Advertisement

அங்கு அமைதியாக இருக்க மீண்டும் பேசத் தொடங்கினார்.

        “அவங்க வீட்ல இருப்பேன்  ங்கிறா வெளியே தெரிந்தால் அசிங்கம் யோசிக்கோ ன்னு அவ  நல்லதுக்கு சொன்னா…, அவ என்னையே பிளேம் பண்றா..,  நீங்க எல்லாம் பார்த்துகிட்டு இருக்கிங்க”.., என்று நிர்மலா கேட்டார்.

           பாட்டி தான் பதில் சொன்னார்.., நீ முதல்ல இந்த மாதிரி கத்துறத விடு., நீ பேசாமல் வந்துருந்தா.,  இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது., தேவையில்லாம ஆஸ்பத்திரில பேச போய் தான், இன்னைக்கு இவ்ளோ பிரச்சனை ல வந்து நிற்குது., யோசித்து பார்க்குறீயா.,  அதை விட்டுட்டு அவள் மேலேயே தப்பு இருக்க மாதிரி பேசுற நீ., வயசுல மூத்தவங்க பெரிய வங்களா பொறுப்பா நடந்திருந்தா.,  இன்னைக்கு இவ ஏன் அவ தலையில் பொறுப்பு இழுந்து விட்டிருப்பாளா”.,  என்று பாட்டி கேட்டார்.

          “நானா போயி அங்கே இருக்கப் போறேன்னு சொல்லச் சொன்னேன் என்ன பேசுறீங்க., இவ எதுக்கு அங்கே போனா., தலையிடாமல் தூர இருக்க வேண்டியது தான., எதுக்கு தேவையில்லாத இந்த முடிவு”.,  என்று நிர்மலா பதிலுக்கு கேட்டார்.

              “அம்மா தயவு செய்து ஸ்டாப் பண்ணுங்க..,  ஒருத்தங்க மனசை நோகடிச்சிட்டு எப்படி கொஞ்சம் கூட வருத்தமே இல்லாமல் பேச முடியுது..,  உங்களுக்கு மனசு குத்தல்ல..,  அவங்க மனசு பீல் பண்ணும்னு உங்களுக்கு கொஞ்சம் கூட தோனலையா., இதே  அவ கல்யாணத்துக்கு அப்புறம் அவருக்கு ஆயிடுச்சின்னா.., நீ விட்டுட்டு வா ன்னு சொல்லிருவீங்களா.., ஏன் இப்போ உடனே அவள கல்யாணம் பண்ணி கொடுக்குறீங்க”.,  என்றாள்.

     நிர்மலா ஏதோ பேசத் தொடங்க போக.,  கையை காட்டி நிறுத்திய அபூர்வா மீண்டும் பேசத் தொடங்கினாள்.

           “லைஃப்ல எந்த விஷயமானாலும்  எப்ப வேண்வாலும் நடக்கலாம்.,  அதுக்காக நீங்க எல்லாமே,  உங்க இஷ்டபடி நடக்குதுன்னு நினைக்காதீங்க..,  நீங்க எப்பவும் என் சொல்படி தான் கேட்கணும்.,  என் சொல்படி தான் கேட்கணும்.,  நினைச்சீங்கன்னா.,  அவ நிம்மதியாக வாழவே முடியாது.., நீங்க அப்படி தான் இப்ப அபர்ணாவை பண்ணிக்கிட்டு இருக்கீங்க..,  அவ லைப் கொஞ்சம் ப்ராப்ளம் ஆனாலும் அது உங்களால் தான் இருக்கும்.., இப்பவே நான் சொல்றேன் நல்ல நோட் பண்ணிக்கோங்க”..,  என்று சொன்னாள்.

        “என்ன பேச்சு பேசுற படிச்சுட்ட., ஹை பொசிஷன் ல இருக்குற திமிரு உனக்கு”.., என்றார்.

