Tuesday, July 15, 2025

    அருகே வா அநாமிகா

    அத்தியாயம் – 20 “நாளைக்கு பிரகதி இறந்த நாள்...” பிரகாஷ் சொல்லவும் பிரபஞ்சனின் முகம் அந்நாளைய நினைவில் சுருங்கியது. “ப்ச்... சின்னப் பொண்ணுன்னு யோசிக்காம கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன், இல்லேன்னா செத்திருக்க மாட்டா...” “ஹேய், உன்னை வருத்தப்படுத்த சொல்லலை... அவ செத்ததுனால தான சூதாட்டத்துல எல்லாத்தையும் இழந்து உயிரையும் விடத் தயாரா இருந்த எனக்கும், பிசினசுக்கும் மறுவாழ்க்கை கிடைச்சுது... இல்லேனா...
    அத்தியாயம் – 19 மகதியின் அருகமர்ந்து கண்ணீருடன் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார் மாலதி. “எப்படி ஓடியாடிட்டு இருந்தவ, இப்படி அவளோட தேவையைக் கூடப் பார்த்துக்க முடியாம முடங்கிப் போயிட்டாளே...” மனம் வேதனையில் விம்மியது. சாப்பிட்டு முடித்ததும் மாத்திரை கொடுத்துப் படுக்க வைத்தார். பிரபஞ்சனைப் பற்றி தெரிந்தது முதல் அவன் கொடுத்த மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்வதில்லை. நாராயணன் துணையுடன்...
    அத்தியாயம் – 18 போலீஸ் ஸ்டேஷனில் அஜய் யோசனையுடன் அமர்ந்திருக்க அவன் முன்னே கவலையான முகத்துடன் அமர்ந்திருந்தார் கிருஷ்ணா. “என்ன அஜய் சார், குற்றவாளியை நெருங்கிட்டோம்னு நினைக்கறப்ப அந்த தேவி பாய்சன் குடிச்சிட்டாங்க...? சரி, உடனே ஹாஸ்பிடல் கொண்டு போனதால டாக்டர் காப்பாத்திடுவார்னு பார்த்தா ஹார்ட் அட்டாக் வந்திருச்சு...?” “ம்ம்... விதி அப்படிதான்னு இருக்கும்போது டாக்டரால மட்டும் எப்படி...
    அத்தியாயம் – 17 வீடியோ ஓடத் தொடங்கியது. “கனகராஜ் எப்படி இந்தக் கேஸ்ல வந்தார்னு எங்களுக்குப் புரியல, அதுக்கான விளக்கம் தேடி தான் அவர்கிட்ட போனோம்... மகளோட ஆப்பரேஷனுக்குப் பணம் கேட்க பிரகாஷைப் பார்க்க வீட்டுக்கு வந்தவர் அங்கே பிரகதிக்கு நடந்த கொடுமையைப் பார்த்து ஷாக் ஆயிட்டார்... அந்தப் பிஞ்சு இதைத் தாங்கிக்க முடியாம தொடக்கத்துலயே செத்துப்...
    அத்தியாயம் – 16 ICU யூனிட்டுக்கு வெளியே இருந்த நாற்காலியில் இருண்டு போன முகத்தோடு அமர்ந்திருந்தாள் சுபா. கதவிலிருந்த கண்ணாடி வழியே உள்ளே பார்த்தவளுக்கு, கண் மூடி இன்னும் சுயநினைவு திரும்பாமல் கிடக்கும் அக்காவின் நிலை கண்ணில் நீரை வரவழைத்தது. “ஏன்க்கா..? ஏன் இப்படிப் பண்ணின... இதுக்குதான் காலைல இருந்து ஒரு மாதிரிப் பேசிட்டு இருந்தியா..? மாமாவோட...
    அத்தியாயம் – 15 “அக்கா, என்ன சொல்லற... எதுக்கு இப்ப சொத்தெல்லாம் என் பேருக்கு எழுதி வைக்கனும்னு நிக்கற...?” “சுபா, அக்கா எது செய்தாலும் உன் நன்மைக்கு தான் செய்வேன்னு நம்பற தானே...?” “ம்ம்...” என்றவளின் தலையை வாஞ்சையுடன் கோதி விட்டாள் தேவி. “நான் வக்கீல் கிட்ட எல்லாம் சொல்லிருக்கேன்... கொஞ்ச நேரத்துல வந்திருவார், சைன் பண்ணிடலாம்...” “எதுக்குக்கா, இவ்ளோ அவசரமா...
    அத்தியாயம் – 14 கமிஷனர் அலுவலகம். இதுவரை விசாரணையில் தெரிந்து கொண்ட விஷயங்களை கமிஷனர் ஜெயராமிடம் சொல்லிக் கொண்டிருந்தான் அஜய். “ஆக டாக்டர் பிரபஞ்சன் பொண்ணுங்க விஷயத்தில் ரொம்ப மோசம்... அவன் வீட்டுல கிடைஞ்ச பென் டிரைவ்ல என்ன இருந்துச்சுன்னு பார்த்திங்களா...?” “அது பாஸ்வர்ட் போட்டிருக்கு சார்... இன்னைக்கு பார்த்திடுவோம்...” “ம்ம்... பிரகாஷ் சீட்டு விளையாட பணத்துக்கு வேண்டி சொத்தெல்லாம் இழந்து...
