Advertisement

அத்தியாயம் 12

               அதிகாலையில் கண்விழித்தவனுக்கு அருகில் உறங்கிக்கொண்டிருந்த அவளைப் பார்க்கும் போது இது எல்லாம் கனவா என்று முதலில் தோன்றினாலும்.., பின்பு கலைந்த தலைமுடி முகம் மறைக்க தூங்கிக் கொண்டிருந்தவளின் முடியை கோதி விடும் பொருட்டு., வலது கையில் கட்டு போடாமல் இருந்த விரல்களைக் கொண்டு மெதுவாக கோதி விட்டவனுக்கு முதலில் தோன்றியது.., ‘தனக்கு கிடைத்த பொக்கிஷம் இவள்’ என்று மட்டுமே…

               பின்பு அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் ‘தன் காதல் தோற்றுப் போகவில்லை.., சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது., என்று யாரோ சொன்ன வரிகள் அவனுக்கு நினைவு வந்து சென்றது. யார் சொன்னார்கள் சொல்லாத காதல் சொர்க்கத்தில் சேராது என்று.., இதோ நான் மனதால் விரும்பியவள் இதோ என்னருகில்.., இந்த நிமிடம் வரை அவளிடம் காதல் சொல்லவில்லை.., ஆனால் என் காதல் சேர்ந்தது எப்படி என்று தோன்றினாலும்.., தனக்கு ஏற்பட்ட விபத்தினால் தான்.., தனக்கு  இப்படி ஒரு நிலை வந்தாலும்…, முதன்முதலாக கடவுளுக்கு விபத்திற்காக நன்றி சொன்னான்’..,

           ‘இந்த விபத்து மட்டும் நடக்கவில்லை என்றால்.., இவள் தனக்கு கிடைத்து இருப்பாளா,என்ற எண்ணம் அவன் மனதில் தோன்றி மறைந்தது. அதேநேரம் அவளை முதன் முதலாக டெல்லியில் புகழ்பெற்ற பல்கலை வளாகத்தில் சந்தித்த நினைவும் வந்தது’…

             அப்புகழ்ப்பெற்ற பல்கலை வளாகத்தில் உள்ளே சென்றவனுக்கு ‘தான் சந்திக்க வந்த பேராசிரியரின் பெயரும்., எந்த டிபார்ட்மெண்ட் என்பதும் மட்டுமே தெரியும்., எந்த இடம் எதுவும் தெரியாது.., அந்த சூழ்நிலையில் உள்ளே வந்தவன் அங்கிருந்த அலுவலக அறையில் விசாரிக்கலாம் என்று செல்லும் போது,  அங்கு அதிகமான கூட்டம் இருந்தது.

           அதே நேரம் இவனுக்கு எதிர்த்தாற்போல் துருதுருவென்று பேச்சுடன்  கூட வந்தவர்களுடன் சிரிப்போடு வந்த இவள் மட்டும் தான் கண்ணில் தெரிந்தால்..,  சரளமாக ஆங்கிலத்திலும் இந்தியிலும் உரையாடிக் கொண்டு வந்தவளிடம்’ இவன் அறியாமல் போய் நின்றான்.

        அவளும் நின்று “என்ன வேண்டும்” என்று கேட்டாள். ஆனால் தன்னை இப்பொழுது அவளுக்கு அடையாளம் தெரியுமா என்று அவனுக்கு தெரியவில்லை…

             அப்போது ‘ஆசிரியரின் பெயரையும்., டிபார்ட்மென்ட்யும் சொல்ல., அவள் அவனுக்கு ஒரு நிமிடத்தில் ஆங்கிலத்தில் வழியை சொல்லிவிட்டு’ செல்லும் போது திரும்பியவள்.,

          “நீங்க தமிழா” என்று ஆங்கிலத்தில் கேட்டாள்.

   அவனும் “ஆமாம்” என்று சொல்ல., சிரித்தபடி மறுபடியும் ஒருமுறை வழியை சொல்லிவிட்டு “பார்த்துக்கோங்க” என்று சொன்னபடி கிளம்பி விட்டாள். அதன் பிறகு அவள் அவனை பார்க்கவில்லை என்றாலும்..,

          அவன் அங்கு ‘பேராசிரியரிடம் ஒருவேலை விஷயமாக வந்தான். அந்த ஒரு வாரமும் அவளை ஒரு ஓரமாக நின்று பார்த்துவிட்டு தான் சென்றான்..