          “இங்க பாருங்க நா எப்பவுமே சொல்வது இது தான்..,  என் படிப்பையோ.,  என் வேலையோ.,  இதுல இழுக்காதீர்கள். நான் நானா தான் இருக்கேன்.,  நான் என்னோட வேலை இடத்தில் போய் உட்கார்ந்தா மட்டும்தான்., அந்த பதவிக்குரிய மாதிரி இருப்பேன். மத்தபடி நான் என்னோட கேரக்டர் ல இருந்து மாற மாட்டேன்., அது புரிஞ்சுக்கோங்க”.., என்று சொல்லி சத்தம் போட்டு விட்டு அவள் எழுந்து தன் அறைக்கு செல்ல போனாள்.

         பாட்டி தான் “சாப்பிட்டு விட்டு போ மா” என்று சொன்னார்.

        அத்தையும் மாமாவும் அவளை பிடித்து அமர வைத்தனர்.  “வா சாப்பிட்டு போலாம்.,  நீ எதுக்கு டென்ஷன் ஆகுற”., என்று மாமா அவளை சமாதானம் செய்து “நீ எடுத்த முடிவில் நாங்கள் எதுவுமே சொல்லல., ஆனா எல்லாத்தையும் கொஞ்சம் யோசிக்கணும் டா”.,  என்று மாமா சொன்னார்.

         “மாமா இதுல யோசிப்பதற்கு எதுவுமே இல்ல..,  நா முடிவு பண்ணிட்டேன்.,  இது தான் முடிவு”.., என்று அவள்  சொன்ன பிறகு அவரால் வேறு  எதுவும் பேச முடியவில்லை.,

         அத்தையும் மாமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது புரிந்தாலும்., அவள் வேறு எதுவும் சொல்லவில்லை.

           இரவு உணவை முடித்து கொண்டு அறைக்கு சென்றவளுக்கு நெடுநேரம் ஆகியும் தூக்கம் வராமல்.,  அன்று மருத்துவமனையில் பேசிய நிகழ்வுகளும் சந்தித்த நபர்களுமே கண்ணுக்குள் காட்சியாக வந்து சென்றனர்.,       .

          அன்று மருத்துவமனையில அவர்களோடு பேசி முடித்த அந்த சமயத்திலேயே.,  லலிதா முன் அறைக்கு சென்று தன் மகளுக்கும்., மருமகளுக்கும் அபூர்வா  பேசிய செய்தியை தெரிவிக்க அவர்கள் இருவரும் சற்று நேரத்திற்கெல்லாம் வந்து சேர்ந்தனர்.

       அதுவரை அறையில் அவன் நேர் எதிரே அமர்ந்திருந்தாலும் அவனும் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை., அவளும் அவன் யோசிக்கட்டும் என்று அமைதியாக உட்கார்ந்திருந்தாள். பேசி முடித்த உடனேயே  நரேன் படுக்கவேண்டும் என்று சொன்னான்.  அவன் படுப்பதற்கு கல்யாண் உதவிசெய்ய இவள் அப்போது போலவே தலையணை எடுத்து போட்டு ஒழுங்கு செய்து கொடுத்தாள்.

           பின்பு  படுத்தவன் கண்ணை மூடிக் கொண்டான். இவளை பார்க்கவும் இல்லை,  பேசவும் இல்லை, அவன் யோசனையில் இருக்கிறான் என்பது அங்குள்ள எல்லோருக்குமே புரிந்தது. அதனால்   யாரும் பேசவில்லை கல்யாண் பெற்றவர்களை அழைத்துக்கொண்டு முன்னறைக்கு சென்று விட., அபூர்வா அவன் பேசும் போது எங்கு அமர்ந்திருந்தாலோ அதே இடத்தில் அமர்ந்து அவன் முகத்தைப்  பார்ப்பதும் அவன் யோசனை பற்றி.,  இவள் யோசிப்பதும் ஆகவே இருந்தாள்.

              சற்று நேரத்தில் எல்லாம் கல்யாண் னின் மனைவி வர அபூர்வா வை அழைத்து அறிமுகப்படுத்தி வைத்தான். பின்பு முன்னறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது கல்யாண் வந்து சற்று நேரம் நரேனோடு அமர்ந்திருந்து அவனிடம் கேட்க அவன் எதுவும் சொல்லவில்லை..,  பார்க்கலாம் என்று மட்டுமே சொன்னானே ஒழிய வேறு எதுவும் சொல்லவில்லை.

