Advertisement

வந்து விட்டு செல்லும்போது இவர்களுக்கு தேவை இல்லாத கொண்டு வந்த பொருள்களில் பாதியை கொடுத்துவிட்டாள். உடைகள் தேவைக்கு மட்டும் வைத்துக் கொண்டாள்., அவளுக்கும் அதுபோலவே எடுத்து வைத்துக்கொண்டு மீதி அனைத்தையும் ஒரே சூட்கேசில் போட்டு அனுப்பிவிட்டு., இங்கு இருப்பதே ஒரே பேக்கில் எடுத்து வைத்துக் கொண்டாள்.

       கல்யாண் கிளம்பும் சமயம் அவனை வழியனுப்ப வெளியே செல்வது போல சென்றவள். கல்யாணிடம் “ஏதும் முன்னேற்றம் இருக்கிறதா., எப்போது வருகிறார்கள்”. என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

       “கரெக்டா நிச்சயதார்த்தத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் வராங்க.., நாம நிச்சயதார்த்தத்துக்கு முன்னாடி அரஸ்ட் பண்ணனும் அப்படின்னு சொன்னீயாமே மா.., நிச்சயதார்த்தம் அப்ப அரெஸ்ட் பண்ணா அந்த பொண்ணை பாதிக்கும் நீ சொன்னியாம்.., கவின் சொன்னாப்ல., என்ன பண்ணலாம் நீ தான் சொல்லணும்” என்று கேட்டான்.

      “உண்மைதான் அண்ணா இவங்க ரெண்டு பேரு பண்ண தப்புக்கு அந்த பொண்ணு என்ன பாவம் பண்ணிச்சு., நிச்சயதார்த்தம் வரைக்கும் வந்து கல்யாண நிற்கிறது பாவம் இல்ல.., அதனால வேண்டாம்” என்று சொன்னாள்.

     எனக்கு மனசுல இரக்கம் இல்ல மா.., நீ பாவப்படுற உனக்காக நான் அதை பத்தி விசாரிக்கிறேன்., சில விஷயங்கள் விசாரிக்கச் சொல்லி இருக்கேன் விசாரிச்சுட்டு உனக்கு சொல்றேன் மா., நீ வரும்போது உனக்கு டீடைல்ஸ் ஃபுல்லா ரெடி பண்ணி வைக்கிறேன்”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

          “சரி ண்ணா., பார்த்துக்கோங்க” என்று சொன்னபடி வந்து விட்டாள். அதன் பிறகு வீழ்சேர் தேவை இல்லை என்ற காரணத்தால் அதை கல்யாண் வந்த காரிலேயே போட்டு அனுப்பி விட்டாள் ஏனெனில் இப்போது வைத்தியரின்  ஆட்கள் உதவியுடன் நிற்பது மட்டுமல்லாமல்., அங்குள்ள உதவியாளர்களை பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்க வேண்டும்., அல்லது கைக்கு ஊன்றுகோல் போல கொடுத்து அதை வைத்து நடக்க வைக்க வேண்டும்., என்பதில் குறியாக இருந்தார்கள். ஒற்றைக் கையில் மட்டும் ஸ்டிக் போல வைத்து பிடித்துக்கொண்டு நடக்க பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்..

                   கல்யாண் வந்து விட்டு சென்ற பிறகு நாட்கள் வேகமாக செல்வது போல் இருந்தது., அடுத்தடுத்த நாள்களில் கொஞ்சம் அதிகமான உணர்வுகளும் நல்ல காலுக்கு பலமும் வந்ததாக அவர்களுக்கு தோன்றியது. ஏனெனில் இப்போது அவன் யார் உதவியும் இல்லாமல் பிடித்துக் கொண்டே நடக்கிறான். அந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறான். பாதுகாப்புக்காக ஒரு கையில் மட்டும் ஸ்டிக்கை வைத்துக் கொள்வான்., பேலன்ஸ் தவறி விடக்கூடாது என்பதற்காக மற்றபடி சுவரைப் பிடித்துக்கொண்டு அவன் நடப்பதே அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது..