           மனம் முழுவதும் சந்தோஷம் நிறைந்து இருந்தது. அவளைப் பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும் அவளிடம் ஒரு உயிர்ப்புடன் கூடிய நடமாட்டம் இருப்பதை கண்டுகொண்டான்., அந்த ஒரு வாரமும் அவளைப் பார்ப்பதற்காகவே இருந்த வேலையை சற்று இழுத்து சென்று முடித்தான். பொதுவாக அவனது வேலைகளை அவன் ஒரு வாரத்தில் முடிக்க வேண்டியது என்றால் முடிந்தவரை 4 நாட்களில் முடிக்க பார்ப்பான்., ஆனால் இவன் நினைத்திருந்தால் இவ்வேலையும் நான்கு நாள்களில் முடித்திருக்கலாம்., அவளை பார்க்க வேண்டும் என்பதற்காகவே தினமும் வந்து சென்றான். வேறு வழியில்லாமல் வந்த வேலையும் முடிய கிளம்பி தமிழ்நாடு வந்து சேர்ந்தான்’…

         திருமணத்திற்காக பெண் பார்ப்பதற்கு அப்பா ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார் என்று அம்மா சொன்ன போது அவள் முகம் மட்டும் தான் முதலில் மின்னி மறைந்தது..,

      பின்பு “கொஞ்சம் மெதுவா வச்சுக்கலாமா” என்று அம்மாவிடம் கேட்டான்.

    “வயசு ஏறிட்டபோது பேசாம இரு”.., என்று அம்மாவின் அதட்டலுக்குப்பிறகு வீட்டில் எப்போதுமே அம்மா அப்பாவின் பேச்சை மீறாத அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை.

               ஆனால் ‘கடவுளிடம் மட்டும் பிரார்த்தனை வைத்துக் கொண்டிருந்தான். கல்யாணத்தை தள்ளிப் போடுகிறேன் இந்த பிசினஸ்ல இன்னும் கொஞ்சம் ஒர்க் இருக்கு.., அத முடிச்சுட்டு நான் அவளைத் தேடனும்., அதுவரைக்கும் ப்ளீஸ் என்று கடவுளிடம் விண்ணப்பம் வைத்தும்., கடவுள் கேட்கவில்லை போல., ஆனாலும் அவனிடம் இதுதான் பொண்ணு என்று அபர்ணாவின் புகைப்படத்தை காட்ட.., அவன் அபூர்வா என்று நினைத்து விட்டான்’.,

            அதன்பிறகு தான் உடனடியாக சம்மதம் தெரிவித்தது., பெண் பார்க்க நேரில் செல்ல, அவனை அழைக்கும் போது அவனுக்கு முக்கியமான அலுவல் இருந்ததால் அவன் நேரில் செல்லவில்லை.., இல்லையெனில் அன்றே கண்டுபிடித்து இருப்பான்.

              அவன் வராவிட்டாலும் பரவாயில்லை., என்று மற்றவர்கள் எல்லாம் சென்று பேசிவிட்டு வந்த பிறகு, போன் நம்பரை கொடுக்கவும்., சரி என்று வாங்கி வைத்துக்கொண்டு அவனால் பேச முடியவில்லை. ஏனோ மனம் தடுத்துக் கொண்டே இருந்தது.., அப்போதுதான் கல்யாண் தற்செயலாக மதிய உணவு வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து உண்ணும் போது பெண்ணைப் பற்றிய விபரம் என்று அவள் படித்தது., கல்லூரி அவளைப் பற்றிய விஷயங்கள் சொல்லும் போதுதான் முதன்முதலாக இவனுக்கு தெரிந்தது., இவள் அவள் அல்ல என்று.., ஏனெனில் அவள் படித்தது டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆனால் இவர்கள் பார்த்து வைத்திருக்கும் பெண் சென்னையில் படித்தவள் எப்படி இருவருக்கும் இப்படி ஒரு உருவ ஒற்றுமை என்று குழம்பி கொண்டிருக்கும் போது தான்., குடும்பத்தை பற்றிய தகவல்கள் முழுவதும் கிடைத்தாலும் தன்னால் இப்பொழுது வீட்டில் பார்த்திருக்கும் பெண்ணோடு ஒட்ட முடியவில்லை என்பதை அவன் உணர்ந்தான்.