                  அதன் பிறகு நரேனின் தங்கையும் அவள் கணவனும் வர அவர்களிடமும் சாதாரணமாகவே பேசிக்கொண்டிருந்தாள்.  அனைவருக்கும் அபூர்வா வை மிகவும் பிடித்திருந்தது.,

                 அவளும் வந்து நரேனிடம் சொல்ல நரேன் அவன் தங்கையை பார்த்தானே ஒழிய பதிலேதும் சொல்லவில்லை. “அண்ணா சாரி சொன்னேன்”., என்று சொன்னாள்.

         “நீ உன் வேலைய பாரு” என்று மட்டும் சொன்னான்.

           ராஜசேகர் வந்து மதியத்திற்கு மேல் கேட்கும் போது “எனக்கு யோசிக்கணும், தயவுசெய்து யாரும் இதைப் பற்றி இதுக்குமேல பேசாதீங்க” என்று சொல்லி விட்டு “முதல்ல அந்த பொண்ண இங்கிருந்து போக சொல்லுங்க” என்று சொன்னான்.

        “ஏண்டா உனக்கு என்ன டிஸ்டபன்ஸ்., அந்த பொண்ணு தான் உள்ள கூட வரல இல்ல.,  வெளியே தான் உட்கார்ந்து இருக்கு.., அம்மா, தங்கச்சி, உன்  அண்ணி எல்லாரும் சந்தோஷமா பேசிட்டு இருக்காங்க.., ஏன்டா பேசினா பேசிட்டு போகட்டு மே” என்று சொன்னார்.

           எதுவும் சொல்லாமல் ” முதல்ல போக சொல்லுங்க இங்க இருந்து”., என்று மட்டுமே சொன்னான் வேறு எதுவும் சொல்லவில்லை..,

          அப்படியும் மதியம் தாண்டி சற்று நேரம் அங்கு இருந்து விட்டு மீண்டும் மீண்டும் அவன் அவளை கிளம்ப சொல்ல.,  அவனுக்கு டிஸ்டர்ப் ஆ பீல் பண்ணுவது போல இருக்கிறது என்று எண்ணி…, அவன் யோசிக்கட்டும் என்று சொல்லி அவனிடம் வந்தவள்., ” நல்ல யோசிங்க என்னோட முடிவை சொல்லிட்டேன். இப்ப நீங்கதான் முடிவு எடுக்கனும்” என்று அவனிடம் சொல்லிவிட்டு “நாளைக்கு சீக்கிரம் வந்துடுவேன்.,  இப்போ கொஞ்சம் கடைக்கு போக வேண்டியிருக்கு, அப்படியே வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு காலைல வர்றேன்” என்று சொன்னான்.

          அருகிலிருந்த கல்யாண் “வீட்ல என்னம்மா சொல்லுவாங்க” என்று கேட்டான்.

         ” நான் வீட்ல பேசுகிறான்., ணா  ஒன்னும் பிரச்சனை இருக்காது” என்று சொன்னாள்.

          நரேன் நக்கலாக சத்தம் வராத அளவு சிரிப்பதை அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கல்யாண்  க்கும் அபூர்வ விற்கும் புரிந்தாலும்., இருவரும் எதுவும் சொல்லவில்லை. அபூர்வாவும் வேறு எதுவும் சொல்லாமல் “காலைல வர்றேன்” என்று சொன்னாள்.

         நரேன் “ஒரு நிமிஷம்” என்று சொல்லி அவளை நிறுத்தினான். “வீட்டுக்கு போயிட்டு நீ கண்டிப்பா வர மாட்ட” என்று சொன்னான்.

     அவளோ “அது எப்படி நீங்க சொல்லலாம்.,  அத நான் தான் முடிவு பண்ணனும்”.,  என்று சொன்னாள்.

