Advertisement

அப்போது லலிதா தான், “ நீ அங்கே கல்யாணத்திற்கு போகனுமே மா”, என்று சொன்னார்.

  அதன் பிறகு தான் அவளுக்கு அபர்ணா கல்யாணம் என்பதே நினைவு வந்தது. “ம்ம்ம் போகனும் அத்தை” என்றாள்.

    “நீ கிளம்புறதா இருந்தா கிளம்பு மா., கல்யாண் ம்., மாமாவும் உன்னோட வருவாங்க” என்றார் லலிதா.,

    “மெதுவா.. போகலாம் அத்தை” என்றாள்.

    “ஏன்., மா” என்றார்.

     “போயிட்டு உடனே வர்ற மாதிரி இருக்கும் அத்தை., நான் நேற்றே சொல்லிட்டேன். அதுனால யாரும் தேட மாட்டாங்க”., என்றாள்.

     சொன்னது போலவே., திருமணத்தில் கலந்து கொண்டு உடனே திரும்பினாள். அபர்ணா., ஹரி தம்பதியரை வாழ்த்திவிட்டு., அபர்ணாவிடம் “உனக்கு ன்னு ஒரு லைப் வந்தாச்சி., இனியாவது நீயாக முடிவெடுக்க பழகு.., உன் வாழ்க்கை உன் கையில்” என்று சொன்னவள். அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

    மதிய உணவு கூட வீட்டில் வந்து நரேன் க்கு கொடுத்தப் பிறகு தான் எடுத்து கொண்டாள்.

                அதன்பிறகு வந்த நாட்கள் அவளில்லாமல் அவன் இல்லை.., அவன் தான் அவள் உலகம் என்று இருவருக்குள்ளும் மாறிப்போனது.., அவனுக்கு தேவையானவற்றை கவனிப்பதிலும்.., பகல் நேரத்தில் சந்தோஷ் வந்த பிறகு அலுவலக வேலைகளை பார்ப்பதும்.., அதற்கு ஒவ்வொன்றிலும் நரேனை இழுத்து அவனை முடிவுகளை எடுக்க வைப்பதும்.., என்று ஒவ்வொன்றிலும் கவனம் இருந்தாலும்.., அவள் செய்து கொண்டிருந்த காரியங்களையும் அவள் விடவில்லை…

                       கிட்டத்தட்ட விபத்து நடந்து ஒரு மாதம் கடந்த நிலையில் பிசினஸ் பழையபடி தூக்கி நிறுத்தப்பட்டிருந்தது..

                      பிசினஸ் உலகத்தைப் பொறுத்தவரை இரண்டு நாட்கள் நாம் கவனிக்கவில்லை என்றாலும்..,  போட்டியாளர்கள் நம்மைவிட முந்தி இருப்பார்கள்.., அல்லது அவர்கள் முந்துவதற்கு நம்மை பின் தள்ள என்னென்ன காரியம் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து இருப்பார்கள்.., அது போல தான் ஒரு எட்டு நாள் சரியாக கவனிக்கப்படாத பிசினஸ்.., அதை கையாள முடியாமல் இருந்த சூழ்நிலையும் அவனுடைய பிசினஸ் சாம்ராஜ்யத்தை கீழே தள்ள முயற்சி செய்திருந்தது.., ஆனால் அதன் பிறகு வந்த நாட்களில் அதற்கும் சேர்த்து போட்டியிட விபத்திற்கு முன்னிருந்த நிலையை விபத்து நடந்த இந்த ஒரு மாதத்திற்குள் திருப்பி கொண்டு வரப்பட்டு இருந்தது.

           இப்பொழுதெல்லாம் நரேன் மற்றவற்றில் அதிகமாக கவனம் செலுத்துவதில்லை.., ஏனெனில் பிஸினஸில் அவனை ஈடுபட வைக்க அவள் செய்த முயற்சி ஓரளவு நல்ல பலன்களை கொடுத்திருந்தது., தன்னால் முடியும் என்ற எண்ணம் அவனுக்கு வரவர., அவனே இப்பொழுது எல்லாவற்றையும் செய்யத் தொடங்கியிருந்தான்.