    அத்தியாயம் – 13 “அநாமிகாவை உங்களுக்குத் தெரியுமா...?” ஆச்சர்யமாய் கேட்டான் அஜய். “ம்ம்... எனக்குத் தெரிஞ்ச அநாமிகா ஒரு நர்ஸ்...” “நாங்களும் அவங்களை தான் கேட்டோம்... உங்களுக்கு எப்படிப் பழக்கம்...?” “என் பொண்ணு சுவாதிக்கு உடம்பு சரியில்லாம ஒருதடவை ரோட்டுல மயங்கி விழுந்துட்டா, அப்ப நர்ஸிங் படிச்சிட்டு இருந்த அநாமிகா தான் அவளுக்கு முதலுதவி பண்ணி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணாங்க...” “ஓ......
    அத்தியாயம் – 12 காலையில் அஜய் நியூஸ் பேப்பரை விரித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்திருக்க கிட்சனில் காபி கலந்தபடியே பேசிக் கொண்டிருந்தாள் அர்ச்சனா. “என்னங்க, கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையா ஒவ்வொரு விசாரணைக்கும் புதுத் தகவல் கிடைக்குது...?” “ம்ம்... ஒரு கேசோட விசாரணை மட்டுமில்லையே, இது மூணு கொலைக்கான விசாரணை ஆச்சே...!” “ம்ம்... அந்த லாயர் பொண்டாட்டி, ஜூனியர்...
    அத்தியாயம் – 11 பிரகதி எக்ஸ்போர்ட்ஸ். முகப்பில் பெரிய போர்டைத் தாங்கியபடி நின்றது அந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த கம்பெனி. வகை வகையாய் கிடந்த டீஷர்ட்களைத் தரம் வாரியாய் பிரித்து, சைஸ் ஸ்டிக்கரை சில பெண்கள் ஒட்டிக் கொண்டிருக்க, அது அப்படியே விலை, பிராண்டு ஸ்டிக்கர் போடும் பெண்களின் கைக்கு சென்றது. அடுத்து செக்கிங் முடிந்து பேக்கிங்...
    அத்தியாயம் – 10 கமிஷனர் ஆபீஸ். கமிஷனர் ஜெயராம் முன்பு அமர்ந்திருந்த அஜய் இதுவரை விசாரணையில் தெரிந்து கொண்ட விஷயங்களை அவரிடம் சுருக்கமாய் சொல்லிக் கொண்டிருந்தான். “ஓ அப்ப கொலையாளி பெண்ணில்லை, ஒரு ஆண்தான்னு கண்டு பிடிச்சுட்டீங்க...” “எஸ் சார், அநாமிகாங்கற பேருக்குள்ள ஒளிஞ்சிட்டு எதுக்கு இந்த கொலைகளைப் பண்ணறான் or பண்ணறாங்க, கொலையாளி ஒருத்தனா இல்ல பலரா... இதை...
    அத்தியாயம் – 9 “என்ன சொல்லறீங்க கௌஷிக்...? அதுல இருந்தது ஆணோட முடியா...?” திகைப்புடன் கேட்டான் அஜய். “ஆமாம் சார்...!” “ஒரு ஆண் எதுக்கு தலைல ஹேர்பின் குத்தணும்...” “அதான் எனக்கும் புரியல சார்..” “எனக்குப் புரியுது கௌஷிக்... ஒரு ஆண், பொண்ணா நடிக்கணும்னா, சவுரி வச்சு ஸ்லைடு குத்தலாமே...?” “கரக்ட் சார்... சரியான கெஸ்ஸிங்...” “ஓகே, உடனே விவரம் சொன்னதுக்கு தேங்க்ஸ் கௌஷிக்......
    அத்தியாயம் – 8 பெசன்ட் நகர் பீச். கதிரவன் உலகத்தின் இருட்டை விரட்ட கிழக்கு திசையில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். கடல் பறவைகள் அதிகாலையிலேயே தங்கள் பாஷையில், கீச் கீச்சென்று சங்கீதம் படிக்கத் தொடங்கியிருந்தன. கடற்கரையில் சிலர் வாக்கிங்கிலும், ஜாகிங்கிலும், உடற் பயிற்சியிலுமாய் மும்முரமாய் தொப்பையைக் கரைக்கும் முயற்சியில் இறங்கி இருந்தனர். சில பெண்கள் ஜாகிங் சூட்டில் ஓடியபடி இள...
