Advertisement

   அதுமட்டுமன்றி சில ஞாபகங்கள் அவனை புரட்டிப் போட தொடங்கியிருந்தது., இல்லை ‘அவள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும்., என்னை திருமணம் செய்தால் அவள் வாழ்க்கை வீணாகிவிடும் என்ற பயமும்., அவனுக்கு இருந்தது. அதை மீறி மனதிற்குள் சிறு ஆசை அவள் தன்னுடன் இருப்பாளா’., என்ற எண்ணமும் அவனுக்கு வந்து போய்க் கொண்டிருந்ததை அவன் யாரிடமும் வாய் வார்த்தையாக சொல்ல முடியாமல்., அவளை நினைத்து  தவித்துக் கொண்டிருந்த காரணத்தினாலே நித்திரா தேவி அவனோடு ஊடல் கொண்டு வராமல் போயிருந்தாள்.

         காலையில் எங்கே ‘அவளுக்கு யாரும் போன் செய்து சொல்லி விடுவார்களோ’ என்ற பயத்தில் தான்., அனைவரிடமும் போனை வாங்கி வைத்திருந்தான்.

       ‘அவள் வருகிறாளா.,  இல்லையா என்று பார்க்க வேண்டும்’ என்ற எண்ணம் அவனுக்கு இரவில் தூக்கம் பறிபோன நிமிடத்தில் இருந்தே வந்துகொண்டிருந்தது. ‘எப்படியாவது வந்து விடுவாள் என்ற எண்ணம் இருந்தாலும்., இல்லை வரமாட்டாள்’., என்று இன்னொரு மனம் அவனோடு வாதாடி கொண்டிருந்தது.

         இப்போது உணவு எடுக்க மறுத்ததும் அது போன்ற ஒரு காரணம் தான். அவன் மனசாட்சி அவளுக்காக அவனிடம் வாதாடி கொண்டிருந்தது.  ‘ஒருபுறம் மனம் தன்னோடு அவள் இருந்தால் அவள் வாழ்க்கை வீணாகிவிடும் என்றதோடு., தன்னால் அவளை திருமணம் செய்ய முடியாது’ என்ற எண்ணமும் மாறி மாறி அவனை கொன்று கொண்டிருந்ததே இப்போதும் உணவு எடுக்காததற்கு காரணம்..,

                 இப்போது அவன் முகத்தைப் பார்த்தபடி.., ‘அவள் வேறு எதுவும் நான் கேட்கப்போவதில்லை சாப்பிடுங்கள்’ என்று சொல்லி கட்டாயப்படுத்தி உணவை கொடுத்தாலும்., அவளைப் பார்த்தபடியே அவன் இருந்தாலும்., மனம் அத்தனையும் குழப்பிக் கொண்டே இருந்தது.

        மனக்குழப்பத்தில் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் கொடுத்த உணவை எவ்வளவு உண்டான் என்று தெரியாமல் வயிறு நிறைந்து அவனாகவே அதிகமாக சாப்பிட்டு விட்டோம் என்ற உணர்வு வரும் அளவிற்கு அவளும்  ஊட்டியிருந்தாள்…

      அவன் நினைவுகள் இருந்து வெளியே வந்தவன்.  “ஹே..,  போதும் எவ்வளவு கொடுத்து இருக்க.,  நிறைய சாப்பிட்டேன் போல”…, என்று சொன்னான்.

          ” ஒன்னும் இல்ல..,  சரியா தான் சாப்பிட்டு இருப்பீங்க” என்று சொன்னவள்.  கையை கழுவி  பாத்திரத்தை  சுத்தம் செய்து அங்கே வைத்துவிட்டு அருகில் இருந்த டவலை எடுத்து அவன் முகத்தை துடைத்துவிட்டாள்.

             “ஒரு பத்து நிமிஷம் மட்டும் உட்கார்ந்து இருங்க., டேப்லட் போட்டுட்டு படுக்கலாம்” என்று சொன்னாள்.

       நிறைய சாப்பிட்டு இருந்த காரணமா.,  இல்லை இரவு தூங்காத காரணமா.,  மன பயமெல்லாம் போய் மனதிற்குள் நிம்மதி வந்த சூழலா., எது என்ற தெரியாத கணத்தில்..,  பார்க்கும் எவராலும் கண்டு கொள்ளும் அளவிற்கு கண்கள் சொருகிக் கொண்டு இருந்ததை பார்த்தவள்., ஒரு பத்து நிமிடம் அவனிடம் பேச்சுக் கொடுக்கலாம் என்று அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு அவனிடம் பேசத் தொடங்கினாள்.

            “நைட் மனச ரொம்ப குழப்பிக்கிட்டிங்களா”என்று கேட்டாள்.