     வீட்டிலிருந்தபடி கைகட்டு பிரித்து ஓரளவுக்கு கை முன்புபோல் அனைத்தும் செய்ய முடிந்தாலும்.., வீல்சேர் என்பது மட்டும் தான் இப்பொழுது அவனுக்கு பெரும் குறையாக இருந்தது., மற்றபடி அனைத்திலும் அவன் பழையபடி மாறி இருந்தான்…

                  இந்த முறை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்ற போது மருத்துவர்கள் சொன்னது இதுதான்.., “ஓரளவுக்கு மனம் தெளிந்து இருக்கிறான்., அதனால் பழைய நிலையில் கோபம் வருவதற்கு வாய்ப்பில்லை.., ஆனாலும் மனதிற்குள் சிறு ஒரு மன உளைச்சல் இருக்கதான் செய்யும்., தன்னால் பழையபடி எழுந்து நடமாட முடியவில்லை., என்று அதனால் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று மட்டுமே சொன்னதால் சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டாள்..

             தற்போது ஒரு மாதம் கடந்த நிலையில் தான் உள்புற ஹாலில் அமர்ந்து சந்தோஷ் உடன் சேர்ந்து இருந்து பிசினஸ் சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்தான்.., அதே நேரம் அபூர்வா அங்கு தான் இருந்தாள்..,

            அன்று பார்த்து எதிர்பாராவிதமாக லலிதாவின் அண்ணன் அவர் மனைவி மற்றும் மகள் மூவரும் வீட்டிற்கு வந்திருந்தனர்., அவர்கள் வெளிப்புறமாக உள்ள ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க வேண்டுமென்றே லலிதாவின் அண்ணன் ராஜசேகரிடம் வம்பு வளர்க்கும் விதமாக பேசத் தொடங்கியிருந்தார்..

        “என்ன மச்சான் என்னமோ அன்னைக்கு ஊர்ல இல்லாத ட்ரீட்மெண்ட் பண்ணி குணப்படுத்திடுவோம் பாருங்க அப்படி இப்படின்னு பேச்சு விழுந்துச்சு.., இன்னும் எந்த ட்ரீட்மெண்ட் க்கும் வழியைக் காணோம் போல கேள்விப்பட்டேன்.., எங்கேயும் பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்கலாமே., என்ன அடிபட்டு இருக்குன்னு தெரியாம எப்படி சரி பண்ண முடியும் கேட்கிறார்களாமே” என்று நக்கலாக கேள்வி கேட்டார்.

      ராஜசேகர் எதுவும் சொல்ல முடியாமல் ஒரு நிமிடம் திணறினாலும் லலிதா பதில் சொல்லத் தொடங்கினார்…

                     “இதற்காகத்தான் இவ்வளவு தூரம் வந்தயா ண்ணே”.., என்று கேட்டார்.

 “இல்லம்மா., விசாரிச்சேன்” என்று அவரும் பதில் சொன்னார்..

            கல்யாண் பதிலடி கொடுக்கும் விதமாக “இங்குள்ள டாக்டர்ஸ் மட்டும் தான் டாக்டர்ஸ் இல்ல.., உலகம் முழுவதும் டாக்டர்ஸ் இருக்காங்க.., எங்கனாளும் பார்க்கலாம்.., எப்படினாலும் குணப்படுத்த முடியும்.., இப்போ குணப்படுத்த முடியாத நோய் ன்னு.., எதுவுமே கிடையாது.., கண்ட கண்ட நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் போது., இதுக்கு மருந்து கண்டுபிடிக்காமல் இருப்பாங்க ளா” என்று சொன்னான்.

        உள்ளறையில் இருந்தாலும் அதைக் கேட்டவுடன் நரேன் முகம் இறுக அமர்ந்திருப்பது பக்கவாட்டில் கண்டும் காணாமல் கவனித்துக்கொண்டிருந்த அபூர்வா விற்கு நன்றாகவே உணர முடிந்தது., அது எதுவும் கண்டுகொள்ளாதது போல சந்தோஷிடம் செய்கை காட்டி பிசினஸ் பற்றிய பேச்சை மீண்டும் தொடங்க வைத்தாள்.., சந்தோஷ் ம் கேட்க சந்தேக கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக பேச தொடங்கியிருந்தான் நரேன்…

              அதே  நேரம் லலிதாவின் அண்ணன் “நாங்க எங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சு.., இப்போ இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு தான் நிச்சயதார்த்தம்., அது முடிந்து ஒரு மாசம் கழிச்சு கல்யாணம்., பையன் வேற யாரும் கிடையாது எங்க மோகன்னோட பிரண்டு மலேசியா ல பிசினஸ் பண்றான் இல்ல.., அந்த பையன்” என்று சொன்னார்.