    அத்தியாயம் – 7 “கிருஷ்ணா, பிரகாஷ் பாமிலியைப் பத்தி விசாரிக்க சொன்னனே, விசாரிச்சிங்களா...?” கேட்டுக் கொண்டே புல்லட்டை பறக்க விட்டுக் கொண்டிருந்தான் அஜய். “விசாரிச்சேன் சார், வீட்ல பிரகாஷும், மனைவி மகதியும் மட்டும் தான்... மகதி கொஞ்சம் மனநிலை சரியில்லாதவங்க, அவங்க துணைக்கு மகதியோட அம்மா இருக்காங்க...” “ம்ம்... அவர் எந்த மாதிரி பிசினஸ் பண்ணிட்டிருக்கார், பினான்சியல்லி சவுன்டான...
    அத்தியாயம் – 6 முட்டுக்காடு. ஏரிக்கு சற்றுத் தள்ளி மரங்களுக்கு நடுவே கொட்டிக் கிடந்த குப்பை கூளங்களுக்குள் நின்றிருந்த காரின் டிரைவிங் சீட்டில், உயிரற்ற பிரகாஷின் உடலைச் சுற்றித் தேங்கி உறைந்திருந்த குருதியை ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்க, அங்கே சில மீட்டருக்கு பொதுமக்கள் யாரும் வராமல் இருக்க போலீஸ் வளையம் அமைக்கப்பட்டிருந்தது. காற்றில் கலந்திருந்த துர்வாடை மூக்கை...
    அத்தியாயம் – 5 டிவி திரைக்கு எதிரே இருந்த நாற்காலியில் உடலைப் பொருத்திக் கொண்டு கிரணிடம் கேட்டான் அஜய். “மிஸ்டர் கிரண்! இந்த ஹோட்டல்ல உள்ள எல்லா சிசிடீவி சிஸ்டத்தையும் நீங்கதான் மானிட்டர் பண்ணறீங்களா...? “ஆமா சார்.” “மன்டே ஈவனிங் டாக்டர் பிரபஞ்சன் ரிசப்ஷன் நடந்த புளோர்ல வீடியோ புட்டேஜஸ் காட்டுங்க...” “ஒரு நிமிஷம் சார்...” சொன்ன கிரண் அங்கிருந்த கம்ப்யூட்டரில்...
    அத்தியாயம் – 4 பிரபஞ்சனின் கேஸ் ஹிஸ்டரியைப் படித்து விட்டு நிமிர்ந்த அஜய் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணாவை ஏறிட்டான். “இந்தக் கேஸ் பத்தி என்ன நினைக்கறீங்க இன்ஸ்பெக்டர்…?” “இது தற்கொலை போல ஜோடிக்கப்பட்ட கொலை சார்… கல்யாண ரிசப்ஷனுக்கு துப்பாக்கியோட போக வேண்டிய அவசியம் என்ன…? அதும் இல்லாம ஒரு டாக்டருக்குத் தற்கொலை பண்ணனும்னா எத்தனையோ அஹிம்சை வழி இருக்கு,...
    அத்தியாயம் – 3 “ச்சே...!” என்றாள் அர்ச்சனா. கையில் அன்றைய தினசரி இடம் பிடித்திருக்க அழகான, பெரிய கண்களில் ஏகப்பட்ட வெறுப்பு. லாப்டாப்பில் மும்முரமாய் இருந்த அஜய் அதிலிருந்து கண்ணை எடுக்காமலே கேட்டான். “என்ன அச்சு, எதுக்கு ச்சே...?” “என்னங்க இது...? பேப்பரைத் திறந்தாலே, கொலை, கற்பழிப்பு, இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்னு தினம் இதே செய்தியாதான் போடறான்......
    அத்தியாயம் – 2 “ஜமுனா..!” கண்ணாடி முன் நின்று நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டை ஒட்டிக் கொண்டிருந்த ஐந்தடி, நான்கங்குல ரசகுல்லா  கணவன் சந்தோஷின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தது. “ஓ வந்துட்டிங்களா...?” அருகே வந்தவன் அவளை இடுப்பில் கையிட்டு வளைத்துக் கொண்டான். “என்ன, கோர்ட்டுல இருந்து வரும்போதே ஐயா செம மூடுல இருக்கற போல இருக்கு...?” “வீட்டுக்கு வந்து உன்னைப் பார்க்கப்...
    அத்தியாயம் – 1 “தேவி...” வீட்டுக்குள் நுழையும்போதே மனைவியை அழைத்தபடி நுழைந்தான் டாக்டர் பிரபஞ்சன். “என்னங்க? உற்சாகமா வர்றீங்க, பத்திரிகை வந்திருச்சா...” “ஆமா, நீயே எப்படி இருக்குன்னு பாரு...” சொல்லியவாறு கையிலிருந்த பாகைத் திறந்து பத்திரிகையை எடுத்து நீட்டினான். தங்க நிறத்தில் டாலடித்த பத்திரிகையைக் கண்டதுமே கண்களை விரித்தவள் புன்னகைத்தாள். “ஆஹா, அமர்க்களமா இருக்குங்க... உங்களுக்கு வைத்தியம் பண்ண மட்டும்...
    error: Content is protected !!