                    அதற்காகவே முடிந்த அளவு போன் வந்தால் கட் செய்து விடுவான். வீட்டில் அம்மா ஒரு முறை கேட்கும் போது கூட.., “நீ என்னடா போன்ல கூட அந்த பொண்ணு கிட்ட பேச மாட்டேங்குற” என்று கேட்டார்கள்.

       “எனக்கு வேலை ஜாஸ்தி., அப்புறம் பார்த்துக்கலாம்” என்று சொன்னானே ஒழிய அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கடவுளிடம் மட்டும் வேண்டுதல் வைத்துக்கொண்டே இருந்தான்.., என்னால் உருவ ஒற்றுமையை மட்டும் வைத்துக்கொண்டு இவளை திருமணம் செய்ய முடியுமா.., அவனின் மனதில் இருந்த குழப்பமும் அதற்கு தீர்வு வேண்டும் என்ற வேண்டுதல் மட்டுமே இருந்தது…

                   அதுதான் கடவுள் ‘ஒரே தீர்வாக விபத்தை கொடுத்துவிட்டான் போல’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். பழைய நினைவுகளில் இருந்து வந்தவன் தான் அவளை கல்லூரி காலத்தில் சந்தித்ததை இப்போது சொல்லக்கூடாது.., அவள் தன்னை உண்மையாக விரும்பினால் மட்டுமே சொல்ல வேண்டும்.

                தன்னுடைய உண்மையான அன்பும்., உண்மையான காதலும்., அவளை தன்னிடம் வந்து கொண்டு வந்து சேர்த்ததாக நினைத்தான்..

                          எதுவும் யோசனை இல்லாமல் சற்று நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன்., மெதுவாக மறுபடியும் அவள் முடி கோதி விட்டவன் அழுத்தமாக நெற்றியில் முத்தம் வைத்தான்.., அந்த ஸ்பரிசத்தில் கண்விழித்தவள் முதலில் எங்கு இருக்கிறோம் என்று தெரியாமல் சற்று நேரம் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாலும்.., பின்பு சிரித்துக்கொண்டே குட்மார்னிங் என்று சொல்லி மறுபடியும் கண்ணை மூடிக்கொண்டாள்…

           “ஹலோ குட் மார்னிங் சொல்லிட்டு மறுபடி தூங்கு வாங்க லா என்ன” என்று கேட்டான்..

                “நீங்க முழிச்சிட்டீங்க.., உங்களுக்கு குட்மார்னிங்.., நான் தூங்கணும்” என்று சொன்ன படி மறுபடியும் கண்ணை முடிக்கொண்டால்., தன் கட்டுப் போட்டு இருந்த கைகளால் தன்னோடு சேர்த்து பிடித்துக் கொண்டு அவள் தலையில் கன்னம் வைத்தபடி  அமைதியாக அந்த நேரத்தை ரசித்திருந்தான்.

        ஆனாலும் அவன் கை மேலே இருப்பது தன் தலையில் கன்னம் வைத்திருப்பதையும் சற்று நேரம் கண்ணை மூடி உள்வாங்கிக் கொண்டவள் அவனுக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டும்., என்று நினைவு வந்த பின் மெதுவாக அவன் இடமிருந்து நகர்ந்து எழுந்தவள் காலை வேலைகளைத் தொடங்கினாள்…

                   அவன்  தான் “தூங்கினால் தூங்குடா.., நான் பாத்துக்குறேன்.., நர்ஸ் வந்திருப்பாங்க அவங்கள வர சொல்லு” என்று சொல்லிக்கொண்டிருந்தான்…

                      யாரும் வேண்டாம் என்று சொல்லியபடி.., ஓரளவு இவள் கவனித்தாலும் மற்றபடி ஆண் நர்ஸ் உதவியோடு அவனுக்கு தேவையான அனைத்தையும் பார்த்துவிட்டு அவனை தயார் செய்து அவனுக்கு பிடித்த மாடித் தோட்டத்தில் வீல் சேரில் அமர வைத்து விட்டு.., அவள் தன் வேலைகளை பார்க்க தொடங்கினாள்.

                  அவளும் காலைக்கடன் முடித்து குளித்து வீட்டில் இருப்பது போல சாதாரணமான சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டு அவனோடு வந்து அவ்விடத்தில் அமரும்போது வேலை பார்ப்பவர்கள் இவர்களுக்கான காலை காபியைக் கொண்டு வந்து வைத்தனர்..

