Advertisement

அத்தியாயம் 6

ஹாஸ்பிட்டல் வாசலில் இறங்கிய உடனே அவளுள் தோன்றிய உணர்வுக்கு என்ன பெயர் வைப்பது என்று அவளுக்கு தெரியவில்லை. இது புதுவித உணர்வு என்பது மட்டுமே புரிந்தது. ஒரு பெருமூச்சை இழுத்து விட்ட படி., அவன் சொன்ன அறை  எண்ணுக்கு சென்றாள்.

              அங்கு வெளியே நின்றவர்கள் அனைவரும் அவளைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். அங்கு இருந்தவர்கள் கல்யாண் உடன் அபூர்வா வீட்டுக்கு சென்றீருந்தவர்கள். கல்யாண் அவளை சந்தோஷமாகவே “வா ம்மா” என்று கூப்பிட்டான். எல்லோரும் கல்யாணை தான் பார்த்தனர்., எப்படி இப்படி சிரித்த முகமாக இப்பெண்ணை வரவேற்கிறான் என்று… ஆனால் அவர்களுக்கு புரிய வெளியே தெரியாத ஒரு விஷயம்.., அவள் அபர்ணா இல்லை என்பது.., வீட்டிற்கு மிரட்ட சென்ற போது அபூர்வா பேசியதை கேட்டு விட்டு அவன் மட்டுமே உள்ளே சென்றான். அருகில் நின்ற நெருங்கிய ஆள் ஒருவன் கல்யாண் இடம் ரகசியமாக கேட்க.., இவனும் அவனுடைய காதிற்கு மட்டும் கேட்குமாறு சொன்னான்..,

        கல்யாண் அவளை உள்ளே வருமாறு அழைத்து செல்ல., முன்னறையில் அமர்ந்திருந்த வீட்டினரிடம் அறிமுகப்படுத்தும் முன்.., லலிதா கோபப்பட்டு பேச தொடங்கினார். அவருக்கு இவள் யார் என்பது தெரியவில்லை..,  இருவரும் கிட்டத்தட்ட பார்க்க ஒரே ஜாடையில் இருக்கவும். சற்றே கூர்ந்து கவனித்தால் கண்டிப்பாக வித்தியாசம் தெரியும். ஆனாலும் அதை கவனிக்கும் மனநிலையில் அவர்கள் இல்லாததாலும்  லலிதா பேசத் தொடங்கினார்..,  “எதுக்கு இங்க வந்து இருக்க..,  யாரை பார்க்க வந்து இருக்க..,  என் பிள்ளைக்கு  நடந்தது போதாதா., அதான் அன்னைக்கே பேச வேண்டிய அளவு பேசியாச்சே… ,உங்கள எல்லாம் யார் இங்க வரச் சொன்னா”.., என்று பேசினார்.

              அவசரமாக குறுக்கே நின்று பேச்சை தடுத்த கல்யாண்., “அம்மா இது அந்த பொண்ணு இல்ல” என்று தடுத்தான்.

            “அந்த பொண்ணு இல்லாம வேற யாருடா” என்று அவரும் கல்யாணை வினோதமாக பார்த்த படி கேட்டார்.

        அப்போது தான் கல்யாண் சொன்னான். இது என்று சொல்லி அபூர்வாவை அறிமுகப்படுத்தினான்.

       ” ஏன் அவங்க வீட்ல எல்லாரும் சேர்ந்து அவமானப்படுத்தினது பத்தாதுன்னு இவளும் வந்திருக்காளா…, என் பிள்ளையை நோகடிச்சது போதாது ன்னு..,    இவ பங்குக்கு பேசிட்டு போவதற்காக வந்திருக்காளோ”., என்று  சத்தமாக சொன்னார்.   அவளைத் திட்டி விட்டு அமைதியாக இருந்து கொண்டு.,  “முதலில் அவளை வெளியே போக சொல்லு” என்று சொல்ல தொடங்கவும்., அவ்வளவு நேரம் அவர் திட்டும் போதெல்லாம் அமைதியாக அவரை பார்த்துக்கொண்டு நின்றவள். பின்பு மெதுவாக அவரிடம் பேச தொடங்கினாள்.