        அவளைப் பார்த்துக்கொண்டே “யார் சொன்னா” என்று அவன் கேட்டான்.

         “ஏன் யார் சொல்லணும்.,  உங்களைப் பார்த்தாலே தெரியுது.,  ஏதோ போட்டு குழப்பிட்டு  இருக்கீங்க, அப்படித்தானே” என்று சொன்னாள்.

        “இவ  எப்படிடா பார்த்தவுடனே நம்மள கண்டுபிடிக்கிறா”.,  என்று அவனுக்கு யோசனை வந்தது.

            பின்பு அவனிடம் “ஏன் மேரேஜ்க்கு சம்மதிக்க மாட்டேங்கறீங்க” என்று கேட்டாள்.

                     அவன் சிரித்துக்கொண்டே “கல்யாணம் அப்படிங்கிறது சாதாரண விஷயம் ன்னு.,  நினைச்சியா அதுல எவ்வளவோ இருக்கு.,சும்மா பரிதாபத்தில் கல்யாணம் பண்ணிக்கிட்டா அதுக்கு பேரு கல்யாணம் இல்லை” என்று அவளுக்காக வாதாடிய மனதோடு அவளிடம் பேசினான்.

          “கல்யாணம் னா  என்னன்னு தெரியுமா” என்று அவனிடம் திருப்பி கேட்டாள்.

         அவன் அவளை நேருக்கு நேராக பார்த்தபடி “என்ன” என்று கேட்டான்.

      “ஒருத்தருக்காக ஒருத்தர் துணையா கடைசி வரை அன்போடு வாழனும் தான் கல்யாணம்  பண்ணி வைக்கிறாங்க..,  ஒருத்தருக்கு வாழ்க்கையில் ஒரு துணை வேணும்., அந்த துணை அவங்களுக்கு புடிச்சவங்களா இருக்கணும்.,  அதே நேரத்தில் அவங்களோட லைஃப் நல்லா இருக்கணும் அப்படின்னு,  நெனைச்சா ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து போற.., ஒருத்தருக்கு ஒருத்தர் ஒரு நல்ல ஃப்ரெண்ட்லியா இருக்க முடியும் ன்னு நினைக்கிறவங்கள சேர்த்து வைக்கிறாங்க…,  ஏன் அந்த மாதிரி உங்களாலும்., என்னாலும் இருக்க முடியாது நினைக்கிறீங்களா”.,  என்று கேட்டாள்.

          அவனோ “ப்ளீஸ் கல்யாணத்தை பத்தி பேசாத” என்றான்.

         ” சரி கல்யாணத்தை பத்தி பேசல.,  ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் இப்படியே இருக்கலாமா., ஓகேவா உங்களுக்கு” என்று கேட்டாள்.

             “ஒருவேளை எனக்கு சரியாகமலே இருந்தா என்ன பண்ணுவ” என்று அவன் கேட்டான்.

              “நீங்க கல்யாணம் பண்ணினாலும்., கல்யாணம் பண்ணாட்டிலும் கடைசி வரைக்கும் துணையா உங்க கூட இருப்பேன்”., என்றாள்.

     அவன் ஏதோ சொல்லத் தொடங்கும் போதே.., கையைக் காட்டி பேசுவதை நிறுத்தச் சொன்னவள்.

          “இப்போ முதல்ல நல்லா தூங்குங்க..,  தூங்கி எந்திரிச்சு நிதானமா யோசிங்க.., அதுக்கப்புறம் பதில் சொல்லுங்க.., சரியா” என்று கேட்டாள்.

        அவன் அவளை பார்த்தபடி “நெஜமா சொல்லு பரிதாபத்தில் தானே கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லுற”., என்றான்.

            “ஹலோ பிடிச்சா தான் கல்யாணம் பண்ண முடியும்.., சும்மா பரிதாபம் பரிதாபம் ன்னு எல்லாம் சொல்லக்கூடாது..,  பரிதாபத்தில் எல்லாம் யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க புரிஞ்சதா”..,  என்று சற்று அதட்டிப் பேசும் தோனியில் சொன்னாள்.

            அவனும் “நீ என்ன அதட்டி பேசுற” என்றான்.

       அவளும் “ஹலோ அதட்டிப் பேசாமல் கொஞ்சவா செய்வாங்க.., என்றாள்.

        அவளைப் பார்த்தபடியே நரேன் இருக்க.. என்னவென்று செய்கையில் கேட்டாள்.

         ” நீ கொஞ்சிப் பேசுவீயா” என்று கேட்டான்.

          “ஒஒ.. பேசுவேனே.., அதுக்கு நீங்க ஹஸ்பண்ட் ஆ மாறனும்”, என்றாள்.