                    “நாற்பத்தி எட்டாவது நாள் இங்கிருந்து கிளம்பலாம் என்று ஏற்கனவே வைத்தியர் சொல்லியிருந்தார். ஏனெனில் அவன் உடலில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக வைத்தியர் சொன்னார். ஆரோக்கியமாக இருக்க கொடுக்கும் மருந்துகளும்.., கொடுக்கும் மசாஜ்., உடற்பயிற்சி அனைத்தும் அவனுக்கு நல்ல முறையில் உடலில் சேர்ந்திருந்தது. பின்பக்கம் இருந்த சிறு பிரச்சனை கூட ஓரளவுக்கு சரியாகி விட்டது என்றும் தெரியப்படுத்தினார். ஆனால் கால்களுக்கு நல்ல பலம் வரும் வரை ஒற்றை கையில் இருக்கும் ஸ்டிக்கை மட்டும் விடக்கூடாது நடக்கும் போது கையில் வைத்துக் கொள்ளவேண்டும் தனியாக நடக்க முடியும் என்று அவருக்கே நம்பிக்கை வந்த பிறகுதான் ஸ்டிக் இல்லாமல் நடக்க வேண்டும் இல்லாவிட்டால் கீழே விழுந்தால் வேறு ஏதும் அடிபட்டு விடக் கூடாது” என்றே சொல்லி வைத்திருந்தார்கள்.

                அவனுக்கு நல்ல பலம் வந்தாலும் அவன் அறியாமல் சில நேரங்களில் கால்களில் ஒரு சிறு தடுமாற்றம் இருப்பது அனைவருமே உணர்ந்தனர்….

                        “48 நாட்கள் கடந்தாலும்., ஊருக்கு சென்ற பின்னும் இன்னும் சற்று நாள்களுக்கு உணவில் பத்தியமும்., ஆயில் தடவி குளிப்பதும் மாலை நேர உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு கண்டிப்பாக வேண்டும்” என்று வைத்தியர் சொல்லிக்கொண்டே இருந்தார் அதை அபூர்வா தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி அதற்கான மருந்துகளை தற்போதே கேட்டுக்கொள்ள தொடங்கியிருந்தாள். ஏனெனில் பத்திய சாப்பாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை அங்குள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள்….

         நரேன் குடிலின் வாசலில் உள்ள நாற்காலியில் அமர்ந்து வெளியில் துணி உலர்த்திக் கொண்டிருந்த அபூர்வாவை பார்த்துக் கொண்டிருந்தான். அவள் இவனை கவனிக்கவில்லை இவனுடைய எண்ணெய் படிந்த உடை வைத்தியத்திற்கு போடும் உடை என அனைத்தும் துவைத்து உலர்த்திக் கொண்டிருந்தாள். ஏனெனில் அங்கு கையில்தான் துவைக்க வேண்டும் அதற்கு என்று வெளியே இடம் இருப்பதால் அங்கு வைத்து துவைத்த துணியை வெளியே உள்ள துணி காயப்போடும் இடத்தில் உலர்த்துவதற்காக போட்டுக்கொண்டிருந்தாள்.

                 அப்போதுதான் அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். ‘முதல்முதலாக யார் உதவியும் இன்றி ஸ்டிக் மட்டும் ஊன்றியபடி சுவரைப் பிடித்துக்கொண்டு நடந்த அன்று அதே சுவரில் சாய்ந்து தன்னை சேர்த்து பிடித்துக்கொண்டு அழுத அபூர்வா அவனுக்கு வித்தியாசமாகத் தான் தெரிந்தாள். மற்ற நேரங்களில் அவ்வளவு தைரியமாக பேசுபவள் தன்னை தனியாக நான் பார்த்துக்கொள்கிறேன் என்று வைத்தியத்திற்கு அழைத்து வந்தவள்., அன்று ஏன் அப்படி அழுதால் என்று இப்போதுவரை அவனிடம் வார்த்தையாக சொல்லவே இல்லை., இன்று எப்படியாவது அவளை பிடித்து வைத்து இதை கேட்க வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டான்…

                      துணியை போட்டு விட்டு திரும்பியவள் இவன் பார்வையைக் கண்டு சிரித்தபடி., “என்ன ஆச்சு அப்படி பார்க்குறீங்க” என்று கேட்டபடி வந்து அருகில் உள்ள மற்றொரு நாற்காலியில் அமர்ந்தாள்.

       அவன் பார்த்துக்கொண்டே இருக்க “ஏதாச்சும் சாப்பிடுறீங்களா., வேறு ஏதும் வேண்டுமா” என்று கேட்டாள்.

        அவளிடம் “எனக்காக நீ ஒரு விஷயத்தை மட்டும் சொல்லணும் இப்போ” என்று கேட்டாள்.

                          இவன் என்ன கேட்கப் போகிறான் என்று தெரியவில்லையே என்று யோசித்தபடி “சொல்லுங்க என்ன” என்று கேட்டாள்.

      “ஏன் அன்னைக்கு அழுத என்று சொல்லு” என்று கேட்டான்.