        “சாரி ஆன்ட்டி.., உங்க மனசு கஷ்டப்படுற மாதிரி எதுவும் பேச வரலை.., என்ன பார்த்த உடனே உங்க மனசு ஏதும் கஷ்டப்படுத்தியிருந்தா,  அதுக்காக சாரி கேட்டுக்குறேன்., ஒருவேளை நீங்க திட்டுறது னால,  உங்க மனசுக்கு அமைதி கிடைக்கும் னா., இன்னும் கொஞ்சம் கூட திட்டிக்கோங்க பிரச்சனை இல்ல..,  எங்க அம்மாவும் என் கூட பிறந்தவழும் பேசினதுக்கு., அவங்க சார்பா கண்டிப்பா நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்., ஏன்னா தப்பு பண்ணது அவங்க தான்..,  அவங்க தான் மன்னிப்பு கேட்கணும்.., என்னை திட்டுறதுனால  உங்க மனசுக்கு அமைதி  கிடைக்கும் னா திட்டுங்க ன்னு மட்டும் தான் என்னால் சொல்ல முடியும்” என்று சொல்லவும் லலிதா அபூர்வாவை வித்தியாசமாக பார்த்தார்..

            ராஜசேகர் அவளிடம் “அபூர்வா ங்கிற பேர் வேறு எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே.,  நீ டெல்லியில் வளர்ந்த பொண்ணு ன்னு சொன்னாங்க இல்ல.,   எப்படிம்மா இருக்க” என்று கேட்டார்.

            ” நல்லா இருக்கேன் அங்கிள்”என்று பதில் சொன்னவள்., “அபூர்வா ன்னு நான் ஒருத்தி தான் இருக்கேனா, என்ன..,  நிறைய பேர் இருப்பாங்க” என்று சிரித்தபடி சொன்னவள்.,  கல்யாண் இடம் திரும்பியவள் “உங்க தம்பிய பார்க்கணும்” என்று சொல்லி அவனிடம் கேட்டாள்.

      ராஜசேகரும் லலிதாவும் ஒரே நேரத்தில் “வேண்டாம் மா., நேத்து எல்லாம் ரொம்ப அப்செட் ஏதாவது பேச போக..,  அவன் மனசு கூட கொஞ்சம் கஷ்டப் படுற மாதிரி ஆயிரக் கூடாது.., அதனாலதான் சொல்றோம் புரிஞ்சுப்ப ன்னு  நினைக்கிறோம்”.. என்று சொன்னார்கள்.

                  “கண்டிப்பா உங்க பையன் மனசு கஷ்டப்படுற மாதிரி ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன்.  என்னை நம்புங்க., நான் அவங்க கிட்ட பேசணும்”..,   என்று சொல்லி அவர்களிடம் பேச அனுமதி கேட்டுக் கொண்டிருந்தாள்.

       வீட்டில் உள்ளவர்கள் யோசித்தாலும் சரி என்று அனுமதி தந்தனர். அவன் இருந்த அறைக்குள் அவள் செல்லவும்., அவன் கண்மூடி படுத்திருந்ததை தான் பார்த்தாள். தூங்கிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்து அறை வாசல் அருகே நின்று கொண்டு கல்யாண் இடம் “தூங்கும் போது டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்., நான் வெயிட் பண்ணுறேன்” என்று சொன்னாள்.