              அந்த இளம் காலை நேரம் இருவருக்கும் அழகானதாக தோன்றியது. என்னவோ நேற்று கண்ணீர் விட்டு அழுத பிறகு மனதின் பாரம் குறைந்தது போல அவள் உணர்ந்தாள். இனி அவன் தன்னவன் அவனுக்காக தான்., தன் வாழ்க்கை என்ற எண்ணம் மட்டும் அவளோடு ஒன்றிப் போயிருந்தது…

                காலையில் எழுந்து கொள்ளும் போதே மிகவும் சந்தோஷமான நினைவுகளோடு எழுந்து கொண்டதாலோ.., என்னவோ அவனுடைய முகமும் சந்தோஷமாகவே இருந்தது. அப்போது அவன் அவளிடம் அவளுக்கு ஏதாவது நினைவிருக்கிறதா என்ற எண்ணத்தோடு இடது கையில் காபியை வைத்துக் குடித்துக் கொண்டிருந்தவன் வலது கை விரலால் அவள் விரல்களை பிடித்திருந்தான்.., பிடித்தபடி அவளிடம் “என்னைய இதுக்கு முன்னாடி எங்கேயாவது பாத்திருக்கியா அபூ” என்று கேட்டான்…

                    “நீங்க எல்லாம் ஸ்டார் இமேஜை வச்சுட்டு இப்படி எல்லாம் கேட்கலாமா”.., என்று சொன்னாள்.

      அவன் அவளை கூர்ந்து பார்க்க அவள் சொன்னாள் “பிஸ்னஸ் மேகஸின் ல உங்கள பத்தி தானே இடையில் கன்டினியூ வா போட்டது” என்று சொன்னாள்.

        “அப்பதான் தெரியுமா” என்று கேட்டான்.,

            “மாமா சொன்னாங்க அப்பதான் பாத்தேன்” என்று சொன்னாள்.

      அவன்  ‘அவளுக்கு தன்னை நினைவில்லையோ என்ற எண்ணம் உண்டானது., படிக்கும் காலத்தில் வேறு நினைவுகள் அவளுக்கு இருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணமும்.., சரி பிறகு இன்னொரு முறை அவளுக்கு ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்…

        “எதுக்கு கேட்டீங்க” என்று இவள் கேட்டாள்.

   “இல்ல இதுக்கு முன்னாடி நீ என்னை பார்த்து இருக்கேயா ன்னு கேக்குறதுக்கு தான் கேட்டேன்” என்று சொன்னான்.

     “நீங்க என்னை பார்த்து இருக்கிங்களா” என்று அவள் கேட்டாள்.

      அவன் அவளை சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தானே ஒழிய பதிலேதும் சொல்லவில்லை…

“ஹலோ நான் கேட்டதுக்கு., நீங்க பதிலே சொல்லல” என்று அவள் கேட்டாள்….

“கண்டிப்பா சொல்லுவேன்., இன்னொரு நாள் அப்போ உனக்கு நிறைய விஷயங்கள் தெரியும்”., என்று சொன்னானே ஒழிய வேறு எதுவும் சொல்லவில்லை…

                 காலை உணவு நேரத்தில் அவனைக் கீழே அழைத்துக் கொண்டே சென்று விட்டாள். ஒரேடியாக மதிய உணவு முடித்த பிறகு அறைக்கு வந்தால் போதும் என்ற எண்ணத்தோடு அவனுக்கு தேவையான மாத்திரைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள்., கீழே சென்று அவனை ஹாலில் உள்ள சோபாவில் அமரவைத்து  டிவியை போட்டு கையில் ரிமோட்டை கொடுத்த பிறகு அவனோடு சேர்ந்து வந்து அமர்ந்து கொண்டனர் கல்யாண் குழந்தைகள்..

              அவனோடு அம்மா அப்பாவும் சேர்ந்து அமர்ந்து கொள்ள இவள் கல்யாண் மனைவி லதாவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். அவனுடைய சந்தோஷமான முகத்தை பார்த்து வீட்டில் உள்ளவர்களுக்கு மனதில் நிம்மதி தோன்றியது என்பது பார்த்தவுடனே தெரிந்தது…

Advertisement