      பேசியப் படியே அவனுக்கான மாத்திரையை எடுத்து அவனை சாப்பிட வைத்து லலிதா கொண்டுவந்திருந்த பிளாஸ்கில் காபி தனியாக., பால் தனியாக இருந்தது. அதை எடுத்து காபியை அவளுக்கு எடுத்துக் கொண்டு,  பாலை ஊற்றி அவனை குடிக்க வைத்திருந்தாள்.

      அவன்  “அண்ணனுக்கு போன் பண்ணு” என்று சொன்னான்.

          அவள் “எதுக்கு” என்று கேட்டாள்.

       இல்ல  ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்தாச்சி., அவன் வந்தா படுக்க ஹெல்ப் பண்ணுவான்” என்று சொன்னான்.

      ” ஏன் நான் பண்ண மாட்டேனா” என்று கேட்டபடி அவனுக்கு படுப்பதற்கு உதவி செய்யும் போது முதல் முதலாக அவளின் கை தொட்டு அவளின் உதவியை பெற்றுக் கொண்டான். அப்போது அவனுக்கு படுப்பதற்கு தலையணை நேராக வைத்தாள். சற்று திரும்பி படுக்க வேண்டும் என்றால் யாராவது உதவி செய்ய வேண்டும் என்ற சூழலில் அவனுக்கு எந்த பக்கமாக படுக்க வேண்டும் என்று கேட்டு அதற்கேற்றார் போல் அவனுக்கு உதவி செய்து., அவனை அங்கிருந்த போர்வையால் மூடிவிட்டு..,  அந்த அறைக்கு தேவையான அளவிற்கு ஏசியின் குளுமையை சரி செய்து வைத்தாள்.

          அவனுக்கு கொடுத்த மாத்திரைகளை அதனிடத்தில் எடுத்து வைத்துவிட்டு., காபி பால் குடித்த கப்பையும் சுத்தம் செய்து வைத்துவிட்டு அவன் அருகில் அமர்ந்து பேச தொடங்கினாள்….

         “நீங்க என்ன முடிவெடுத்தாலும் நான் சம்மதிப்பேன்..,  ஆனா நீங்க சொன்ன மாதிரி உங்களை விட்டுட்டு எல்லாம் போக மாட்டேன்., அதுல தெளிவா இருங்க.,  நான் உங்களுக்கு ரெண்டு வாய்ப்புதான் கொடுத்திருக்கேன்., ஒன்னு கல்யாணம்., இல்லை னா  கடைசி வரை உங்க கூட இப்படியே இருக்கிறது…,  இது ரெண்டுல எது ன்னு., நீங்கதான் முடிவு பண்ணணும்” என்று சொன்னாள்.

    அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் “பிடிவாதம் பயங்கரம் இல்ல உனக்கு” என்று சொன்னான்.

            ” ஏன் உங்களுக்கு மட்டும் பிடிவாதம் இல்லையா..,  என்று கேட்டாள்.

           அவனோ.,  அவளிடம் “நீ யோசிச்சி முடிவு பண்ணு..,  அப்புறம் கடைசில இருந்து இருந்து இவனை போய் கல்யாணம் பண்ணிக்கிட்டோமே அப்படின்னு யோசிக்கிற நிலைமையோ..,  இல்ல இவன்  கூட  கடைசி வரை இருப்பேன் ன்னு., சொல்லிட்டோமே அப்படின்னு யோசிக்கிற நிலைமையும் வரக் கூடாது…, நல்ல யோசி” என்று சொன்னாலும்., அது வெறும் வாய் வார்த்தையாக அவன் சொல்வதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

            அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த அவள் கையை அவன் அருகில் வைத்துப் பேசிக் கொண்டிருக்க… சற்று நேரத்தில் அவன் அறியாமல் தூக்கத்தில் அவள் கையை பற்றியபடி சிறிது நேரத்தில் எல்லாம் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான்.

            அவளுக்கு புரிந்தது அவன் அவள் அருகாமையை விரும்புகிறான் என்று., ஆனாலும் அவன் மனம் அவளுக்காக வாதாடுவதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது….

             அப்போது அவள் மனதிற்குள் நினைத்தது., ‘எந்த சூழ்நிலையிலும் உங்களை விட்டு பிரிய மாட்டேன்., எனக்காக வாதாடும் உங்கள் மனதிற்குள் இருக்கும் எண்ணம் என்னவென்று நான் அறிவேன்’ என்று மனதிற்கு சொல்லியபடி அவன் முகத்தை பார்த்தபடி., அவன் கையை பிடித்தபடி அருகிலேயே அமர்ந்திருந்தாள்…

அன்பில் அடிமையாகி போகிறவர்கள்

பார்வைக்கு மட்டுமே அடிமை

ஆனால் குடியிருக்கும் நெஞ்சில்

ஆட்சிப்புரியும்  அதிகாரி அவர்கள் தான்,

Advertisement