., அதை கையால தெரிந்துவிட்டால் குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் பொங்கிப் பெருகி வரும்.

 தனித்துவமான அன்பு என்பது தனக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணம் வருவது. ஆண் பெண் பேதமின்றி தன் வாழ்க்கைத் துணையிடம் அனைவருக்கும் வரும் ஒரு பற்றுதல் தான்., இதை புரிந்து கொண்டவர்களின் வாழ்க்கை எந்தவித குழப்பமும் இல்லாமல் நிம்மதியாக செல்லும் வாழ்க்கை அழகானது., அழகாய் வாழ்ந்து பார்க்கலாம்…..

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை”

குறள் விளக்கம் :

அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.               

Advertisement