           இல்லை என்பது போல தலையசைத்து மறுத்த  கல்யாண்.,  “அவன் தூக்கம் இழந்து பல நாட்கள் ஆனது போல் இருக்கிறது.,  இரவானாலும் சரி., பகலானாலும் சரி., அவன் ஒரு மயக்க நிலையில் இருப்பது போல., அரை தூக்கத்தில் தான் இருக்கிறான்.  நாம் பேசுவது அனைத்தும் அவனுக்கு கேட்கும்.,  அவனுடைய மனம்  ஒரு நிலையில் இல்லாமல் தவிப்பதால் அப்படி இருக்கிறான் என்று மருத்துவர்கள் சொன்னார்கள்., தூக்கமாத்திரை கொடுத்தும்  அவனுக்கு தூக்கம் இல்லை.,    தூக்கத்திற்கு ஊசி போடும் நிலைக்கு வந்து விட்டான்” என்று சொன்னான்.

          “நான் பேசுறேன்” என்று சொல்லிக் கொண்டு கல்யாணோடு உள்ளே சென்றாள்.

               முதலில் அவனைப் பார்த்தவுடன் அவளுக்கு வந்த அந்த உணர்வுக்குப் பெயர் என்ன.., என்று அவளுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை.,  ஒரு ஆறடி உயர மனிதன்.  ஐந்து நாட்களுக்குள் பாதியாக தேய்ந்து போனது போல உணர்ந்தாள். ஏனெனில் திருமணம் நிச்சயிக்கப் பட்டது தெரிந்தவுடன் அங்கு மாமா வீட்டுக்கு அனுப்பி வைத்த போட்டோவை ஒருமுறை லேசாக பார்த்து இருந்தாள். அது மட்டுமல்லாமல் பிசினஸ் டைம் மெகஸின் ல் அவனுடைய பிசினஸை பற்றி குறிப்பிட்டு., அவனுடைய போட்டோ போட்டு செய்தி வெளியாகியிருந்தது.., மாமா சொல்லிக் கொண்டே இருந்ததால் அதையும் புரட்டிப் பார்த்து இருந்தாள்., அப்போதெல்லாம் தோன்றாத ஏதோ ஒரு எண்ணம் இப்பொழுது அவளுக்கு தோன்றியது. இந்த ஐந்து நாட்களாக இவனைப் பற்றிய எண்ணங்கள் அதிகமாக இருந்ததால் இப்படி மனதிற்கு படபடப்பு வருமா என்று எண்ணிக்கொண்டாள்.

         உள்ளே சென்றவுடன் முதலில் அருகே சென்ற கல்யாணம் அவள் தலையை மெதுவாக கோதிவிட., முழித்து கல்யாணை பார்த்தான்.

             கல்யாண்  பின் சற்றே தள்ளி நின்று இவன் புறமாக எட்டிப்பார்த்த அபூர்வா அவனை தான் நேருக்கு நேர்.,  முகத்தை பார்த்ததோடு அவன் கண்ணையே பார்த்தபடி ஹாய் என்றாள்.

         ஐந்து நாள் சோர்ந்து போன தோற்றம்., ஷேவ் செய்யாத முகம்., எல்லாம் சேர்த்து அவனை மேலும் வாட்டமாகவே காட்டியது.

         அவனோ  அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க இம்முறையும் கல்யாண் ந்தான் அறிமுகப்படுத்தி வைத்தான்.

             அமைதியாக பார்த்தானே ஒழிய அவளது ஹாய் என்ற சொல்லுக்கு பதில் கூட சொல்லவில்லை..   சற்று நேரம் அங்கு அமைதியாக இருந்தவுடன் அபூர்வா பேசத்தொடங்கினாள். அவனிடம் நேரடியாகவே கேட்டாள்.,  “நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா”., என்று கேட்டாள்

           அவன் அமைதியாகவே இருந்தான். பதிலேதும் சொல்லாமல் அவளை பார்த்தபடி கல்யாண் தான்., “உனக்கு இஷ்டம் இல்லைன்னா வேண்டாம்” என்று சொல்லவும் கல்யாணை நிமிர்ந்து பார்த்தவன் எதுவும் சொல்லாமல் மறுபடியும் அவளை பார்த்தான்.

          அவளோ “கண்டிப்பாக பேசியே ஆகணும்.  கொஞ்ச  தனியா பேசலாமா”.., என்று கேட்டாள்.