     சற்று நேரம் அமைதியாக இருந்தவள் பின்பு “எல்லா டாக்டரும் என்னன்னே தெரியாது அப்படின்னு சொல்லும் போது ரொம்ப கஷ்டமா நீங்க பீல் பண்ணுவீங்க என்று எனக்கு தெரியும்., வீட்ல அத்தை மாமா இல்ல இருந்து எல்லாரும் ஃபீல் பண்ணி இருப்பாங்க.., போட்டோ ல உங்களை பயங்கர ஹான்ஸம் ஆ பார்த்துட்டு நீங்க நடக்க முடியாமல் இருக்கும் போது., உங்க மனசு எந்த அளவு பீல் பண்ணும் ன்னு என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது., அதே சமயம் நீங்க திருப்பி நடப்பீங்களா அப்படிங்கிற பயம் எல்லாருக்குமே இருந்துச்சு., இல்லன்னு சொல்லல., ஏன் எனக்குமே டாக்டர்ஸ் எல்லாம் சொல்லும்போது மனசுக்குள்ள ஒரு பயம் வந்துச்சு., நான் உன்கிட்ட உங்களை எப்படியும் நடக்க வெச்சு காட்டுவேன் அப்படின்னு சொல்லி கல்யாணத்துக்கு முன்னாடி சொன்னேன்.., இது ஒரு சுயநலமான சிந்தனையாக கூட இருக்கலாம்., இல்லன்னு சொல்லல., மத்தவங்க முன்னாடி  உங்கள நடக்க வைக்கணும்னு நினைச்சேன்..,  நான் தோத்துட்டேன் அப்படின்னு தான் பீல் பண்ணேன்.., ஆனா நீங்க நடக்கிறது பார்க்கும் போது அவ்ளோ ஹேப்பியா இருந்துச்சு., பஸ்ட் வைத்தியர் வந்து அடுத்தவங்க உதவியோடு உங்களை நடந்தி மசாஜ் க்கு கூட்டி சொல்லும்போது.., எக்ஸசைஸ் பண்ற இடத்துக்கு வரச் சொல்லும் போதெல்லாம், நீங்க ரொம்ப கஷ்டப்பட்டீங்க..,  அவங்க உங்களுக்காக ஸ்லோவா நடப்பாங்க., அவங்க டக்குனு ஒரு ஸ்டெப் ஸ்பீடா வச்சா கூட நீங்க தடுமாறுவீங்க.,  இதெல்லாம் பார்த்துட்டுதான் இருந்தேன்.., அன்னைக்கு நீங்க யார் ஹெல்ப்ம் இல்லாம  சுவர மட்டும் பிடிச்சிட்டு., கைல ஒரு ஸ்டிக்கை மட்டும் வைச்சிட்டு நடக்கும் போது உண்மையிலே நீங்க மீண்டு வந்துட்டீங்க அப்படிங்கிறது பயங்கர ஹாப்பியா ஃபீல் பண்ணினேன்., அது சந்தோஷத்தில் வந்த கண்ணீர்”., என்று சொன்னாள்.

                அவன் “உள்ள போவோமா” என்று கேட்டான்.

             “ஏன் உங்களுக்கு  இந்த இடத்தில் உட்காருவது பிடிக்கும் இல்ல., இங்கே இருக்கலாம்” என்று சொன்னாள்.

      “அப்புறமா வந்து உட்காரலாம்., இப்ப வா” என்று அவளை கை ஒரு கையில் பிடித்தபடி ஒரு கையில் ஸ்டிக்கோடு உள்ளே நடந்தவன்., உள்ளே வந்தவுடன் அவளை இறுக அணைத்துக் கொண்டு “எல்லாத்துக்கும் நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும் தெரியுமா” என்றபடி அவளை அணைத்து நின்றான்.

                      “தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு” என்று கேட்டாள்.

                “இல்ல நானும் ஒரு நேரத்தில் அப்படி பீல் பண்ணுவேன்., என்ன அடிபட்டு இருக்குனு தெரியல., நான் இனிமேல் நடக்கவே மாட்டேன் அப்படிங்கற மாதிரி தான் நான் நினைச்சேன்.., என்னால உன் லைப் போச்சி அப்படிங்கற மாதிரி எல்லாம் ரொம்ப பீல் பண்ணேன்., இப்போ உண்மையிலேயே ரொம்ப ஹாப்பியா ஃபீல் பண்றேன்”., என்று சொல்லிவிட்டு “ஆனா இந்த வைத்தியசாலைக்கு வந்ததிலிருந்து ஒரே ஒரு நல்லது மட்டும் நடக்கவே இல்லை., வீட்டில் இருக்கும் போது கூட ஒழுங்கா நடந்துச்சு” என்றான்.

         “என்னது புரியலை” என்று அவள் கேட்டாள்.