                 இங்க கேட்டுக்கொண்டிருந்த அவளுக்கோ இரைக் கிடைத்த புலியின் சந்தோஷம் கண்களில் மின்னியது.., ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இன்று எப்படி என்பதை கண்கூடாக கண்டு கொண்டாள்..,  இதனை அச்சுப்பிசகாமல் நகர்த்த வேண்டும் என்றால்..,

                  வேறு யாரின் துணையை நாடுவது என்ற யோசனையோடு அவளறியாமல் அவளுடைய அலைபேசியில் இருந்து கல்யாண் எண்ணை அழைத்து இருந்தாள்.., மிஸ்டு கால் கொடுத்து கட் செய்யவும் வெளியே பேசிக்கொண்டிருந்த கல்யாண் க்கு ஏன் உள்ளே இருப்பவள் மிஸ்டுகால் கொடுத்தாள் என்ற எண்ணத்தோடு வெளியே பேசிக் கொண்டிருந்தவர்களிடம்  ஒரு நிமிடம் என்று சொல்லி விட்டு உள்ளே வந்தவன்.., லதாவிடம் வெளிய வந்தவர்களுக்கு காபியும் சிற்றுண்டியும் கொடுக்கச் சொல்லிவிட்டு. அபூர்வாவிடம் வந்தவன் என்ன மா.., என்று கேட்டான் அவர்கள் பேசிக்கொண்டிருந்த இடத்தில் இருந்து சற்று நகர்ந்து சென்றவள்..

     “அண்ணா எனக்காக ஒரு ஹெல்ப்” என்று கேட்டாள்..,

   “என்னமா” என்று அவனும் கேட்டான்.

       “இது உங்களுக்கு பிடிக்காது.., அவங்ககிட்ட போய் இந்த மாதிரி டீடைல்ஸ் கேட்கிறது.., ஆனாலும் மெதுவா அவங்ககிட்ட இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் வாங்கணும்.., எனக்கு நீங்கதான் ஹெல்ப் பண்ண முடியும் அது தான்., நான் உங்ககிட்ட கேட்கிறேன்.., இதை அத்தை., மாமா., ட்ட சொல்ல முடியாது” என்று சொன்னாள்.

        “என்னம்மா விஷயம்” என்று கேட்கும் போதே அவளுடைய கண்களில் பளபளப்பு வேட்டையாடும் புலிபோல் அவனுக்கு தோன்றியதோ என்னவோ.., “என்னமா ஏதும் சீரியஸான விஷயமா” என்று அவன் கேட்டான்.

         “உங்ககிட்ட நாளைக்கு சொல்றேன்., ஆனா எனக்கு இப்போ அவங்க சொன்ன அவங்க பையனும்., அந்த பையனோட ஃப்ரண்ட்டும் சொன்னாங்க இல்ல அவங்கள பத்தி கொஞ்சம் விஷயம் நீங்க பேசுற மாதிரி கலெக்ட் பண்ணுங்க.., நிச்சயதார்த்தத்துக்கு ரெண்டு பேரும் வருவாங்களா இல்லை.., நேரா மேரேஜ் க்கு தான் வருவாங்களா.., அப்படிங்கற மாதிரி விஷயங்களெல்லாம் கொஞ்சம் எனக்காக கேட்டுச் சொல்ல முடியுமா” என்று கேட்டாள்.

     ‘யாரென்றே தெரியாதவர்களை இவள் ஏன் இவ்வளவு ஆர்வமாக விசாரிக்கிறாள்’.., என்ற எண்ணத்தோடு அவளை பார்த்தான்.

   “காரணமாக தான்., நான் கேட்கிறேன். என்ன தப்பா எடுத்துக்காதீங்க.., உங்களுக்கு கண்டிப்பா விஷயத்தை சொல்றேன்” என்று சொன்னாள்.

 “கண்டிப்பா கேட்டு சொல்றேன்” என்றபடி வெளியேறினான் கல்யாண்.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்.”

விளக்கம்

உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.”

Advertisement