             கல்யாண் “என்னடா” என்று தன் தம்பியைப் பார்க்க.., அவன் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாலும்.,  அவனுடைய விழி மட்டும் அவளை கூர்ந்து நோக்கியது.

         “நீங்க பதில் சொல்லாம இருப்பதை வைத்து.,  உங்களோட மௌனத்தை நான் சம்மதமாகவும் எடுத்துக்கலாம்..,  உங்களோட கோபத்தைக் காட்டுற இன்னொரு வழியாகவும் பார்க்கலாம்.,  ஆனா உங்களோட கோபத்தை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சாலும்., எனக்கு பேச கிடைத்த சந்தர்ப்பத்தை விட முடியாது.., நான் உங்ககிட்ட பேசியே ஆகணும் னு நினைக்கிறேன்” என்று சொன்னாள்.

         அவன் எதுவும் பேசாமல் அருகில் இருந்த சேரில் உட்காரும் படி கையை காட்டி விட்டு “அம்மா, அப்பா வ வர சொல்லு ணா” என்று சத்தமாக சொன்னான். அந்த சத்தத்தில் அவனுடைய அம்மாவும் அப்பாவும் உள்ளே வர.,  கல்யாண் “என்னடா” என்று கேட்டான்.

           அவனிடம் “பேசலாம்., தனியா வேண்டாம்” என்றவன் அவளை பார்த்த படி.,

         “என் கிட்ட தனியா பேசுற அளவுக்கு நமக்குள்ள எதுவும் கிடையாது ன்னு எனக்கு தோணுது.., நான் உங்களை இதுவரைக்கும் பார்த்தது கிடையாது., நீங்களும் என இதுவரைக்கும் பார்த்தது கிடையாது., சோ எதுவா இருந்தாலும் எங்க வீட்டு அஆட்கள் முன்னாடியே பேசுங்க”.,  என்று சொன்னான்.

         அவளும் எந்த தயக்கமும் காட்டாமல் “ரொம்ப சந்தோஷம் நான் உங்க கிட்ட தனியா பேசிட்டு., அதுக்கப்புறம் அவங்க கிட்ட போய் சொல்வதை விட., எல்லார் முன்னாடியும் நான் உன் கிட்ட பேசுறது  எனக்கும் சந்தோஷம் தான்” என்று அவள் சொன்னவுடன்..,

            அவன் அவளை ஆராய்ச்சியாக பார்ப்பதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை.  அவன் படுத்திருந்த படியே அவள் பேசுவதை கேட்க.,  ஆனால் அவளோ கல்யாண் இடம் “நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணி, உங்க தம்பியை கொஞ்சம்  உட்கார ஹெல்ப் பண்றீங்களா”., என்று கேட்டு  அவள் கையில் வைத்திருந்த போன் மற்றும் சிறிய வகை பவுச்  இரண்டையும் கட்டிலில் அவன் காலடியிலேயே வைத்து விட்டு கல்யாண் அவனை அமர வைக்க முயற்சி செய்யும் போது அவளும் சேர்ந்து அவன் முதுகு பகுதியில் தலையணை வைத்து அவன் சரியாக சாய்ந்து அமரும் வகைக்கு உதவி செய்தாள்.

            அதை பார்த்துக்கொண்டிருந்த லலிதாவிற்கு ‘இந்த பொண்ணு ஏன் இங்கு வந்து இருக்கு’  என்ற எண்ணம் தோன்றினாலும் ஏதோ மனதிற்குள் ஒரு சின்ன சந்தோஷமும் தோன்றியது. அவள் கல்யாணத்திற்கு உதவுவதை பார்த்துக் கொண்டே இருந்தவன் சாய்ந்து  அமர்ந்த பிறகு அவளை பேசுமாறு சொன்னான்.

            கல்யாண்  கட்டிலில் அவன் அருகே அமர்ந்து கொண்டான். பெற்றோர்கள் இருவரும் அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகிலேயே வந்து அமர்ந்தனர்.

Advertisement