        “இல்ல வீட்ல தான் நீ எப்பவும் என் பக்கத்திலேயே தான் இருப்ப”., என்றான்.

        “இப்பவும் நான் உங்க பக்கத்துல தான் இருக்கேன்., என்றாள்.

       “அத சொல்லல நீ என் பக்கத்துல தான் படுத்துப்ப., இங்க வந்ததுக்கு அப்புறம் நீ தனியா அந்த குட்டி பெட் ல படுக்குற” என்று சொன்னான்.

       “அப்படி எல்லாம் இல்ல., உங்களுக்கு இங்கே ட்ரீட்மெண்ட் கொடுக்கும் போது பெயின் ஜாஸ்தியா இருக்கும்., நைட் தூங்குவதற்கு ஒரு மருந்து கொடுக்கிறாங்க., அது நீங்க தூங்குவதற்காக., நான் வந்து உங்கள டிஸ்டர்ப் பண்ண வா., அது மட்டுமில்லாம பெயின் எப்படி இருக்கும்னு தெரியாது., அங்கு இருந்த வரைக்கும் வேற” என்று சொன்னாள்,

         “இப்பதான் எனக்கு ஓகே ஆயிடுச்சு இல்ல., இனி அது என் பக்கத்திலே இரு” என்று சொன்னான்.

      “அதெல்லாம் இல்லை இத்தனை நாள் ஆயிடுச்சு., இன்னும் ஒரு எயிட் டேஸ் பொறுமையா இருங்க., நம்ம வீட்டுக்கு போயிடலாம்., வீட்டுக்கு போன அப்புறம் நம்ம வீட்ல நான் உங்க பக்கத்திலேயே இருக்கிறேன்” என்று சொன்னாள்.,

              சிரித்துக்கொண்டே “நான் வைத்தியரிடம் ஒரு டவுட் கேட்கணும் நாளைக்கு கேட்கனும்” என்று சொன்னான்.

        “இப்ப எல்லாம் நீங்க தனியா தானே போறீங்க., கேட்க வேண்டியதுதானே., இல்ல நான் வரனுமா”., என்று கேட்டாள்.

  “நான் என்ன கேட்க போறேன்னு தெரியுமா., நீ பேசாம கூட வரட்டுமா ன்னு கேட்குற” என்றான்.

    “அப்படி என்ன பரம ரகசியம்” என்றாள்.

    “வந்து சொல்லுறேன்” என்றான்.

இன்னும் எட்டு நாளில் அவனுக்கான வைத்தியம் முடிந்து ஊருக்கு கிளம்ப வேண்டும் என்ற சூழலில் தான்., அவன் அவளிடம் “ரொம்ப நாளாச்சு ஒரே ஒரு ஹக்., ஒரே ஒரு கிஸ்”., என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்.

                “சரி ஐயோ பாவம்” என்று சொல்லி “ஒரே ஒரு ஹக்.,  ஒரே ஒரு கிஸ்., அப்புறம் எட்டு நாள் கழிச்சு ஊருக்கு போனதுக்கு அப்புறம் தான்” என்று அவனிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தாள்.

      அவனும் “சரி” என்று சம்மதிக்க இவள் அவனை மெதுவாக கட்டி அணைத்து., அவன் தோளில் சாய அவன் “ஐயையோ உனக்கு ஒண்ணுமே தெரியலையே” என்றவன்.,

   “என்னது ஒன்னும் தெரியல” என்று கேட்டாள்.

 “இப்படியா ஹக் பண்ணுவாங்க., என்றபடி அவளை இருக்கமாக அணைத்தபடி இதுக்கு பேர் தான் மேடம் ஹக் பண்றது” என்று சொல்லி அவளை முகம் சிவக்க வைத்தான்.

        பின்பு “சரி ஒரு கிஸ் அதையாவது ஒழுங்கா குடு” என்று சொன்னான். அவள் அவன் உயரத்திற்கு லேசாக எம்பி அவன் கன்னத்தில் முத்தம் பதிக்க போக “ஐயையோ சுத்தமா ஒண்ணும் தெரியலையே., உனக்கு கிளாஸ் எடுக்குறதுக்கே., எனக்கு நாளாகும் போலயே”., என்று சொல்லிக் கொண்டு “இப்படியா கிஸ் பண்ணுவாங்க” என்று கேட்டான்.

        “ஏன் நெத்தியில கொடுக்கணுமா” என்று வேண்டுமென்றே இவள் கேட்டாள். அவன் “நான் சொல்லி தரேன்” என்று சொல்லியபடி இழுத்து அணைத்து அழுத்தமாக இதழில் தன் இதழ்களை பதித்தான்…

இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று”.

குறள் விளக்கம்

மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.”

Advertisement