    ” கண்டிப்பா உங்க வீட்ல உன்னை இங்கே திருப்பி அளவ்  பண்ண மாட்டாங்க.,  அதனால நீ கிளம்பு”.,  என்று சொன்னான்.

         ” நீங்கள் சொன்னாலும் சொல்லாட்டிலும்., சொல்லிட்டு போறதுக்கு தான் வந்தேன். ஆனா காலையில கண்டிப்பா வருவேன் அதையும் பாருங்க” என்று  அவனிடம் சவாலாக சொல்லிவிட்டு கிளம்பினாள்.

       அவனுடைய நக்கல் சிரிப்பு அவளுக்கு உணர்த்தியதை.,  அவள் உணர்ந்தாலும் அவள் பதிலேதும் பேசவில்லை. அவன் ‘அன்று அவளுடைய அம்மா பேசியதை நினைத்து சொல்லியிருப்பான்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாலும் ‘உண்மைதானே எல்லோருக்கும் தோன்ற கூடிய ஒரு விஷயம் தானே’ என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டு தான் கடைக்கு சென்று விட்டு அவளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினாள்.

              இன்று வீட்டில் பேசிய பேச்சை யோசிக்கும் போது முதல் வேலையாக காலை கிளம்பி சீக்கிரமாக மருத்துவமனைக்கு சென்று விடவேண்டும். என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

             ஏனோ இரவு சரியாக  தூங்கா விட்டாலும் காலையில் எதிர்பார்த்ததை விட சீக்கிரமாக எழுந்திருந்தாள். இப்போது கீழே சென்றால் அனைவரும் கேள்வியாக பார்ப்பார்கள் என்று நினைத்துக்கொண்டே அவசர அவசரமாக தான் செய்யும் யோகாவை செய்து முடித்துவிட்டு குளித்து  உடை மாற்றி கிளம்பி கீழே வந்தாள்.

        7 மணிக்கெல்லாம் தயாராக வந்து நிற்பதைக் கண்டவுடன் நிர்மலாவிற்கு கோபம் வந்தாலும்.,  அபூர்வா அறைக்கு சென்ற பின் குடும்பத்தினர் மொத்தமும் சேர்ந்து அவளுக்கு அறிவுரை வழங்கிய காரணமாக அமைதியாக நின்றாள்.,

         ஆனால் அபூர்வா வை முறைக்க தவறவில்லை., அபூர்வா கண்டு கொள்ளாமல் காலை காபி மட்டும் குடித்து விட்டு கிளம்ப போனவளை., தடுத்து “சாப்பிட்டு விட்டு போ” என்று பாட்டி  சொன்னதற்கு “இல்ல நான் கோயிலுக்கு போறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்ப தொடங்கினாள்.

        “சாப்டுட்டு கோயிலுக்கு போனாலும் பரவால்ல சாப்பிடு போ..,  நீ கோயிலுக்கு போயிட்டு வீட்டுக்கு வருவ என்று எனக்கு நம்பிக்கை இல்லை., சாப்பிட்ட பின் கோவிலுக்கு போ”.., என்று சொல்லி பாட்டியும் அத்தையும் சேர்ந்து அவளை தடுத்து நிறுத்தி உணவு உண்ண வைத்தனர்.,

      காலையிலேயே உணவு என்பதால் அவளால் சாப்பிட முடியாமல் பாட்டியின் கட்டாயத்திற்காக ஒரு தோசை சாப்பிட்டு விட்டு  கிளம்பினாள்.

          அத்தை “எப்போ வருவ” என்று கேட்டதற்கு “ஈவினிங்” என்று சொல்லிவிட்டு அவளுடைய பவுச் .,  செல்லை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள். அத்தை மாமாவிடம் பாட்டி தாத்தா அப்பா என அனைவரிடமும் சொல்லிக்கொண்டே கிளம்பினாள்.

   “விருப்புக்கும் வெறுப்புக்கும் நூல் இழை அளவு தான் வேறுபாடு.., உண்மையான அன்பு உள்ளத்தை மாற்றும் எண்ண அலைகளின் மூலமாக”…

Advertisement